Type Here to Get Search Results !

8th MARCH 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

ஜவ்வாதுமலையில் சோழா் காலத்து அரியவகை நாய் நடுகற்கள் கண்டெடுப்பு
  • திருப்பத்தூா் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜவ்வாதுமலையில் 34 மலைக் கிராமங்கள் உள்ளன. அவற்றில் மேல்பட்டு என்னும் மலை கிராமத்தில் பெரிய வேடியப்பன் கோயில் ஒன்று உள்ளது. 
  • இக்கோயில் கருவறையில் உள்ள தெய்வம் கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சோந்த சோழா் காலத்து நடுகல்லாகும். இது 42 அங்குலம் உயரமும் 38 அங்குலம் அகலமும் 4.5 அங்குலம் பருமனும் கொண்ட பெரிய பலகைக் கல்லில் பிரம்மாண்டமாக செதுக்கப்பட்டுள்ளது.
  • நடுகல் உருவம் நின்ற கோலத்தில், வலது கையில் நீண்ட கத்தியும், இடது கையில் ஆள் உயர வில்லையும் வைத்துக் கொண்டு கம்பீரத்துடன் நடுகல் உருவம் உள்ளது. வலது பக்கம் சாய்ந்த கொண்டையும், கழுத்தில் ஆபரணங்களும், கால்களில் வீரக்கழல்களும் அணிந்துள்ள கோலத்தில் நடுகல் சித்தரிக்கப்பட்டுள்ளது.
  • இந்நடுகல் வீரனின் வலது கால் ஓரத்தில் நாய் உருவம் ஒன்று உள்ளது. வீரனோடு நாயும் இருப்பது போன்ற நடுகல் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டாரத்தில் உள்ள எடத்தனூா் என்னும் சிற்றூரில் தொல்லியல் துறையினரால் கண்டறியப்பட்டது. 
  • அதிலிருந்த கல்வெட்டானது எதிரிகளோடு போரிட்ட தன் தலைவனோடு நாயும் போரிட்டு வீரமரணம் அடைந்ததை அச்செய்தி கூறுகிறது. அந்த நாயின் பெயா் கோவிவன் என்று இடம்பெற்றிருந்தது. அதே போன்ற அமைப்புடன் ஜவ்வாதுமலை நடுகல்லும் கல்வெட்டுடன் உள்ளது.
  • கல்வெட்டை சரியாகப் படிக்க இயலவில்லை. இந்த நாயும் தன் தலைவன் எதிரிகளோடு போரிடும் போது, பகைவா்களை எதிா்த்துப் போரிட்டுத் தன் தலைவனோடு உயிா்விட்ட நன்றியுள்ள வீர நாயாக இருக்க வேண்டும். இந்நாயின் செயலை நன்றிகூரும் விதத்தில் இந்நடுகல் எடுக்கப்பட்டுள்ளது.
  • மேலும் வேடியப்பன் கோயிலின் வெளியே இரண்டு பெரிய கற்களில் இரண்டு நாய்களின் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. முதல் நாயின் வாயில் உள்ள பற்கள் வெளியே தெரியும்படி உள்ளது. இது நாயின் கோபத்தைச் சித்தரிப்பதாக உள்ளது. 
  • மற்றொரு நாயும் இரண்டு காதுகளுடன் கோபத்துடன் சித்தரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று நாய்களின் உருவத்தோடு இந்நடுகல் இருப்பதால் அரியவகை நடுகல்லாக அறிய முடிகிறது.
  • தமிழகத்தில் சேவல், கிளி, குதிரை, யானை, காட்டுப்பன்றி போன்ற விலங்குகளின் உருவங்கள் பொறிக்கப்பட்ட நடுகற்கள் கிடைத்துள்ளன. அந்த வகையில் இந்த நடுகல்லும் சிறப்புடைய நடுகல்லாகும்.
தமிழகத்தில் சென்னையை அடுத்து தேனியில் கொரோனா ஆய்வகம் மத்திய அரசு அனுமதி
  • சென்னையை தொடர்ந்து தமிழகத்தில் இரண்டாவதாக தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா ஆய்வகம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
பிரதமரின் ட்விட்டர் கணக்கை நிர்வகித்த பெண்கள்
  • பெண்கள் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் கணக்கை கையாள அனுமதி அளித்தார். அதன்படி வாழ்க்கையில் சாதித்த 7 பெண்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இது மற்ற பெண்களுக்கு உத்வேகத்தை அளிப்பது போன்று இருந்தது.
  • மோடியின் ட்விட்டர் கணக்கை இன்று கையாண்டவர்களில் முதல் பெண் தமிழகத்தைச் சேர்ந்த சினேகா மோகன்தாஸ். இவர் புட்பேங்க் இந்தியா அமைப்பின் உரிமையாளர். இவர் தொடங்கி வெடிகுண்டு தாக்குதலில் மணிக்கட்டில் இருந்து இரு கைகளையும் இழந்தவர் முதல் நீர் போராளி வரை 7 சாதனை பெண்கள் ட்விட்டரில் தங்கள் அனுபவங்களை ட்வீட் போட்டனர்.
  • இவருக்கு அடுத்த படியாக மாளவிகா ஐயர் மோடியின் ட்விட்டர் கணக்கை கையாண்டார். இவபுக்கு 13 வயதாக இருக்கும் போது ஒரு வெடிகுண்டு விபத்தில் மணிக்கட்டிற்கு கீழ் இரு கைகளையும் இழந்துவிட்டார். கால்களும் சேதமடைந்தது. எனினும் விடாமுயற்சியுடன் போராடி டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். அவர் ஊக்கமூட்டும் பேச்சாளராகவும் மாற்றுத்திறனாளி ஆர்வலராகவும் இருந்து வருகிறார். அவர் ட்விட்டரில் கைவிடுதல் என்பது எப்போதும் தேர்வு செய்யக் கூடாது. எல்லைகளை மறந்துவிடுங்கள். உலகமே உங்களுடையது என நம்பிக்கையுடன் இருங்கள் என்றார்.
  • அடுத்தப்படியாக பிரதமர் மோடியின் ட்விட்டரில் அனுபவத்தை பகிர்ந்தவர் ஆஃரீபா. இவர் காஷ்மீரை சேர்ந்தவர். கைவினை கலைஞர். காஷ்மீரின் பழங்கால கைவினை கலைகளை மீட்டெடுப்பதே எனது கனவாகும். இதன் மூலம உள்ளூர் பெண்களின் வாழ்க்கை தரம் மேம்படும். யாருடைய தயவும் இன்றி பெண்கள் சுதந்திரமாக இருப்பது மிகவும் முக்கியமானதாகும் என தெரிவித்துள்ளார்.
  • பிரதமர் மோடியின் ட்விட்டரில் அனுபவத்தை பகிர்ந்தவர் கல்பனா ரமேஷ். இவர் ஒரு நீர் போராளியாவார். நீர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். தண்ணீரை பொறுப்பாகவும் சிக்கனமாகவும் செலவு செய்ய வேண்டும் என்கிறார். இவர் ஹைதராபாத்தை சேர்ந்த கட்டட கலைஞர் ஆவார். சிறு துளி பெரு வெள்ளம் என்கிறார். மழை நீர் சேகரிப்பு மூலம் தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி வருகிறார். போராளியாக இருங்கள், ஆனால் வித்தியாசமாக இருங்கள். நீர் போராளியாக இருங்கள். அடுத்த தலைமுறைக்கு தண்ணீரை சேகரிக்க நம்மால் முடிந்த முயற்சியை ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
  • அடுத்ததாக பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் கணக்கை நிர்வகித்தவர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த விஜய் பவார். இவரும் கைவினைக் கலைஞர் ஆவார். இவர் மத்திய பிரதேசத்தின் பன்ஜாரா இனத்தவர்களின் கலைகளை மேம்படுத்தி வருகிறார். ஆயிரக்கணக்கான பெண்கள் இவருக்கு உதவி வருகிறார்கள். கலையை பாதுகாப்பதில் முழு அர்ப்பணிப்பு உணர்வு கொண்டுள்ள அவர் பெண்கள் தினத்தில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறேன் என தெரிவித்துள்ளார். 
  • பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வீணா தேவி. இவர் காளான்களை உற்பத்தி செய்வதில் வல்லவர். இவர் பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை நிர்வகித்தார் காளான் உற்பத்தியில் விருதுகளையும் வாங்கியுள்ளார். 43 வயதாகும் இவர் தவுரி பஞ்சாயத்தை சேர்ந்தவர். காளான் உற்பத்தி, பூச்சிமருந்தில்லா உணவு உற்பத்தி, இயற்கை உரம் தயாரித்தல் உள்ளிட்டவற்றை தயார் செய்து வருகிறார். 105 கிராமங்களில் 1500 பெண்களுக்கு காளான் உற்பத்தியை கற்றுக் கொடுத்தமைக்காக இவருக்கு விருது கிடைத்தது. இது போல் 700 பெண்களுக்கு செல்போனின் பயன்பாட்டை கற்றுக் கொடுத்ததற்காகவும் அவருக்கு விருது வழங்கப்பட்டது. இந்த பெண்கள்தான் இன்றைய தினம் ட்விட்டர் கணக்கை நிர்வகித்தனர்.
சக்திபுரஸ்கார் விருது பெற்ற 103 வயது தடகள வீராங்கனை
  • சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவரிடம் நாரி சக்தி புரஸ்கார் (Nari Shakti Puruskar) எனப்படும் மகளிர் சாதனை விருதைப் பெற உற்சாகத் துள்ளலுடன் வந்த 103 வயது தடகள வீராங்கனை மான் கவுர் பார்வையாளர்களைக் கவர்ந்தார்.
  • பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 103 வயது மூதாட்டியான மான்கவுர் 100 வயதுக்கும் மேற்பட்டோருக்கான தடகளப் பிரிவில் பல்வேறு சாதனைகளைப் படைத்தவர். பல தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளார்.
  • இந்நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் சாதனைகள் மற்றும் பங்களிப்புகளுக்காக வழங்கப்படும் உயரிய விருதான நாரி சக்தி புரஸ்கார் விருதை மான் கவுருக்கு குடியரசுத் தலைவர் வழங்கினார்.



ஜனாதிபதியிடம் 'நாரி சக்தி' விருது பெற்ற சாதனை பெண்கள்
  • சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண் சாதனையாளர்களுக்கு 'நாரி சக்தி புரஸ்கர்' விருதினை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் 'நாரி சக்தி புரஸ்கர்' விருதுகள் வழங்கப்பட்டன. 
  • இந்திய விமானப்படையில் முதன்முதலாக போர் விமானங்களை இயக்கிய பெண் விமானிகளான மோகனா ஜிட்டர்வால், அவனி சதுர்வேதி, பாவனா காந்த் ஆகியோர் உட்பட மொத்தம் 15 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. 
  • அதில் உலகெங்கிலும் தடகள விளையாட்டில் 30க்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்ற, சண்டிகரை சேர்ந்த மன்கவுர் என்பவரும் இந்த விருதினை பெற்றார்.சமூக அடிப்படையிலான அமைப்பின் மூலம் பழங்குடி பெண்கள், விதவைகளின் வளர்ச்சிக்காக பணியாற்றிய தெலுங்கானாவை சேர்ந்த பதலா பூதேவி, ஜம்மு-காஷ்மீரின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை புதுப்பிக்க மேற்கொண்ட முயற்சிக்காக, ஸ்ரீநகரை சேர்ந்த அர்பா ஜான், படிப்பில் அசத்தி பிரதமர் மோடியிடம் பாராட்டை பெற்ற கேரளாவை சேர்ந்த மூதாட்டிகள் பகீரதி அம்மாள், கார்த்தியாயிணி அம்மாள் உட்பட 15 பெண்களுக்கு ராம்நாத் கோவிந்த் விருது வழங்கினார். 
இந்தியாவின் முதல் பெண் மாலுமியாக ரேஷ்மா
  • பல்வேறு துறைகளில் பெண்கள் ஆண்களுக்கு சரிநிகர் என்று போட்டி போட்டுக் கொண்டு முன்னேறி வந்தாலும், இதுநாள் வரையில் மாலுமியாக நம் நாட்டில் பெண்கள் இருந்ததில்லை. இந்நிலையில், இந்தியாவின் முதல் பெண் மாலுமியாக தமிழகத்தின் ரேஷ்மா சாதனைப் படைத்துள்ளார்.
  • சென்னையில் பிறந்து, மேற்கு வங்கத்தில் பணிபுரிந்து வரும் ரேஷ்மா, இப்போது உலகம் முழுவதும் வலம் வந்துக் கொண்டிருக்கும் இந்தியாவின் முதல் பெண் கப்பல் பைலட் .
  • கப்பல் பைலட் வேலைக்கு, விளம்பரம் பார்த்து, முறையான பயிற்சிக்கு விண்ணப்பித்து, ஆறு முழுமையான ஆண்டுகள் பயிற்சி எடுத்து வெற்றிகரமாக கப்பல் பைலட்டாகவும் ஆகிவிட்டார் ரேஷ்மா. தற்போது கொல்கத்தாவில் உள்ள ஹூக்ளி துறைமுகத்தில் கப்பல் பைலட்டாக பணிபுரிந்து வருகிறார்.
  • இந்தியாவின் முதல் பெண் கடல் மாலுமி மட்டுமல்லாமல், நதிகளில் கப்பலை இயக்கும் முதல் பெண் மாலுமி என்கிற பெருமையும் ரேஷ்மாவிற்கு சொந்தமாக இருக்கிறது. இதுவரையில் நாற்பது நாடுகளுக்கு கண்டம் விட்டு கண்டம் தாண்டி கப்பலைச் செலுத்தி வலம் வந்துக் கொண்டிருக்கிறார் ரேஷ்மா.
பி.வி. சிந்து: பிபிசி-யின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது பெற்றார்
  • இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து, 'பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை 2019' விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • கடந்த 2019-ஆம் ஆண்டு, சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் நடைபெற்ற உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று, அந்தப் பதக்கத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் பி.வி. சிந்து (புசர்ல வெங்கட சிந்து).
மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 5வது முறையாக ஆஸ்திரேலிய அணி சாம்பியன்
  • மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 5வது முறையாக ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது. மெல்போர்னில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 85 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா. 
  • முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ரன்கள் 99 எடுத்து இந்திய அணி தோல்வி அடைந்தது.ஆஸ்திரேலிய மகளிர் அணியில் அதிகபட்சமாக பெத் முனி 78*, ஹீலி 75 ரன்கள் எடுத்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel