Type Here to Get Search Results !

23rd SEPTEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

உத்தம சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு
  • புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே கிளியூரில் அமைந்துள்ள சிவன் கோயில் வளாகத்தில் உத்தம சோழரின் பன்னிரெண்டாவது ஆட்சிக்காலமான கி.பி 982-ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.
  • இக்கல்வெட்டு கோப்பரகேசரி என்ற பட்டமுடைய சோழமன்னரான உத்தம சோழர் (கி.பி 970 - 985) ஆட்சியின் பன்னிரெண்டாவது ஆண்டை சேர்ந்தது என்று பொறிக்கப்பட்டுள்ளது. 
  • இக்கல்வெட்டின் எழுத்தமைதி மற்றும் ஆண்டுக் குறிப்பைக் கொண்டு கோப்பரகேசரி பட்டம் கொண்ட பராந்தகச் சோழரின் கல்வெட்டாக இருக்குமோ என ஐயம் கொண்டாலும், பராந்தக சோழர் தமது மூன்றாவது ஆட்சியாண்டிலேயே மதிரை கொண்ட கோப்பரகேசரி என்ற பட்டப்பெயர் கொண்டிருப்பதையும், இப்பதம் இக்கல்வெட்டில் இல்லை என்பதையும் கருத்தில்கொண்டு, அதே பட்டமுடைய உத்தம சோழரின் காலத்தையது என்று கருத முடிகிறது.
  • கிளியூர் எனப்படும் இவ்வூர் தென் சிறுவாயில் நாட்டுப்பிரிவில் 1000 ஆண்டுகளுக்கு முன்பும் கிளியூர் என்றே அழைக்கப்பட்டுள்ளதையும், இப்பகுதியில் வட சிறுவாயில் நாடு போல தென்சிறுவாயில் நாடு இருந்துள்ளதையும் இக்கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.
  • கல்வெட்டின் பெரும்பாலான எழுத்து பொறிப்புகள் கால மாற்றத்தில் சிதைந்துள்ளன. இது நான்கரை அடி உயரம், இரண்டரை அடி அகலமுடையதாக உள்ளது. இக்கல்வெட்டில் 17 வரிகளில் கல்வெட்டுப் பொறிப்பும், அதன் கீழ்ப் புறத்தில் சூல கோட்டுருவமும் காணப்படுகிறது.
இசை பல்கலை.க்கு ஜெயலலிதா பெயர்: தமிழக அரசு உத்தரவு
  • தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு கடந்த 2013-ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டு, அதே ஆண்டு நவம்பர் 14-இல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. 
  • இந்த நிலையில், கலை மற்றும் பண்பாட்டுத் துறை ஆணையரகத்தின் பரிந்துரையை ஏற்று, தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் பெயரை தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்து உத்தரவிடப்படுகிறது என்று தனது உத்தரவில் அபூர்வ வர்மா தெரிவித்துள்ளார்.



தில்லியில் சர்வதேச திருக்குறள் மாநாடு தொடங்கியது: 10 நாடுகளில் இருந்து அறிஞர்கள் பங்கேற்பு
  • மூன்றாவது சர்வதேச திருக்குறள் மாநாடு திங்கள்கிழமை தில்லியில் தொடங்கியது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டை தமிழக தமிழ் வளர்ச்சி, கலாசாரம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தொடக்கி வைத்தார்.
  • 10 நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
உணவு கழிவு கொண்டு இயற்கை எரிசக்தி உண்டாக்கும் திட்டம் 
  • புதைபடிவ எரிபொருட்களை, மாற்று எரிசக்தி ஆதாரங்களுடன் மாற்றுவதற்கான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி திங்களன்று பேருந்துகள், உணவு கழிவுகளை பதப்படுத்துவதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு (சி.என்.ஜி) மீது விரைவில் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
  • பயிர்கள் அறுவடை செய்யப்பட்ட பின்னர் வழக்கமாக எரிக்கப்படும் கழிவுகளை இயற்கை எரிவாயுவாக மாற்றும் பணி ஏற்கனவே லூதியானாவில் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், ஆட்டிறைச்சி, மீன், பழங்கள், காய்கறிகள் போன்ற உணவுக் கழிவுகளை பயோ-இயற்கை எரிவாயுவாக மாற்றும் செயல்முறை அடுத்த இரண்டு மாதங்களில் மகாராஷ்டிராவில் தொடங்கப்படும். 
  • மெத்தனால் மற்றும் கார்பன் டை ஆக்சைடு (CO2) ஆகியவற்றைப் பிரிப்பதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயுவாக பேருந்துகளுக்கு எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
2009,2010,2011,2012,2015,2019- 6-வது முறையாக சிறந்த வீரருக்கான ஃபிஃபா விருதை வென்ற மெஸ்ஸி
  • மிலன் நகரில் நடைபெற்ற விழாவில், லிவர்பூல் அணியின் விர்ஜின் வேன் மற்றும் யுவண்டாஸ் அணியின் கிறிஸ்டியானோ ரெனால்டோ ஆகியோரை பின்னுக்குத் தள்ளி, 6-வது முறையாக ஃபிஃபா-வின் இந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதைப் பெற்றுள்ளார்.
  • பார்சிலோனா மற்றும் அர்ஜென்டினா அணியின் கேப்டனான மெஸ்ஸி, கடந்த 5 ஆண்டுகளில் பார்சிலோனா அணி 4 முறை கோப்பை வெல்ல முக்கியக் காரணமாகச் செயல்பட்டுள்ளார். 32 வயதான மெஸ்ஸி, 2009, 2010, 2011, 2012 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளின் சிறந்த வீரருக்கான விருதைப் பெற்றிருக்கிறார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel