Type Here to Get Search Results !

1st MAY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF


முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.306.04 கோடி வந்துள்ளது - தமிழக அரசு
  • ஊரடங்கு காரணமாக மக்களுக்கு உதவும் வகையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.306 கோடியே 42 லட்சம் ரூபாய் 42 லட்சம் வந்துள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
  • இந்த நிவாரண நிதி வழங்கியுள்ள பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு சார் நிறுவனங்கள், அரசு நிறுவன ஊழியர்கள், உள்ளிட்ட அனைத்து நல்ல உள்ளங்களுகும் முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு லாக்டவுன் நீட்டிப்பு மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
  • மே 4 முதல் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. நிலைமையை முழுமையாக ஆராய்ந்த பிறகு மேலும் 2 வாரங்களுக்கு இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அதேசமயம், நாடு முழுவதும் சிவப்பு மண்டலப் பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து மண்டலங்களிலும் ரயில், விமான, மெட்ரோ, பஸ் போக்குவரத்து செயல்படாது. பள்ளி கல்லூரிகள் கல்வி நிறுவனங்கள் இயங்காது. பயிற்சி மையங்கள், பயிற்சி நிலையங்கள் செயல்படாது.
  • நாடு முழுவதும் சிவப்பு மண்டலமாக 130, ஆரஞ்சு மண்டலமாக 284, பச்சை மண்டலமாக 119 மாவட்டங்கள் என தனித்தனியே பிரிக்கப்பட்டு புதிய விதிமுறைகளை அமல்படுத்தப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
  • இனி வரும் 21 நாட்களுக்கு கொரோனா தொற்று இல்லாத மாவட்டம் பச்சை மண்டலமாக மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் விமானம், ரயில், மெட்ரோ ஆகியவை அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதனிடையே பச்சை மண்டலங்களில் 50 சதவீத இருக்கை வசதிகளுடன் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் சிவப்பு மண்டலங்களில் ஆட்டோ மற்றும் டாக்சிகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • மேற்கொண்டு இந்தச் சிவப்பு மண்டலங்களில் சலூன்கள் இயங்கவும் தடை போடப்பட்டுள்ளது. சிவப்பு மண்டலங்களில் அனுமதிக்கப்பட்ட விஷயங்களுக்காக கார்களில் அதிகபட்சம் இரண்டு பேர் செல்லலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • தமிழகத்தைப் பொறுத்தவரைச் சென்னை, மதுரை, நாமக்கல், தஞ்சை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், ராணிப்பேட்டை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதேபோல் திருவாரூர், வேலூர், காஞ்சிபுரம் ஆகியவையும் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் தென்காசி, நாகை, திண்டுக்கல், விழுப்புரம், கோவை, கடலூர், சேலம், கரூர், தூத்துக்குடி ஆகியவை ஆரஞ்சு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் கிருஷ்ணகிரி மட்டுமே பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
  • பச்சை மண்டலங்களில் பின் வரும் விஷயங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுக்க பச்சை மண்டலங்களில் மதுவிற்பனை கடைகள், பான் மசாலா கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கே 50 சதவிகித பேருந்துகள் எப்போதும் போல இயங்கும். ஆனால் 50 சதவீத பயணிகளுடன் மட்டுமே இயங்க முடியும்.
  • பச்சை மண்டலங்களில் ஆன்லைன் மூலம் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்யலாம் என்று மத்திய அரசு சார்பாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் அல்லாத மற்ற பொருட்களையும் ஆர்டர் செய்ய முடியும். அதாவது புத்தகங்கள், உடைகள், போன்கள் போன்ற பொருட்களையும் ஆர்டர் செய்ய முடியும்.
  • ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் இயங்கும். சரக்கு வாகனம் அனுமதிக்கப்படும். அனுமதி சீட்டு தேவையில்லை. வாகனங்கள், டாக்சிகள், ஆட்டோ இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி பொதுவாக லாக் டவுன் சமயத்தில் அனுமதிக்கப்பட்ட மற்ற அத்தியாவசிய பணிகள் அனைத்தும் இங்கே அனுமதிக்கப்பட்டுள்ளது.
  • ஆரஞ்ச் மண்டலங்களில் பின் வரும் விஷயங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரஞ்ச் மண்டலம் ஏறத்தாழ பச்சை மண்டலம் போலவே செயல்படும். ஆரஞ்சு மண்டலங்களில் மதுவிற்பனை கடைகள், பான் மசாலா கடைகள் இயங்க அனுமதி இல்லை. 
  • வாகனங்கள், டாக்சிகள், ஆட்டோ இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் இயங்கும். உங்களிடம் பாஸ் இருந்தால் வெளியே செல்ல அனுமதி. இங்கும் ஆன்லைன் மூலம் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்யலாம் என்று மத்திய அரசு சார்பாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • அத்தியாவசிய பொருட்கள் அல்லாத மற்ற பொருட்களையும் ஆர்டர் செய்ய முடியும். அதாவது புத்தகங்கள், உடைகள், போன்கள் போன்ற பொருட்களையும் ஆர்டர் செய்ய முடியும். கார்களை, பைக்குகளை அனுமதி. கார்களில் 4 பேர் செல்லலாம். பைக்கில் ஒருவர் செல்லலாம்.
  • சிகப்பு மண்டலமாக இருக்கும் பகுதிகளில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிகப்பபு மண்டலங்களில் மதுவிற்பனை கடைகள், பான் மசாலா கடைகள் இயங்க அனுமதி இல்லை. இங்கு வாகனங்கள், டாக்சிகள், ஆட்டோ இயங்க அனுமதி இல்லை.
  • ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் இயங்கும். ஆனால் 33% பேர் மட்டுமே அலுவலகம் செல்ல முடியும். உங்களிடம் பாஸ் இருந்தால் வெளியே செல்ல அனுமதி. சரக்கு வாகனங்களுக்கு அனுமதி.
  • இங்கும் ஆன்லைன் மூலம் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்யலாம் என்று மத்திய அரசு சார்பாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிகப்பு மண்டலங்களில் ஊரகப் பகுதிகளில் தளர்வுகளுக்கு அனுமதி. அரசு அலுவலங்கள் இயங்க அனுமதி. மால்கள் தவிர்த்த மற்ற அனைத்து விதமான கடைகளுக்கும் அனுமதி ஆனால் ஊரக பகுதியில் மட்டும்.
  • அனைத்து பகுதியிலும் கட்டுப்பாடு. இந்த புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் எப்போதும் போல விமான போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, மாநிங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து இயங்காது. பள்ளி கல்லூரிகள் இயங்காது. தங்கும் ஹோட்டல்கள் செயல்படாது.
  • உணவகங்களின் அமர்ந்து சாப்பிட அனுமதி கிடையாது. அதேபோல் மால்கள், சினிமா தியேட்டர்கள் இயங்காது. வழிபாட்டு தளங்கள் செயல்படாது. எந்த விதமான சோன் வேறுபாடும் இன்றி அனைத்து சோன்களுக்கும் இந்த கட்டுப்பாடு பொருந்தும்.
  • மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டு இருக்கும் பகுதிகளிலும் கூட இரவு 7 மணிக்கு மேலும் காலை 7 மணிக்கு முன்பும் மக்கள் எங்கும் வெளியே செல்ல முடியாது. எந்த விதமான சோன் வேறுபாடும் இன்றி அனைத்து சோன்களுக்கும் இந்த கட்டுப்பாடு பொருந்தும்.
  • அதேபோல் 65 வயது நிரம்பிய நபர்கள், ஏற்கனவே உடலில் நோய்கள், குறைபாடுகள் உள்ளவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் வெளியே வர முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



கரோனா 'போா் வீரா்களுக்கு 'நன்றி செலுத்துகிறது முப்படை
  • கரோனா நோய்த்தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள், துணை மருத்துவ பணியாளா்கள், காவல்துறையினா் உள்ளிட்டோருக்கு முப்படையினா் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நன்றி செலுத்தப்படவுள்ளது. 
  • இதையொட்டி, போா் விமானங்கள் வானில் சாகசத்தில் ஈடுபடுவதுடன், மருத்துவமனைகள் மீது கடற்படை ஹெலிகாப்டா்கள் பூ மாரி பொழியவுள்ளன.
பொது சுகாதாரத் துறை இயக்குநராக செல்வவிநாயகம் நியமனம்
  • பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறையின் புதிய இயக்குநராக டாக்டா் டி.எஸ். செல்வவிநாயகம் நியமிக்கப்பட்டுள்ளாா். அப்பொறுப்பை இதுவரை வகித்து வந்த டாக்டா் க.குழந்தைசாமி ஓய்வு பெற்றதை அடுத்து இந்த புதிய நியமன உத்தரவு வெளியாகியுள்ளது.
  • சுகாதாரத் துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள டாக்டா் டி.எஸ். செல்வவிநாயகம், தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் தலைமை நிா்வாகியாகவும், பொது சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநராகவும் இருந்தவராவாா்.
சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தலைமையில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் சிறப்புக்குழு: தமிழக அரசு உத்தரவு
  • சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை கொண்ட சிறப்புக் குழுவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
  • அதன்படி ஏற்கனவே, சென்னையில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டுள்ள தண்டையார்பேட்டை மண்டலம், திருவிக நகர், ராயபுரம், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் ஐபிஎஸ் அதிகாரி, வருவாய், சுகாதாரத்துறை அலுவலர் கொண்ட 3 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • இதை தவிர்த்து மணலி, மாதவரம், திருவொற்றியூர் ஆகிய மண்டலத்திலும், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர் மண்டலத்திலும், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலத்திலும் தலா ஒரு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 
  • இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க சென்னை மாநகரில் தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.



பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலராக தருண் பஜாஜ் பொறுப்பேற்பு
  • 'பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலராக இருந்த அதானு சக்ரவா்த்தி ஏப்ரல் 30-ஆம் தேதியுடன் ஓய்வுபெற்றதை அடுத்து, புதிய செயலராக தருண் பஜாஜ் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 1988-ஆம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவைச் சோந்த தருண் பஜாஜ், இதற்கு முன்பு கடந்த 2015-ஆம் ஆண்டில் இருந்து பிரதமா் அலுவலகத்தில் கூடுதல் செயலராகப் பணியாற்றினாா். 
  • அதற்கு முன் நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொருளாதார விவகாரங்கள் துறையின் இணைச் செயலராகப் பணியாற்றினாா். இதுதவிர, நிதிச்சேவைகள் துறையில் இணைச் செயலா், இயக்குநா் ஆகிய பதவிகளையும் அவா் வகித்துள்ளாா்.
பிற மாநில தொழிலாளர்கள் விவகாரம் - ரயில்களை பயன்படுத்த மத்திய அரசு திட்டம்
  • மாநிலங்களுக்கிடையே புலம் பெயர்ந்த தொழிலாளர்களை, சொந்த மாநிலத்திற்கு அழைத்துச் செல்ல, பாய்ண்ட் டூ பாயிண்ட் ரயில்களை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கல் வெளியாகியுள்ளது.
ஐசிசி டெஸ்ட் தரவரிசை ஆஸ்திரேலியா நம்பர் 1
  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 4 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது. 
  • இதனால் 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குப் பிறகு இந்திய அணி முதல் முறையாக நம்பர் 1 அந்தஸ்தை பறிகொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
  • 2016-17ல் இந்தியா 12 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி, ஒரே ஒரு தோல்வியை சந்தித்திருந்தது. விதிமுறைகளின்படி இந்த சிறப்பான செயல்பாடு தற்போதைய தரவரிசைக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாததால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 
  • எனினும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளிப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel