Type Here to Get Search Results !

8th SEPTEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

நிலவில், 'லேண்டர்' சாதனம் கண்டுபிடிப்பு
  • நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்யும் வகையில், 'சந்திரயான் - 2' விண்கலத்தை, இஸ்ரோ செலுத்தியது. இதனுடன் அனுப்பப்பட்ட லேண்டர் சாதனத்தை, நிலவின் மேற்பரப்பில் மெதுவாக தரையிறக்க திட்டமிடப்பட்டது. 
  • லேண்டர் சாதனத்தை தரையிறக்கும் முயற்சி நடந்தது. அப்போது, நிலவின் மேற்பரப்பில் இருந்து, 2.1 கி.மீ., தொலைவில் இருந்தபோது, லேண்டர் சாதனத்துடனான, இஸ்ரோ கட்டுப்பாடு மையத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. 
  • கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்த, விக்ரம் என பெயரிடப்பட்டுள்ள, 'லேண்டர்' எனப்படும், நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் சாதனம், நிலவின் மேற்பரப்பில் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. '
நொய்டாவில் சுற்றுச்சூழல் மாநாடு: பிரதமர் பங்கேற்பு
  • டில்லி அருகே நடைபெற உள்ள சுற்றுச்சூழல் கருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். பாலைவனமாக்கலை எதிர்த்து ஐ.நா.சபையின் 14 -வது காலநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு மாநாடு மற்றும் உயரியல் பன்முகத்தன்மை தொடர்பான மாநாடு உ.பி., மாநிலம் நொய்டாவில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
  • மேற்கண்ட காலநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு குறித்து கடந்த 1996-ல் ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்தியா உட்பட 196 நாடுகள் கையெழுத்திட்டன. 
  • இந்த அமைப்பின் நாடுகளின் தலைமைப் பொறுப்பை தற்போது இந்தியா வகித்து வரும் நிலையில் இது குறித்த மாநாடு இந்தியாவில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கானா மாநிலத்தின் முதல் பெண் கவர்னரானார் தமிழிசை
  • ஐதராபாத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழிசை கவர்னராக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, ராகவேந்திரா எஸ்.சவுகான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
  • இந்த நிகழ்ச்சியில் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்த விழாவில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • தெலுங்கானாவில் முதல் பெண் கவர்னராக பதவியேற்றுள்ள தமிழிசை சவுந்தரராஜனுக்கு, பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



கிழக்கு மத்திய ரயில்வே வருவாயில் புது சாதனை
  • இந்திய ரயில்வேயில், கிழக்கு மத்திய மண்டலம், ஆகஸ்ட் மாதத்தில் 1,588 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி முதலிடம் பிடித்துள்ளது.பீஹார் மாநிலம், ஹாஜிபூரை தலைமையிடமாக வைத்து, கிழக்கு மத்திய ரயில்வே மண்டலம் செயல்பட்டு வருகிறது. 
  • இதில், 1,331 கோடி ரூபாய், சரக்கு போக்குவரத்து மூலமாகவும், 237 கோடி ரூபாய், பயணியர் போக்குவரத்து மூலமாகவும் ஈட்டப்பட்டுள்ளது.
  • கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தை தொடர்ந்து, தென்கிழக்கு மத்திய ரயில்வே மண்டலம், 1,522 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி, இரண்டாமிடத்தையும், கிழக்கு கடற்கரை ரயில்வே மண்டலம், 1,517 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி, மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளன.
ரஃபேல் நடால்: 5 மணி நேரம் போராடி 19வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார்
  • யுஎஸ் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் டனில் மெட்விடேவை வீழ்த்தி 19வது முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெற்றார் ஸ்பெயினின் ரஃபேல் நடால்.
  • 33 வயதாகும் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த நடால், 7-5, 6-3, 5-7, 4-6 மற்றும் 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
  • இந்த வெற்றியின் மூலம் ஸ்விஸ் நாட்டை சேர்ந்த தனது சக போட்டியாளரும், மற்றொரு ஜாம்பவான் வீரருமான ரோஜர் பெடரரின் அதிக கிராண்ட்ஸ்லாம் (20 கிராண்ட்ஸ்லாம்) என்ற சாதனையை சமன் செய்யும் தூரத்துக்கு நடால் வந்துள்ளார்.
எம்சிசி-முருகப்பா ஹாக்கி: தங்க கோப்பையை தக்கவைத்தது ஐஓசி
  • எம்சிசி - முருகப்பா தங்க கோப்பை ஹாக்கித் தொடரின் பைனலில் நடப்பு சாம்பியன் இந்தியன் ஆயில் கார்பரேஷன் (ஐஓசி) அணி, பஞ்சாப் நேஷனல் வங்கி அணியை வீழ்த்தி கோப்பையை தக்கவைத்துக் கொண்டது. 
  • எழும்பூர், ராதாகிருஷ்ணன் அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியில், அபாரமாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய ஐஓசி அணி 3-1 என்ற கோல் கணக்கில்வெற்றியை வசப்படுத்தியது. 
  • அந்த அணியின் குர்ஜிந்தர் சிங் 2 கோல் (23வது, 28வது நிமிடத்தில் பெனால்டி கார்னர்), தீபக் தாகூர் 1 கோல் (59வது நிமிடம், பீல்டு கோல்) அடித்தனர். பஞ்சாப் வங்கி சார்பில் விஷால் (12வது நிமிடம், பி.சி.) ஆறுதல் கோல் போட்டார். 
  • பட்டம் வென்ற ஐஓசி அணியினர் முருகப்பா கோப்பையுடன் உற்சாகமாக போஸ் கொடுக்கின்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel