Type Here to Get Search Results !

26th NOVEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

34வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி துவக்கம்
  • விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரித்து, கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக வைத்து புதிய மாவட்டம் ஏற்படுத்தப்படும்' என, முதல்வர், இ.பி.எஸ்., ஜன., 8ல் சட்ட சபையில் அறிவித்தார்.
  • மாவட்ட எல்லைகளை வரையறை செய்து, நவ., 13ல் அரசாணை வெளியிடப்பட்டது. மாவட்ட துவக்க விழா, கள்ளக்குறிச்சியில் நடந்தது.
  • முதல்வர், இ.பி.எஸ்., புதிய மாவட்டத்தை துவக்கி வைத்து, 24.77 கோடி ரூபாயில், 52 பணிகளை துவக்கி வைத்து, 194.81கோடி ரூபாயில், 466 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 5
  • ,873 பயனாளிகளுக்கு, 23.58 கோடி ரூபாய் மதிப்புள்ள நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
  • கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார் வருவாய் கோட்டங்களும், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை, சங்கராபுரம், சின்ன சேலம், கல்வராயன்மலை ஆகிய ஆறு தாலுகாக்களும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைகின்றன. 
  • கலெக்டராக கிரண்குராலா, எஸ்.பி.,யாக ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக என். பஞ்சநாதம் நியமனம்
  • தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக என். பஞ்சநாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
  • தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பஞ்சநாதம் 3 ஆண்டுகள் பதவி வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா ஆலையில் ரூ.2,000 கோடி முதலீடு செய்யும் சால்காம்ப் நிறுவனம்
  • ஸ்ரீ பெரும்புதூரில் மூடப்பட்ட நோக்கியா ஆலையை, போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் 'சால்காம்ப்' என்ற நிறுவனம் தொடர்ந்து நடத்த உள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
  • மொபைல்போன் சந்தையில் பெரும்பங்கு வகித்த நோக்கியா நிறுவனம், கடந்த 2006-ஆம் ஆண்டு சென்னை அருகே ஸ்ரீ பெரும்புதூரில் தொழிற்சாலையை துவங்கியது. இது 2008-2009-ல் மிகப்பெரிய மொபைல் உற்பத்தி ஆலையாக உருவெடுத்தது. அதன்பிறகு, தமிழக அரசுடன் ஏற்பட்ட வரி சிக்கல் காரணமாக மூட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.
  • பின்னர், ஒப்பந்த அடிப்படையில் இந்த நிறுவனத்தை மைக்ரோசாப்ஃட் நிறுவனம் ஏற்று நடத்தியது. ஆனால் மைக்ரோசாப்ஃட் நிறுவனமும் கைவிட்டதால், 2014 நவம்பர் 1-ம் தேதி ஆலை மூடப்பட்டது.



அரசியலமைப்பு தினம்
  • 1949-ஆம் ஆண்டில் அரசியலமைப்புச் சட்டமன்றத்தால் அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு, 70-ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அரசாங்கம் இன்று பாராளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் 'அரசியலமைப்பு தினம்' கொண்டாடுகிறது.
  • இந்நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் M வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் உரையாற்றவுள்ளனர். மேலும் வீடியோ கான்பரன்சிங் மூலம் டிஜிட்டல் கண்காட்சியை குடியரசுத் தலைவர் திறந்து வைக்கவுள்ளார்.
  • 1951-ஆம் ஆண்டில் தற்காலிக நாடாளுமன்றத்தால் செய்யப்பட்ட முதல் அரசியலமைப்பு திருத்தம் முதல் இதுவரை 103 முறை திருத்தப்பட்டுள்ளது.
  • 1951-ஆம் ஆண்டில் அரசியலமைப்பின் முதல் திருத்தம் அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதன் மூலம் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வர்க்கங்கள் அல்லது பட்டியல் சமூகத்தினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரின் வகைகளின் முன்னேற்றத்திற்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள 'மாநிலத்திற்கு' அதிகாரம் அளித்தல் ஆகும். 
  • சமீபத்திய 103-வது திருத்தம் ஆனது 2019-ல் கல்வி நிறுவனங்களிலும், நியமனங்களிலும் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது ஆகும்.
  • இதுவரை செய்யப்பட்ட அரசியலமைப்பின் மொத்த 103 திருத்தங்களில் 32 மறுசீரமைப்பு, பிரதேசங்களை மாற்றுவது, மாநில அல்லது யூனியன் பிரதேசத்தின் நிலையை வழங்குதல், தொகுதிகளை வரையறுத்தல், சில மாநிலங்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்தல், சேர்த்தல் உள்ளிட்ட மாநிலங்களின் விஷயங்கள் தொடர்பானது ஆகும்.
  • 1952-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்ததிலிருந்து, மாநிலங்களவை 107 அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது, அவற்றில் ஒன்று மக்களவை எதிர்மறையாக இருந்தது, அதே நேரத்தில் நான்கு மக்களவை கலைக்கப்பட்டதில் தோல்வியுற்றது, என சமீபத்தில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வெயிட்டிருந்த அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தார்.
திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு குறித்த மசோதா நிறைவேற்றம்
  • சமூக, பொருளாதார, வேலைவாய்ப்பில் திருநங்கைகள் அதிகாரம் பெறும் வகையில் உருவாக்கப்பட்ட அந்த மசோதா, மக்களவையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்டது.
  • திருநங்கைகளுக்கு எதிராக பாலியல் வன்முறையில் ஈடுபடும் நபர்களுக்கு 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சட்டசபைகளில் சிறப்பு கூட்டம்
  • அரசியல் சாசன தினத்தை முன்னிட்டு பல்வேறு மாநில சட்டசபைகளில் சிறப்பு கூட்டம் நேற்று(நவ.,26) நடந்தது.நாட்டின் அரசியல் சாசனம் கடந்த 1949ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன் 70 ஆண்டு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. 
  • இதையொட்டி பார்லிமென்ட்டின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடந்தது. அதேபோல் உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநில சட்டசபைகளில் சிறப்பு கூட்டம் நடந்தது. 
  • இந்த கூட்டங்களில் அந்தத்த மாநில கவர்னர்கள் சிறப்புரையாற்றினார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி மஹாராஷ்டிரா விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாட்டை விமர்சித்து பேசினார்.



மராட்டிய சட்டசபையின் இடைக்கால சபாநாயகர் 
  • 6 பேர் அடங்கிய பட்டியலை மராட்டிய ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரிடம் அளித்தார் அம்மாநில சட்டசபை செயலாளர். எனவே, இதனடிப்படையில் பாரதீய ஜனதாவின் காளிதாஸை நியமித்து உத்தரவிட்டுள்ளார் ஆளுநர். 
  • இவர் கூடவுள்ள சட்டசபையில் புதிய உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா முதல்வர் பதவிக்கு உத்தவ் தாக்கரே ஒருமனதாக தேர்வு
  • 3 கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் பதவிக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
  • மகாராஷ்டிரா முதல்வர் பதவிக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை என்சிபி- காங்கிரஸ்- சிவசேனா ஆகிய 3 கட்சிகளை கொன்ட மகா ஆகாஸ் விகாதி ஒருமனதாக தேர்வு செய்துள்ளது. மகாராஷ்டிரா முதல்வராக டிசம்பர் 1-ல் உத்தவ் தாக்கரே பதவியேற்கிறார்.
இந்திய அரசியல் வரலாற்றில் குறைந்த நாட்கள் முதல்வர்கள் பட்டியலில் இடம்பிடித்த தேவேந்திர பட்னாவிஸ்
  • மகாராஷ்டிராவில் சனிக்கிழமையன்று பதவியேற்ற பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க இயலாது என்பதால் இன்றே முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் பட்னாவிஸ்.
  • இந்திய அரசியல் வரலாற்றில் இதேபோல் குறைந்த நாட்கள் முதல்வர் பதவி வகித்தவர்கள் உண்டு. இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் தேவேந்திர பட்னாவிஸ்.
  • உத்தரப்பிரதேசத்தின் ஜெகதாம்பிகா பால் (1998) 3 நாட்கள் முதல்வராக இருந்தார். எடியூரப்பா கடந்த ஆண்டு கர்நாடகா முதல்வராக இருந்த போது 3 நாட்கள் மட்டுமே முதல்வராக பதவி வகித்தார்.
  • 1990-ல் ஹரியானாவில் சவுதாலா 6 நாட்கள், 2000-ம் ஆண்டில் பீகாரில் நிதிஷ்குமார் 8 நாட்கள்; 2007-ல் எடியூரப்பா 8 நாட்கள் மட்டுமே முதல்வர் பதவி வகித்தனர்.
  • தற்போது மகாராஷ்டிரா மாநில முதல்வராக 4 நாட்கள் மட்டுமே பட்னாவிஸ் பதவி வகித்த நிலையில் ராஜினாமா செய்து இப்பட்டியலில் இணைந்துள்ளார்.



டிசம்பர் 1 முதல் சுங்கச் சாவடிகளில் கட்டாயமாகிறது 'ஃபாஸ்டேக்' முறை
  • இந்தியாவில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதற்காக FASTag டிஜிட்டல் முறை வரும் ஒன்றாம் தேதி முதல் கட்டாயமாகிறது. 
  • சுங்கச்சாவடிகளை கடக்கும்போது வாகனஓட்டிகள் செலுத்த வேண்டிய கட்டணத்தை இணையவழியில் மாற்றுவதே FASTag முறையாகும். டிசம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து இம்முறை கட்டாயப்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சுங்கச்சாவடிகள், சில வங்கிக் கிளைகளில் விண்ணப்பித்து FASTagஐ பெறலாம்.
  • அனைத்து நடைமுறைகளும் முடிந்த பிறகு, வாகனத்தில் ஒட்டப்படும் FASTag ஸ்டிக்கர் சுங்கச்சாவடிகளில் ஸ்கேன் செய்யப்பட்டு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். ஒவ்வொரு சுங்கச்சாவடியை கடக்கும்போதும் FASTag walletலிருந்து தாமாக கட்டணம் எடுத்துக் கொள்ளப்படும். 
  • FASTag கணக்கு இல்லாதவர்கள் இரு மடங்கு கட்டணம் செலுத்திய பிறகே சுங்கச்சாவடிகளில் அனுமதிக்கப்படுவார்கள். சுங்கச்சாவடிகளில் இருந்து 10 கி.மீ-க்குள் வசிப்பவர்களுக்கு கட்டணம் குறைத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எகிப்து நாட்டிலிருந்து ஆறாயிரம் டன் வெங்காயம் இறக்குமதி: மத்திய அரசு முடிவு
  • கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தமிழகத்தில் வெங்காயத்தின் விலை ஏற்றமும், இறக்கமுமாகவே இருந்து வருகிறது. தேசிய அளவில் வெங்காய உற்பத்தியில் முன்னணி வகிக்கும் மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில், கடும் மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. 
  • தமிழகத்தை போல பிற மாநிலங்களிலும் வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருப்பதால், அதை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 
  • 1.20 லட்சம் டன் வெங்காயத்தை இதற்காக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டு, அது தொடர்பான அமைச்சரவை ஒப்புதலும் கடந்த வாரம் வழங்கப்பட்டது. 
  • அதன்படி, 6,090 டன் வெங்காயத்தை எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்து, உள்ளூர் சந்தையில் ரூ. 60க்குள் விற்பனை செய்ய பொதுத்துறை வர்த்தக நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
  • டிசம்பர் முதல் வாரம் முதல் இறக்குமதியாகும் இந்த வெங்காயம் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர் ஏர்லைன்சை பின்னுக்கு தள்ளி சிறந்த விமான நிறுவனமாக ஏர் நியூசிலாந்து தேர்வு
  • பாதுகாப்பு மற்றும் விமானங்களைக் கையாளுதலில் திறம்பட செயல்படும் விமான நிறுவனங்களை ஏர்லைன்ரேட்டிங்ஸ் டாட் காம் என்ற அமைப்பு வரிசைப்படுத்தி வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக சிறந்த விமான நிறுவனங்கள் குறித்த தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
  • அதில் 2020ம் ஆண்டின் உலகின் மிகச்சிறந்த விமானநிறுவனமாக ஏர் நியூஸிலாந்து தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸை வீழ்த்தி நியூஸிலாந்து முன்னுக்கு வந்துள்ளது.
  • இதேபோல் நீண்ட தூரம் பறக்கும் விமானங்களில் அமெரிக்காவின் டெல்டா ஏர்லைன்ஸ் முதலிடத்தையும், குறைந்ததூரம் பறப்பதில் சிறந்த விமானமாக ஜெட் புளுவும், சிறந்த முதல் வகுப்பு கொண்ட விமானமாக சிங்கப்பூர் ஏர்லைன்சும் அறிவிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel