Thursday, 15 August 2019

14th & 15th AUGUST 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

இஸ்ரோ தலைவர் சிவனுக்கு தமிழக அரசு சார்பில் அப்துலக்கலாம் விருது
 • இஸ்ரோ தலைவர் சிவனுக்கு தமிழக அரசு சார்பில் அப்துலக்கலாம் விருது வழங்கப்பட உள்ளது. வீரதீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது மீன்வளத் துறை துறை இயக்குநர் ரம்யாலட்சுமிக்கு தரப்பட உள்ளது. 
பழநி பஞ்சாமிர்தத்திற்கு 'புவிசார் குறியீடு'
 • ஒரு குறிப்பிட்ட இடத்தை குறிக்கும்படி உள்ள பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. அந்த பொருள் தரத்துடன், மக்களின் நன்மதிப்பையும் பெற்றிருக்க வேண்டும். 
 • திருப்பதியில் லட்டு போல, பழநி முருகன் கோயிலின் பிரசாதமான 'பஞ்சாமிர்தம்' உலக பிரசித்திபெற்றது. எனவே பழநி பஞ்சாமிர்தத்திற்கு கடந்த 2016ம் கோயில் நிர்வாகம் புவிசார் குறியீடு பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. 
 • தற்போது சென்னை தாம்பரத்தில் உள்ள இதற்கான மையம் டில்லியில் உள்ள தலைமையகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. தமிழக கோயில்களில் முதன்முறையாக பிரசாதத்திற்கென புவிசார் குறியீடு பெறுவது பழநி பஞ்சாமிர்தத்திற்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லையில் கொள்ளையர்களை வீரத்துடன் விரட்டியடித்த தம்பதிக்கு அதீத துணிவுக்கான விருது
 • நெல்லையில் கொள்ளையர்களை வீரத்துடன் விரட்டியடித்த தம்பதிக்கு அதீத துணிவுக்கான விருது என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விருதை வழங்குகிறார்.
23 தமிழக காவலர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது
 • நாட்டின் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தைச் சேர்ந்த 23 காவலர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 
 • அதேபோல், சிறந்த பொதுச் சேவைக்காக 16 காவலர்களுக்கு தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளன.`12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது!' - பர்கூரில் சோழர்காலத்து நடுகல் கண்டுபிடிப்பு
 • கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே சின்ன காரக்குப்பம் கிராமத்தில் சோழர் காலத்தைச் சேர்ந்த அரியவகை நடுகல் ஒன்று புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 • இந்த நடுகல் போரில் உயிர் இறந்த வீரனுக்காகவும், அவனுடன் உடன்கட்டை ஏறிய அவனின் மனைவிக்காகவும் எடுக்கப்பட்டதாகும்.நடுகல்
 • நடுகல் 12 -ம் நூற்றாண்டைச் சேர்ந்தது.இதில் வீரன் ஒருவன் வலது கையில் குறுக்கு வாட்டில் வாள் பிடித்தபடிஇருக்கிறான். அவனதுஇடது கையில் சிறிய குத்து வாளும் உள்ளது. காதில் வட்டக் குழை, கைகளில் காப்பு ஆகியவற்றைஅணிந்துள்ளான்.
 • அந்த வீரனுக்கு வலப்பக்கத்தில் பெண் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் இடக்கையில் மலர் கொத்தும், வலதுகையில் மதுக் குடுவையும் வைத்திருக்கிறாள்.
 • இதன் மூலம் அந்தப் பெண் வீரனின் மனைவி என்றும் தன் கணவன் இறந்தவுடன் அவளும் சதி எனும் உடன்கட்டை ஏறும் வழக்கம் மூலம் தனது உயிரை மாய்த்துக் கொண்டாள் என்பதை அறியமுடிகிறது.
2,000 ஆண்டுகள் பழமையான உணவு குவளை கண்டுபிடிப்பு
 • கீழடியில், 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட உணவு குவளையை, தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 
 • சிவகங்கை மாவட்டம், கீழடியில், 47 லட்சம் ரூபாய் செலவில், ஐந்தாம் கட்ட அகழாய்வு பணி நடக்கிறது. ஜூன், 13 முதல் நடந்து வரும் ஆய்வில், பானை, பானை ஓடுகள், மூடிகள், பழங்கால சுவர்கள், உறைகிணறு உள்ளிட்டவற்றை, தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
 • இந்த உறைகிணறு மூலம், 2,000 ஆண்டுகளுக்கு முன், இங்கு வாழ்ந்த மக்கள், நீர் மேலாண்மை திட்டத்தை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
 • அகழாய்வில், 2,000 ஆண்டுகளுக்கு முன், மண்ணால் செய்த உணவு குவளையை கண்டறிந்துள்ளனர். இதன் வாய் அகன்ற நிலையில், பாத்திரத்தின் உள்ளே கருப்பு, வெளியே சிவப்பு நிறமாக, காட்சி அளிக்கிறது.
காவல் ஆணையரகத்துக்கு, 'நல் ஆளுமை விருது'
 • மாநகர காவல் ஆணையரகம் சார்பில், குற்றங்களைத் தடுக்க, அடுக்குமாடி கட்டடங்கள் மற்றும் முக்கிய சாலைகளில், மொத்தம், 2.50 லட்சம், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 
 • இதனால், குற்றங்கள், 50 சதவீதத்திற்கு மேல் குறைந்து உள்ளன.குற்றவாளியின் முக தோற்றத்தை வைத்து, அவர் நடமாட்டத்தை கண்காணிக்கும், 'மொபைல் ஆப்' செயல்படுத்தப் பட்டு உள்ளது. 
 • மேற்கண்ட செயல்களை பாராட்டி, சென்னை மாநகர காவல் ஆணையரகத்திற்கு, 'நல் ஆளுமை' விருதை, முதல்வர், இ.பி.எஸ்., நேற்று வழங்கினார்
 • அதேபோல, வேலுார் மாவட்டத்தில் உள்ள, நாகநதி ஆற்றுக்கு, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், புத்துயிர் அளிக்கப்பட்டுஉள்ளது.வணிக வரித்துறை சார்பில், வரி செலுத்துவோர், ஜி.எஸ்.டி., முறைக்கு மாறுவது குறித்த தகவல்களைப் பெற, புதிய பதிவெண் குறித்த விபரங்களை பெற, 'மொபைல் ஆப்' உருவாக்கப்பட்டுள்ளது.
 • இவற்றை பாராட்டி, உள்ளாட்சி துறை மற்றும் வணிக வரித்துறைக்கு, 'நல் ஆளுமை விருது' வழங்கப்பட்டது. உள்ளாட்சித் துறை அமைச்சர், வேலுமணி, வணிக வரித் துறை அமைச்சர், வீரமணி, சென்னை போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் அதிகாரிகள், முதல்வரிடம் விருது பெற்றனர்.மீன்வளத்துறை அதிகாரிக்கு'கல்பனா சாவ்லா' விருது
 • கடலுார் மாவட்டத்தில், மீன்வளத் துறை உதவி இயக்குனராக பணிபுரிபவர், ரம்யா லட்சுமி. மீன் வளத்தை கடுமையாக பாதிக்கும், தடை செய்யப்பட்ட, சுருக்குமடி வலைகளின் பயன்பாட்டை, தன் துணிச்சலான, தொடர் நடவடிக்கைகளால் கட்டுப்படுத்தினார்.கடல் வளத்தை பாதுகாத்து, மீனவர்களின் வாழ்வாதாரத்தை நிலைநாட்டி உள்ளார்.
 • தன் துணிச்சலான நடவடிக்கையால், தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தை, சிறப்பாக அமல்படுத்தினார்.
 • அவரது செயலை பாராட்டி, 2019ல், துணிவு மற்றும் சாகச செயலுக்கான, கல்பனா சாவ்லா விருதை, முதல்வர், இ.பி.எஸ்., நேற்று வழங்கினார்.அவருக்கு, 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, தங்க முலாம் பூசப்பட்ட பதக்கம், சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டன.
புதிதாக 2 மாவட்டங்கள்; தமிழகத்தில் உதயம்
 • ''வேலுார் மாவட்டம் பிரிக்கப்பட்டு புதிதாக இரண்டு மாவட்டங்கள் உருவாக்கப்படும்'' என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
 • பெரிய மாவட்டமாக உள்ள வேலுார் மாவட்டத்தை பிரிக்கும்படி அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதை பரிசீலித்து நிர்வாக வசதிக்காக வேலுாரை தலைமையிடமாகக் கொண்ட ஒரு மாவட்டம்; திருப்பத்துாரை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம்; ராணிப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்ட மற்றொரு புதிய மாவட்டம் உருவாக்கப்படும்.
முதல்வர் & அமைச்சர்களுக்கான அணிவகுப்பு மரியாதையை ரத்துசெய்த நவீன் பட்நாயக்
 • சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்களில் முதல்வர் மற்றும் மாநில அமைச்சர்களுக்கு அளிக்கப்படும் அணிவகுப்பு மரியாதை சடங்கை ரத்துசெய்துள்ளார் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்.
 • தன் காரிலிருந்து சிவப்பு ஹாரன் விளக்கை கழற்றிய முதல் முதலமைச்சர்களில் நவீன் பட்நாயக்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 • எனவே, தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையானது விஐபி கலாச்சாரத்தின் மீது தொடுக்கப்பட்ட இரண்டாவது தாக்குதல்.
முப்படைகளுக்கும் ஒரே தளபதி: பிரதமர்
 • இந்தியாவின் முப்படைகளுக்கும் ஒரே தளபதி இருப்பார் என பிரதமர் மோடி, சுதந்திர தின உரையில் குறிப்பிட்டார். 
 • நாட்டின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றி, பிரதமர் மோடி பேசியதாவது: முப்படைகளே, இந்தியாவின் பெருமை. படைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேலும் செம்மைபடுத்த செங்கோட்டையில் இருந்து முக்கிய முடிவை அறிவிக்க விரும்புகிறேன். 
 • இந்தியாவில் ஒரு பாதுகாப்பு தளபதி இருப்பார். இது படைகளை இன்னும் திறமையாக செயல்பட வைக்க உதவும். பேருந்துகளில் இனி பெண்களுக்கு இலவசம் மாநில முதல்வர்
 • டெல்லியில் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும் அக்டோபர் 29 ஆம் தேதியிலிருந்து டெல்லி போக்குவரத்து கழக பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் எனவும் கூறியுள்ளார்.
அபிநந்தனுக்கு,'வீர்சக்ரா' விருது
 • பாலகோட் தாக்குதலை தொடர்ந்து, பிப்., 27ல், இந்திய எல்லைக்குள் பாகிஸ்தானின், 'எப் - 16' ரக போர் விமானங்கள் புகுந்தன. அவற்றை, நம் விமானப்படை வீரர்கள் விரட்டியடித்தனர்.
 • பாக்., போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்திய, நம் விமானப்படை, விங் கமாண்டர், அபிநந்தன், 'பாராசூட்' மூலம் தப்பிக்கும் போது, எதிர்பாராதவிதமாக, பாகிஸ்தான் பகுதியில் விழுந்து, அந்நாட்டு ராணுவத்திடம் சிக்கினார்.
 • பின், இந்தியா கொடுத்த நெருக்கடிக்கு பயந்து, அபிநந்தனை இரண்டே நாட்களில், பாகிஸ்தான் விடுவித்தது. அபிநந்தனின் வீரத்தை கவுரவிக்கும் வகையில், அவருக்கு, இன்று நடக்கும் சுதந்திர தின விழாவில், வீர்சக்ரா விருது வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பிரகாஷ் ஜாதவுக்கு கீர்த்தி சக்ரா விருது; மேலும் 8 பேருக்கு செளரியா சக்ரா விருது
 • ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் வீரமரணம் அடைந்த 5 வீரர்கள் உட்பட 8 பேருக்கு செளரியா சக்ரா விருது வழங்கப்படுகிறது. 
 • நாட்டின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சியில் விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்குகிறார். 
 • இதனிடையே காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பிரகாஷ் ஜாதவுக்கு கீர்த்தி சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளி உலக 'டி-20': இந்திய அணி சாம்பியன்
 • மாற்றுத் திறனாளிகளுக்கான உலக 'டுவென்டி-20' கிரிக்கெட் சீரிஸ் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பைனலில், 36 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
பத்தாண்டில் 20,018 ரன்கள் - கோஹ்லி புதிய சாதனை
 • சர்வதேச கிரிக்கெட்டில் பத்தாண்டுகளில் 20,000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார் கோஹ்லி. கடந்த 2010 முதல் 371 போட்டிகளில், 6 இரட்டை சதம், 67 சதம், 92 அரைசதம் உட்பட 20,018 ரன்கள் எடுத்துள்ளார்.
TNPL சேப்பாக்கம் அணி சாம்பியன்
 • டி.என்.பி.எல்., தொடரில் சேப்பாக்கம் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பைனலில், 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திண்டுக்கல் அணி, தொடர்ந்து 2வது முறையாக பைனலில் வீழ்ந்தது.
 • இரண்டாவது முறையாக (2017, 2019) சாம்பியன் பட்டம் வென்ற சேப்பாக்கம் அணிக்கு, கோப்பையுடன் ரூ. ஒரு கோடி பரிசு வழங்கப்பட்டது. திண்டுக்கல் அணிக்கு ரூ. 60 லட்சம் கிடைத்தது.
சூப்பர் கோப்பை: லிவர்பூல் சாம்பியன்
 • சூப்பர் கோப்பை கால்பந்து தொடரில் லிவர்பூல் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பரபரப்பான போட்டியில் 5-4 என, 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் செல்சி அணியை வீழ்த்தியது.
 • 4வது முறையாக கோப்பை வென்றது. 
 • இதற்கு முன், 1977, 2001, 2005ல் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.
தொடரை கைப்பற்றியது இந்தியா
 • இந்திய அணி 2-0 என தொடரையும் கைப்பற்றியது. 
 • இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆட்ட மற்றும் தொடர் நாயகன் விருதுகளை பெற்றார்.

TNPSCSHOUTERS

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment