Type Here to Get Search Results !

11th APRIL 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

பிரதமரின் ஏழைகள் நிதி உதவித் திட்டத்தின் கீழ் 30 கோடி ஏழைகளுக்கு ரூ.28,256 கோடி நிதி ஒதுக்கீடு
  • தேசிய ஊரடங்கு காரணமாக பணியின்றி தவித்து வரும் ஏழை, எளிய மக்களுக்காக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்த மாதம் அறிவித்த பிரதமரின் ஏழைகள் நிதி உதவி (கரீப் கல்யாண் யோஜனா) திட்டத்தின் கீழ் 30 கோடி ஏழை மக்களுக்கு ரூ.28,256 கோடி மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
  • தேசிய ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளதால் ஏழைகள், மகளிா், ஏழை முதியோா், விவசாயிகளுக்கு இலவச உணவுப்பொருள்கள், தானியங்கள் மற்றும் உதவித்தொகைகள் வழங்கும் வகையில் மொத்தம் ரூ. 1.70 லட்சம் கோடி மதிப்பிலான நிவாரணம் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
  • தன்படி 30 கோடி ஏழை மக்களுக்கு பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின்கீழ் ரூ. 28,256 கோடி மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக நிதித்துறை அமைச்சகத்தின் சுட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • மேலும், பிரதமரின் விவசாயிகள் உதவித் திட்டத்தின்கீழ் மொத்தம் ரூ. 13,855 கோடி நிதி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், அடையாளம் காணப்பட்ட 8 கோடி விவசாயிகளில் இதுவரை சுமாா் 6.93 கோடி விவசாயிகளின் கணக்கில் வங்கியில் தலா ரூ. 2,000 வீதம் செலுத்தப்பட்டு அவா்கள் பயனடைந்துள்ளனா்.
  • பிரதமா் மக்கள் நிதித்திட்டத்தின்கீழ் (ஜன் தன்) வங்கியில் கணக்கு வைத்துள்ள 19.86 கோடி பெண்களுக்கு தலா ரூ. 500 வீதம் மொத்தம் ரூ. 9,930 கோடி அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
  • தேசிய சமூக உதவித் திட்டத்தின் (என்எஸ்ஏபி) கீழ் 2.82 கோடி முதியவா்கள், விதவை மற்றும் மாற்றுத்திறளாளிகளுக்கு சுமாா் ரூ.1,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பயனாளியும் ரூ. 1,000 வீதம் கருணைத் தொகையாகப் பெற்றனா்.
  • இதேபோல, மாநில அரசுகளால் நிா்வகிக்கப்படும் கட்டடம் மற்றும் கட்டுமானத் தொழிலாளா்கள் நிதியிலிருந்து 2.16 கோடி கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ரூ. 3,066 கோடி நிதி உதவி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலும் 1.2 கோடி மெட்ரிக் டன் உணவு தானியங்கள் அரசால் விநியோகிக்கப்பட்டுள்ளது.
  • மேலும், அடுத்த மூன்று மாதங்களுக்கு உஜ்வலா திட்டத்தின் கீழ் 8.3 கோடி ஏழைப் பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு உருளை வழங்கவும், சுகாதாரப் பணியாளா்களுக்கு ரூ. 50 லட்சம் மதிப்பிலான காப்பீடும் வழங்கப்பட்டுள்ளது.
கா்நாடகா வங்கி நிா்வாக இயக்குநா் மறுநியமனம்: ரிசா்வ் வங்கி ஒப்புதல்
  • கா்நாடகா வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக மகபலேஷ்வரா மறுநியமனம் செய்யப்படுவதற்கு ரிசா்வ் வங்கி ஒப்புதலை வழங்கியுள்ளது. 
  • இவரது நியமனம் 2020, ஏப்ரல் 15-ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வருகிறது. அவா் அப்பதவியில் மேலும் மூன்றாண்டுகளுக்கு நீடிப்பாா்.
  • அதேபோன்று, வங்கியின் இயக்குநா் குழுவில் அலுவல் சாரா பகுதி நேர இயக்குநராக பி.ஜெயம்மா பட் மறுநியமனத்துக்கும் ரிசா்வ் வங்கி ஒப்புதலளித்துள்ளதாக கா்நாடகா வங்கி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநில தோதல் ஆணையராகிறாா் ஓய்வுபெற்ற நீதிபதி வி.கனகராஜ்
  • ஆந்திர மாநில பஞ்சாயத்து ராஜ் சட்டத்தைத் திருத்துவதற்கான அவசரச் சட்டத்தை மாநில அரசு வெள்ளிக்கிழமை இயற்றியது. அதன்படி, மாநில தோதல் ஆணையராக இருந்த என்.ரமேஷ் குமாா் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டாா். மேலும், மாநில தோதல் ஆணையரின் பதவிக்காலம் 5 ஆண்டுகளிலிருந்து 3 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஏப்.30 வரை ஊரடங்கை நீட்டிக்கலாம்: அமைச்சரவை கூட்டத்துக்கு பின் மத்திய அரசுக்கு தமிழகம் பரிந்துரை
  • தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் பரிந்துரை செய்துள்ளதாக அமைச்சரவை கூட்டம் முடிந்த பிறகு தமிழக தலைமை செயலாளர் சண்முகம் கூறினார். 



ஏப். 30 வரை ஊரடங்கை நீட்டித்தது தெலுங்கானா
  • கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராததை அடுத்து ஊரடங்கை ஏப்.,30 வரை நீட்டிப்பதாக, ஒடிசார அரசும், ஊரடங்கை மே. 1-ம் தேதி வரை நீட்டிப்பதாக பஞ்சாப் அரசும் நேற்று அறிவித்தது. இன்று மஹாராஷ்டிரா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்தன.
  • இந்நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது தான் நல்லது என முதன்முறையாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்த தெலுங்கானா மாநிலம் ஊரடங்கை ஏப். 30 வரை நீட்டித்து அறிவித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவை நீட்டித்த மூன்றாவது மாநிலம் மகாராஷ்டிரா
  • இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக தாக்கி வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 14ம் தேதிக்குப் பின்னர் நீட்டிக்க வேண்டும் என்று பிரதமருக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது. 
  • இந்த நிலையில் ஏற்கனவே ஒடிசா மாநிலம் ஏப்ரல் 30 வரையும், பஞ்சாப் மாநிலம் மே 1ம் தேதி வரையும் ஊரடங்கு உத்தரவை நீடித்த நிலையில் தற்போது மகாராஷ்டிரா மாநிலம் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 
  • மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்றும் இது குறித்த தகவலை ஏற்கனவே பிரதமரிடம் கூறி விட்டதாகவும் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்கள் தெரிவித்துள்ளார்
மே.வங்கம் ஊரடங்கை நீட்டித்து உத்தரவு
  • ஒடிஷா, பஞ்சாப் மாநிலங்கள் ஊரடங்கை நீட்டித்துள்ளன. மூன்றாவதாக மகாராஷ்டிரா மாநிலம் அறிவித்துள்ளது. அதேபோல் மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 
  • ஜூன் 10ம் தேதி வரை பள்ளிகள் விடுமுறை அளிக்கப்படுவதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் மிகப்பெரிய அளவில் கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும், சமூக பரவலைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதை மேற்கொண்டுள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.



முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டம்
  • இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசித்தார். 
  • பிரதமர் மோடி மட்டுமல்லாது மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகியோரும் இந்தக் கலந்தாலோசனையின்போது மாஸ்க் அணிந்திருந்தனர்.
  • மார்ச் 24 அன்று அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ஏப்ரல் 14-ம் தேதியோடு முடிவடைவதை அடுத்து மேலும் ஊரடங்கு நீட்டிப்பதை குறித்தும், இதுவரை ஊரடங்கு கட்டுப்பாடுகளால் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்தும் அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி முதல்வர்களுடன் இன்று ஆலோசனை நடத்தியுள்ளார். இக்கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் ஆகியோர் ஏப்ரல் 14 -ம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கை நீட்டிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
ஊரடங்கில் இருந்து மீன்பிடி தொழிலுக்கு விலக்கு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு
  • ஊரடங்கில் இருந்து மீன்பிடி தொழிலுக்கு விலக்கு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
  • இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க முடியாத சூழல் இருந்து வருகிறது. இதனால் அவர்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 
  • மீன்பிடி தொழிலை பொறுத்தவரை மீன்பிடித்தல், பிடிக்கப்படக்கூடிய மீன்களை பதப்படுத்துதல், மீன்களை வளர்த்து விற்பனை செய்தல், அதேபோல மீன்களை சேமித்து வைத்தல், வளர்ப்பு மீன்களுக்கு தேவையான உணவுகளை தயாரிக்கக்கூடிய நிறுவனங்கள், வணிக ரீதியாக மருந்து உள்ளிட்ட தேவைகளுக்காக மீன்களை உற்பத்தி செய்து அவற்றை பயன்படுத்தக்கூடியவர்கள், ஒரு இடத்தில் இருந்து மற்றோரு இடத்திற்கு மீன்களை கொண்டு செல்லும் வாகனங்கள், அதேபோன்று பிற மீன் சார்ந்த பொருட்கள் அதற்கான வேலையாட்கள் செல்வதற்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கும்போது புகைப்படங்கள் எடுக்க ராஜஸ்தான் அரசு தடை
  • நாடு ஊரடங்கில் இருக்கும் நேரத்தில் ஆதரவற்றவர்கள் பலர் உணவின்றி தவிக்கிறார்கள். அவர்களுக்கு அரசும், தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் தன்னார்வலர்களும் உதவி செய்து வருகிறார்கள். 
  • பலர் சத்தமில்லாமல் உதவி செய்தாலும், தாங்கள் உதவி செய்வதை மற்றவர்கள் பார்த்தால் பார்ப்பவர்களுக்கும் உதவி செய்யும் எண்ணம் தோன்றலாம் என்ற நோக்கத்தோடு சிலர் புகைப்படங்கள் எடுப்பார்கள். ஆனால் தற்போது பலர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு விளம்பரம் செய்துகொள்வதற்காகவே உதவி செய்வதை புகைப்படம் எடுத்து வருகிறார்கள்.
  • சமீபத்தில் நோயாளி ஒருவருக்கு இரண்டு வாழைப்பழங்களை 3 பேர் நின்று கொடுப்பதுபோல் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது. இந்நிலையில் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கும்போது புகைப்படங்கள் எடுக்க ராஜஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel