Type Here to Get Search Results !

31st AUGUST 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

கீழடி அகழாய்வில் சூது பவளம், வெள்ளிக் காசு, செப்புப் பொருள் கண்டெடுப்பு
  • சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடந்து வரும் 5-ஆம் கட்ட அகழாய்வில் சூது பவளம், வெள்ளிக் காசு மற்றும் செப்புப் பொருள் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.
  • சூது பவளம் என்ற அரிய வகை கற்கள் குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களில் காணப்படுகின்றன. சூது பவளம், சங்க காலத்தில் மதிப்புள்ள பொருளாக கருதப்பட்டுள்ளது.
  • இந்த வகை கல்லால் செய்யப்பட்ட அணிகலன்களை மன்னர்கள் மற்றும் செல்வந்தர்கள் மட்டுமே அதிகமாகப் பயன்படுத்தியுள்ளனர்.
  • ஏற்கெனவே கீழடியில் செப்புக் காசு கிடைத்துள்ள நிலையில், தற்போது வெள்ளிக் காசும் கிடைத்துள்ளது. இதன்மூலம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் செப்பு மற்றும் வெள்ளி ஆகிய உலோக காசுகளை பயன்பாட்டில் வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
  • அதேபோல் செப்புப் பொருளும் கிடைத்துள்ளதால், மண்டபாண்டப் பொருள்களுடன் அவர்கள் செப்பு பொருள்களையும் பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.
புதுச்சேரியில் புறவழிச்சாலைக்கு கருணாநிதி பெயர் - கிரண்பேடி அனுமதி
  • புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள மேற்கு புறவழிச்சாலைக்கு கருணாநிதியின் பெயர் சூட்ட ஆளுநர் கிரண்பேடி அனுமதி அளித்துள்ளார்.
  • அதேபோல், புதுச்சேரியில் இந்திராகாந்தி சிலை முதல் ராஜிவ்காந்தி சிலை வரை உள்ள சாலைக்கும் கருணாநிதியின் பெயர் சூட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



ரூ.190 கோடி முதலீடு - தமிழ்நாட்டில் டூசன் பாப்கேட்டின் முதல் இந்தியத் தொழிற்சாலை
  • இந்தியாவில் திறக்கப்படும் முதல் தொழிற்சாலை இது. சென்னைக்கு அருகே உள்ள கும்மிடிப்பூண்டியில் திறக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் உற்பத்தி தொடங்கிவிட்டது. 21.6 ஏக்கரில் திறக்கப்பட்ட இதில் ஒரு ஆண்டுக்கு 8000 பி900 வகை பேக்ஹோ லோடர்கள் தயாரிக்கப்பட உள்ளன. இந்தத் தொழிற்சாலையில் அடுத்த 5 ஆண்டுகளில் 190 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளது இந்நிறுவனம்.
  • தயாரிப்பு தொழிற்சாலை, அசெம்ப்ளி, சேமிப்புக் கிடங்கு மற்றும் பெயின்ட் ஷாப் கொண்ட இந்தத் தொழிற்சாலையை முழுக்க முழுக்க சென்னையில் உள்ள டீம் உருவாக்கியுள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் மினி எக்ஸ்கவேட்டர் மற்றும் ஸ்கிட் ஸ்டீர் லோடர் போன்ற இயந்திரங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்கிறது.ஸ்கிட் ஸ்டீர் லோடர்
கறுப்பு பண பட்டியல் : இன்று ஒப்படைக்கும் சுவிஸ்
  • ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகள் கறுப்பு பணத்தை பதுக்கி வைப்போரின் சொர்க்க பூமியாக திகழ்கின்றன. முறைகேடாக சம்பாதித்த பணத்தை சுவிஸ் வங்கிகளில் பலரும் பதுக்குகின்றனர். 
  • நம் நாட்டை சேர்ந்த அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் பலரும் அங்கு கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து மத்திய அரசின் நேர்முக வரிகள் வாரியத்தின் அதிகாரிகள் சுவிட்சர்லாந்து அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினர். 
  • இதன் அடிப்படையில் தங்கள் நாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை வெளியிட சுவிஸ் அதிகாரிகள் சம்மதம் தெரிவித்தனர்.
  • இதையடுத்து மத்திய நேர்முக வரிகள் வாரிய அதிகாரிகளிடம் சுவிஸ் வங்கி அதிகாரிகள் கறுப்பு பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்களின் பற்றிய பட்டியலை இன்று ஒப்படைக்கவுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel