Type Here to Get Search Results !

30th SEPTEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

2016 - 17ம் கல்வி ஆண்டுக்கான தேசிய அளவிலான பள்ளிக்கல்வித் தரவரிசைப் பட்டியலில் தமிழகம் 2வது இடம்
  • நாட்டில் உள்ள மாநிலங்களின் கல்வித்தரத்தை ஆய்வு செய்து நிதி ஆயோக் அறிக்கை வெளியிட்டுள்ளது. மாணவர்களின் தேர்ச்சி விகிதம், பள்ளிகளின் வசதிகள், ஆசிரியர் - மாணவர் விகிதம் உள்ளிட்ட 44 காரணிகளை அடிப்படையாக கொண்டு இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • 2016 - 17ம் கல்வி ஆண்டுக்கு வெளியிடப்பட்டுள்ள தரவரிசை பட்டியலில், 76.6% மதிப்பெண் பெற்ற கேரளா முதலிடம் பிடித்துள்ளது. 73.4% மதிப்பெண் பெற்ற தமிழகத்துக்கு 2வது இடம் கிடைத்துள்ளது. 2015 - 16ல் தமிழகம் 63.2% மதிப்பெண் மட்டுமே பெற்றிருந்தது. 
  • காஷ்மீருக்கு 16வது இடம் 36.4% மதிப்பெண் பெற்றுள்ள உ.பி., கடைசி இடம் பிடித்துள்ளது. அதற்கு முந்தைய இடங்களை பீகார், ஜார்கண்ட் மாநிலங்கள் பிடித்துள்ளன. 
  • 3வது இடத்திலிருந்த மஹாராஷ்டிரா தற்போது 6வது இடத்திற்கும், 5வது இடத்திலிருந்த கர்நாடகா 13வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளன. 
  • ஆந்திரா 11வது இடத்திலும், காஷ்மீர் 16வது இடத்திலும் உள்ளன. மதிப்பீடு செய்ய மறுப்பு தெரிவித்த மேற்கு வங்க மாநிலம் இப்பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
காஞ்சி சங்கர மடம் சார்பில் கட்டப்பட்ட பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைத்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
  • காஞ்சிபுரம் அருகேயுள்ள கோனேரிக்குப்பம் கிராமத்தில், காஞ்சி சங்கர மடம் சார்பில் 15 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்கு மருத்துவமனையை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திறந்து வைத்தார். 
கொடுங்கையூரில் ரூ.348 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம்: முதல்வா் இன்று தொடங்கி வைக்கிறாா்
  • சென்னை கொடுங்கையூரில் ரூ.348 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைக்கவுள்ளாா்.
  • வடசென்னையில் மணலி, மீஞ்சூா் மற்றும் எண்ணூா் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் மின்சார வாரிய மின் உற்பத்தி நிலையங்களுக்கு மூன்றாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீரை வழங்க, கொடுங்கையூரில் நாள் ஒன்றுக்கு 4.50 கோடி லிட்டா் உற்பத்தித்திறன் கொண்ட எதிா் சவ்வூடு பரவுதல் முறையிலான மூன்றாம்நிலை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் ரூ.348 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க திட்டமிடப்பட்டது.
  • இதற்காக உலக வங்கியின் உதவியோடு ரூ.230 கோடி நிதியும், மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ. 118 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. இந்தப் பணிக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, பணி ஆணை 'பி.ஜி.ஆா். எனா்ஜி சிஸ்டம்ஸ்' நிறுவனத்தாருக்கு ரூ.290 கோடி மதிப்பில் கட்டுமானப் பணிக்காகவும், ரூ.205 கோடி மதிப்பில் 15 ஆண்டுகளுக்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிக்காகவும் வழங்கப்பட்டது.
திருச்சி என்ஐடி பேராசிரியருக்கு தேசிய விருது
  • திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்.ஐ.டி) மின்னணு துறையில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் எஸ்.ராகவன். அவரது சாதனைகளைக் கருத்தில்கொண்டு, தில்லியில் உள்ள மின்னியல் மற்றும் தொலைத் தொடர்பியல் கழகத்தால் (ஐஇடிஇ) தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • தில்லி, அயோத்தியாவில் உள்ள ராம் மனோகர் லோகியா ஆவத் பல்கலைக்கழகத்தில் செப். 28, 29 ஆகிய இரு நாள்கள் நடைபெற்ற நிகழ்வில், 2019-ஆவது ஆண்டுக்கான ரஞ்சனா பால் நினைவு விருது மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை இஸ்ரோ விஞ்ஞானி ஓய்.எஸ். ராஜன் வழங்கினார்.



உலக பிரச்னைகளுக்கு இந்தியா தீர்வு காண வேண்டும் - சென்னை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
  • ''உலக பிரச்னைகளுக்கும், இந்தியா தீர்வு காண வேண்டும் என்பது, நம் குறிக்கோளாக இருக்க வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
  • சுற்றுச்சூழல் கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளில், முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான போட்டி, 'சிங்கப்பூர் - இந்தியா ஹேக்கத்தான் - 2019' என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. 
  • சிங்கப்பூர் - இந்திய அரசுகள் இணைந்து, இப்போட்டியை நடத்தின. இப்போட்டியில், 20 குழுக்கள் பங்கேற்றன. ஒரு குழுவில், மூன்று இந்திய மாணவர்கள், மூன்று சிங்கப்பூர் மாணவர்கள் இடம் பெற்றனர். 
  • 60 ஆண்டில் முதல் மாணவி சென்னை, ஐ.ஐ.டி.,யில், முதல் முறையாக, மாணவி ஒருவர், ஜனாதிபதி விருது பெற்றுள்ளார். சென்னை, ஐ.ஐ.டி.,யின், 56வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில், 2,140 பேருக்கு, 2,585 பட்டங்கள் வழங்கப்பட்டன.
  • 10க்கும் மேற்பட்டவர்கள், தங்கப் பதக்கம் பெற்றனர். இதில், கவிதா கோபால் என்ற, பி.டெக்., மாணவி, ஜனாதிபதி விருது, விஸ்வேஸ்வரய்யா விருது ஆகியவற்றை பெற்றார். 
ஆந்திர மாநிலத்தில் இன்று முதல் அரசே மது விற்பனையை தொடங்குகிறது
  • ஆந்திர மாநிலத்தில் இன்று முதல் அரசே மது விற்பனையை தொடங்க உள்ளது. ரூ.10 முதல் ரூ.250 வரை மது பாட்டில்கள் மீது கூடுதல் வரி விதித்த ஆந்திர அரசு, 4,380 மதுக்கடைகளை 3,500 கடைகளாக குறைத்து மது விற்பனையை தொடங்குகிறது. 
  • அரசு மதுக்கடைகள் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில், எஸ்.பி.ஐ., கிளை
  • ஆசியாவின் விக்டோரியா மாகாணத்தில், எஸ்.பி.ஐ., எனப்படும், பாரத ஸ்டேட் வங்கியின் கிளை திறக்கப்பட்டுள்ளது. 
  • ஆஸ்திரேலியாவில் கிளை திறக்கும் முதல் இந்திய வங்கியாக, எஸ்.பி.ஐ., விளங்குகிறது.



மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்த 8 முக்கிய துறைகளின் வளர்ச்சி
  • இந்திய பொருளாதாரத்தில் தற்போது மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நாட்டின் பொருளாதார வளர்ச்சி சதவிகிதம் குறைந்துள்ளது.
  • எனவே பொருளாதாரத்தை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அத்துடன் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 5 சதவிகிதமாக குறைந்தது என்று மத்திய அரசு தரவுகள் தெரிவித்தன.
  • இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் முக்கியமான 8 துறைகளின் வளர்ச்சி 0.5 சதவிகிதமாக குறைந்துள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சக்கத்தின் தரவுகள் தெரிவித்துள்ளன. 
  • இது கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில் இல்லாத அளவிற்கு மிகவும் குறைந்ததாகும். கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தத் துறைகளின் வளர்ச்சி 4.7 சதவிகிதமாக இருந்தது. 
  • ஆனால் இந்த ஆகஸ்ட் மாதத்தில் நிலக்கரி(-8.6%), கச்சா எண்ணெய்(-5.4%), இயற்கை எரிவாயு(-3.9%), சிமெண்ட்(-4.9%), மின்சாரம்(-2.9%) உள்ளிட்ட துறைகள் குறைந்த வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.
  • எனினும் உரங்கள் துறை(2.9%), எஃகு உற்பத்தி(5%) வளர்ச்சி கண்டுள்ளது. இந்தாண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 8முக்கிய துறைகளின் வளர்ச்சி 2.4 சதவிகிதமாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு இதே காலளவில் 8 முக்கிய துறைகளின் வளர்ச்சி 5.7 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தரையில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
  • ஒடிசா கடலோரத்தில் நடத்தப்பட்ட தரையில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்ததாக டி.ஆர்.டி.ஓ. தகவல் தெரிவித்துள்ளனர்.
'5G தொழில்நுட்பம், பேப்பர் லெஸ் செக் இன்'. சீனாவில் திறக்கப்பட்ட அதிநவீன விமானநிலையம்
  • பெய்ஜிங்கில் டாக்ஸிங் சர்வதேச விமான நிலையத்தை, சீன அதிபர் ஜி ஜின்பிங் திறந்துவைத்தார். இதுவே, உலகின் மிகப்பெரிய சிங்கிள் டெர்மினல் விமான நிலையமாகும்.
  • 11 மில்லியன் சதுர அடியில், நட்சத்திர வடிவிலான இந்த விமான நிலையத்தை இராக்-பிரிட்டிஷ் கட்டடக் கலைஞர் ஜஹா ஹதீத் வடிவமைத்துள்ளார். 
  • ஆண்டு ஒன்றுக்கு 72 மில்லியன் பயணிகளைக் கையாளும் விதமாய் உருவாக்கப்பட்டுள்ளது இந்த விமான நிலையம். இது, சுமார் 17 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் ஐந்து ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது.
  • வாவே நிறுவனமும் 5 ஜி ஸ்மார்ட் டிராவல் சிஸ்டத்தை இந்த விமான நிலையத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதிலிருக்கும் facial recognition மூலமாகப் பயணிகள் எளிதாக பேப்பர் லெஸ் செக் இன் செய்துகொள்ள முடியும்.
வரலாறு படைத்தார் அன்னு ராணி: ஈட்டி எறிதலில் பைனலுக்கு தகுதி
  • கத்தார் தலைநகர் தோகாவில், 17வது உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றில் இந்தியா சார்பில் அன்னு ராணி பங்கேற்றார். 
  • 'ஏ' பிரிவில் இடம் பிடித்திருந்த அன்னு ராணி, தனது முதல் வாய்ப்பில் 57.05 மீ., துாரம் எறிந்தார். இரண்டாவது வாய்ப்பில் 62.43 மீ., துாரம் எறிந்த இவர், புதிய தேசிய சாதனை படைத்தார். 
  • இதற்கு முன், கடந்த மார்ச் மாதம் பாட்யாலாவில் நடந்த பெடரேஷன் கோப்பை தடகளப் போட்டியில் இவர், 62.34 மீ., துாரம் எறிந்திருந்தது தேசிய சாதனையாக இருந்தது. 
  • மூன்றாவது வாய்ப்பில் ஏமாற்றிய இவர், 60.50 மீ., துாரம் மட்டுமே எறிந்தார்.அதிகபட்சமாக 62.43 மீ., துாரம் எறிந்த அன்னு ராணி, 'ஏ' பிரிவில் 3வது இடம் பிடித்தார். 
  • ஒட்டுமொத்தமாக 5வது இடம் பிடித்த இவர், பைனலுக்கு தகுதி பெற்றார். இதன்மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் பைனலுக்கு முன்னேறிய முதல் இந்திய ஈட்டி எறிதல் நட்சத்திரம் என்ற புதிய சாதனை படைத்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel