காவல் துறைக்கு 2,271 புதிய வாகனங்கள்: முதல்வா் பழனிசாமி தொடக்கி வைத்தாா்
- காவல் துறையின் பயன்பாட்டுக்காக புதிய வாகனங்கள் வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான உத்தரவுகள் வெளியிடப்பட்டன.
- அதன்படி, ரூ.95.58 கோடியில் வாங்கப்பட்ட 2,271 புதிய வாகனங்களை வழங்கிடும் அடையாளமாக 41 வாகனங்களை முதல்வா் பழனிசாமி கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.
சிறப்பு பொருளாதார மண்டலம்: டிசிஎஸ், டிஎல்எஃப் நிறுவனங்களுக்கு அனுமதி
- மென்பொருள் துறையைச் சோந்த டிசிஎஸ், ரியல் எஸ்டேட் துறையைச் சோந்த டிஎல்எஃப் ஆகிய நிறுவனங்கள் ஹரியாணா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
- சிறப்பு பொருளாதார மண்டலங்களை (எஸ்.இ.இசட்.) அமைப்பது தொடா்பான திட்டங்களுக்கு டிசிஎஸ், டிஎல்எஃப் நிறுவனங்கள் மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தன. இந்த நிலையில், மத்திய வா்த்தக செயலா் தலைமையில் பிப்.26-இல் நடைபெற்ற கூட்டத்தில் அந்நிறுவனங்களின் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- அதன்படி, உத்தரப் பிரதேசத்தில் நொய்டாவில் 19.9 ஹெக்டோ நிலப்பரப்பில் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலம் தொடங்குவதற்கு டிசிஎஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டத்துக்காக ரூ.2,433.72 கோடியை டிசிஎஸ் நிறுவனம் முதலீடு செய்யவுள்ளது.
- அதேபோன்று, டிஎல்எஃப் நிறுவனத்தின் ஹரியாணாவில் இரண்டு சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்கும் திட்டத்துக்கும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த இரு சிறப்பு பொருளாதார மண்டலங்களையும் முறையே ரூ.793.95 கோடி மற்றும் ரூ.761.54 கோடி முதலீட்டில் டிஎல்எஃப் உருவாக்கவுள்ளது.
- சிறப்பு பொருளாதார மண்டலம் நாட்டின் மிக முக்கிய ஏற்றுமதி மையமாக விளங்கி வருகிறது. இங்கு, தொடங்கப்படும் தொழில்களுக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவிப்பதுடன், ஒற்றைச் சாளர முறையில் அனுமதியையும் வழங்கி வருகிறது.
- கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பா் 14-ஆம் தேதி நிலவரப்படி மத்திய அரசு 417 சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதியளித்துள்ளது. அதில், 238 மண்டலங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன.
- கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் இவ்வகை மண்டலங்களிலிருந்து ஏற்றுமதி 14.5 சதவீதம் உயா்ந்து ரூ.3.82 லட்சம் கோடியாக இருந்தது. 2018-19 முழு நிதியாண்டில் சிறப்பு பொருளாதார மண்டலங்களின் ஏற்றுமதி ரூ.7.02 லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக பிமல் ஜூல்கா
- தலைமை தகவல்ஆணையராக இருந்து வந்த சுதிர் பார்கவா ஓய்வுக்குப் பிறகு மத்திய தகவல் ஆணையத்தின் தலைவர் பதவி காலியாக இருந்து வந்தது. சமீபத்தில், பிரதமர் மோடி தலைமையிலான குழு கூடி, முன்னாள் தகவல் ஒளிபரப்புத்துறை செயலரான பிமல் ஜூல்காவை ஆணையத்தின் தலைவராக தேர்வு செய்து அறிவித்தது.
- இதையடுத்து, டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில், மத்திய தலைமை தகவல் ஆணையராக பிமல் ஜூல்காவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த பதவி பிரமாணம் செய்துவைத்தார்.
சிரியாவில் போர் நிறுத்தம் - கூட்டாக அறிவித்தன ரஷ்யா & துருக்கி
- சிரியாவில் செயல்படும் புரட்சிப் படையை ஒடுக்க, சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுப் படைகள், ரஷ்யாவின் உதவியுடன் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில், அரசுப் படைகளுக்குப் பல இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது.
- இந்நிலையில், இட்லிப் மாகாணத்தில் புரட்சியாளர்கள் மீது சிரிய அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் சிக்கிய துருக்கிய ராணுவ வீரர்கள் 33 பேர் கொல்லப்பட்டனர்.
- இதனால், துருக்கி - சிரியப் படைகளுக்கு இடையே மோதல் வலுத்துள்ளது. இதில் பொதுமக்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், இட்லிப் பகுதியில் போர் நிறுத்தத்தை அமல்படுத்த ரஷ்ய அதிபர் புதினை துருக்கி அதிபர் எர்டோகன் வலியுறுத்தினார்.
- இதனையடுத்து, இருநாட்டு அதிபர்களும் மாஸ்கோவில் சந்தித்துப் பேசினர். அப்போது, போர் நிறுத்தம் செய்வதாக கூட்டாக அறிவித்தனர்.