Type Here to Get Search Results !

5th AUGUST 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

கீழடியில் எலும்பில் வடிவமைக்கப்பட்ட எழுத்தாணி கண்டுபிடிப்பு
  • சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடந்து வரும் 5-ஆம் கட்ட அகழாய்வில் எலும்புகளால் வடிவமைக்கப்பட்ட எழுத்தாணி திங்கள்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. 
  • சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் எழுதுவதற்காக எலும்புகளை தீயில் வாட்டி பக்குவப்படுத்தி பேனா போன்று உருவாக்கிய எழுத்தாணியாக இவை இருக்கலாம் என அகழாய்வாளர்கள் தெரிவித்தனர்.
கும்பல் தாக்குதல் மசோதா நிறைவேற்றம்
  • ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.இம்மாநிலத்தில், கும்பலாக தாக்குதல் நடத்தும் சம்பவங்கள், அடிக்கடி நடந்து வருகின்றன; இதில், சில அப்பாவிகள் பலியாவதும் தொடர்கிறது.
  • இந்நிலையில், இந்த கும்பல் தாக்குதலில் ஈடுபட்டு, கொலை செய்யும் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்க, ஆளும் காங்., அரசு முடிவு செய்தது.
  • இதையடுத்து, கும்பலாக தாக்கி கொலை செய்யும் குற்றவாளிகளுக்கு, ஆயுள் தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கும் மசோதா, ராஜஸ்தான் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.இதற்கு, எதிர்கட்சியான பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எதிர்ப்புக்கு மத்தியில், குரல் ஓட்டெடுப்பின் மூலம், இந்த மசோதா, நேற்று நிறைவேறியது.



வாடகைத்தாய் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது
  • பல்வேறு நாடுகளை சேர்ந்த தம்பதிகளுக்கு இந்தியா வாடகைத் தாய்களின் இருப்பிடமாக உருவாகி இருப்பதுடன், பண்புநெறியற்ற நடைமுறைகள், வாடகைத் தாய்கள் ஏமாற்றப்படுதல், வாடகைத் தாய்கள் மூலம் குழந்தைகளை கைவிடுதல் மற்றும் மனித கருவின் ஆரம்ப நிலை மற்றும் கருப்பைகள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்யும் இடைத்தரகர்களின் மோசடிகள் போன்று பல சம்பவங்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
  • இந்திய சட்ட ஆணையத்தின் 228-வது அறிக்கையிலும், வணிகரீதியான வாடகைத் தாய் தடை செய்யப்பட வேண்டும் என்றும் தேவைப்படும் இந்திய தம்பதிகளுக்கு பண்புநெறி சார்ந்த பொதுநல வாடகைத் தாய் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
  • இந்நிலையில் வாடகைத்தாய் ஒழுங்குப்படுத்தும் மசோதா, தேசிய அளவில் தேசிய வாடகைத் தாய் வாரியம் மற்றும் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளவில், மாநில வாடகைத் தாய் வாரியங்கள் மற்றும் தக்க அமைப்புகளை ஏற்படுத்தி, இந்தியாவில் வாடகைத் தாய் பயன்படுத்துவதை ஒழுங்குப்படுத்தும் என தெரிகிறது.
  • இதன் மூலம் பண்புநெறி சார்ந்த வாடகைத்தாய் அமர்த்த விரும்பும் திருமணமாகி குழந்தையற்ற அனைத்து தம்பதிகளும் பயனடைவார்கள். மேலும், வாடகைத் தாய்கள் மற்றும் அதன் மூலம் பிறந்த குழந்தைகளின் உரிமைகள் பாதுகாக்கப்படும். இந்த மசோதா ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் தவிர, இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்
  • வாடகைத்தாய் முறை மூலம் குழந்தை பெற நினைப்பவர்கள் இந்திய தம்பதிகளாக இருத்தல் வேண்டும்.
  • தம்பதியரில் ஒருவருக்கு குழந்தை பெற தகுதி இல்லாமல் இருக்க வேண்டும்.
  • வாடகைத்தாய் முறையை பயன்படுத்திக்கொள்ளும் பெண்ணுக்கு 23 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆணுக்கு 26 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். திருமணமாகி 5 ஆண்டுகள் கடந்திருக்க வேண்டும்.
  • நெருங்கிய சொந்தத்தில் இருக்கும் ஒருவரையே வாடகைத் தாயாக தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் வாடகை தாயும் திருமணமாகி குழந்தை பெற்றிருக்க வேண்டும்.
  • மருத்துவ செலவை தவிர வேறு எந்த வகையிலும் பணம் வழங்கப்படாது, எனினும் மருத்துவ செலவு, காப்பீட்டு செலவு போன்றவற்றை அவருக்குக் கொடுக்கலாம்.
  • வாடகை தாய்க்கும், சம்பந்தப்பட்ட தம்பதிக்கும் தகுதி சான்றிதழ்கள் வழங்கப்படும். மத்திய. மாநில அரசுகள் தகுதி சான்றிதழ்களை வழங்க தகுந்த அதிகாரிகளை நியமிக்கும்.
  • வணிக ரீதியில் வாடகைத் தாய்களை பயன்படுத்துபவர்களுக்கு 10 ஆண்டு சிறை, 10 லட்சம் அபராதம்



காஷ்மீரில் துணை நிலை ஆளுநர், கூடுதலாக 7 தொகுதி
  • புதிதாக உருவாக்கப்படும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு துணை நிலை ஆளுநர் நியமிக்கப்படுவார் என்றும், கூடுதலாக 7 சட்டப் பேரவைத் தொகுதிகள் உருவாக்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது.
  • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக மாற்ற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
  • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைப் பிரித்து புதிதாக உருவாக்கப்படும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு துணை நிலை ஆளுநர் நியமிக்கப்படுவார்.
  • மேலும் தற்போது ஜம்மு-காஷ்மீரில் 87 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. அதை 114-ஆக மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தொகுதி வரையறைக்குப் பின்னர் பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும்.
  • தற்போதுள்ள 87 சட்டப் பேரவைத் தொகுதிகளில் லடாக் பகுதியிலுள்ள 4 தொகுதிகளும் அடங்கும். தற்போது லடாக் பகுதியும் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்படுவதால் ஜம்மு-காஷ்மீரிலுள்ள பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 83ஆக இருக்கும்.
  • மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமித் துள்ள காஷ்மீர் பகுதியில் 24 பேரவைத் தொகுதிகள் உள்ளன. இரண்டையும் சேர்க்கும்போது ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத் துக்கு 107 பேரவைத் தொகுதி கள் இருக்கும். இந்த 107 தொகுதிகளையும் தொகுதி மறுவரையறை மூலம் 114 சட்டப் பேரவைத் தொகுதிகளாக மாற்றப்படும்.
  • லடாக் யூனியன் பிரதேசத்துக்கு சட்டப் பேரவை இருக்காது. லடாக்கில் கார்கில், லே மாவட்டங்கள் உள்ளடங்கியுள்ளன.
  • மேலும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அமையும் சட்டப் பேரவை தொகுதிகளின் எண்ணிக்கையின்படி 10 சதவீத அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம்பெறலாம். முதல்வரும், துணை நிலை ஆளுநரும் அரசு விவகாரங்களைக் கவனித்துக் கொள்வர். 
  • மேலும் சட்டப் பேரவைத் தொகுதிகளில் இடஒதுக்கீடும் செய்யப்படும். அரசமைப்புச் சட்டத்தில் உள்ளபடி பேரவையில் எஸ்சி, எஸ்டி தொகுதிகள் உருவாக்கப்படும்.
  • ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப் பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளதால் இனிமேல் அங்கு தனி அரசமைப்புச் சட்டம் இருக்காது. மேலும் ஜம்மு-காஷ்மீருக்கென தனி கொடியும் இருக்காது என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
  • மற்ற மாநிலங்களைப் போலவே ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் 5 ஆண்டு சட்டப் பேரவையே அமையும். அங்குள்ள ரன்பீர் பீனல் கோட் எனப்படும் ரன்பீர் குற்றவியல் சட்டத்துக்குப் (ஆர்பிசி) பதிலாக இந்திய குற்றவியல் சட்டமே (ஐபிசி) அங்கு நடைமுறைப்படுத்தப்படும்.
  • மற்ற மாநிலங்களிலும் 356-ஆவது பிரிவைப் பயன்படுத்துவது போலவே அங்கும் அந்தப் பிரிவைப் பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. 
  • இனி காஷ்மீரில் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் நிலங்களை வாங்க முடியும், தகவல் அறியும் உரிமைச் சட்டமும் (ஆர்டிஐ) இங்கு இனி செயல்படுத்தப்படும். 
திருநங்கைகள் உரிமை பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேறியது
  • திருநங்கைகளின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி தொடர்பான உரிமைகள் பாதுகாப்பு மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நேற்று நிறைவேற்றப்பட்டது. 
  • இந்த மசோதா குறித்து பேசிய சமூக நீதித்துறை மந்திரி ரத்தன் லால் கட்டாரியா, 'திருநங்கைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஒரு தேசிய அதிகாரத்தை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
  • 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாட்டில் 4.80 லட்சத்துக்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளனர். திருநங்கைகள் பிச்சை எடுப்பது குற்றச்செயல் என்ற சர்ச்சைக்குரிய விதி நீக்கப்பட்டுவிட்டது.
  • இந்த மசோதாவின் படி, பாலியல் அறுவை சிகிச்சை மற்றும் ஹார்மோன் சிகிச்சை ஆகியவற்றை மேற்கொள்ளாதபோது கூட ஒரு ஆண் அல்லது பெண் தங்களை திருநங்கைகளாக அடையாளம் காண அவர்களுக்கு உரிமை உண்டு' என்றார்.



ஜம்மு காஷ்மீர் மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றம் - ஆதரவு & எதிர்ப்பு எவ்வளவு?
  • ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்படுவதாக ராஜ்யசபாவில் அறிவித்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. 
  • மேலும், அம்மாநிலத்தை இரண்டாகப் பிரித்து யூனியன் பிரதேசங்களாக அறிவிக்க, நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதற்கான மசோதாவையும் ராஜ்யசபாவில் தாக்கல் செய்தார் அமித்ஷா.
  • இந்த மசோதா மீதான விவாதம் நேற்று காலையில் தொடங்கியது. திமுக, திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்த மசோதாவை எதிர்த்து ஆற்றிய உரை நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • ஆனால், இந்த மசோதாவிற்கு அதிமுக மட்டுமல்ல, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி மற்றும் தெலுங்குதேசம் உள்ளிட்ட பாரதீய ஜனதாவுக்கு ஆகாத கட்சிகளும் ஆதரவு தெரிவித்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. மேலும், பிஜு ஜனதாதளக் கட்சியின் ஆதரவும் கிடைத்தது.
  • பின்னர் நடந்த வாக்கெடுப்பில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக குரல் வாக்கெடுப்பில் பிரச்சினை ஏற்படவே, மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதனையடுத்து, மசோதாவிற்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 61 வாக்குகளும் பதிவாக, மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது.
உலக டென்னிஸ் தரவரிசை பட்டியல் வெளியீடு - முதலிடத்தில் செர்பியா வீரர் ஜோகோவிச்
  • உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியா வீரர் ஜோகோவிச் (12,415 புள்ளிகள்) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். 
  • ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் (7,945 புள்ளிகள்) 2-வது இடத்திலும், சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (7,460 புள்ளிகள்) 3-வது இடத்திலும், ஆஸ்திரியா வீரர் டோமினிக் திம் (4,775 புள்ளிகள்) 4-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.
  • கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தையும், ஜப்பான் வீரர் நிஷிகோரி ஒரு இடம் ஏற்றம் கண்டு 6-வது இடத்தையும், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 2 இடம் சரிந்து 7-வது இடத்தையும் பிடித்துள்ளனர். 
  • ரஷிய வீரர் கரன் கச்சனோவ் 8-வது இடத்தில் தொடருகிறார். ரஷிய வீரர் மெட்விடேவ் ஒரு இடம் முன்னேறி 9-வது இடத்தையும், தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் ஒரு இடம் முன்னேறி 10-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel