Type Here to Get Search Results !

16th SEPTEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

100% தமிழக தயாரிப்பு மின்சார வாகனங்களுக்கு வரி விலக்கு: புதிய கொள்கையை வெளியிட்டார் முதல்வர்
  • சுற்றுச்சூழலை பாதுகாத்து, காற்று மாசுபடுவதை குறைக்கும் வகையில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை தமிழகத்தில் உற்பத்தி செய்வதற்கு ஏதுவாக, "தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2019' தயாரிக்கப்பட்டுள்ளது.
  • கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள்: தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கான மாநில சரக்கு மற்றும் சேவை வரி 100 சதவீதம் திருப்பி அளிக்கப்படும். 
  • இந்தச் சலுகை 2030-ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருக்கும். மின்சார வாகனங்கள் உற்பத்திக்கான முதலீடுகளுக்கு 15 சதவீதம் வரையிலும், மின்கலம் உற்பத்திக்கான முதலீடுகளுக்கு 20 சதவீதம் வரையிலும் மூலதன மானியம் அளிக்கப்படும். இந்தச் சலுகை 2025-ஆம் ஆண்டு வரை செய்யப்படும் முதலீடுகளுக்குப் பொருந்தும்.
  • மின்கலன்கள் உற்பத்தி: அரசு தொழிற் பூங்காக்களில் மின்சார வாகனங்கள், மின்னேற்று உபகரணங்கள், மின்கலன்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை அமைக்க முன்வரும் நிறுவனங்களுக்கு நிலத்தின் விலையில் 20 சதவீதம் வரை மானியமாக அளிக்கப்படும். தென் மாவட்டங்களில் செய்யப்படும் இத்தகைய முதலீடுகளுக்கு நிலத்தின் மதிப்பில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும். இந்தச் சலுகை 2022-ஆம் ஆண்டு வரை செய்யப்படும் முதலீடுகளுக்கு பொருந்தும்.
  • மின்சார வாகனங்கள், மின்னேற்று உபகரணங்கள் உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலை அமைக்க நிலம் வாங்கும் போது 100 சதவீதம் முத்திரைத்தாள் கட்டண விலக்கு அளிக்கப்படும். 
  • இந்தச் சலுகை 2022-ஆம் ஆண்டு வரை செய்யப்படும் முதலீடுகளுக்கு பொருந்தும். மின்சார வாகனங்கள், மின்னேற்று உபகரணங்கள் உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு 100 சதவீதம் மின்சார வரி விலக்கு அளிக்கப்படும்.
  • மின்சார வாகனங்கள், மின்கல உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மூலமாக அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்குவதை உறுதி செய்திட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 
  • மின்சார வாகனங்கள், மின்னேற்று உபகரணங்கள் உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்கள் 2025-ஆம் ஆண்டு வரை உருவாக்கும் ஒவ்வொரு புதிய வேலைவாய்ப்புக்கும், நிறுவனங்களின் பங்களிப்பாகச் செலுத்திய தொழிலாளர் சேமநல நிதிக்கு ஈடான தொகை மானியமாக வழங்கப்படும்.
  • மின்சார வாகனங்களுக்கான உதிரி பாகங்கள், மின்னேற்று உபகரணங்கள் உற்பத்தியில் ஈடுபடும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு இப்போது மூலதன மானிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள தகுதி வரம்பை விட 20 சதவீதம் கூடுதல் மூலதன மானியம் அளிக்கப்படும்.
  • முதல் மின்சார வாகனக் கொள்கையின் மூலமாக ரூ.50 ஆயிரம் கோடிக்கு முதலீடுகளை ஈர்க்கத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த முதலீடுகள் மூலமாக 1.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
  • வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் மின்சார வாகனங்களின் மொத்த எண்ணிக்கை 9.8 கோடியாக இருக்கும்.
  • அடுத்த பத்து ஆண்டுகளில் தமிழகத்தின் ஆறு மாநகரங்களில் மின்சார ஆட்டோக்கள் இயக்கப்படும். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி ஆகிய ஆறு மாநகரங்களில் உள்ள அனைத்து ஆட்டோக்களும் மின்சாரத்தில் இயங்கும் வகையில் மாற்றப்படும். அதைத் தொடர்ந்து அனைத்து இடங்களிலும் படிப்படியாக மின்சார ஆட்டோக்கள் இயக்கப்படும்.
சேலம் கால்நடைப் பூங்காவில் ரூ.2 கோடி மதிப்பில் ஆராய்ச்சி மையம்
  • சேலம் மாவட்டம், தலைவாசலில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆசிய கண்டத்திலேயே மிகச்சிறந்த கால்நடைப் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
  • இதற்காக அமெரிக்கா சென்று இரு பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன. இதேபோல ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கும் சென்றோம். 
  • ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்துக்குச் சென்று அங்குள்ள நவீன தொழில்நுட்பங்களைப் பார்வையிட்டு அவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
  • சேலம் கால்நடைப் பூங்காவில் ரூ.2 கோடி செலவில் ஆராய்ச்சி மையம் அமைப்பது தொடர்பாக சிட்னி பல்கலைக்கழக அறிஞர்கள், பேராசிரியர்கள் குழுவினர் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை விரைவில் சந்திக்க உள்ளனர்.



செயின்ட் லூயி ராணுவ மையத்தில் இந்திய-அமெரிக்க போர் ஒத்திகை
  • இந்திய- அமெரிக்க போர் ஒத்திகை... அமெரிக்காவின் செயின்ட் லூயி ராணுவ மையத்தில் இந்திய-அமெரிக்க போர் ஒத்திகை நடைபெறுகிறது.
  • இருநாட்டு வீரர்களும் பல்வேறு உடற்பயிற்சிகளிலும் சாகசங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.உயரம் தாண்டி ஓடுதல், கயிறு கட்டி ஏறுதல், போன்ற பல சிரமமான பயிற்சிகளையும் அவர்கள் மேற்கொண்டனர்
  • முன்னதாக இந்திய வீரர்கள் மூவர்ணக் கொடியை ஏந்தியபடி தொடக்க நாள் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.
இந்திய தூதரகப் பணியில் முதல் பெண் விங் கமாண்டர் அஞ்சலி சிங்
  • வெளிநாட்டுத் தூதரகங்களில் முப்படைகளில் ஏதேனும் ஒரு பிரிவைச் சேர்ந்த அதிகாரி பணியில் அமர்த்தப்படுவது வழக்கமாக இருந்தாலும் முதல்முறையாக விமானப்படையின் ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் பிரிவைத் சேர்ந்த விங் கமாண்டர் அஞ்சலி சிங், மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகப் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.
  • வழக்கமாக இப்பணிக்கு ஆண் அதிகாரிகள்தான் தேர்வு செய்யப்பட்டு வந்த நிலையில் முதல்முறையாக இப்பொறுப்புக்கு பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். 
  • இதன் மூலம் வெளிநாட்டிலுள்ள இந்திய தூதரங்களில் பணி அமர்த்தப்பட்ட முதல் பெண் முப்படை அதிகாரி என்ற பெருமையை அஞ்சலி சிங் பெருகிறார். அஞ்சலி சிங் விமானப்படையில் 17 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
  • இவர் எம்ஐஜி-29 ரக (MiG-29) ரக விமானத்தை இயக்கும் பயிற்சியை முடித்துள்ளார். வெளிநாட்டு தூதரகத்தில் விமானப் படையின் சார்பில் இருக்கும் அதிகாரி இந்திய விமானப்படை அந்த நாட்டில் பிரிதிநிதியாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.



மூன்று நாட்டு கப்பல்படைகள் கூட்டுப்பயிற்சி: அந்தமானில் துவக்கம்
  • இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து நாடுகளின் கப்பல்படையினருக்கான 'சிட்மேக்ஸ்-19' எனும் ஐந்துநாள் பயிற்சி முகாம் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் துவங்கியது. 
  • கடத்தல் தடுப்பு, பயங்கரவாத்திற்கு எதிரான நடவடிக்கை போன்ற பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர்.
ஆசியா சொசைட்டியின் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்ட பெண் காவல்துறை அதிகாரி
  • நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கை விசாரித்த பெண் காவல்துறை அதிகாரி சாயா ஷர்மாவுக்கு, 2019ம் ஆண்டிற்கான ஆசியா சொசைட்டி கேம் சேன்ஜர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பெண் காவல்துறை அதிகாரிகளுக்கான பணியை மறுவரையறை செய்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவருடன் சேர்ந்து இதர 6 நபர்களுக்கும் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த விருது அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒரு விழாவில் வழங்கப்படும். ஆசியா சொசைட்டி என்பது கல்வி தொடர்பான ஒரு முன்னணி நிறுவனமாகும்.
  • ஆசியா மற்றும் அமெரிக்காவிலுள்ள பொதுமக்கள், தலைவர்கள் மற்றும் நிறுவனங்களிடையே பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காக இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.
  • இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் கமிஷனில் டிஐஜி நிலையில் பணியாற்றிய ஷர்மா, இந்த விருது பெறுபவர்களில் ஒருவர்.
  • மேலும், இந்தியா மற்றும் நேபாள நாட்டைச் சேர்ந்த குங்ஃபூ சந்நியாசிகளும் இந்த விருதைப் பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சர்வதேச மகளிர் டென்னிஸ் தரவரிசை : ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பர்டி முதலிடம்
  • சர்வதேச மகளிர் டென்னிஸ் தரவரிசை பட்டியலிலை சர்வதேச மகளிர் டென்னிஸ் சங்கம் வெளியிட்டது. இந்த பட்டியலில் 6501 புள்ளிகள் பெற்ற ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பர்டி முதலிடத்தில் உள்ளார். 
  • 6415 புள்ளிகளுடன் கரோலினா பிளிஸ்கோவா இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர் சீனாவின் ஸெங்ஷெள ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இரண்டாம் நிலை வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel