Type Here to Get Search Results !

18th SEPTEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

கீழடியில் மூடியுடன் பானை கண்டெடுப்பு
  • சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடக்கும் 5ம் கட்ட அகழாய்வில் மூடியுடன் கூடிய பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
  • அகழாய்வில் இதுவரை வட்டப்பானை, இரட்டைச்சுவர், உறைகிணறுகள், தண்ணீர் தொட்டி, பானை ஓடுகள் உள்ளிட்ட 700க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன. 
  • இதுவரை கிடைத்த பானைகள் அனைத்தும் சிதிலமடைந்தும் மூடியின்றியும் கிடைத்தன.தற்போது தரை தளமும் அருகில் மேலும் ஒரு தளமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
  • அதில், பானை முழுமையாகவும் மூடி மட்டும் சிதிலமடைந்த நிலையிலும் கிடைத்துள்ளன. இந்த தளம் சமையலறையாக பயன்படுத்தியிருக்க வாய்ப்புள்ளதாக கருதுகின்றனர். 
  • அகழாய்வை தொடர்ந்தால் முழு கட்டடம் வெளியே தெரிய வாய்ப்புள்ளது.மற்றொரு இடத்தில் புதிதாக தோண்டப்பட்ட குழியில் சிறிய அளவிலான இரண்டிற்கும் மேற்பட்ட பானைகள் ஒரே இடத்தில் கிடைத்துள்ளன. 
  • அகழாய்வு இம்மாத இறுதிக்குள் முடிவடைய உள்ள நிலையில் தொடர்ந்து பல்வேறு பானைகள் கிடைத்து வருவது ஆய்வாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதியாக வெ.இராமசுப்பிரமணியன் நியமனம்
  • உச்சநீதிமன்ற நீதிபதியாக வெ.இராமசுப்பிரமணியன் உள்பட 4 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவில் 34- ஆக அதிகரித்துள்ளது.
  • அதன்படி, ஹிமாசலப் பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன், பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி கிருஷ்ண முராரி, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ரவீந்திர பட், கேரள உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய் ஆகிய நால்வரும் உச்சநீதிமன்ற புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • முன்னதாக, இவர்களது பெயர்களை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த மாதம் பரிந்துரைத்திருந்தது. உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட நீதிபதி பணியிடங்களின் எண்ணிக்கையை 31-இல் இருந்து 34-ஆக உயர்த்தி, மத்திய அரசு அண்மையில் நடவடிக்கை மேற்கொண்டது.
  • தற்போது தலைமை நீதிபதி உள்பட 30 நீதிபதிகள் பணியில் உள்ளனர். புதிய நீதிபதிகளின் நியமனம் மூலம் இந்த எண்ணிக்கை 34-ஆக உயர்ந்திருக்கிறது.



மெட்ரிக் பள்ளி இயக்ககம், தனியார் பள்ளி இயக்ககமாக மாற்றி அரசானை வெளியீடு
  • அரசு உதவி பெறாத பள்ளிகள் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள், அனைத்தும் தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் வரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இது குறித்த அரசிதழையும் வெளியிட்டுள்ளது.
  • மேலும் மெட்ரிக் பள்ளி இயக்ககத்தை தனியார் பள்ளி இயக்ககமாக மாற்றியும் தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இ - சிகரெட்டுக்கு உடனடி தடை: மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு
  • இ - சிகரெட் உட்பட, 'என்ட்ஸ்' எனப்படும், மின்னணு நிகோடின் புகைக்கும் சாதனங்களுக்கு உடனடியாக தடை விதிக்கும் வகையில், அவசர சட்டம் கொண்டு வருவதற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • 'என்ட்ஸ்' எனப்படும் மின்னணு நிகோடின் புகைக்கும் சாதனங்களில், புகையிலைப் பொருட்கள் எரிக்கப்படுவதில்லை. அதற்கு பதிலாக, திரவ நிலையில் உள்ள ரசாயனம் பயன்படுத்தப் படுகிறது. 
  • இது சூடுபடுத்தப்படுவதன் மூலம் வெளியாகும் ஆவியை, உள்ளிழுக்கின்றனர்.இ - சிகரெட், இ - ஷீஷா, இ - நிகோடின் கலக்கப்பட்ட ஹூக்கா என, இதில், பல்வேறு வகைகள் உள்ளன. இதில், அதிகம் பிரபலமானது, இ - சிகரெட். புகையில்லாததால், இது வழக்கமான சிகரெட்டைவிட ஆபத்து குறைவானது என, பிரசாரம் செய்யப்படுகிறது.
  • ஆனால், 'வழக்கமாக பயன்படுத்தப்படும் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விட இது மிகவும் ஆபத்தானது' என, ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றார் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை வினேஷ் பொகத்
  • உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை வினேஷ் பொகத் வெண்கலம் வென்றார். 
  • கிரீஸ் வீராங்கனை மரியா பிரிவோலரகியை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel