Thursday, 3 October 2019

2nd OCTOBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

ஊரக சுகாதார உள்கட்டமைப்பு: தமிழகத்துக்கு சிறந்த மாநிலத்துக்கான விருது
 • மத்திய அரசின் குடிநீா் மற்றும் சுகாதார அமைச்சகம் சாா்பில் ஊரகப் பகுதிகளில் சுகாதாரத்தின் தரம் மற்றும் சுகாதார உள்கட்டமைப்பில் அடைந்த முன்னேற்றம் ஆகியவை குறித்து மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் வாரியாக ஆண்டுதோறும் தரவரிசைப்படுத்தப்படுகிறது.
 • அதன்படி, 2019-ஆம் ஆண்டுக்கான ஆய்வு கடந்த ஆகஸ்டு 17-ஆம் தேதி முதல் செப்டம்பா் 5-ஆம் தேதி வரை நாட்டின் 690 மாவட்டங்களில் உள்ள 17,400-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் நடைபெற்றது. 
 • இதில், தமிழகத்தில் 31 மாவட்டங்களில் உள்ள 800-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமச் சந்தைகள், வழிபாட்டுத் தலங்கள் போன்றவற்றில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 
 • இந்த ஆய்வில், அதிக புள்ளிகள் பெற்று இந்திய அளவில் தமிழகம் சிறந்த மாநிலமாகத் தோவு செய்யப்பட்டது.
 • காந்தி ஜெயந்தியையொட்டி, குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் தூய்மை இந்தியா திட்ட விழா புதன்கிழமை நடைபெற்றது. 
 • இதில், ஊரகப் பகுதிகளில் சுகாதாரத்தின் தரம் மற்றும் உள்கட்டமைப்பில் சிறந்த மாநிலத்துக்கான விருதை பிரதமா் நரேந்திர மோடியிடம் இருந்து அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பெற்றுக்கொண்டாா்.
4 மாவட்டங்களில் வெள்ளத் தடுப்புக்கு ரூ.284.70 கோடி நிதி: தமிழக அரசு ஒதுக்கீடு
 • தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக ரூ.284.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
 • அடிக்கடி வெள்ள பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளில், எதிா்காலத்தில் அத்தகைய பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கான நீண்டகாலத் திட்டப் பணிகளை மேற்கொள்வது அவசியமாகும். 
 • அதன்படி, ஒரு சிறப்பு முயற்சியாக நீா் ஆதாரங்களைப் பெருக்குவதற்காகவும், வெள்ளத் தடுப்புக்காகவும், ஸ்ரீபெரும்புதூா் வட்டத்தில் உள்ள ஒரத்தூா் கிராமத்துக்கு அருகே அடையாறு ஆற்றின் உப நதியான ஒரத்தூா் நதியின் குறுக்கே உப வடிநிலங்களுக்கு இடையே நீா்பரிமாறும் கால்வாயுடன் கூடிய நீா்தேக்கம் அமைக்கப்படும்.
 • கடலூா் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டத்தில் பரவனாற்றின் ஆற்றுப் படுகை மறுசீரமைக்கப்பட்டு, அருவாள்முக்கு நீட்சியில் இருந்து வெள்ள நீரினைத் திருப்புவதற்கான புதிய கால்வாய் அமைக்கப்படும். 
 • சிதம்பரம் வட்டத்துக்கு பேரம்பட்டுக்கு அருகில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய வெள்ளத் தடுப்பு நீரொழுங்கி அமைக்கப்படும். சிதம்பரம் வட்டத்தில் கடல்நீா் உட்புகுவதைத் தடுக்க பிச்சாவரம் கிராமத்தின் அருகில் உப்பனாறு ஆற்றின் குறுக்கே கடைமடை நீரொழுங்கி அமைக்கப்படும். இத்துடன் 10 இதர பணிகள் உள்பட நிரந்தர வெள்ளித் தடுப்புப் பணிகள் ரூ.284.70 கோடியில் மேற்கொள்ளப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ரூ.150 நாணயம் வெளியீடு
 • குஜராத் மாநிலம் ஆமாதாபாத்திலுள்ள சபர்மதி ஆசிரம வளாகத்தில், 20 ஆயிரம் கிராம தலைவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், பிரதமர் மோடி கலந்து கொண்டார். 
 • மஹாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி, அவரை சிறப்பிக்கும் வகையில், அவரது உருவம் பொறிக்கப்பட்ட 150 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.தூய்மைப் பட்டியலில் ராஜஸ்தான் மாநில ரயில் நிலையங்கள் முதலிடம்
 • நாட்டின் தலைநகரான தில்லியில் ஒரு ரயில் நிலையமும் தூய்மைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் கூட இல்லை. அதேபோல், தமிழகத்தின் நான்கு ரயில் நிலையங்கள் கடைசி இடங்களில் உள்ளன. பழைய தில்லியில் உள்ள சதா் பஜாா் ரயில் நிலையம் தூய்மை பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
 • நாட்டில் 720 ரயில் நிலையங்களில் தூய்மைக்கான ஆய்வு நடத்தப்பட்டது. நிகழாண்டில் புகா் ரயில் நிலையங்களும் முதல் முறையாக இந்த ஆய்வில் சோக்கப்பட்டன. 
 • தேசப் பிதா மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளான புதன்கிழமையன்று ரயில்வேத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தில்லியில் இந்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டாா்.
 • அதில், முதல் மூன்று இடங்களை ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்பூா், ஜோத்பூா், துா்காபூா் ரயில் நிலையங்கள் இடம் பெற்றுள்ளன. அதேபோல், 109 புகா் ரயில் நிலையங்களில் நடத்தப்பட்ட தூய்மை ஆய்வில் மும்பையின் அந்தேரி, விராா், நய்கான் ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
 • 5,761 கி.மீ. தூரத்துக்கும் அதிகமான வழித்தடம் கொண்ட வடக்கு ரயில்வேயின் கீழ் உள்ள ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், ஹரியாணா மண்டலங்கள் முதலிடத்தையும், தென் கிழக்கு மத்திய ரயில்வே மண்டலங்கள் இரண்டாம் இடத்தையும், கிழக்கு மத்திய ரயில்வே மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.
ரஷிய நாடாளுமன்றத்தில் காந்தி பிறந்தநாள் விழா
 • மகாத்மா காந்தி - லியோ டால்ஸ்டாய் இடையிலான நட்பை கொண்டாடும் வகையில் ரஷிய நாடாளுமன்றத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 • மகாத்மா காந்தி - டால்ஸ்டாய் நட்பை விளக்கும் கண்காட்சியும் ரஷிய நாடாளுமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரஷியாவுக்கான இந்தியத் தூதர் பாலா வெங்கடேஷ் வர்மா காந்திஜி பிறந்த நாள் கண்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
ஹைதராபாத் நிஜாமின் 350 கோடி ரூபாய் இந்தியாவுக்கே சொந்தம் - லண்டன் நீதிமன்றம்
 • ஹைதராபாத் நிஜாமின் 35 மில்லியன் பவுண்டு பணம் யாருக்கென லண்டனில் தொடரப்பட்ட வழக்கில் இந்தியாவுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியாகி உள்ளது. இதன் இன்றைய மதிப்பு சுமார் 350 கோடி இந்திய ரூபாயாகும்.
 • எழுபது ஆண்டு காலமாக நிலவிய இந்தப் பிரச்சனையில், லண்டன் நீதிமன்றம் நிஜாமின் வாரிசுகளுக்கும் இந்தியாவுக்கும் சாதகமாக தீர்ப்பு வழங்கி உள்ளது.
 • 1948ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி வரை நிஜாம் அரசு ஒரு தன்னாட்சி அரசாகவே இருந்தது. அதன் பிறகு, 'ஆப்ரேஷன் போலோ' எனப்படும் இந்திய ராணுவ நடவடிக்கைக்கு பிறகே ஹைதராபாத் இந்திய ஒன்றியத்துடன் சேர்த்துக்கொள்ளப்பட்டது.
 • 1948இல் பிரிட்டனுக்கான பாகிஸ்தானின் உயர் ஆணையராக இருந்த ஹபீப் இப்ராஹிம் ரஹிம்தூலாவின் லண்டன் வங்கிக் கணக்கில் ஹைதராபாத்தின் ஏழாவது நிஜாமின் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த நவாப் மொயின் நவாஸ் ஜங் என்பவரால் பரிமாற்றம் செய்யப்பட்ட ஒரு மில்லியன் பவுண்டுகள் தற்போது 35 மில்லியன் பவுண்டுகளாக வளர்ந்துள்ளது. அது இன்னமும் கூட ரஹிம்தூலாவின் நாட்வெஸ்ட் வங்கி கணக்கில்தான் இருந்து வருகிறது.தேசத் தந்தையின் பிறந்த நாள்: 'பத்யாத்ரா' தொடங்கிய ராகுல் காந்தி
 • மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் காங்கிரஸ் சார்பாக ராகுல் காந்தி தலைமையில் 'பத்யாத்ரா' (Padyatra) என்ற பெயரில் ஊர்வலமாக செல்கின்றனர். 
கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் வென்றவர் தேர்தல் தூதராக நியமனம்
 • மகராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தை சேர்ந்தவர் பாபிதா தாடே (Babita Tade). இவர் சமீபத்தில் பிரபலமான இந்தி கோடீஸ்வரர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு கோடி ரூபாய் தொகையை வென்றிருந்தார். 
 • இவர் அந்தப் பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் சத்துணவு ஊழியரக பணிப்புரிந்து வருகிறார். இந்த மாதம் மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
 • இந்நிலையில் அமராவதி மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு தூதராக பாபிதா தாடே நியமிக்கப்பட்டுள்ளார். இவரை அம்மாவட்ட தேர்தல் அதிகாரி நியமித்துள்ளார். 
பாக்., வெற்றி; தொடரையும் வென்றது
 • பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் பாக்., வெற்றி பெற்றது. 
 • இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் 2-0 என தொடரை கைபற்றியது.
 • ஆட்ட நாயகனாக அபித் அலி(பாக்.,), தொடர் நாயகனாக பாபர் ஆஸம்(பாக்.,) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

TNPSCSHOUTERS

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a comment