Type Here to Get Search Results !

6th AUGUST 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

ஆக. 9,10 - இல் தேசிய தொழிலாளர் நல்லுறவு மாநாடு: தமிழக ஆளுநர் தொடங்கி வைக்கிறார்
  • தென்னிந்திய தொழில் நிறுவன உரிமையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் தேசிய தொழிலாளர் நல்லுறவு மாநாடு வரும் 9, 10 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது. இதனை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைக்கிறார். 
வீட்டுவசதித் துறை செயலாளராக ராஜேஷ் லக்கானி நியமனம்: தமிழக அரசு உத்தரவு
  • வீட்டுவசதித் துறை முதன்மைச் செயலாளராக ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலாளராக டி.கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
  • ராஜேஷ் லக்கானி: வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் (சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளர் பொறுப்பை கூடுதலாகக் கவனித்து வந்தார்).
  • சந்திரசேகர் சகாமுரி: நகர் மற்றும் ஊரமைப்புத் துறை இயக்குநர் (தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர்). வி.அமுதவல்லி: சுற்றுலாத் துறை இயக்குநர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் (சமூகநலத் துறை முன்னாள் இயக்குநர்).
  • எம்.மதிவாணன்: மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத் துறை இயக்குநர் (சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர்).
  • டி.கார்த்திகேயன்: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலாளர் (நகராட்சி நிர்வாக ஆணையர்).
  • வி.சம்பத்: தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் துணைத் தலைவர் மற்றும் முதன்மைச் செயல் அலுவலர். (மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறை இயக்குநர்) கடல்சார் வாரிய துணைத் தலைவர் பொறுப்பை அருண் தம்புராஜ் கூடுதலாகக் கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



நிறைவேறியது மசோதா; பிரிகிறது காஷ்மீர்
  • ஜம்மு - காஷ்மீருக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துகள் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35 - ஏ பிரிவுகளை மத்திய அரசு நேற்று ரத்து செய்தது. 
  • இதைதொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கான மசோதா பெரும்பான்மை ஆதரவுடன் ராஜ்யசபாவில் நேற்று(ஆக.,05) நிறைவேறியது.
  • இந்நிலையில், லோக்சபாவில் காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கான மசோதா, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கான மசேதா இன்று(ஆக., 6) தாக்கல் செய்யப்பட்டது.
  • 370 பிரிவை ரத்து செய்வதற்கான மசோதா குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் மசோதாவை ரத்து செய்வதற்கு, ஆதரவாக 351 ஓட்டுகளும், எதிராக 72 ஓட்டுகளும் பதிவானது. 
  • காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவுக்கு ஆதரவாக 361 ஓட்டுகளும், எதிராக 66 ஓட்டுகளும் பதிவானது. இரண்டாக பிரிகிறது: லோக்சபா, ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்ட நிலையில், மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்படும். 
  • அவரது ஒப்புதலுக்கு பின் சட்டசபை உள்ள யூனியன் பிரதேசமாக காஷ்மீரும், சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக்கும் பிரிக்கப்படும்.
3-0 என மேற்கிந்திய தீவுகள் அணியை வாஷ் அவுட் செய்த இந்திய அணி
  • இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் மேற்கிந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணியுடன் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே நடைபெற்ற இரண்டு டி20 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. 
  • இந்த நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை முழுமையாக இந்திய அணி வென்றது. 
  • இந்த போட்டியில் மிக அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய தீபக் சஹார் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 
  • மேலும் இந்த தொடரின் நாயகனாக க்ருணால் பாண்ட்யா தேர்வு செய்யப்பட்டார்.
சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து: ரஷ்யா, மலேசியா சாம்பியன்
  • சென்னை, பெரியமேடு, நேரு விளையாட்டு அரங்கில், மன வளர்ச்சி குன்றியோருக்கான, சிறப்பு ஒலிம்பிக் சர்வதேச கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. 15 நாடுகளை சேர்ந்த, 21 அணிகள் பங்கேற்ற இதில், மொத்தம் 168 வீரர்,~ வீராங்கனையர் திறமை வெளிப்படுத்தினர்.
  • இதில், 'லீக்' போட்டிகளை தொடர்ந்து, நேற்று அரையிறுதி மற்றும் பைனல் நடந்தன. இந்த தொடரில், ஆண்கள் டிவிஷன் ~ 3 பிரிவில், மியான்மர் முதலிடம் பெற்றது. இந்தோனேசியா இரண்டாவது இடமும், இந்தியா மூன்றாம் இடமும் பிடித்தன.
  • டிவிஷன் ~ 2, பிரிவில், எகிப்து முதலிடம் பெற்றது. இதில், ஆஸ்திரியா இரண்டாவது இடமும், மாலத்தீவு மூன்றாம் இடத்தையும், பெற்றன. டிவிஷன் ~ 1 பிரிவில், மலேசியா முதலிடத்தை கைப்பற்றியது. இதில், கொரியா இரண்டாவது இடமும், இந்தியா மூன்றாம் இடமும் பிடித்தன.
  • பெண்கள் போட்டியை பொறுத்தவரை, டிவிசன் ~ 2 பிரிவில், இந்தோனேசியா முதலிடம் பிடித்தது. இதில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இரண்டாவது, மலேசியா மூன்றாம் இடம் பெற்றன.அதேபோல, டிவிசன் ~ 1 பிரிவில், ரஷ்யா முதலிடத்தை கைப்பற்றியது.
  • இதில், பிலிப்பைன்ஸ் இரண்டாம் இடமும், பங்களாதேஷ் மூன்றாம் இடமும் பெற்றன. இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை ரஷ்யா மற்றும் மலேசியா அணிகள் கைப்பற்றின.



ஜூலை மாதத்தில் மட்டும் 227 பதக்கங்கள் வேட்டையாடிய இந்திய வீரர், வீராங்கனைகள்
  • கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் சர்வதேச அரங்கில் இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 227 பதக்கங்கள் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
  • 31 நாட்கள் காலக்கட்டத் தில் தடகளம், மல்யுத்தம், பளு தூக்குதல், ஜூடோ, பாட்மிண்டன், குத்துச்சண்டை, டேபிள் டென் னிஸ், பாரா-துப்பாக்கி சுடுதல், துப்பாக்கி சுடுதல் ஆகிய 9 விளையாட்டுகளில் நடைபெற்ற ஆட்டங்களில் இந்திய வீரர், வீராங்கனைகள் ஒட்டுமொத்த மாக 227 பதக்கங்களை வென் றுள்ளனர்.
  • 6 முறை உலக சாம்பியனான குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இந்தோனேஷியாவில் நடை பெற்ற பிரஸிடன்ட் கோப்பையில் தங்கப் பதக்கம் வென்றார். 
  • மல்யுத்தத்தில் துருக்கியில் நடை பெற்ற போட்டியில் வினேஷ் போகத் தங்கம் வென்று அசத் தினார். மேலும் ஜூடோவில் தபாபி தேவி, பளு தூக்குதலில் மீரா பாய் சானு, துப்பாக்கி சுடுதலில் மெஹூலி கோஷ், இளவேனில் வாளரிவன் ஆகியோரும் சர்வதேச போட்டிகளில் சாதித்தனர்.
  • ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்ப தக்கம் வென்ற பி.வி.சிந்து, இந்தோனேஷியாவில் நடைபெற்ற பாட்மிண்டன் தொடரில் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். வில் வித்தை வீராங்கனையான தீபிகா குமாரி, டோக்கியோவில் நடை பெற்ற ஒலிம்பிக் டெஸ்ட் நிகழ் வில் வெள்ளி வென்றார். 
  • மொத்தம் வெல்லப்பட்ட 227 பதக்கங் களில் அதிகபட்சமாக 71 பதக்கங் கள் தடகளத்தில் கிடைக்கப் பெற்றவையாகும். சமாவோ நாட் டில் நடைபெற்ற காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் பில் மட்டும் இந்தியா 35 பதக் கங்களை அள்ளியிருந்தது. திங் எக்ஸ்பிரஸ் என அழைக்கப்படும் ஹிமா தாஸ் ஓட்டப் பந்தயத்தில் 5 தங்கம் வென்று பிரம்மிக்க வைத்தார்.
  • உலக அரங்கில் துப்பாக்கி சுடுதலில் தொடர்ச்சியாக சிறந்த திறனை வெளிப்படுத்தி வரும் இந்திய வீரர், வீராங்கனைகள் ஜெர்மனியின் சூயல் நகரில் நடை பெற்ற ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலக கோப்பை தொடரில் 10 தங்கம், 9 வெள்ளி, 5 வெண் கலம் என 24 பதக்கங்கள் வென் றனர். அதேவேளையில் குரோ ஷியாவில் நடைபெற்ற பாரா துப்பாக்கி சுடுதலில் 4 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம் என 9 பதக்கங்களையும் இந்தியா வென் றிருந்தது.
  • தைபேவில் நடைபெற்ற ஆசிய- ஒசியானியா கேடட் ஜூடோ சாம்பியன்ஷிப்பில் இந்தியா 6 பதக்கங்களை கைப்பற்றியது. குத்துச்சண்டையில் இந்தோனேஷி யாவில் நடைபெற்ற பிரஸிடன்ட் கோப்பையில் (மகளிர் பிரிவு) 9 பதக்கங்களையும், தாய்லாந்து போட்டியில் 8 பதக்கங்களையும், கஜகஸ்தானில் நடைபெற்ற போட்டி யில் 4 பதக்கங்களையும் (ஆடவர் பிரிவு) என ஒட்டுமொத்தமாக 21 பதக்கங்களை இந்தியா வென் றிருந்தது.
  • மல்யுத்தத்தில் 5 தொடர்களில் இந்தியா 50 பதக்கங்களை கொத் தாக அள்ளியது. தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு 18 பதக்கங்கள் கிடைத்தது. பெல்லாரசில் நடைபெற்ற போட்டி யில் 2 பதக்கங்களும், துருக்கி யில் நடைபெற்ற போட்டியில் 7 பதக்கங்களும், தைபேவில் நடைபெற்ற ஆசிய கேடட் சாம்பியன்ஷிப்பில் 17 பதக்கங் களும், மாட்ரிட் நகரில் நடைபெற்ற போட்டியில் 6 பதக்கங்களும் இந்தியாவுக்கு கிடைக்க பெற்றிருந் தது.
  • அதேவேளையில் காமன் வெல்த் சாம்பியன்ஷிப்பில் டேபிள் டென்னிஸில் ஒட்டுமொத்தமாக 7 பதக்கங்கங்களையும் இந்தியா கைப்பற்றியது. ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற உள்ள நிலையில் இந்திய வீரர், வீராங்கனைகள் பிரகாசிக்கத் தொடங்கியுள்ளது சிறப்பான விஷயமாக கருதப்படுகிறது.
உலக டென்னிஸ் தரவரிசை பட்டியல் வெளியீடு - முதலிடத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி
  • உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி (6,605 புள்ளிகள்) முதலிடத்திலும், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா (6,228 புள்ளிகள்) 2-வது இடத்திலும், செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 3-வது இடத்திலும், ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் 4-வது இடத்திலும், நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்டென்ஸ் 5-வது இடத்திலும், செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா 6-வது இடத்திலும், உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா 7-வது இடத்திலும், அமெரிக்க வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 8-வது இடத்திலும் மாற்றமின்றி நீடிக்கின்றனர்.
  • பெலாரஸ் வீராங்கனை சபலென்கா ஒரு இடம் ஏற்றம் கண்டு 9-வது இடத்தையும், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ஒரு இடம் சரிந்து 10-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
போலந்து ஓபன் மல்யுத்தம் போட்டியில் இந்திய வீராங்கனை தங்கம் வென்றார்
  • போலந்து ஓபன் மல்யுத்த போட்டி வார்சாவில் நடைபெற்றது. இதில் 53 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப் போட்டியில் போலந்து வீராங்கனையை எதிர்கொண்டார். 
  • இதில் வினேஷ் போகத் 3-2 போலந்து வீராங்கனை ரோக்சனாவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel