Type Here to Get Search Results !

29th FEBRUARY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

கீழடி 6ம் கட்ட அகழாய்வில் கருப்பு, சிவப்பு பானைகள்
 • கீழடியில் நடக்கும், ஆறாம் கட்ட அகழாய்வில், கருப்பு, சிவப்பு பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.சிவகங்கை மாவட்டம், கீழடியில், 19ம் தேதி, ஆறாம்கட்ட அகழாய்வு பணி துவங்கியது.
 • ஐந்தாம் கட்ட அகழாய்வின் போது, நீதியம்மாள் என்பவர் நிலத்தில், சுடுமண் குழாய் கண்டெடுக்கப்பட்ட இடத்தின் அருகில், ஆறாம் கட்ட அகழாய்வு பணி துவங்கியது.அதில், 4 அடி ஆழத்தில், கருப்பு, சிவப்பு வண்ணமுடைய வட்டப்பானை, சிதிலமடைந்த நிலையில் கிடைத்துள்ளது.
 • அதன் அருகிலேயே, சிறிய மண் பானையும் கிடைத்துள்ளது. ஐந்தாம் கட்ட அகழாய்வில், கருப்பையாவின் நிலத்தில் கண்டெடுத்த வட்டப்பானையை போலவே, இந்த பானையும் கிடைத்து உள்ளது.முழு வடிவ பானையை கண்டறிய, குறைந்தப்பட்சம், 10 நாட்களாகும் என, தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.
உத்திரபிரதேசத்தில் அதிவேக நெடுஞ்சாலைக்கு அடித்தளம் அமைத்தார் மோடி
 • பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் முதல் ஆண்டு நிறைவை நினைவுகூரும் உத்தரபிரதேசத்தின் சித்ரக்கூட்டில் நடந்த பேரணியில் உரையாற்றிய பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டார். 
 • விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் புதிய FPOs அமைக்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 
 • இது விவசாயிகளுக்கு பயிர்களை உற்பத்தி செய்வதோடு சந்தைப்படுத்தவும் செயலாக்கவும் உதவும். இந்த பிரச்சாரத்திற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.5,000 கோடி செலவிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 • பிரதமர் மோடி தனது உத்தரப்பிரதேச பயணத்தின் போது 296 கி.மீ நீளமுள்ள புண்டேல்கண்ட் அதிவேக நெடுஞ்சாலைக்கு அடிக்கல் நாட்டினார், இது பிராந்தியத்தின் வளர்ச்சி அதிவேக நெடுஞ்சாலை என்பதை நிரூபிக்கும் என்றும் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
 • விவசாயிகளுக்காக வேறு சில பயனாளிகளை அறிவித்த பிரதமர் மோடி கிசான் கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்தி, கிசான் கிரெடிட் கார்டுகளை (KCC) விநியோகிப்பதற்கான ஒரு செறிவூட்டல் இயக்கத்தைத் தொடங்குவதாகக் கூறினார். PM-KISAN திட்டத்தின் கீழ் சுமார் 8.5 கோடி பயனாளிகளில் 6.5 கோடிக்கு மேல் கிசான் கடன் அட்டைகளைக் கொண்டுள்ளது.
மலேசிய புதிய பிரதமராக முகைதீன் யாசின் நியமனம்
 • மலேசியாவின் பிரதமராக இருந்தவர் மகாதீர் முகமது 94. உலகின் வயதான பிரதமரான இவர், அன்வர் இப்ராகிமின் மக்கள் நீதிக்கட்சியின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியில் இருந்தார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட, மகாதீர் தனது பதவியை பிப்., 24ல் ராஜினாமா செய்தார். 
 • புதிய பிரதமர் தேர்வு செய்யப்படாததால், குழப்பமான சூழல் நிலவியது. இந்நிலையில், முகைதீன் யாசின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். பல்வேறு துறைகளின் அமைச்சர் மற்றும் துணை பிரதமராக பதவி வகித்துள்ள முகைதீன், 1947 மே 15ல் பிறந்தார். 
 • பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். மயூர் மாவட்ட உதவி அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.1971ல் யு.எம்.எம்.ஓ., கட்சியில் சேர்ந்து அரசியலில் நுழைந்தார். 1972ல் அந்நாட்டு பார்லிமென்ட்டில் முதன்முதலாகஎம்.பி., ஆனார்.
 • 2018 வரை எட்டு முறை எம்.பி.,யானார். 1995 - 2009 வரை உள்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், வர்த்தகம் மற்றும் நுகர்வோர் நலன், விவசாயம், கல்வி அமைச்சராக பதவி வகித்தார். 2009 - 2016 வரை யு.எம்.எம்.ஓ., கட்சியின் துணை தலைவராக இருந்தார்.
 • 2009 ஏப்., 10 - 2015 ஜூலை 28 வரை துணை பிரதமராக பதவி வகித்தார். 2016 ஆகஸ்டில் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமதுவுடன் இணைந்து மலேசிய ஐக்கிய மக்கள் கட்சியை தொடங்கினார். இக்கட்சியின் தலைவராக நீடிக்கிறார்.
அமெரிக்கா-தலிபான் ஒப்பந்தம் தோஹாவில் கையெழுத்து
 • தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான்களுக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வரும் உள்நாட்டு போரில், ஆப்கன் அரசுக்கு உதவுவதற்காக, அமெரிக்க படைகள், ஆப்கனில் குவிக்கப்பட்டன. 
 • கடந்த, 18 ஆண்டுகளாக, ஆப்கன் - அமெரிக்க படைகள் மற்றும் தலிபான்களுக்கு இடையே நடந்து வரும் சண்டையில், இருதரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர்.இந்நிலையில், ஆப்கன் போரை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு, தலிபான்களுடனான பேச்சு வார்த்தையில், அமெரிக்கா ஈடுபட்டது. 
 • இதன் முடிவில், அமைதி ஒப்பந்ததில் கையெழுத்திட முடிவு செய்யப்பட்டது.வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த நிகழ்வு, வளைகுடா நாடான கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்தது.
 • தலிபான் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான முல்லா பராதர், அமெரிக்கா சார்பில் அமைதிப் பேச்சில் ஈடுபட்ட குழுவின் தலைவர் ஸல்மே கலீல்ஸாத் ஆகியோர், அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 
 • 'ஆப்கானிஸ்தானில் உள்ள, 13 ஆயிரம் அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை, 135 நாட்களுக்குள், 8,600 ஆக குறைக்கப்படும்.'அமைதி ஒப்பந்தத்தை தலிபான்கள் மீறாமல் காக்கும் பட்சத்தில், 14 மாதங்களில், அமெரிக்க படைகள் மொத்தமும், 'வாபஸ்' பெறப்படும்' என, ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக, அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 
 • இதன் மூலம், ஆப்கானிஸ்தானில், 18 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போர், முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஒன்பது நேட்டோ நாடுகள் போர்பயிற்சி
 • 9 நேட்டோ நாடுகள் போர் பயிற்சி... இத்தாலி நாட்டையொட்டிய மத்திய தரைக்கடல் பகுதியில், "டைனமிக் மந்தா" (Dynamic Manta) என்ற தலைப்பில், ரஷ்யாவின் நீர்மூழ்கி கப்பல்களின் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்கான 2 வாரகால போர் பயிற்சியில் 9 நேட்டோ நாடுகள் ஈடுபட்டுள்ளன.
 • பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், துருக்கி, இத்தாலி, கனடா உள்ளிட்ட நேட்டோ நாடுகளின், நீர்மூழ்கி கப்பல்கள், விமானம் தாங்கி போர்க்கப்பல்கள், இந்த "டைனமிக் மந்தா" போர் ஒத்திகையில் பங்கேற்றுள்ளன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel