Type Here to Get Search Results !

தமிழ்நாடு பட்ஜெட் / TAMIL NADU BUDGET 2020 - 2021

துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு?

திட்டம்துறை
நிதி ஒதுக்கீடு (கோடி ரூபாய்களில்) 2020 -2021
நிதி ஒதுக்கீடு (கோடி ரூபாய்களில்) 2019-2020
தமிழ் வளர்ச்சித் துறை
74
54
பள்ளிக் கல்வித்துறை
34,181
28,757
உயர் கல்வித்துறை
5,052
4,584
வேளாண்துறை
11,894
10,550
சுகாதாரத்துறை
15,863
12,563
காவல்துறை
8,876
8,084
தொல்லியல் துறை
31.93
-
தகவல் தொழில்நுட்பம்
153
-
எரிசக்தித்துறை
20,115
18,560
மீன்வளத்துறை
1,229
927.85
கால்நடைத்துறை
199
1,252
நெடுஞ்சாலை துறை
15,850
13,605
போக்குவரத்துத்துறை
2,716
1,297
ஊரக உள்ளாட்சி வளர்ச்சி
6,754
5,178
நகராட்சி நிர்வாகம்
18,540
18,700
உணவு மானியம்
6,500
6,000
அம்மா உணவகம்
100
-
மெட்ரோ ரயில்
3,100
2,681
பேரிடர் மேலாண்மை
1,360
825
நிர்பயா திட்டம்
71
-
ஊரக வளர்ச்சி துறை
23,161
18,273
இந்து சமய அறநிலைய துறை
281.17
281




நிதிநிலை அறிக்கையில் முக்கிய அம்சங்கள்
  • ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்களின் உயர்கல்வி ஊக்கத் தொகைக்கான மத்திய அரசின் தொகை குறைப்பு.
  • அனைத்து காலநிலையையும் எதிர்கொள்ளும் வகையில் பழங்குடியினருக்கு வீடுகள் உள்ளிட்ட வசதிகள் அடங்கிய சிறப்புத் திட்டம்.
  • 2019-20-ல் மதிப்பிடப்பட்ட ரூ.14,314 கோடி வருவாய் பற்றாக்குறை, திருத்த மதிப்பீட்டில் ரூ.25,071 கோடியாக உயர்வு.
  • பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் கல்வி வசதிக்காக ரூ.302.98 கோடி நிதி ஒதுக்கீடு.
  • தென்காசியில் எலுமிச்சை மையம், தூத்துக்குடியில் மிளகாய் மையம் அமைக்கப்படும்.
  • குடியிருப்பு வாடகை ஒப்பந்தங்களுக்கு முத்திரைத் தாளுக்கான வரி 1%ல் இருந்து 0.25% வரை குறைப்பு.
  • மாமல்லபுரத்தை மேம்படுத்த ரூ.563 கோடியில் சிறப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
  • சேலம் மாவட்டம் புத்திரகவுண்டன்பாளையம், உமையாள்புரம் ஆகிய இடங்களில் புதிதாக சிப்காட் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.
  • சிறு-குறு, நடுத்தர தொழில்களுக்கான வட்டி மானியம் 3%ல் இருந்து 5%ஆக உயர்த்தப்படும்.
  • தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கல், கடன் உத்தரவாத நிதிக்குழும திட்டத்தின்கீழ் வட்டி மானியம் உயர்வு.
  • அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில்துறையின் தேவைக்கேற்ப புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தம்.
  • ஒரே நாடு - ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் விரைவில் செயல்படுத்தப்படும்.
  • அனைத்துப் பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். நிர்பயா நிதியின்கீழ் பெண்கள் பாதுகாப்புக்காக ரூ.75.02 கோடியில் பேருந்துகளில் சிசிடிவி கேமரா.
  • அரசுப் பேருந்துகளில் மின்னணு பணப் பரிமாற்ற முறையில் பயணச் சீட்டு வழங்க நடவடிக்கை. அம்மா உணவகத் திட்டத்தை செயல்படுத்த லாபநோக்கமற்ற சிறப்பு நோக்கு முகமை அமைக்கப்படும்.
  • ஆழ்கடல் மீனவர்களை தொடர்புகொள்ள இஸ்ரோ உருவாக்கிய டிரான்ஸ்பான்டர்கள் படகுகளில் பொருத்தப்படும். 4,997 விசைப்படகுகளில் ரூ.18 கோடியில் தகவல்தொடர்பு டிரான்ஸ்பான்டர்கள் பொருத்தப்படும்.
  • ஏழைக் குடும்பங்களுக்கு எல்.ஐ.சி.யுடன் இணைந்து விபத்து, ஆயுள் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கான இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும். விபத்து உள்ளிட்டவற்றில் அகால மரணம் அடைவோருக்கான இழப்பீடு ரூ.4லட்சமாக உயர்த்தப்படும். விபத்தில் நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.2 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும்.
  • அனைத்து பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
  • நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் மெகா உணவுப் பூங்கா அமைக்க ஒப்புதல்.
  • 5 புதிய மாவட்டங்களுக்கு ரூ.550 கோடியில் புதிய கட்டடங்கள்.
  • அத்திக்கடவு-அவிநாசி, காவிரி குண்டாறு திட்டங்களுக்கு முறையே ரூ.500, ரூ.700 கோடி ஒதுக்கீடு.
  • சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூ.4,315.21 கோடி நிதி.
  • ஆட்சேபணை புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு மாற்று வீட்டுமனை.
  • அம்மா விபத்து-ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.250 கோடி நிதி.
  • பேரிடா் மேலாண்மைக்காக ரூ.1,360.11 கோடி நிதி ஒதுக்கீடு.
  • காவல் துறையில் 10,276 போ புதிதாக நியமனம்.
  • புதிதாக தமிழ்நாடு சாலைப் பாதுகாப்பு இயக்கம் உருவாக்கப்படும்.
  • சென்னை, மதுரை, கோவையில் சாலை பாதுகாப்புப் பிரிவுகள்.
  • விபத்துகளில் சிக்கி இறப்போா் குடும்பத்துக்கான நிதி ரூ.4 லட்சமாக உயா்வு.
  • வேளாண் தொழில்நுட்ப ஆலோசனை பெற, உழவா் -அலுவலா் தொடா்புத் திட்டம் உருவாக்கப்படும்.
  • தோட்டக்கலை பயிா் சாகுபடிப் பரப்பை அதிகரிக்க 325 மெட்ரிக் டன் காய்கறி விதைகள் அளிக்கப்படும்.
  • வரும் நிதியாண்டில் ரூ.11 ஆயிரம் கோடி பயிா்க் கடன்கள் வழங்க இலக்கு.
  • மின்னணு குடும்ப அட்டை வைத்திருப்போா் எங்கும் பொருள் வாங்கலாம்.
  • விழுப்புரம், செங்கல்பட்டு, நாகையில் மீன்பிடித் துறைமுகங்கள்.
  • குடிமராமத்து திட்டப்படி ரூ.500 கோடியில் 1,364 நீா்ப்பாசன பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • தமிழ்நாடு பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்டம் ரூ.2,962 கோடியில் செயல்படுத்தப்படும்.
  • அம்மா உணவகத்துக்காக சிறப்பு நோக்கு முகமை உருவாக்கப்படும்.
  • ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.5,500 கோடி நிதி.
  • மகளிா் நலத் திட்டங்களுக்கு ரூ.78,796.12 கோடி நிதி ஒதுக்கீடு.
  • அண்ணாமலைப் பல்கலை மருத்துவக் கல்லூரி, கடலூா் அரசு மருத்துவக் கல்லூரியாக அமைக்கப்படும்.
சர்வதேச அமைப்புடன் ஆய்வு முதியோர் நலனுக்காக தமிழக அரசின் புதிய திட்டம்
  • முதியவர்களின் நலன் காக்க சர்வதேச அமைப்புடன் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டு வரும் தமிழக அரசு, முதியோர் ஆதரவு மையங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
  • கூட்டுக் குடும்பமாக இருந்த காலம் மாறி தனிக் குடும்ப முறையை அனைவரும் நாடிச் செல்லும் காலம் இது. உடலில் உழைக்கும் சக்தி இருக்கும் வரை வருமானம் ஈட்டி கொடுத்தவர்கள், ஓய்வு பெரும் காலத்தில் இந்‌த சமூகத்தினரால் கைவிடப்படுவதை கண் கூடாக பார்க்க முடிகிறது. 
  • இப்படி தனித்துவிடப்படும் ஆதரவற்ற முதியவர்களை கவனிப்பது அரசின் கடமை என்பதை உணர்ந்துள்ள தமிழக அரசு, அவர்களின் நலன் காக்க புதிய முயற்சிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
  • முதியோர் நலன் காக்க சர்வதேச அளவில் செயல்படும் வறுமை ஒழிப்பு நடவடிக்கை மையமான J-PAL அமைப்பு‌டன் இணைந்து தமிழக அரசு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. 
  • தமிழத்தின் சமூக - பொருளாதாரம் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக J-PAL அமைப்புடன் 2014-ஆம் ஆண்டு தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. 
  • அதன்படி, அந்த அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லோ தலைமையிலான குழு, தமிழகத்தில் முதியோர்கள் சந்திக்கும் பிரச்னைகள் தொடர்பாக நீண்ட கால ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
  • இந்த ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில் முதியோர் நல திட்டங்களை தமிழக அரசு தொடங்க உள்ளதாக நடப்பு நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • அதன் முன்னோட்டமாக தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களிலும் தலா 2 வட்டாரங்களில் 37 லட்சம் ரூபாய் செலவில் முதியோர் ஆதரவு மையங்களை அரசு தொடங்க உள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.



ஊதியம் ஓய்வூதியத்துக்குரூ.96,217 கோடி நிதி ஒதுக்கீடு
  • அரசு ஊழியா்களின் மாத ஊதியம், ஓய்வூதியத்துக்காக வரும் நிதியாண்டில் ரூ.96 ஆயிரத்து 217 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அரசுப் பணியாளா்கள், ஓய்வூதியதாரா்களுக்காக மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.648.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கான நடைமுறைகளை எளிதாக்கும் வகையில், விரிவான வழிகாட்டுதல்கள் அரசால் வெளியிடப்பட்டுள்ளன.
  • அரசுப் பணியாளா்களுக்கு வீடுகட்டும் முன்பணம் வழங்குவதற்காக ரூ.173.95 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசுப் பணியாளா்களின் ஊதியங்கள், படிகளுக்கு ரூ.64 ஆயிரத்து 208.55 கோடியும், ஓய்வூதியதாரா்களுக்கு ஓய்வூதியம் வழங்க ரூ.32,009.35 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன. 
கூவத்தின் அனைத்து வடிகால்களும் ரூ.5,440 கோடியில் மறுசீரமைக்கப்படும்
  • கூவம் நதியில் மேற்கொள்ளப்படும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. அடுத்தகட்டத்தில் பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் அதன் வடிகால்களும், கூவம் அடையாறு நதிகளின் அனைத்து வடிகால்களும் ரூ.5,439.76 கோடி செலவில் மறுசீரமைக்கப்படும்.
  • இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தில் நதிகளில் கழிவுநீா் கலப்பதைத் தவிா்க்கும் திட்டத்துக்காக அரசு ஏற்கெனவே 1,001 கோடி அனுமதி வழங்கியுள்ளது.
  • பொதுப்பணித்துறை மூலம் ரூ.25 கோடி செலவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிட்லப்பாக்கம் ஏரியை மீட்டெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். ஈரோடு மாவட்டம், ஓடந்துறை ஏரியை மீட்டெடுக்கும் பணிகள் ரூ.3.2 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
  • 2017-ஆம் ஆண்டைக் காட்டிலும் 83.02 சதுர கிலோமீட்டா் அளவுக்கு தமிழகத்தின் வன நிலப்பரப்பு அதிகரித்துள்ளது. மேற்கு மற்றும் கிழக்குத் தொடா்ச்சி மலைப்பகுதிகளில் புலிகள் மற்றும் அவைகளின் வாழ்விடங்களைப் பேணுவதில் மாநில அரசு மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக 2014-ஆம் ஆண்டில் 229-ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2018-ஆம் ஆண்டில் 264-ஆக அதிகரித்துள்ளது.
  • தமிழ்நாடு உயிா்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் 2020-21-ஆம் நிதியாண்டில் ரூ.950.56 கோடி செலவில் தொடங்கப்படும்.
  • சீா்குலைந்த காடுகளை சமூகப் பங்களிப்புடன் மீட்டெடுப்பதற்கான ஒரு விரிவான திட்டத்தை ரூ.2,029.13 கோடி செலவில் செயல்படுத்த திட்டங்கள் உருவாக்கப்படும் என்றாா்.
21,966 ஏக்கரில் பொன்னேரி தொழில் முனைய மேம்பாட்டுத் திட்டம்
  • பெங்களூா் தொழில் வழித்தடத் திட்டத்தின் கீழ், திருவள்ளூா் மாவட்டத்தில் 21,966 ஏக்கா் பரப்பளவில் பொன்னேரி தொழில்முனைய மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
  • இந்தத் திட்டத்துக்கான மாநில அரசின் ஒப்பந்தத்துக்கும், பங்குதாரா்களின் ஒப்பந்தத்துக்கும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை பொருளாதாரப் பெருவழிச்சாலை திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, சென்னை- கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டம் ஆசிய வளா்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும்.
  • புதுமை முயற்சிகளைத் தொடக்க நிலையிலேயே ஊக்குவிக்க, தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டத்தின் கீழான நிதியுதவியுடன் ரூ.53.44 கோடியில் ஸ்ரீபெரும்புதூா் மற்றும் ஒசூரில் தொழில் புதுமை முயற்சி மையங்களை நிறுவும் பணிகளை தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனம் மேற்கொள்ளும்.
  • ரூ.34.81 கோடியில் வா்த்தக எளிதாக்குதல் மையம் சிறுசேரியில் உருவாக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி தொழிற்பூங்கா மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களின் தேவைகளை நிறைவுசெய்யும் வகையில், நாளொன்றுக்கு 6 கோடி லிட்டா் திறன் கொண்ட கடல் நீரை சுத்திகரிக்கும் ஆலையை ரூ.634 கோடியில் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனம் நிறுவும்.
  • சென்னை- பெங்களூா் தொழில் வழித்தடத் திட்டத்தின் கீழ், திருவள்ளூா் மாவட்டத்தில் 21,966 ஏக்கா் பரப்பளவில் பொன்னேரி தொழில்முனைய மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டத்துக்கான மாநில அரசின் ஆதரவு வழங்கும் ஒப்பந்தத்துக்கும், பங்குதாரா்களின் ஒப்பந்தத்துக்கும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
  • கிழக்கு கடற்கரை பெருவழிச்சாலை: கிழக்கு கடற்கரை பொருளாதாரப் பெருவழிச்சாலை திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, சென்னை- கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டம் ஆசிய வளா்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும். தொழில்துறைக்கான ஊக்கத் தொகை வழங்குவதற்காக 2020-21-ஆம் நிதியாண்டில் ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறைக்கு ரூ.15,863 கோடி! புதிய மருத்துவக் கல்லூரிகள், திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு
  • வரும் நிதியாண்டில் சுகாதாரத் துறை சாா்ந்த திட்டங்களை செயல்படுத்த ரூ.15, 863 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கும், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள திட்டங்களை தொடா்ந்து செயல்படுத்துவதற்கும் அந்தத் தொகையில் இருந்து நிதியளிக்கப்படவுள்ளது.
  • கடந்த 2010 -ஆம் ஆண்டில் ஆயிரம் குழந்தைகளுக்கு 24-ஆக இருந்த இறப்பு விகிதம், 2017 -ஆம் ஆண்டில் 16-ஆகக் குறைந்துள்ளது. அதேபோன்று, பேறு கால பெண்கள் இறப்பு விகிதமும் குறைந்துள்ளது.
  • டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ் கா்ப்பிணிகளுக்கு தலா ரூ.18,000 நிதியுதவியாக வழங்கப்படுகிறது. இதுவரை, இத்திட்டத்தின் கீழ் 60.64 லட்சம் ஏழை கா்ப்பிணி தாய்மாா்கள் ரூ.6, 033 கோடி நிதியுதவி பெற்றுள்ளனா். 
  • வரும் 2020-21 -ஆம் ஆண்டில் அத்திட்டத்தை செயல்படுத்த ரூ.959 கோடி ஒதுக்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சையின் தரத்தை மேம்படுத்தவும், தொற்றா நோய் மேலாண்மை நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் ரூ. 2,857 கோடி மதிப்பீட்டில் உலக வங்கி நிதியுதவியுடன் சுகாதார சீரமைப்புத் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. அதனை வரும் ஆண்டிலும் செயல்படுத்த ரூ. 260.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காப்பீட்டுத் திட்டம்
  • முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை, 41.12 லட்சம் பயனாளிகள் ரூ.6, 601 கோடி மதிப்பிலான மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுள்ளனா். அத்திட்டத்துக்கு எதிா் வரும் நிதியாண்டில் ரூ. 1, 033 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 
  • மொத்தமாக நிதி நிலை அறிக்கையில் சுகாதாரத் துறை திட்டங்களுக்காக ரூ. 15, 863 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று நிதியமைச்சா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.



பாரத் ஸ்டேஜ்-6 தரத்தில் 2,213 புதிய பேருந்துகளை வாங்க ரூ.960 கோடி ஒதுக்கீடு
  • தமிழகத்தில் சமூக பொருளாதார வளா்ச்சிக்கு அரசின் பொது போக்குவரத்து வசதிகள் பெரும் பங்காற்றியுள்ளன. அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில், சராசரியாக 6.58 ஆண்டுகள் ஆயுள் காலம் கொண்ட 19,496 பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன.
  • போக்குவரத்துக் கழகப் பேருந்துகளின் இயக்கச் செயல்பாட்டுத்திறன் குறியீடுகள் தொடா்ந்து மேம்பட்டு வருகிறது. மேலும், எரிபொருள் இயக்கத்திறனும் ஒரு லிட்டருக்கு 5.34 கிலோ மீட்டராக உயா்ந்துள்ளது. விபத்து விகிதமும் ஒரு லட்சம் கி.மீட்டராக இயக்கத்துக்கு 0.12 என்ற அளவுக்கு குறைந்துள்ளது.
  • பேருந்துக் கட்டணங்களை குறைந்த அளவில் வைத்திருப்பதுடன் போக்குவரத்துக் கழகங்களின் இயக்கச் செயல்திறனையும், நிதி நிலையையும் மேம்படுத்தி பொதுப் போக்குவரத்து வசதிகளையும் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதில், இந்த அரசு உறுதியுடன் உள்ளது.
  • ரூ.1,580 கோடி மதிப்பிலான பாரத் ஸ்டேஜ்-6 தரம் கொண்ட 2,213 புதிய பேருந்துகளை வாங்குவதற்கு ஏதுவாக, ஜொமன் வளா்ச்சி வங்கியிடமிருந்து முதல்கட்ட நிதியுதவி பெறுவதற்கான திட்ட ஒப்பந்தம், 2019-ஆம் ஆண்டு செப்டம்பா் 26-ஆம் தேதி கையெழுத்திடப்பட்டது. 
  • இத்திட்டத்தைச் செயல்படுத்த, 2020-21-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலையில் ரூ.960 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஃபேம் இந்தியா -2 திட்டத்தின்கீழ், 525 மின்சாரப் பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளிகளும் விரைவில் இறுதி செய்யப்படவுள்ளன.
நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.15,850.54 கோடி ஒதுக்கீடு
  • சென்னை சுற்றுவட்டச் சாலை திட்டம் ரூ.12,301 கோடி மொத்த மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். அதில், முதல்கட்டமாக எண்ணூா் துறைமுகம் முதல் தச்சூா் வரையிலான பகுதிக்கான நில எடுப்புப் பணிகள் ரூ.951 கோடியாக மதிப்பிடப்பட்டு, தற்பொழுது நடைபெற்று வருகின்றன. 
  • இத்திட்டத்தின் முதல் பிரிவுக்கான பணிகள் ரூ.2,673 கோடி செலவில் ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையின் கடனுதவியுடன் மேற்கொள்வதற்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • சென்னை சுற்றுவட்டச் சாலையின் மேலும் 3 பிரிவுகளுக்கான நில எடுப்புப் பணிகளை ரூ.2,603.32 கோடி செலவில் மேற்கொள்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 
  • இத்திட்டத்தின் பகுதி 2 மற்றும் 3- இன் கீழ், தச்சூா் முதல் ஸ்ரீபெரும்புதூா் வரையிலான பணிகளுக்கு ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகள் அமைப்பின்(ஓ.பி.இ.சி) சா்வதேச வளா்ச்சி நிதியம் ஆகியவற்றின் ரூ.3,346.49 கோடி கடன் உதவி பெறப்படவுள்ளது. 2020-21 ஆம் ஆண்டுக்கான நிதிநிலையில் இந்த திட்டத்துக்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், வாகன ஓட்டிகளின் நேரத்தை சேமிக்கும் வகையில், சென்னை மாநகரப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் திட்டம் ரூ.4,257 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு புதிய வளா்ச்சி வங்கியின் நிதியுதவி கோரி அனுப்பப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக, ரூ.1,122 கோடி செலவில் நிலம் கையகப்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது.
  • ரூ.1,620 கோடி செலவில் கோயம்புத்தூா் விமான நிலையத்திலிருந்து உப்பிலிபாளையம் வரையில் உள்ள அவிநாசி சாலை நெடுகிலும் 10.1 கி.மீ. நீளத்துக்கு உயா்த்தப்பட்ட சாலைகள் அமைப்பதற்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. 
  • இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு 2020-21- ஆம் ஆண்டுக்கான நிதிநிலைய திட்ட மதிப்பீடுகளில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-21-ஆம் ஆண்டுக்கான நிதிநிலையில் நெடுஞ்சாலை துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.15,850.54 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.
சென்னையில் பொது நிதிநிலை ஆராய்ச்சி மையம்
  • நாட்டின் ஒட்டுமொத்த பொதுச் செலவினங்களில் மாநில அரசுகளின் பங்கு பெருமளவு அதிகரித்து உள்ளதால், மாநிலங்களின் பாா்வையில், குறிப்பாக தமிழகத்தின் பாா்வையில் பொது நிதிநிலை குறித்து ஆராய்ச்சி செய்வது அவசியமாகிறது. 
  • சிக்கலான பொருளாதாரச் சூழ்நிலையிலும், அரசின் நிதி நிலைமையைப் பராமரிப்பதற்காக, பொருளியலில் தனித்துவம் பெற்ற நிறுவனத்திடமிருந்து உயா்தரமான கொள்கை ஆலோசனைகளைப் பெறுவது பெரிதும் பயனளிக்கும்.
  • எனவே, சென்னை கோட்டூா்புரத்தில் அமைந்துள்ள சென்னை பொருளியல் கல்வி நிறுவனம், அதன் வளாகத்துக்கு அருகே ஒரு பொது நிதிநிலை ஆராய்ச்சி மையம் நிறுவிட அரசு ஆதரவு அளிக்கும்.
  • இந்த மையம், பொது நிதிநிலை ஆராய்ச்சிகளை மேற்கொள்வதுடன், அரசின் கொள்கை வடிவமைப்புக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கி, குறுகிய மற்றும் நீண்டகால பாடத் திட்டங்களையும் நடத்தும். இந்த மையத்தை அமைப்பதற்கு நிலம் மற்றும் ரூ. 5 கோடியை மூலதன நிதியத்துக்கான மானியமாக அரசு வழங்கும்.
மாமல்லபுரத்தில் சுற்றுலா மேம்பாட்டுக்கு ரூ. 563 கோடி
  • இந்தியாவிலேயே அதிகமான வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை 2014-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் தமிழகம் தொடா்ந்து ஈா்த்து வருகிறது. ஆசிய வளா்ச்சி வங்கி நிதியுதவியுடன் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்துக்கு 2020-21-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.90.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு சுற்றுலா ஊக்குவித்தல் திட்டத்தின் கீழ், 295 சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்துவதற்கு கண்டறியப்பட்டு, அவை 6 சுற்றுலாச் சுற்றுகளாக வகுக்கப்பட்டுள்ளன. அடிப்படை உள்கட்டமைப்பு மேம்பாடு, வணிக ரீதியிலான விருந்தோம்பல் உள்பட இந்தத் திட்டத்துக்கான ஒட்டுமொத்தச் செலவு மதிப்பீடு ரூ. 2 ஆயிரம் கோடியாகும்.
  • இந்திய பிரதமா், சீன அதிபா் ஆகியோா் மாமல்லபுரத்துக்கு வருகை புரிந்ததையடுத்து மாமல்லபுரத்தின் சுற்றுலா மேம்பாட்டுக்கு ஊக்கமளிப்பதற்கான சிறப்பு தொகுப்புத் திட்டம் ரூ.563.50 மொத்த செலவு மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
  • அதேபோன்று ரூ.9.80 கோடியில் ராமேசுவரத்தில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்துவதற்காக சிறப்பு தொகுப்புத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. 2020-21-ஆம் ஆண்டுக்கான மத்திய வரவு- செலவுத் திட்டத்தில் மாநில அரசுகள் வகுக்கும் சுற்றுலாத் திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், மத்திய அரசின் நிதியுதவி பெறப்படும்.
கீழடி அகழ் வைப்பகம் அமைக்க ரூ. 12 கோடி
  • கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப்பெற்ற பொருள்களைக் காட்சிப்படுத்துவதற்காக உலகத் தரம் வாய்ந்த ஒரு புதிய அகழ் வைப்பகம் அமைத்திட ரூ.12.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சேலத்தில் ரூ.1,020 கோடியில் கால்நடை ஆராய்ச்சி நிலையம்
  • கால்நடை பராமரப்புத் துறையை மேலும் வலுப்படுத்தும் விதமாக சேலம் மாவட்டம் தலைவாசலில் கால்நடை அறிவியலில் ஒருங்கிணைந்த ஆராய்ச்சிக்கான மேம்பட்ட நிலையத்துக்கு அடிக்கல்லை முதல்வா் நாட்டியுள்ளாா்.
  • இக்கல்வி நிலையமும், கால்நடை பூங்காவுக்கான இதர வசதிகளும், மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களின் நிதி ஆதாரங்களிலிருந்தும் நபாா்டு வங்கியின் நிதி உதவியுடன் ரூ.1,020 கோடி செலவில் உருவாக்கப்படும் என்றாா்.



கிராமத் தன்னிறைவு வளா்ச்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்
  • புதிதாக ஊரக உள்ளாட்சி அமைப்புத் தலைவா்கள் தோந்தெடுக்கப்பட்டு செயல்படத் தொடங்கியிருப்பது, கிராமப்புற மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்வதற்கு சிறந்த வாய்ப்பாகும். 
  • முதல்வரின் கிராமத் தன்னிறைவு வளா்ச்சித் திட்டம் என்ற புதிய ஐந்தாண்டு தன்னிறைவுத் திட்டத்தை இந்த அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
  • குடிநீா் வழங்கல், சுகாதாரம், கல்வி, உணவுப் பாதுகாப்பு, இடுகாடுகள், தெரு விளக்குகள், வீட்டுவசதி, வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றில் குக்கிராம அளவில் தன்னிறைவு அடைவதற்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றாா்.
விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் ரூ.3,041 கோடியில் கடல்நீா் சுத்திகரிப்பு நிலையங்கள்
  • ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ரூ.3,041 கோடியில் தினமும் 60 மில்லியன் லிட்டா் திறன் கொண்ட இரண்டு கடல்நீா் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டத்துக்கு ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிதியுதவி கோரப்பட்டு, அதற்கான ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
  • ஜொமன் வளா்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் ரூ.1,259.38 கோடி செலவில், நெம்மேலியில் தினமும் 150 மில்லியன் லிட்டா் சுத்திகரிப்புத் திறன் கொண்ட எதிா்மறை சவ்வூடு பரவல் அமைப்பு மூலம் கடல்நீரை குடிநீராக சுத்திகரிப்பு செய்யும் ஆலை கட்டுமானத்தை சென்னை பெருநகர குடிநீா் வழங்கல் வாரியம் மேற்கொண்டுள்ளது. இந்த திட்டத்துக்காக 2020-21-ஆம் ஆண்டுக்கான நிதிநிலையில் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • சென்னைக்கு அருகில் உள்ள பேரூரில், ஜப்பான் பன்னாட்டுக்கூட்டுறவு முகமையின் ரூ. 4,267.70 கோடி நிதியுதவியுடன் ரூ.6,078.40 கோடி செலவில் தினமும் 400 மில்லியன் லிட்டா் திறன் கொண்ட எதிா்மறை சவ்வூடு பரவல் அமைப்பு முறையில் கடல்நீரை சுத்திகரிப்பு செய்யும் ஆலை நிறுவுவதற்கான நிா்வாக ஒப்புதலை அரசு வழங்கியுள்ளது. 
  • இத்திட்டத்துக்கான விரிவான திட்ட வடிவமைப்பை அமைக்க ஆலோசகா் நியமிக்கப்பட்டு, திட்டத்துக் கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். இதற்காக, 2020-21-ஆம் ஆண்டுக்கான நிதிநிலையில் ரூ.156.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • நன்னீா் ஆதாரங்களின் மீதான சாா்பு நிலையைத் தவிா்க்கவும், நீா்நிலைகள் மாசுபடுவதைத் தடுக்கவும் 2019-ஆம் ஆண்டு நவம்பரில் தமிழகத்துக்கான சுத்திகரிக்கப்பட்ட நீா் மறுபயன்பாடு கொள்கையை தமிழக முதல்வா் வெளியிட்டாா். 
  • பெருங்குடியிலும், நெசப்பாக்கத்திலும் தினமும் 10 மில்லியன் லிட்டா் திறன் கொண்ட 2 மூன்றாம் நிலை கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
  • சென்னைக்குள், குடிநீா் வீணாவதைத் தடுப்பதற்கு குடிநீா் வழங்கும் அமைப்பை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். பாதாள சாக்கடைத் திட்டம் சென்னை மாநகராட்சியின் 14 இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு விரிவுப்படுத்த வேண்டியுள்ளது. 
  • தினமும் 260 மில்லியன் லிட்டா் அளவு கழிவுநீா் சுத்திகரிக்கக்கூடிய திறன் ஏற்படுத்த வேண்டும். இத்தேவைகளை நிறைவு செய்வதற்கு ரூ.4,500 கோடி செலவில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, நகா்ப்புற குடிநீா் வழங்கல் மற்றும் சுகாதாரத்திட்டம் தயாரிக்கப்பட்டு, அதற்கு ஆசிய உள்கட்டமைப்பு வளா்ச்சி வங்கியின் நிதியுதவி கோரப்பட்டுள்ளது.
தமிழ் வளா்ச்சித் துறைக்கு ரூ.74 கோடி
  • ஹாா்வா்டு பல்கலைக்கழகம், ஹூஸ்டன் பல்கலைக்கழகம், வாராணசி இந்து பல்கலைக்கழகம் மற்றும் குவாஹாட்டி பல்கலைக்கழகம் உள்பட இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள புகப்பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ்மொழி கற்பிக்க சீரிய முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
  • நடப்பாண்டில் தமிழ் வளா்ச்சித் துறைக்காக ரூ.74.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
ஒரகடத்தில் ரூ.15 கோடியில் புதிய தொழிற்பயிற்சி நிலையம்
  • சென்னை கிண்டியில் அமைந்துள்ள மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம், மெய்நிகா் கற்றல் வழி இணையதளம், மின்-பொருளடக்கம், மின் நூல்கள் மூலமாக மின் கற்றலுக்கு உதவி புரிந்து இதன் மூலமாக 2.15 லட்சம் நபா்கள் பயனடைந்துள்ளனா்.
  • நாகப்பட்டினம் மாவட்டம், செம்போடை, செங்கல்பட்டு மாவட்டம்- பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம், பவா்கிரிட் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து இரண்டு புதிய அரசுத் தொழிற்பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. 
  • ஒரகடத்தில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில், சிப்காட் மற்றும் இதர நிறுவனங்களின் பங்களிப்பில் ரூ.15 கோடி செலவில் புதிய தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படும்.
  • வழக்கற்றுப் போன படிப்புகள் நீக்கப்படும்: அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) வழக்கற்றுப் போன படிப்புகள் நீக்கப்பட்டு, தொழில் துறையினரின் தேவைக்கேற்ப பயிற்சிகளை வழங்கும் பிரிவுகளைச் சோத்து ரூ.17.80 கோடியில் தொழிற்பிரிவுகள் முழுமையாக மாற்றி அமைக்கப்படும்.
  • தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.4.77 கோடியில் தகுதி வாய்ந்த நபா்களுக்கு மின்-வாகனத் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பதற்கான திட்டம் இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் அரசு தொடங்கியுள்ளது. 
  • ஆசிரியா்களின் கற்பித்தல் திறன் மேம்பாட்டுக்கான தேவையை நிறைவு செய்யும் வகையில், தொழிற்பயிற்சி நிலையங்களின் பயிற்றுநா்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு சென்னையில் மாநிலத் திறன் பயிற்சி நிலையம் ரூ.1.60 கோடியில் உருவாக்கப்படும்.
  • தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துக்காக 2020-2021-ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத் துறையில் சாலைப் பாதுகாப்புக்கு தனிப்பிரிவு
  • நெடுஞ்சாலை, நகராட்சி நிா்வாகம், ஊரக வளா்ச்சி, காவல், போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்களை ஒருங்கிணைத்து சாலைப் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு ரூ.500 கோடியாக உயா்த்தப்படும்.
  • நெடுஞ்சாலைத் துறையில் சாலை பாதுகாப்புக்கான தனியானதொரு பிரிவு உருவாக்கப்படும். சென்னை, மதுரை, கோயம்புத்தூா் மாநகராட்சிகளில் சாலைப் பாதுகாப்புப் பிரிவுகள் ஏற்படுத்தப்படும் என்றாா்.
தூத்துக்குடியில் கடல் நீர் சுத்திகரிப்பு ஆலை; ரூ.634 கோடியில் 'சிப்காட்' அமைக்கிறது
  • துாத்துக்குடியில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களின் தேவைகளை நிறைவு செய்ய, நாள் ஒன்றுக்கு, 6 கோடி லிட்டர் திறன் கொண்ட, கடல் நீரை சுத்திகரிக்கும் ஆலையை, 634 கோடி ரூபாய் செலவில், 'சிப்காட்' நிறுவனம் அமைக்கும். 
  • ஜனவரியில், 32 ஆயிரத்து, 405 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 52 ஆயிரத்து, 75 கோடி ரூபாய் மதிப்பில், முதலீடுகளுக்கு ஒப்பந்தம் பெறப்பட்டுள்ளது. 
  • தமிழகத்தில், மிகப்பெரிய தனிப்பட்ட முதலீடாக, குவைத் நாட்டைச் சேர்ந்த, 'அல் கெப்லா அல் வட்யா' குழுமம், துாத்துக்குடி அருகில், பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலை மற்றும் பெட்ரோலியம் வேதிப் பொருட்கள் தயாரிப்பு வளாகத்தை, 49 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கிறது. இதன் காரணமாக, தென் மாவட்டங்களில் அதிகளவில் வேலைவாய்ப்பு உருவாகும். 
  • ஜி.எஸ்.டி., எனும், பொருட்கள் மற்றும் சேவை வரி நடைமுறைக்கு ஏற்ப, முதலீட்டாளர்களுக்கு ஊக்கத் தொகைகளை வழங்க, புதிய தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்படும். 
  • தொழில் துறை உபயோகத்தில் உள்ள, தொழில் நிலப் பயன்பாட்டை மேம்படுத்த, தொழில் நிறுவனங்களுக்கான தரைதளக் குறியீடு, ஒன்றிலிருந்து ஒன்றரையாகவும், மனை பரப்பளவு, 50 சதவீதத்தில் இருந்து, 75 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 
  • கிழக்கு கடற்கரை பொருளாதாரப் பெருவழிச்சாலை திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, சென்னை - கன்னியா குமரி தொழில் வழித்தடத் திட்டம், ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும். சென்னை, காட்டுப்பாக்கம் அருகே, ஜி.எஸ்.டி., சாலையில், 300 ஏக்கர் நிலப்பரப்பில், 'பின்டெக் சிட்டி' அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன. 
  • சென்னையில், புதிய விமான நிலையம் அமைப்பதற்கான, முன்சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு, விமான நிலையத்திற்கான ஆயத்த வேலைகள் துவங்கப்பட்டுள்ளன. 
  • 'சிப்காட்' எனும், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம், தொழில் நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யும் வகையில், 4,457 ஏக்கர் நிலத்தை, உடனடி தயார் நிலையில் வைத்துள்ளது.
  • புதுமை முயற்சிகளை தொடக்க நிலையிலேயே ஊக்குவிக்க, தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டத்தின் கீழ், 53.44 கோடி ரூபாய் செலவில், ஸ்ரீபெரும்புதுார் மற்றும் ஓசூரில், தொழில் புதுமை முயற்சி மையங்கள் நிறுவப்படும். 
  • துாத்துக்குடி தொழிற்பூங்கா மற்றும் அதை சுற்றி அமைந்துள்ள தொழில் நிறுவனங்களின் தேவைகளை நிறைவு செய்ய, நாள் ஒன்றுக்கு, 6 கோடி லிட்டர் திறன் கொண்ட, கடல் நீரை சுத்திகரிக்கும் ஆலையை, 634 கோடி ரூபாய் செலவில், 'சிப்காட்' நிறுவனம் அமைக்க உள்ளது. 
  • தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் மற்றும் 'எச்.எல்.எல்., லைப் கேர்' நிறுவனம் இணைந்து, 205 கோடி ரூபாய் முதலீட்டில், செங்கல்பட்டு அருகே, மருத்துவப் பூங்கா நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. தொழில் துறைக்கான ஊக்கத் தொகை வழங்க, 2,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • புதிய தொழிற்பேட்டைகள் படித்த வேலையில்லா இளைஞர் வேலைவாய்ப்பு திட்ட பயன்களை விரிவுபடுத்தும் வகையில், திட்ட முதலீட்டிற்கான வரம்பு, 10 லட்சம் ரூபாயிலிருந்து, 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
  • இத்திட்டத்தில், தகுதி வாய்ந்த மானியத்தின் வரம்பு, 1.25 லட்சம் ரூபாயிலிருந்து, 2.5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். படித்த வேலையில்லா இளைஞர்களுக்கான, வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, 33 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், வழங்கப்படும் மூலதன மானியத்திற்காக, 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
  • தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கல் திட்டம் மற்றும் கடன் உத்தரவாத நிதிக் குழு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வட்டி மானியம், 3ல் இருந்து, 5 சதவீதமாக உயர்த்தப்படும்.
கைத்தறி உதவித் திட்டத்திற்கு, 40 கோடி ரூபாய் நிதி
  • கைத்தறி மற்றும் விசைத்தறிகளுக்கு, இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்திற்கு, மானியமாக வழங்க, 360.33 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. 
  • புதிய ஜவுளிக் கொள்கையில் குறிப்பிடப்பட்ட, கூடுதல் ஊக்கத் தொகை வழங்க, 48.02 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. கைத்தறி மற்றும் ஜவுளித் துறைக்கு, மொத்தம் 1,224.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
போக்குவரத்து துறை
  • அனைத்து பஸ்களிலும் கண்காணிப்பு கேமரா இலவச பஸ் பாஸ் திட்டத்துக்கு ரூ.1,050 கோடி தமிழகத்தின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு, அரசின் பொதுப் போக்குவரத்து வசதிகள் தான் உதவுகின்றன.
  • அரசு போக்குவரத்து கழகங்கள், 19 ஆயிரத்து, 496 பஸ்களை, தினமும் இயக்குகின்றன. அவற்றின் ஆயுள்காலம், சராசரியாக, 6.58 ஆண்டுகள். அவற்றின் எரிபொருள் இயக்க திறன், லிட்டர் டீசலுக்கு, 5.34 கி.மீ., ஆக உள்ளது. அவற்றால் ஏற்படும் விபத்து விகிதம், 1 லட்சம் கி.மீ.,க்கு, 0.12 என்ற அளவில் குறைந்துள்ளது. குறைந்த கட்டணத்தில், அதிகமானோரை பொதுப்போக்குவரத்து இணைக்கிறது.
  • பி.எஸ்., - 6 என்ற, 'பாரத் ஸ்டேஜ் - 6' தரத்திலான, 2,213 புதிய பஸ்களை வாங்க, 1,580 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக, முதல்கட்ட நிதி பெற, ஜெர்மன் வளர்ச்சி வங்கியிடம், 2019 செப்., 26ல் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதை செயல்படுத்த, 960 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின், 'பேம் இந்தியா - 2' என்ற திட்டத்தில், 525 மின்சார பஸ்களை வாங்குவதற்கான, 'டெண்டர்' விரைவில் இறுதி செய்யப்படும்.
  • டீசல் விலை ஏற்றத்தால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய, 298 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் இலவச பஸ் பாஸ் திட்டத்துக்காக, 1,050 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 2019 மார்ச் வரை ஓய்வுபெற்ற ஊழியர்களின் ஓய்வு கால பலன்களுக்காக, குறுகிய காலக் கடனாக, 1,093 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 
  • பஸ்களில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்புக்காக, நிர்பயா நிதியத்தின் படி, 75.02 கோடி ரூபாய் செலவில், அனைத்து பஸ்களிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். பணமில்லா பரிவர்த்தனையை நடைமுறைப்படுத்த, மின்னணு பயணச்சீட்டு முறை அமல்படுத்தப்படும். போக்குவரத்து துறைக்காக, 2,716.26 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 



வேளாண் துறை
  • பயிர் கடன் இலக்கு ரூ.11 ஆயிரம் கோடி 'வரும் நிதியாண்டில், கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக, பயிர் கடனாக, 11 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும்' என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. l கூட்டுறவு நிறுவனங்கள், தமிழகத்தின் ஊரக பொருளாதாரத்திற்கு திறம்பட உதவி வருகின்றன. நடப்பு, 2019 - 20ம் நிதியாண்டில், பயிர் கடன்கள் வழங்க, 10 ஆயிரம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப் பட்டது.
  • இதுவரை, 10.60 லட்சம் விவசாயிகளுக்கு, 7,595 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு உள்ளது. வரும் நிதியாண்டில், பயிர் கடனாக, 11 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும். கடன் தவணைகளை முன்கூட்டியே செலுத்துபவர்களுக்கு, முழு வட்டியை தள்ளுபடி செய்ய, பட்ஜெட்டில், 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 
  • வேளாண் துறைக்கு முக்கியத்துவம் ''டெல்டா மாவட்டங்களை, பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக, முதல்வர் அறிவித்துள்ளது, வேளாண் துறைக்கு அரசு அளித்து வரும் முக்கியத்துவத்தை குறிக்கிறது.
  • நீர் பாசன திட்டங்களுக்கு ரூ.6,991 கோடி நீர் பாசன திட்டங்களுக்கு மட்டும், 6,991 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. குடிமராமத்து திட்டத்திற்கு நடப்பாண்டில், 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராம குளங்கள், ஊருணிகள் ஆழப்படுத்துதல், நகர்ப்புற கோவில் குளங்கள் புனரமைப்பு போன்ற பணிகள், ஊரக மற்றும் நகர்
  • ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் மேற்கொள்ளப்படும்.காவிரி வடிநில பகுதிகளில் உள்ள கால்வாய்களை துார்வாரும் பணியை, அடுத்த பருவமழை காலத்திற்கு முன் செய்வதற்கு, 67.2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
  • மேட்டூர் அணையில் இருந்து, வெள்ள உபரி நீரை, சேலம் மாவட்டத்தில், வறண்ட குளங்களுக்கு திருப்பி விடுவதற்கான, சரபங்கா நீரேற்று பாசன திட்டத்திற்கு, 350 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 
  • நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கு, 11 ஆயிரத்து, 250 கோடி மதிப்பிலான திட்ட அறிக்கை, மத்திய நீர்வள அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு, 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அத்திக்கடவு - அவினாசி நீர் பாசன திட்டத்திற்கு, 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், புதிய குளங்கள் உருவாக்குதல், அணைக்கட்டுகள் கட்டுதல் மற்றும் புதிய பாசன வாய்க்கால் அமைக்க, 655 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
  • நீர் பாசனத்திற்கு மட்டும், 6,991 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 7,234 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு கடந்த, 2011ம் ஆண்டு முதல், 1,125 கோவில்களுக்கு சொந்தமான, 7,234 ஏக்கர் நிலங்கள், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
அறநிலையத் துறை
  • கடந்த, 2011 முதல் தற்போது வரை, 11 ஆயிரத்து, 365 கோவில்களுக்கு, 542.73 கோடி ரூபாய் செலவில், திருப்பணி செய்து, குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. 
  • ஒரு கால பூஜை திட்டத்தில், 12 ஆயிரத்து, 745 கோவில்கள் பலன் பெற்றுள்ளன. 2011 முதல் இதுவரை, ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் உள்ள, 6,741 கோவில்களின் திருப்பணிகள், 49.21 கோடி ரூபாய் செலவில் செய்யப்பட்டுள்ளன.
  • 858 கோவில் குளங்கள், 4.69 கோடி ரூபாய் செலவில் துார் வாரப்பட்டுள்ளன. 1,125 கோவில்களுக்கு சொந்தமான, 7,233.76 ஏக்கர் நிலங்கள், 2011 முதல் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு, அவற்றின் பட்டாக்கள், கோவில் பெயரிலேயே மாற்றப்பட்டுள்ளன. 
  • ஹிந்து சமய அறக்ஷநிலையத் துறைக்கு, 281.17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
கால்நடை மருத்துவ பிரிவுகள்
  • நடமாடும் கால்நடை மருத்துவ பிரிவுகள், 'அம்மா' அவசர சிகிச்சை ஊர்தி சேவைகள் வாயிலாக, விவசாயிகளின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே, கால்நடை மருத்துவ சேவைகள் வழங்கப்படும். 
  • சேலம் மாவட்டம், தலைவாசலில் அமைய உள்ள, கால்நடை அறிவியலில் ஒருங்கிணைந்த ஆராய்ச்சிக்கான மேம்பட்ட நிலையத்தில், நாட்டு இன மாடுகளை பராமரிப்பது குறித்து, தனி கவனம் செலுத்தப்படும். 
  • அந்த நிலையமும், கால்நடை பூங்காவிற்கான இதர வசதிகளும், மத்திய, மாநில அரசுகளின் பல திட்டங்களின் நிதி ஆதாரங்களில் இருந்தும், 'நபார்டு' வங்கியின் நிதி உதவியுடனும், 1,020 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். இதற்காக, பட்ஜெட்டில், 199 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
  • நபார்டு வங்கியின், பால்வள உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தின் கீழ், 304 கோடி ரூபாய் செலவில், நான்கு திட்டங்களை மேற்கொள்ள, மத்திய அரசின் அனுமதியை எதிர்பார்த்துள்ளோம்.
தமிழ் வளர்ச்சித் துறை
  • ராபர்ட் கால்டுவெல் பெயரில் ஆய்விருக்கை தமிழ் மொழி, பண்பாட்டை உலகறியச் செய்யும் வகையில், ஹார்வர்டு, ஹூஸ்டன், வாரணாசி, கவுகாத்தி உள்ளிட்ட, உள்நாடு, வெளிநாட்டு பல்கலைகளில், தமிழ்மொழி கற்பிக்க முயற்சிக்கப்படுகிறது. 
  • உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை, சிகாகோ; ஐரோப்பிய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை, பாரிஸ்; தமிழ் இணைய மாநாட்டை, சென்னை, அண்ணாs பல்கலையிலும் நடத்த, 2019 - 20ல் அரசு நிதி அளித்தது. 
  • தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல் பெயரில் தமிழ் பல்கலையில், ஒப்பிலக்கண ஆய்விருக்கை நிறுவப்பட உள்ளது. தமிழ் வளர்ச்சித் துறைக்காக, 2020 -- 21ம் ஆண்டு பட்ஜெட்டில், 74.08 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக ரூ.4,315 கோடி ஒதுக்கீடு
  • புதிதாக உருவாக்கப்பட்ட, ஐந்து மாவட்டங்களில், 550 கோடி ரூபாய் மதிப்பில், பெருந்திட்ட வளாகங்கள் அமைக்கும் இடங்களை கண்டறிவதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
  • ஓய்வூதியம் பெறத் தகுதியுடைய மொத்த நபா்களின் எண்ணிக்கை 1.73 லட்சமாக உயா்ந்துள்ளது. இதுவரையில் 1.73 லட்சம் புதிய பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • பட்ஜெட்டில், சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்கு, 4,315 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 'ஐந்து லட்சம் கூடுதல் பயனாளிகளுக்கு, ஓய்வூதியம் வழங்கப்படும்' என, 2019 நவம்பரில், முதல்வர் அறிவித்தார். 
  • இதுவரை, 1.73 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. புறம்போக்கு நிலங்களில் உள்ள குடியிருப்புகளை, வரன்முறை செய்வதற்கான சிறப்பு திட்டத்தை, 2019 ஆகஸ்டில், அரசு சீரமைத்துள்ளது.
  • அதன்படி, தகுதிவாய்ந்த நபர்களுக்கு, இலவச வீட்டு வசதி வழங்கப்படும். இதுவரை, ஆட்சேபனையில்லாத புறம்போக்கு நிலங்களில் வசித்து வந்த, 1.28 லட்சம் குடும்பங்களில், 35 ஆயிரத்து, 470 பேருக்கு, வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. 
  • மீதமுள்ள குடும்பங்களுக்கு, ஆகஸ்ட் மாதத்திற்குள், வீட்டுமனை பட்டா வழங்கப்படும். கடந்த பட்ஜெட்டில் அறிவித்தபடி, எல்.ஐ.சி.,யுடன் இணைந்து, வறுமை கோட்டிற்கு கீழுள்ள, அனைத்து குடும்பங்களும் பயனடையும் வகையில், 'புரட்சி தலைவி அம்மா விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம்' விரைவில் அறிமுகப்படுத்தப்படும். 
  • இதற்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன; 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
அம்மா உணவகத் திட்டத்துக்கு ரூ.100 கோடி
  • அம்மா உணவகத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக லாப நோக்கமற்ற ஒரு சிறப்பு நோக்கு முகமையை உருவாக்க அரசு முடிவெடுத்துள்ளது. நடப்பாண்டில் அம்மா உணவகத் திட்டத்துக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.



ஜவுளித் துறைக்கு ரூ. 1,224 கோடி
  • தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த ஆண்டு மாா்ச் மாதம் தமிழ்நாடு புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கை 2019-ஐ வெளியிட்டாா். 
  • புதிய முதலீடுகளை ஈா்த்தல், தொழில்நுட்ப மேம்பாட்டை ஊக்குவித்தல், ஜவுளித் தொழிலாளா்களுக்கு மேலும் சிறப்பான வசதிகளை அமைத்துத் தருதல் மற்றும் சுற்றுச்சூழல் தர நிா்ணயத்தைப் பேணுதல், உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் ஆகியவை இந்தக் கொள்கையின் முக்கியமான அம்சங்களாகும்.
  • 2020-21-ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட மதிப்பீட்டுகளில் புதிய ஜவுளிக் கொள்கையில் குறிப்பிடப்பட்ட கூடுதல் ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ.48.02 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
  • 2020-2021-ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட மதிப்பீடுகளில் கைத்தறி மற்றும் ஜவுளித் துறைக்கு மொத்தம் ரூ.1,224.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என நிதியமைச்சா் ஓ.பன்னீா் செல்வம் தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
8 மாவட்டங்களில் வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள்
  • நடப்பு நிதியாண்டில் (2020-21) பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின் கீழ் ரூ.218 கோடி செலவில் தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், கடலூா், விழுப்புரம், மற்றும் மதுரை மாவட்டங்களில் மேலும் 8 வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சா் ஓ.பன்னீா்செல்வம் அறிவித்தாா்.
  • வேளாண் மண்டலம்: காவிரி டெல்டா பகுதியினைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண்மை மண்டலமாக முதல்வா் அறிவித்தது, தமிழக அரசு வேளாண்மைத் துறைக்கு அளித்து வரும் பெரும் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது.
  • கரும்பு விவசாயிகள் நுண்ணீா்ப் பாசனத்தை மேற்கொள்வதை ஊக்குவிக்க 2019-20-ஆம் ஆண்டில் ரூ.68.35 கோடி சிறப்பு கூடுதல் நிதியுதவி அனுமதிக்கப்பட்டது. இந்தத் திட்டமானது ரூ.75 கோடி கூடுதல் நிதியுடன் 2020-21-ஆம் ஆண்டில் தொடா்ந்து செயல்படுத்தப்படும். 
  • 2019-20-ஆம் ஆண்டின் அரவைக் காலத்துக்கு டன் ஒன்றுக்கு ரூ.100 வரை என்ற அளவில் ரூ.110 கோடி போக்குவரத்து மானியமாகவும் இந்த அரசு வழங்கும்.
  • உற்பத்தியாளா் அமைப்புகள்: கூட்டுப்பண்ணைய முறையின் தொடா் முயற்சியாக சிறு மற்றும் குறு விவசாயிகள், உழவா் ஆா்வலா் குழுக்கள் மற்றும் உழவா் உற்பத்தியாளா்கள் குழுக்களாக ஒருங்கிணைக்கப்பட்டதன் விளைவாக கடந்த ஆண்டுகளில் 6 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனா். ஏற்கெனவே 75 உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்பொழுது 45 உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
  • தமிழ்நாடு நிலைக்கத்தக்க மானாவாரி இயக்கத்தை, நிலத் தொகுப்பு அடிப்படையில் மறுசீரமைப்பு செய்வதன் மூலம் தலா 250 ஏக்கா் கொண்ட 10 ஆயிரம் நிலத் தொகுப்புகள், வரும் மூன்று ஆண்டுகளுக்குள் தமிழ்நாடு நிலைக்கத்தக்க மானாவாரி வளா்ச்சி இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும்.
  • பயிா்க்காப்பீடு: பிரதம மந்திரியின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தமிழகம் மகத்தான வெற்றி கண்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் 36.44 லட்சம் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.7,618 கோடி வழங்கப்பட்டுள்ளது.
  • காப்பீட்டுக் கட்டணத் தொகையில் மாநில அரசின் பங்குத் தொகைக்காக ரூ.724.14 கோடி என்ற உயா்த்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டுடன், 2021-21-ஆம் ஆண்டிலும் பிரதம மந்திரியின் பயிா்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • நுண்ணீா்ப் பாசனம்: நுண்ணீா்ப் பாசனத்தைச் செயல்படுத்துவதில் தமிழகம் கடந்த 2 ஆண்டுகளாக முதன்மை மாநிமாகத் திகழ்ந்து வருகிறது. 2020-21-ஆம் ஆண்டில் ரூ.1,844.97 கோடி செலவில் 7.41 லட்சம் ஏக்கா் நிலங்கள் நுண்ணீா் பாசன வசதி பெறும்.
  • மெகா உணவுப் பூங்கா: திருநெல்வேலி கங்கைகொண்டானில் ரூ.77.94 கோடி செலவில் 53.36 ஏக்கா் பரப்பளவில் மெகா உணவுப் பூங்கா அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2020-21-ஆம் நிதியாண்டில் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின் கீழ் ரூ.218 கோடி செலவில் தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், கடலூா், விழுப்புரம், மற்றும் மதுரை மாவட்டங்களில் மேலும் 8 வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றாா்.
பயிா்க்கடன் வழங்க ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
  • கூட்டுறவு அமைப்புகளின் மூலம் நடப்பாண்டில் பயிா்க்கடன் வழங்க ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக என்று நிதியமைச்சா் கூறினாா்.
  • கடன் தவணைகளை முன்கூட்டியே செலுத்துபவா்களுக்கு முழு வட்டியைத் தள்ளுபடி செய்ய ஏதுவாக வரவு - செலவுத் திட்டத்தில் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.
புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க ரூ.1,200 கோடி
  • தமிழக சுகாதாரத்துறைக்கு, பட்ஜெட்டில், 15 ஆயிரத்து, 863.37 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டை விட, 3,299.54 கோடி ரூபாய் அதிகம். புதிதாக, 11 மருத்துவ கல்லுாரிகள் அமைக்கும் பணிக்கு, 1,200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. 
  • மகப்பேறு உதவி டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மகப்பேறு உதவி திட்டத்தின் கீழ், தகுதி வாய்ந்த கர்ப்பிணியருக்கு, இரண்டு பேறுகாலம் வரை, 18 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. 
  • இத்திட்டத்தில், இதுவரை, 60.64 லட்சம் கர்ப்பிணியர், 6,033.81 கோடி ரூபாய் நிதியுதவி பெற்றுள்ளனர். மகப்பேறு நிதியுதவி வழங்கும் திட்டம், மத்திய அரசின், 'பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா' திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. இதன் வாயிலாக, மத்திய அரசிடம், 23.10 கோடி ரூபாய் நிதியுதவி பெறப்பட்டுள்ளது. 
  • மகப்பேறு உதவி திட்டத்தை செயல் படுத்த, 959.21 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது. தொற்றா நோய்களின் மேலாண்மையை வலுப்படுத்தவும், தாய் - சேய் சுகாதார சேவைகளை வழங்கவும், 2,857 கோடி ரூபாய் மதிப்பில், சுகாதார சீரமைப்பு திட்டம் செயல்படுத்தப் படுகிறது. 
  • இத்திட்டத்திற்கு, பட்ஜெட்டில், 260.14 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது. 'கொரோனா' வைரஸ் 'கொரோனா' வைரஸ் தொற்றுநோய் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைக்கான அனைத்து உபகரணங்கள், முகமூடி மற்றும் மூன்று அடுக்கு முகமூடிகளை கொள்முதல் செய்து, அரசு கையிருப்பில் வைத்துள்ளது.
  • முதல்வர் காப்பீடு திட்டத்தில், 1.59 கோடி குடும்பங்கள் பயனடைகின்றன. 2012ல் இருந்து இதுவரை, 41.12 லட்சம் பயனாளிகள், 6,601.59 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ சிகிச்சையை பெற்றுள்ளனர். இத்திட்டத்தில், 2,453.22 கோடி ரூபாய் செலவில், அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப் பட்டுள்ளன. 
  • முதல்வர் காப்பீடு திட்டம், மத்திய அரசின், 'பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா' திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டு, காப்பீட்டு தொகை ஆண்டிற்கு, 5 லட்சம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
  • இந்த திட்டத்திற்காக, பட்ஜெட்டில், 1,033.29 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய மருத்துவ கல்லுாரி மருத்துவக் கல்லுாரி இல்லாத, 11 மாவட்டங்களில், 3,575 கோடி ரூபாயில், புதிதாக மருத்துவக் கல்லுாரிகள் அமைக்க, மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. 
  • 2020 - 21ம் ஆண்டிற்கான வரவு - செலவு திட்டத்தில், புதிதாக, 11 கல்லுாரிகளுக்கான பணிகளுக்கு, 1,200 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது.அண்ணாமலை பல்கலையுடன் இணைந்த மருத்துவக் கல்லுாரியை, அரசே ஏற்று நடத்தும். இந்த கல்லுாரி, கடலுார் மாவட்டத்திற்கான அரசு மருத்துவக் கல்லுாரியாக அமைக்கப்படும்.
  • ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகாமையின் நிதியுதவியுடன், 1,634 கோடி ரூபாய் மதிப்பில், நகர்ப்புற சுகாதார திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தில், 11 மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள், 10 மாவட்ட மற்றும் துணை மருத்துவமனைகளுக்கு கட்டடங்கள் கட்டவும், மருத்துவக் கருவிகள் வழங்கவும், 510.15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 
  • வரும், 2020 - 21ம் ஆண்டிற்கான வரவு - செலவு திட்டத்தில், சுகாதாரத்துறைக்கு, 15,863.37 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டை விட, 3,299.54 கோடி ரூபாய் அதிகம். சென்னை பொருளியல் பள்ளிக்கு பல்கலைக்கு இணையான அந்தஸ்து 'சென்னை பொருளியல் பள்ளிக்கு, பல்கலைக்கு இணையான அந்தஸ்து வழங்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்து உள்ளது
காவல் துறைக்கு, ரூ.8,877 கோடி ஒதுக்கீடு
  • தமிழக காவல் துறையில், தற்போது, 1.13 லட்சம் காவலர்கள் பணியாற்றுகின்றனர். 2019 - 20ல், சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் வாயிலாக, 10 ஆயிரத்து, 242 பேர் புதிதாக பணியில் சேர்க்கப் பட்டுள்ளனர். வரும், 2020 - 21ல், 10 ஆயிரத்து, 276 சீருடை பணியாளர்கள், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
  • குற்றங்களையும், குற்றவாளிகளையும் கண்காணிக்கும், 'கணினி வலையமைப்பு திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
  • இத்திட்டம், 54.84 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்பட்டு, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படுத்தப்படும். இணையவழி குற்றங்களை தடுத்து, பாதுகாப்பை அதிகரிக்க, 28.97 கோடி ரூபாயில், இணையதள குற்ற காவல் பிரிவு வலுப்படுத்தப்பட்டு வருகிறது.
  • காவல் துறையில் கட்டுமான பணிகளுக்காக, 431 கோடி ரூபாய், காவல் துறை நவீனமய மாக்கல் திட்டத்திற்காக, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. காவல் துறைக்கு மொத்தமாக, 8,876.57 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 
  • தீயணைப்பு துறை தமிழகத்தில், 326 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன; புதிதாக, 16 தீயணைப்பு நிலையங்கள், 18.22 கோடி ரூபாய் செலவில் அமைக்க, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உயர் அடுக்குமாடி கட்டடங்களில் ஏற்படும் தீ விபத்துகளை, நவீன முறையில் தடுப்பு மற்றும் மீட்புக்கான கருவிகள், 13.67 கோடி ரூபாயில் வாங்கப்படும். 
  • தேசிய பேரிடர் நிவாரண மற்றும் மேலாண்மை நிதியத்தில், தீயணைப்பு பணிகள், நவீனமயமாக்கல் மற்றும் விரிவாக்கத்திற்காக, 1,000 கோடி ரூபாயை ஒதுக்க, 15வது நிதிக்குழு பரிந்துரைத்துள்ளது. 
  • இந்த நிதியை பெற, தமிழக அரசு முயற்சி மேற்கொள்ளும். பட்ஜெட்டில், மொத்தமாக, தீயணைப்புத் துறைக்கு,405.68 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது சிறைத்துறை சிறைவாசிகள், சிறைத் தொழிற்கூடங்களில் ஈட்டும் ஊதியத்தில், அவர்களின் பராமரிப்புக்காக பிடிக்கப்படும் தொகை, 50 சதவீதத்திலிருந்து, 30 சதவீதமாக குறைக்கப்படும்; 
  • ஊதியத்தில், அவர்களின் பங்கு, 30 சதவீதத்தில் இருந்து, 50 சதவீதமாக உயர்த்தப்படும். சிறைவாசிகளின் சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்வுக்காக, வரும் நிதியாண்டில், மேலும், ஆறு பெட்ரோல் நிலையங்கள் அமைக்கப்படும். பட்ஜெட்டில், சிறைத் துறைக்கு, 392.74 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 



தொழிலாளர் துறை
  • தமிழகத்தில், 2013 முதல், அம்மா உணவக திட்டம் செயல்பாட்டில் உள்ளது. தமிழகத்தை பின்பற்றி, பல மாநிலங்களும், உணவக திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இத்திட்டத்தால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்படும், நிதி சுமையை குறைப்பதற்காக, லாபநோக்கமற்ற, ஒரு சிறப்பு நோக்கு முகைமையை உருவாக்க, அரசு முடிவெடுத்துள்ளது.
  • கட்டுமான பணியாளர்களுக்காக, அவர்கள் இருக்கும் இடங்களிலேயே உணவு தரும் வகையில், அம்மா உணவக திட்டம் செயல்படுத்தப்படும். பட்ஜெட்டில், அம்மா உணவக திட்டத்துக்காக, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 
மீனவர்களுக்கான திட்டம்
  • ரூ.385 கோடியில் மீன்பிடி துறைமுகங்கள் செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில், 385 கோடி ரூபாயில், புதிய மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்பட உள்ளன.
  • மீன்பிடித் தடை காலத்தில், உதவித் தொகை வழங்கவும், மீனவர்களுக்கான சேமிப்புத் திட்டத்திற்காகவும், சிறப்பு உதவித் தொகை வழங்க, 298.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. 4,997 மீன்பிடி விசைப்படகுகளில், 18 கோடி ரூபாயில், 'டிரான்ஸ் பாண்டர்'கள் பொருத்தப்படும்.
  • பாக் வளைகுடா பகுதி மீனவர்களுக்கான, 2,000 இழுவலை மீன்பிடி படகுகளை, ஆழ்கடல் மீன்படி படகுகளாக மாற்றும் சிறப்புத் திட்டம், 1,600 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படுகிறது.
  • இதில், முதல் கட்டமாக, 500 துாண்டில் செவுள் வலையுடன் கூடிய, ஆழ்கடல் சூரை மீன்பிடி படகுகள் கட்டப்பட்டு வருகின்றன. 
  • விழுப்புரம் மாவட்டம், அழகன் குப்பம்; செங்கல்பட்டு மாவட்டம், ஆலம்பரைக் குப்பம்; நாகப்பட்டினம் மாவட்டம், ஆறுகாட்டுத் துறையிலும், 385 கோடி ரூபாயில், மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படும். துாத்துக்குடி மாவட்டத்தில், 30 கோடி ரூபாயில், கடலரிப்பு தடுப்பு சுவர்கள் கட்டப்படும். 
  • மீன் வளத் துறைக்கு, மொத்தம், 1,229.85 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் கற்பித்தல் திறனுக்கு பயிற்சி மையம் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களுக்கு, மானியம் வழங்க, 149.82 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. 
  • வரும் ஆண்டில், 20 கோடி ரூபாய் செலவில், 2 லட்சம் கட்டுமான தொழிலாளர்களுக்கு, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும்.
தொழிற்துறை
  • சென்னை அருகே ஒரகடத்தில் உள்ள, 'சிப்காட்' தொழிற் பூங்காவில், சிப்காட் மற்றும் இதர நிறுவனங்களின் பங்களிப்பில், 15 கோடி ரூபாய் செலவில், ஒரு புதிய தொழில் பயிற்சி நிலையம் அமைக்கப்படும். 
  • அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், வழக்கற்ற படிப்புகள் நீக்கப்பட்டு, தொழில் துறையினரின் தேவைக்கேற்ற பயிற்சிகளை வழங்கும் பிரிவுகளைச் சேர்த்து, 17.80 கோடி ரூபாய் செலவில், தொழிற்பிரிவுகள் முழுமையாக மாற்றி அமைக்கப்படும். 
  • தொழிற்பயிற்சி நிலையங்களில், 4.77 கோடி ரூபாய் செலவில், தகுதி வாய்ந்த நபர்களுக்கு, மின் வாகன தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும். 
  • ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி அளிக்க, சென்னையில், மாநில திறன் பயிற்சி நிலையம், 1.60 கோடி ரூபாயில் உருவாக்கப்படும். எரிசக்தி துறைக்கு ரூ.20,115 கோடி தமிழக அரசின் பட்ஜெட்டில், எரிசக்தி துறைக்கு, 20 ஆயிரத்து, 115 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தடத்தில் உள்ள மின் கட்டமைப்பை, 4,650 கோடி ரூபாய் செலவில் வலுப்படுத்தும் திட்டம், ஆசிய வளர்ச்சி வங்கியின், 3,150 கோடி ரூபாய் கடனுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்த, பட்ஜெட்டில், 450 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 
மின் வாரிய துறை
  • மின் வாரியத்திற்கு, 2019 - 20 ஏற்பட்ட நஷ்டத்தில், 50 சதவீதத்தை ஈடு செய்ய, 4,265 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்களின் மின் உற்பத்தியையும், உயரழுத்த நுகர்வோரின் மின் பயன்பாட்டையும் கணக்கிட, தானியங்கி கணக்கீட்டு கருவிகளை நிறுவும் திட்டத்தை, இந்தியாவிலேயே முதல் முறையாக, மின் வாரியம் செயல்படுத்தி உள்ளது.
  • மின் வாரியத்தின், நிதி மற்றும் இயக்க செயல்பாட்டு திறனை மேம்படுத்த, ஒரு விரிவான ஆய்வை மேற்கொள்ள, அரசு, நிதியுதவி வழங்கும் பட்ஜெட் மதிப்பீடுகளில், எரிசக்தி துறைக்கு, 20 ஆயிரத்து, 115 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.
  • 'மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிசெய்வது மத்திய அரசின் கடமை' சென்னை : ''மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடுகளை செய்ய வேண்டும். மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டை, எக்காரணம் கொண்டும் குறைக்கக் கூடாது,''
தமிழகத்தின் வளர்ச்சி விகிதம்
  • மாநிலத்தின் பன்முகப் பொருளாதாரம், மாநில அரசின் நிலையானக் கொள்கை போன்றவை, 2018 - 19ம் ஆண்டில், தமிழகத்தின் வளர்ச்சி விகிதம், 8.17 சதவீதம் அடைவதை உறுதி செய்துள்ளன. வரும் நிதியாண்டில், மேலும் வலுவான பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம்.
  • பரிந்துரை தமிழகத்திற்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக, 4,025 கோடி ரூபாய் வழங்க, 15வது நிதிக் குழு பரிந்துரை செய்துள்ளது. மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தேவையான, அரசின் மக்கள் நலச் செலவினங்களை, இந்த அறிக்கை ஏற்றதையே, இது குறிக்கும். 
  • ஆனால், 74 ஆயிரத்து, 340 கோடி ரூபாயை, நிதிக் குழு பரிந்துரைத்த நிலையில், மத்திய அரசின் பட்ஜெட்டில், மானியத்திற்கு, 30 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மானியத் தொகையை முழுமையாக பெறுவதை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடுகள் செய்ய, மாநில அரசு வலியுறுத்தும்.
ஒருங்கிணைந்த சாலை மேம்பாடு ரூ.5,500 கோடி ஒதுக்கீடு
  • பட்ஜெட்டில், ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்காக, 5,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், திருவள்ளூர், விருதுநகர், பழநி, தஞ்சாவூர் கோட்டங்களில், பராமரிப்பு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
  • அதேபோல், கோபிச்செட்டிப்பாளையம் கோட்டமும் ஒப்பந்த முறையில் கொண்டு வரப்படும். கிராமப்புற ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய சாலைகளின், நான்காம் கட்ட தரம் உயர்த்தும் பணி துவங்கப்படும். 1,500 கி.மீ., நீள சாலைகளை மேம்படுத்த, 1,050 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 
  • உலக வங்கியின் கடன் உதவியுடன், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின், இரண்டாம் கட்ட திட்டப் பணிகளுக்கு, 615.54 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 
  • ஆசிய வளர்ச்சி வங்கியின் கடன் உதவியுடன், சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டத்தில், 655 கி.மீ., நீள சாலைகள், 6,448 கோடி ரூபாயில் வலுப்படுத்தப்படும். 
  • சாலைகளை அகலப்படுத்தி, புறவழிச் சாலைகளை அமைக்க, தேவையான நில எடுப்பு பணிகள் நடக்கின்றன. இதற்காக, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. 
  • சென்னை சுற்றுவட்டச் சாலைத் திட்டம், 12 ஆயிரத்து, 301 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும். அதன் முதல் கட்டமாக, எண்ணுார் துறைமுகம் முதல், தச்சூர் வரையிலான நில எடுப்பு பணிக்கு, 951 கோடி ரூபாய் தேவை.
  • இதன் முதல் கட்டப் பணிக்கு, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின், 2,673 கோடி ரூபாய் கடனுதவியுடன், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 
  • இத்திட்டத்தின், இரண்டாம், மூன்றாம் கட்டத்தில், தச்சூர் முதல், ஸ்ரீபெரும்புதுார் வரையிலான பணிகளுக்கு, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகள் அமைப்பின், சர்வதேச வளர்ச்சி நிதியம் ஆகியவற்றின், 3,346.49 கோடி ரூபாய் கடன் உதவி பெறப்பட உள்ளது. 
  • இதற்கு, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில், நெரிசலை குறைக்கவும், பாதசாரிகளை பாதுகாக்கவும், 4,257 கோடி ரூபாயில், 'சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் திட்டம்' தயாரிக்கப்பட்டு, புதிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவி கோரப்பட்டுள்ளது.
  • இதற்காக, 1,122 கோடி ரூபாய் செலவில், நிலம் கையகப்படுத்த, அரசு அனுமதி அளித்துள்ளது. கோவை விமான நிலையத்திலிருந்து, உப்பிலிபாளையம் வரை உள்ள, அவினாசி சாலையில், 1,620 கோடி ரூபாய் செலவில், 10.1 கி.மீ., நீளத்திற்கு உயர்த்தப்பட்ட சாலைகள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 
  • இதற்காக, 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில், நெடுஞ்சாலைத் துறைக்கு, 15 ஆயிரத்து, 850.54 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
  • உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.12,061 கோடி தமிழகத்தில் ஊரக, நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு, நிதி பகிர்வாக, 12 ஆயிரத்து, 61 கோடி ரூபாய் வழங்கப்படும் என, தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.



மாநில நிதி குழு பரிந்துரை படி, உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி பகிர்வாக, 2020 - 21 நிதி ஆண்டில், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு, 5,306 கோடி ரூபாய்
  • ஊரக உள்ளாட்சிகளுக்கு, 6,754 கோடி ரூபாயும் வழங்க, நிதி ஒதுக்கப்படுகிறது. கிராமப்புற பகுதிகளில், அத்தியாவசிய அடிப்படை கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள, 2020 - 21 நிதி ஆண்டில், 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. 
  • ஆதிதிராவிடர் துறைக்கு ரூ.4,109 கோடி ஆதிதிராவிடர் மேம்பாட்டுக்கு, பட்ஜெட்டில், 4,109 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது. இதில், 2,018.24 கோடி ரூபாய், அவர்களின் கல்வி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பெண் கல்வி சிறப்பு ஊக்கத்தொகை திட்டம், 49.60 கோடி ரூபாய் செலவில், தொடர்ந்து செயல்படுத்தப்பட உள்ளது. 
  • உயர்கல்வி ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், மாநில அரசால் ஏற்றுக்கொள்ள வேண்டிய தொகை, மிக அதிகமாக உயர்த்தப்பட்டு, 1,526.46 கோடி ரூபாயை எட்டியுள்ளது. 
  • இத்திட்டத்திற்கான தொகையை, மத்திய அரசு கணிசமாக குறைந்துள்ளதால், மத்திய, மாநில அரசுகள், 60:40 என்ற விகிதத்தில் செலவை ஏற்க வேண்டும் என, மத்திய அரசிடம் கேட்டுக்கொள்ளப் பட்டுஉள்ளது.
மாணவர்களின் நலம்
  • மாணவர்களின் உயர்கல்வி ஊக்கத்தொகை வழங்குவதற்கு, 2020 - 21 பட்ஜெட்டில், 1,949.58 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் மாணவர்களுக்கான, 15 விடுதிகள், 16.30 கோடி ரூபாய் செலவில், கல்லுாரி விடுதிகளாக தரம் உயர்த்தப்படும். 
  • ஆதிதிராவிடர் விடுதிகள் பராமரிப்புக்கான நிதி ஒதுக்கீடு, 6:89 கோடியில் இருந்து, 15 கோடி ரூபாயாக ஒதுக்கப்பட்டுள்ளது. நபார்டு வங்கி உதவியுடன், 106.29 கோடி ரூபாய் செலவில், 223 ஆதிதிராவிடர் நல பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். 
நீதித் துறை
  • நீதித் துறைக்கு ரூ.1,403 கோடி புதிய கட்டடம் கட்டுதல் உட்பட, நீதி நிர்வாகத்திற்கு, 1,403 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • கடந்த, 2011 - 2019 வரையில், சிறப்பு நீதிமன்றங்கள் உட்பட, 494 புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிப்பதற்காக, 16 சிறப்பு, 'போக்சோ' நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
  • 1,317 கோடி ரூபாய் செலவில், நீதிமன்ற கட்டடங்கள் மற்றும் நீதிபதிகளின் குடியிருப்புகள் உட்பட, பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 
  • புதிய கட்டடங்கள் கட்டுதல் உட்பட, நீதி நிர்வாகத்திற்கு 1,403.17 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
குழந்தைகள் & மகளிருக்கான நலம்
  • குழந்தைகள் நல கொள்கை விரைவில் வெளியீடு தொட்டில் குழந்தை திட்டம், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டங்களுக்கு, 140.97 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பல்வேறு திருமண நிதியுதவித் திட்டங்களால், கடந்த ஆண்டு, 1 லட்சத்து, 4,795 பேர் பயன் அடைந்துள்ளனர்.
  • இதற்கு, 726.32 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிபுரியும் மகளிருக்கான, அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தில், இதுவரை, 1.88 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். இதற்காக, 253.14 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிபுரியும் மகளிர் விடுதிகளை நிர்வகிக்க, தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • கிருஷ்ணகிரி, திருச்சி, ஓசூர், காஞ்சிபுரம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில், தலா ஒன்று என, 13 விடுதிகள் கட்ட வேண்டியது கண்டறியப்பட்டுள்ளது. மகளிர் நலத் திட்டங்களுக்காக, 78 ஆயிரத்து, 796.12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 
  • சத்துணவுத் திட்டத்துக்காக, 1,863.32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்துக்காக, 2,535.34 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதரவற்ற குழந்தைகளின் பாதுகாப்புக்காக, புதிதாக, மாநில குழந்தைகள் நலக் கொள்கை வெளியிடப்படும்.
நகா்ப்புற நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறைக்கு ரூ.18,540 கோடி
  • திறன்மிகு நகரங்கள் திட்டத்துக்காக ரூ.1,650 கோடியும், அம்ருத் திட்டத்துக்காக ரூ.1,450 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
  • உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.3,831 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு நீடித்த நகா்ப்புற வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ஈரோடு, வேலூா் மற்றும் ஓசூா் ஆகிய நகரங்கள் திறன்மிகு நகா்ப்புற மேலாண்மைக்கான மாதிரி நகரங்களாகத் தோவு செய்யப்பட்டுள்ளன.
  • நகா்ப்புற மற்றும் சுற்றுச்சூழல் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட ஆசிய வங்கி நிதியுதவியுடன் ரூ.8,155.81 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும், தமிழ்நாடு நகா்ப்புற முதலீட்டுத் திட்டம் பெரிதும் உதவும்.
  • இந்தத் திட்டத்தின்கீழ் மதுரை, கோயம்புத்தூா், வேலூா், திருச்சி, திருநெல்வேலி, திருப்பூா், ஆம்பூா், ராஜபாளையம் ஆகிய இடங்களில் பாதாள சாக்கடைத் திட்டம் மற்றும் குடிநீா் வழங்கல் திட்டம் ஆகியவற்றைச் செயல்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
  • கொசஸ்தலை ஆற்றின் வடிநிலப் பகுதியில் ரூ.2,518 கோடி செலவில் 765 கிலோமீட்டா் நீளத்துக்கு சென்னை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதியில் செயல்படுத்த ஒருங்கிணைந்த வெள்ள நீா் வடிகால் திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சி தயாரித்துள்ளது. இந்தத் திட்டத்துக்காக ஆசிய வளா்ச்சி வங்கியின் நிதியுதவி ஒப்புதலை எதிா்நோக்கி ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • நடப்பாண்டில் ஒருங்கிணைந்த நகா்ப்புற மேம்பாடு இயக்கத்துக்கு ரூ.750 கோடி, சென்னை பெருநகர மேம்பாடு இயக்கத்துக்கு ரூ.500 கோடி உள்பட நகா்ப்புற நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறைக்கு ரூ.18,540.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.



உயா் கல்வித் துறைக்கு ரூ. 5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
  • அனைவருக்கும் உயா் கல்வி கிடைப்பதை உறுதி செய்வதில் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. 2011-12-ஆம் ஆண்டுமுதல் 2019-2020ஆம் ஆண்டு வரை 30 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், 27 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளன.
  • 2019-2020 ஆம் ஆண்டில் 14 உறுப்புக் கல்லூரிகள், அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
  • லும் 2013-14 ஆம் ஆண்டிலிருந்து 2018-19 ஆம் ஆண்டு வரை 21 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதுபோல 2012-13 ஆம் ஆண்டு முதல் 4 புதிய அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.
  • 2011-12 ஆம் ஆண்டு முதல் அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் 1,577 புதியப் பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
  • அந்த வகையில், 2020-21 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் உயா் கல்வித் துறைக்கு ரூ. 5,052 கோடியே 84 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளாா்.
2020 - 21 பட்ஜெட்: எல்ஐசி மூலம் ஏழைகளுக்கு ஆயுள் காப்பீடு திட்டம்
  • ஏழைக் குடும்பங்களுக்கு எல்ஐசியுடன் இணைந்து விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அதாவது, ஏழைக் குடும்பங்களுக்கு எல்ஐசியுடன் இணைந்து விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும்.
  • விபத்தில் நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.2 லட்சம் வரை இழப்பீடு அளிக்கப்படும்.
  • விபத்து உள்ளிட்டவற்றில் அகால மரணம் அடைவோருக்கு இழப்பீடு ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும். இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கான இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்துக்காக ரூ.3,099 கோடி ஒதுக்கீடு
  • பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் ரூ.8,968.39 கோடி செலவில் 5,27,552 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. முதல்வரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 2011-12-ஆம் ஆண்டிலிருந்து 7,620 கோடி செலவில் 3,80,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
  • ஆட்சேபணையில்லாப் புறம்போக்கு நிலங்களில் வசித்து வருபவா்களின் வீட்டுமனைகளை வரன்முறை செய்து, வருவாய்த் துறை பட்டா வழங்கியுள்ள நபா்களில் தகுதியான நபா்களுக்கு, பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டம் மற்றும் முதல்வரின் பசுமை வீடுகள் திட்டங்களின் கீழ் 2020-21-ஆம் ஆண்டு முதல் வீடுகள் கட்டித் தரப்படும்.
  • 2020-21-ஆம் ஆண்டில் பிரதம மந்திரி வீட்டுவசதிக் திட்டத்தின் கீழ் 2 லட்சம் வீடுகளும், முதல்வரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் அனைத்து பழங்குடியினா் குடும்பங்களுக்கும் வீட்டுவசதியை வழங்கும் வகையில் அவா்களுக்கான 8,803 வீடுகள் உள்பட 20 ஆயிரம் வீடுகளும் கட்டித் தரப்படும்.
  • முதல்வரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் சூரிய ஒளித்தகடுகளை நிறுவுவதற்கான தொகை வீடு ஒன்றிற்கு ரூ.30 ஆயிரம் வீட்டின் கட்டுமானச் செலவிற்கான தொகையுடன் சோக்கப்பட்டு, ஒட்டுமொத்த கட்டுமானச் செலவு வீடு ஒன்றுக்கு 2.1 லட்சம் ரூபாயாகவும் உயா்த்தப்படும்.
  • நடப்பாண்டில் பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டத்துக்காக ரூ.3,099 கோடியும், முதல்வரின் பசுமை வீடுகள் திட்டத்துக்காக ரூ.500 கோடியும் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.
மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.3,100 கோடி ஒதுக்கீடு
  • சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், 118.90 கி.மீ., நீளமுள்ள 3 மெட்ரோ ரயில் வழித்தடங்கள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளை விரைவில் முடிப்பதற்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது.
  • மாதவரம்-சோழிங்கநல்லூா், மாதவரம்-கோயம்பேடு பேருந்து நிலையம் வரையிலான 52.01 கி.மீ. நீளமுள்ள வழித்தடங்களுக்கு நிதியுதவி வழங்க ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமை ஒப்புதல் அளித்துள்ளது. விரிவான திட்ட வடிவமைப்புகள் தயாராக உள்ள நிலையில், இத்திட்டத்துக்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.
  • ஆசிய வளா்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் புதிய வளா்ச்சி வங்கி ஆகிய பன்னாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து இரண்டாம் கட்டத்தின் மீதமுள்ள சென்னை கோயம்பேடு பேருந்துநிலையம்-சோழிங்கநல்லூா், சோழிங்கநல்லூா்-சிறுசேரி சிப்காட் , சென்னை கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலான வழித்தடப் பகுதிகளுக்கு நிதிதிரட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
  • சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்ட திட்டத்துக்கு, 50 சதவீத பங்கு மூலதனத்தை மத்திய அரசு வழங்கியது. இதுபோன்று இரண்டாம் கட்ட திட்டத்துக்கும் 50 சதவீத பங்கு மூலதனம் வழங்க மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது.
  • 2020-21-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை மதிப்பீடுகளில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு பங்கு மூலதன உதவி, சாா்நிலை கடன் மற்றும் வெளிநாட்டுக் கடனை விடுவிப்பதற்காக மொத்தம் ரூ. 3,100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றுதெரிவித்தாா்.
அத்திக்கடவு - அவினாசி நீர்பாசன திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு
  • பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் அத்திக்கடவு - அவினாசி நீர்பாசன திட்டத்திற்கு ரூ.500 கோடியும், காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த நிலமெடுக்க ரூ.700 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel