Type Here to Get Search Results !

5th SEPTEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உள்பட 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது
  • தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள், புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் உள்பட 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை வழங்கி கௌரவித்தார்.
  • தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 46 பேரில் தமிழகத்தின் கரூர் மாவட்டம், பரமத்தி ஊராட்சி ஒன்றியப் பள்ளித் தலைமையாசிரியர் ஆர்.செல்வக்கண்ணன், கோபிச்செட்டிப்பாளையம் வைரவிழா மேல்நிலைப் பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியர் எம்.மன்சூர் அலி, புதுச்சேரி கூனிச்சம்பட்டு பாவேந்தர் பாரதிதாசன் அரசுத் தொடக்கப் பள்ளியின் பொறுப்புத் தலைமையாசிரியர் எஸ். சசிக்குமார் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
கொல்லிமலையில் 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு
  • செம்மேடு கிராமத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள கரையான் காட்டுப்பட்டியில் சாலையோரம், மண்ணில் புதையுண்ட நிலையில் எழுத்துப் பொறிப்புடன் உள்ள நடுகல்லைக் கண்டனர்.
  • இந்தக் கல்வெட்டானது பொதுக்காலம் 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்தமைதியில் நான்கு வரிகளில் அமைந்துள்ள தமிழ்க் கல்வெட்டு என்பதை உறுதி செய்தனர்.
  • 'கரைஞ்காட்டூர் மக்களுடன் நேர்ந்த பகைக்கு தள்ளம்பி என்பவரும்,மற்றொரு இளைஞரும் தன்னுயிரை இழந்ததாக' குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் முதல் வரி சிதைந்துள்ளதால், மற்றொரு இளைஞரின் பெயரை அறிய முடியவில்லை.
  • இந்தக் கல்வெட்டானது புதைந்த நிலையிலிருந்து 64 செ.மீ. உயரமும், 35 செ.மீ. அகலமும் உள்ளது.கருங்கல் பலகையின் மேற்பகுதியில் ஏறத்தாழ 20 செ.மீ. அளவுக்கு கல்லைச் சமன்படுத்தி இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. 
  • கல்வெட்டை அடுத்துள்ள கீழ்ப் பகுதியில் 8 செ.மீ. ஆழத்தில் இளைஞர் ஒருவரின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.ஓங்கிய குத்துவாளுடன் வலக்கையை உயர்த்தியுள்ள அவரது இடக்கை முஷ்டி முத்திரையில் உள்ளது.
சென்னை ஐ.ஐ.டி.க்கு தலைசிறந்த நிறுவனம் என்ற அங்கீகாரம்: மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவிப்பு
  • சென்னை ஐ.ஐ.டி.க்கு தலைசிறந்த நிறுவனம் என்ற அங்கீகாரம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அளித்துள்ளது. 
  • பனாரஸ் பல்கலையில் காரக்பூர் ஐ.ஐ.டி., டெல்லி பல்கலை, ஐதராபாத் பல்கலைக்கும் சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது



"நீரும் ஊரும்' திட்டம்: புதுச்சேரி முதல்வர் தொடக்கி வைத்தார்
  • புதுவை அரசு நிலத்தடி நீர் வளத்தைப் பாதுகாக்கும் விதமாக "நீரும் ஊரும்' என்ற புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழா சட்டப்பேரவை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
  • புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் குடிநீர், வீட்டு உபயோகம், விவசாயம், தொழில்சாலைகள் போன்றவற்றுக்காக நிலத்தடி நீர் அளவுக்கு மீறி உறிஞ்சப்படுகிறது. இதனால் வருங்காலத்தில் மாநிலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படலாம்.
  • புதுவை மாநிலத்தில் உள்ள 84 ஏரிகள், 609 குளங்களைத் தூர்வாரி, மழை காலங்களில் நீரைச் சேகரித்து வைத்தால், நம்முடைய மாநிலத்தின் நீர்த் தேவையை நிறைவு செய்ய முடியும்.
புதுச்சேரி சட்டசபை துணை சபாநாயகரானார் பாலன்
  • புதுச்சேரி மாநிலத்தில் துணை சபாநாயகராக ஆளும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பாலன் பதவியேற்றுக்கொண்டார்.
  • அவரை முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், சபாநாயகர் சிவக்கொழுந்து ஆகியோர் துணை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.
போக்குவரத்து விதிமீறல்: இனி சிறப்பு எஸ்.ஐ.க்களும் அபராதம் விதிப்பார்கள்: தமிழக அரசு அரசாணை
  • நாட்டிலேயே அதிகம் சாலை விபத்துக்கள் நடைபெறுவதில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட 63,920 சாலை விபத்துக்களில் 12,216 பேர் இறந்துள்ளனர், 74,537 பேர் காயமடைந்துள்ளனர். சாலை விபத்துக்களினால் ஒருநாளைக்கு சராசரியாக 33 பேர் இறந்துள்ளனர், 204 பேர் காயமடைந்துள்ளனர்.
  • இதைக் கருத்தில் கொண்டு, போக்குவரத்து விதியை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் சாலை விபத்து தொடர்பான ஒரு வழக்கு விசாரணையில், காவல்துறையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்களுக்கும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது வழக்குப் பதிவதற்குரிய அதிகாரம் வழங்க நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
  • இந்த அரசாணையின்படி இனி தமிழக காவல்துறையில் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையங்களிலும், போக்குவரத்துப் பிரிவிலும் பணியாற்றும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்களாக பணிபுரிபவர்கள் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுவோர் மீது வழக்குப் பதிவு செய்து, அபராதம் விதிக்கலாம்.
  • தீவிரமாக அமல்படுத்தப்படும்: இந்த உத்தரவின் விளைவாக, காவல்துறை அதிகாரிகளின் பணிச்சுமை குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளையில் மோட்டார் வாகனச் சட்டம் இன்னும் தீவிரமாக அமல்படுத்துவதற்குரிய வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
  • ஏனெனில் இதற்கு முன்பு வரை காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் மட்டுமே போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பான வழக்குகளை பதிவதற்கு அதிகாரம் இருந்தது குறிப்பிடதக்கது.
பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மத்திய உணவு அமைச்சகம் தடை
  • ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாட்டில்களை உணவுஅமைச்சகங்களில் பயன்படுத்த வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிமுதல் தடைவிதிப்பதாக மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரூ.5 ஆயிரம் கோடியில் ஆகாஷ் ஏவுகணை
  • இந்திய விமானப்படைக்கு, ரூ.5 ஆயிரம் கோடியில், ஆகாஷ் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 
  • தரையிலிருந்து பாயும் ஆகாஷ் ஏவுகணை, வானில் 30 கி.மீ., தொலைவிலுள்ள இலக்குகளையும் துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.
பிரேசில் உதவியுடன் இனவிருத்தி செய்யப்படும் இந்திய பசு வகை
  • கிர் வகை காளைகளின் 1 லட்சம் டோஸ் அளவுள்ள விந்தைப் பெறுவதற்கு, பிரேசில் நாட்டுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது இந்திய அரசு.
  • தற்போது நாடெங்கிலும் பிரபலமாக உள்ள ஜெர்ஸி வகை பசுக்களுக்கு மாற்றாக, இந்திய பசு வகையை இனப்பெருக்கம் செய்விக்க வேண்டும் என்று மத்திய அரசின் சார்பில் கடந்த காலங்களில் ஆர்வம் காட்டப்பட்டது. அதன் விளைவாகத்தான் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக கூறப்படுகிறது.
  • தற்போது பிரேசில் நாட்டிலிருந்து வரவழைக்கப்படும் பதனம் செய்யப்பட்ட விந்தின் மூலம் செயற்கை கருவூட்டல் மேற்கொள்ளப்படும்.
  • அடுத்த 1.5 மாதத்திற்குள், நமது பாரம்பரிய கிர் காளைகளின் பதனம் செய்யப்பட்ட விந்து டோஸ்கள் உள்நாட்டிலேயே கிடைக்கும்.
  • இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட கிர் இனவகை மாடுகள், கடந்த 18ம் நூற்றாண்டில், பாவ்நகர் அரசரால் பிரேசில் நாட்டிற்கு காணிக்கையாக அளிக்கப்பட்டதாம்.



கார் ஏற்றுமதியை அதிகரிக்க கியா மோட்டார்ஸ் உடன் ஒப்பந்தம்
  • சென்னைத் துறைமுகம் வழியாக, கியா மோட்டார்ஸ் நிறுவனத்தால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கார்களை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் சென்னைத் துறைமுக பொறுப்புக் கழகம் மற்றும் கியா மோட்டார்ஸ் நிறுவனம் இடையே கையெழுத்தானது.
  • ஆந்திராவில் உள்ள ஆனந்தபூரில் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இந்த தொழிற்சாலையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் கார்கள் இனிமேல் சென்னை துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்படும். இந்த ஒப்பந்தம் ஆனது 2029-ம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என தெரிகிறது.
ஓபிசி, யுனைடெட் வங்கி இணைப்பு: பிஎன்பி இயக்குநர் குழு ஒப்புதல்
  • பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் (பிஎன்பி), ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியாவை இணைத்துக் கொள்வதற்கு பிஎன்பி இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • முன்னுரிமை பங்கு ஒதுக்கீட்டின் அடிப்படையில், பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.18,000 கோடி மூலதனம் வழங்கும் மத்திய அரசின் திட்டத்துக்கும் வங்கியின் இயக்குநர் குழுக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.
ரஷ்யாவின் தொலைதூர கிழக்குப் பகுதிக்கு 1 பில்லியன் டாலர்கள் கடனுதவி: பிரதமர் மோடி
  • ரஷ்யாவிற்கு பயணம் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) கீழைப் பொருளாதார மன்றத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். 
  • ரஷ்யாவின் தொலைதூர கிழக்கு பகுதியுடனான இந்தியாவின் தொடர்புகள் நீண்ட நெடுங்காலத்திற்கு முற்பட்டவை என்றும், பகுதி மேம்பாட்டிற்காக 1 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.7 ஆயிரம் கோடி) தொகையை இந்தியா கடனுதவியாக வழங்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel