Type Here to Get Search Results !

27th & 28th NOVEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி
  • தமிழகத்தில் 3 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூா் ஆகிய இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமையவுள்ளன.
  • இதையடுத்து மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 33-ஆகவும், அவற்றில் எம்பிபிஎஸ் இடங்கள் 4,700-ஆகவும் அதிகரிக்கவுள்ளன. இதன் மூலம் நாட்டிலேயே அதிக மருத்துவக் கல்லூரிகளும், மருத்துவ இடங்களும் கொண்ட மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளது.
  • நிகழாண்டில் மட்டும் தமிழகத்தில் மொத்தம் 9 மருத்துவக் கல்லூரிகளை புதிதாகத் தொடங்க மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்துள்ளது.
பாதுகாப்பற்ற உணவுப் பொருட்களில் தமிழகம் முதலிடம்
  • நாடு முழுவதும் விற்பனையாகி வரும் உணவுப் பொருட்களின் தரத்தை மத்திய உணவு தரக்கட்டுபாட்டு வாரியம் ஆய்வு செய்துள்ளது. நாடு முழுவதும் சேகரிக்கப்பட்ட 1 லட்சத்துக்கும் அதிகமான உணவுப்பொருட்களை ஆய்வு செய்ததில் அதில் 3.7 சதவீதம் உணவுகள் பாதுகாப்பு அற்றவையாகவும், 15 சதவீத உணவுகள் தரம் குறைவானதாகவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
  • பாதுகாப்பற்ற உணவுகல் அதிகம் விற்கப்படும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. மேலும் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி குறித்து ஒட்டப்படும் லேபிள்களில் தமிழகத்தில்தான் அதிகம் குளறுபடிகள் நடைபெறுவதாகவும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உதயமானது திருப்பத்தூர், ராணிப்பேட்டை புதிய மாவட்டங்கள் துவக்கினார் முதல்வர்
  • தமிழகத்தின் 35 மற்றும் 36வது மாவட்டங்களாக திருப்பத்துார் ராணிப்பேட்டையை முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்.வேலுாரை மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து திருப்பத்துார் ராணிப்பேட்டையை தலைமையிடங்களாக கொண்டு புதிய மாவட்டங்கள் துவங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
லஞ்சம் வாங்குவதில் 6-வது இடத்தில் தமிழகம்
  • தனியார் அமைப்பு ஒன்று இந்தியாவில் உள்ள 20 மாநிலங்களில் லஞ்சம் குறித்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. அவற்றில் அதிகம் லஞ்சம் வாங்கும் மாநிலத்தில் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது.
  • இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் 100ல் 62 பேர் தங்களது வேலை முடிய வேண்டும் என்பதற்காக லஞ்சம் அளிப்பதாக கூறப்படுகிறது. 



இரு யூனியன் பிரதேசங்களை இணைக்கும் மசோதா லோக்சபாவில் நிறைவேறியது
  • குஜராத் மாநிலத்தின் மேற்கு கடற்பகுதியில் டாமன்- டையு மற்றும் தாத்ரா -நகர்ஹவேலி ஆகிய இரண்டு யூனியன் பிதேசங்கள் உள்ளன. 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளன. 
  • இந்த இரு யூனியன் பிரதேசங்களையும் நிர்வாக வசதிகளுக்காக ஒன்றாக இணைக்க மத்திய அரசு முடிவு செய்தது. 
எஸ்.பி.ஜி., சட்ட திருத்த மசோதா : லோக்சபாவில் நிறைவேறியது
  • சிறப்பு பாதுகாப்பு படை சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில், நிறைவேறியது.பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர்கள், அவர்களது நெருங்கிய உறவினர்களுக்கு, 'இஸட் ஸ்பெஷல்' எனப்படும், சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பை, மத்திய அரசு அளித்து வருகிறது.
  • சமீபத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்., இடைக்கால தலைவர் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த, எஸ்.பி.ஜி., எனப்படும், சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பு, 'வாபஸ்' பெறப்பட்டது.இந்நிலையில், அவர்களுக்கு 'இஸட் பிளஸ்' பாதுகாப்பு தொடரும் என, மத்திய அரசு அறிவித்தது. 
  • இந்நிலையில், பிரதமர் மற்றும் அவருடன் வசிக்கும் நெருங்கிய உறவினர்கள், பதவி விலகி ஐந்தாண்டுகள் வரையிலான முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவருடன் வசிக்கும் உறவினர்களுக்கு மட்டும், எஸ்.பி.ஜி., பாதுகாப்பு வழங்க, மத்திய அரசு முடிவு செய்தது.
e-cigarettes தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • நாட்டில் மின்னணு சிகரெட்டுகளின் உற்பத்தி, சேமிப்பு, இறக்குமதி மற்றும் விற்பனை ஆகியவற்றை தடை செய்யும் மசோதாவை மக்களவை புதன்கிழமை நிறைவேற்றியது.
  • எலக்ட்ரானிக் சிகரெட்டுகளின் தடை மசோதா (உற்பத்தி, இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து, விற்பனை, விநியோகம், சேமிப்பு மற்றும் விளம்பரம்) 2019, செப்டம்பர் 18 அன்று பிறப்பிக்கப்பட்ட கட்டளைகளை மாற்ற முயல்கிறது. 
  • எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் தடை மசோதா, 2019 மின்னணு சிகரெட்டுகளை (மின்-சிகரெட்டுகள்) மின்னணு சாதனங்களாக வரையறுக்கிறது.
  • மின்-சிகரெட்டுகள் ஆனது, நிகோடோன் மற்றும் பிற இரசாயனங்களை கொண்டு ஒரு உள்ளிழுக்கும் போதை நிராவினையினை உருவாக்கும் ஒரு பொருளாகும். இந்த சூடாக்கும் பொருள் ஆனது நாட்டில் தடை செய்யப்பட்ட ஒரு பொருளாக பார்க்கப்படுகிறது.
  • இதற்காக கொண்டுவரப்பட்டுள்ள எலக்ட்ரானிக் சிகரெட்டுகளின் தடை மசோதா விதிமுறையை மீறும் எந்தவொரு நபருக்கும், ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
  • குற்றம்சாட்டப்பட்ட நபர் மீண்டும் மீண்டும் அதே தவறினை தொடர்ந்து செய்தால் அவருக்கு சிறை தண்டனை 3-லிருந்து 5 ஆண்டுகள் வரை அதிகரிக்கப்படும். மேலும் ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.
  • குறித்த மசோதாவின் கீழ், எந்தவொரு நபரும் மின்-சிகரெட்டுகளை சேமித்து வைக்கவோ, பயன்படுத்தவோ அனுமதி இல்லை. இந்த மசோதாவின் கீழ், இந்த ஒரு நபரும் இ-சிகரெட்டுகளை சேமித்து வைத்திருந்தால், அவருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது ஐம்பதாயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
இந்திய உணவுக்கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • இந்திய உணவுக்கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ரூ.3,500 கோடியிலிருந்து ரூ.10,000 கோடியாக உயர்த்த பொருளாதார விவகார அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
நீர்வள மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.649 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • நீர்வள மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.649 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. உலக வங்கி நிதியுதவியுடன் தமிழகத்தில் நீர்வள மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.



சீட்டு நிறுவன திருத்தச் சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்
  • சீட்டு நிறுவன திருத்தச் சட்ட மசோதா மாநிலங்களவையில் குரல் வாக்கு மூலம் நிறைவேற்றப்பட்டது. 
  • தனி நபராலும், 4 பேரை விட குறைவான பங்குதாரா்களாலும் நிர்வகிக்கப்படும் சீட்டு நிதி நிறுவனங்கள் வசூலிக்கும் தொகையை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயா்த்துவதற்கு மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 
  • இதேபோல், 4 பேருக்கும் அதிகமான பங்குதாரா்களைக் கொண்ட சீட்டு நிதி நிறுவனம் வசூலிக்கும் தொகை ரூ.6 லட்சத்தில் இருந்து 18 லட்சமாக உயா்த்துவதற்கு இந்த மசோதா பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடதக்கது.
நாடாளுமன்ற பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் இருந்து பிரக்யா சிங் தாக்கூர் நீக்கம்
  • 'நாதுராம் கோட்சே' ஒரு தேசபக்தர் என நேற்று நாடாளுமன்றத்தில் பிரக்யா சிங் தாக்கூர் கூறினார். இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு அவர் மீது நடவடிக்கையும் எடுத்துள்ளது.
  • அதன்படி பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இருந்து பிரக்யா சிங் தாக்கூர் நீக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்றார்
  • மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சராக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே பதவி ஏற்றுக் கொண்டார். அவருடன் அமைச்சர்கள் ஆறு பேரும் பதவி ஏற்றனர்.
  • மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிய அரசு பதவி ஏற்கும் விழா மும்பை சிவாஜி பார்க் மைதானத்தில் நடைபெற்றது. விழாவிற்காக பல்லாயிரம் பேர் அந்த மைதானத்தில் திரண்டு இருந்தனர்.
  • திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்யாதவ், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்பட தலைவர்களும், இந்தி நடிகர் அமிதாப் பச்சன்,சச்சின் டெண்டுல்கர், தொழிலதிபர் முகேஷ் அம்பானி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.



வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது கார்டோசாட் 3
  • பிஎஸ்எல்வி சி47 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட கார்டோசாட் 3 செயற்கைகோள் சுற்றுவட்டபாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
  • பூமியை கண்காணித்து துல்லியமான தகவல்களை அனுப்புவதற்காகவும், இந்திய எல்லைகளை கண்காணித்து தகவல் அனுப்பவும், இஸ்ரோ விஞ்ஞானிகள் கார்டோசெட்-3 என்ற செயற்கைகோளை தயாரித்துள்ளனர்.
  • இந்த செயற்கைகோள் இன்று பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. பின்பு பூமியின் சுற்றுவட்டபாதையை அடைந்ததும், கார்டோசெட்-3 செயற்கைகோள் தனியாக பிரிக்கப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. 
  • அதாவது பூமியில் இருந்து 509 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றுவட்டபாதையில் நிறுத்தப்பட்டுள்ளது. 
ஸ்பைக் எல்.ஆர்.,'ஏவுகணை சோதனை வெற்றி
  • இந்திய ராணுவம், நேற்று,'ஸ்பைக் எல்.ஆர்.,' பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் இரு வகை, ஸ்பைக் எல்.ஆர்., ஏவுகணைகள், அண்மையில், ராணுவத்தில் சேர்க்கப்பட்டன. 
  • இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம், மோவில் உள்ள ராணுவ மையத்தில், இந்திய ராணுவ தளபதி, பிபின் ராவத் தலைமையில், இந்த ஏவுகணைகளின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது. 
  • நான்காம் தலைமுறை தொழில்நுட்பத்தைச் சேர்ந்த, ஸ்பைக் எல்.ஆர்., ஏவுகணை, 4.கி.மீ., தொலைவில் உள்ள, ராணுவ வாகனங்கள், பீரங்கிகள் ஆகியவற்றை துல்லியமாக கண்டறிந்து தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை. ஏவுவோரின் கட்டளைக்கு ஏற்ப, நடுவழியில், இலக்கை மாற்றி அழிக்க கூடியவை. 
  • பகல், இரவு என, இரு காலங்களிலும், பயன்படுத்தக் கூடிய தொழில்நுட்ப வசதியும் உள்ளது. இந்த ஏவுகணைகள், ராணுவத்தில் சேர்க்கப்பட்ட பின், வீரர்களுக்கு அவற்றை பயன்படுத்துவதற்கான பயிற்சி வழங்கப்பட்டது. 
  • போர் ஆயுதங்கள் கொள்முதல்மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர், ராஜ்நாத் சிங் தலைமையிலான, பாதுகாப்பு கொள்முதல் குழு கூட்டம் டில்லியில் நடைபெற்றது. 
  • இதில், இந்திய ராணுவத்திற்கு தேவையான தளவாடங்களை கொள்முதல் செய்வது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. 
  • இதையடுத்து, இக்குழு, 22,800 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் மற்றும் போர் ஆயுதங்களை கொள்முதல் செய்ய, ஒப்புதல் வழங்கியது. அத்துடன், நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு போர் விமானம் வாங்கவும் அனுமதி அளித்துள்ளது.
ரூ.5 லட்சம் கோடி சொத்து மதிப்பை எட்டிய முதல் இந்தியர் சாதனை
  • ஐந்து லட்சம் கோடி ரூபாய் (70 பில்லியன் டாலர்) சொத்து மதிப்பை எட்டிய முதல் இந்தியர் என்ற பெருமையை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானி பெற்றுள்ளார். 
  • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ரூ.10 லட்சம் கோடியை எட்டியுள்ளது.முகேஷ் அம்பானி
  • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில், முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்குச் சொந்தமான பங்கு விகிதத்தை, கடந்த 15 வாரங்களில் 45 சதவிகிதமாக உயர்த்தியிருந்தனர். 
  • இந்நிலையில் தற்போது பங்கு மதிப்பை மேலும் உயர்த்தி 50.05 சதவிகிதத்தை எட்டியுள்ளனர். இதையடுத்து, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.5 லட்சம் கோடியை எட்டியுள்ளது. 
  • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு, கடந்த 5 ஆண்டுகளில் 217 சதவிகிதம் உயர்ந்து, ஒரு பங்கின் விலை ரூ.1,576 என உள்ளது.
  • உலக அளவில், அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெசோஸ் 112 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்திலும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பில் கேட்ஸ் 111 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அடுத்த இடத்திலும் உள்ளனர். 
  • ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.9.98 லட்சம் கோடியை எட்டியுள்ளது. அதையடுத்து, டி.சி.எஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 7.7 லட்சம் கோடியாக உள்ளது. இரண்டு நிறுவனங்களுக்கும் இடைப்பட்ட வித்தியாசம் 2.28 லட்சம் கோடியாக உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel