Type Here to Get Search Results !

5th,6th & 7th JULY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

2019-2020-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்
  • நாடாளுமன்றத்தில் 2ஆவது பெண் நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன் 2019-2020-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டாகும்.
  • சூட்கேஸுக்கு பதிலாக சிவப்பு நிற பையில் பட்ஜெட் ஆவணங்களை கொண்டு வந்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரையை தொடங்கி வைத்த நிர்மலா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 
  • "சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் ஆகியவை வெற்றிபெற முடியும் என்பதை நாங்கள் செய்து காட்டியுள்ளோம்" என்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.



Budget 2019: மத்திய பட்ஜெட் சிறப்பம்சங்கள்
  • ரயில் நிலையங்களை நவீனமயமாக்க மாபெரும் திட்டம் மேற்கொள்ளப்படும். தேசிய அளவில் விளையாட்டு மேம்பாட்டு வாரியம் அமைக்கப்படும்.
  • ஏர் இண்டியா நிறுவனத்தின் பங்குகள் விற்பனை புதிய உத்தியுடன் மீண்டும் துவக்கப்படும். ஒரு லட்சத்து ஐயாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விரைவில் புதிய வரிசையிலான நாணயங்கள் வெளியிடப்படும். 20 ரூபாய் நாணயம் விரைவில் வெளியிடப்படும்.
  • புதிய வரி விதிப்புகளால் தங்கம், பெட்ரோல், டீசல் விலை உயரும்.
  • ரூ.5 கோடிக்கும் குறைவாக விற்றுமுதல் உள்ள நிறுவனங்கள் மாத மாதம் ஜிஎஸ்டி தாக்கல் செய்ய தேவையில்லை.
  • ஜிஎஸ்டி நடைமுறையை மேலும் எளிமையாக்க நடவடிக்கை.
  • ரூ.5 கோடிக்கும் அதிகமாக வருமானம் உள்ளவர்களுக்கு கூடுதலாக 7% வரி.
  • ஆண்டுக்கு ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை வருமானம் உள்ளவர்களுக்கு 3% கூடுதல் வரி.
  • டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை வங்கிகளே ஏற்க வேண்டும். வாடிக்கையாளர்கள் செலுத்த தேவையில்லை.
  • வருமான வரி விசாரனைக்கு நேரில் ஆஜராகத் தேவையில்லை.
  • ஆண்டுகு ரூ. 1 கோடிக்கும் அதிகமாக வங்கி கணக்கில் இருந்து ரொக்கப் பணம் எடுத்தால் 2 சதவீதம் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும்.
  • பான் கார்டு இல்லாமலும் ஆதார் கார்டு கொண்டு வருமான வரி செலுத்தலாம்.
  • 15 ஆண்டுகள் வீட்டுக் கடனுக்கு 7 லட்சம் ரூபாய் வரை மிச்சமாகும்.
  • குறைந்த விலை வீடு வாங்குபவர்களுக்கு வரி சலுகை 3.50 லட்சமாக அதிகரிப்பு.
  • வருமான வரி வரம்பில் புதிய அறிவிப்புகள் இல்லை; இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வருமான வரி சலுகை தொடரும்.
  • கடனில் மின்சார வாகனங்கள் வாங்குபவர்களுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை வரி சலுகை.
  • வீட்டு வசதி நிதித் துறையை இந்திய ரிசர்வ் வங்கி ஒழுங்குபடுத்தும். அடுத்த ஐந்தாண்டுகளில் கட்டமைப்புத் துறையில் 100 லட்சம் கோடி ஒதுக்கப்படும்.
  • தனியார் மற்றும் அரசு பங்களிப்புடன் மகளிர் மேம்பாட்டு திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை.
  • இந்திய பாஸ்போர்ட் உடனான வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு நாடு திரும்பிய உடன் 180 நாட்கள் காத்திருப்பு இல்லாமல் ஆதார் அட்டை வழங்க அரசு முன்மொழியும்.
  • ஓவ்வொரு சுய உதவிக் குழுவிலும் ஒரு பெண்ணுக்கு ரூ.1 லட்சம் கடன் உதவி வழங்கப்படும்.
  • வேளாண் சார்ந்த ஊரகத் தொழில் துறையில் 75 ஆயிரம் தொழில் முனைவோரை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நாட்டில் உள்ள பல்வேறு தொழிலாளர் சட்டங்கள் நெறிப்படுத்தப்படும். முறைசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கப்படும். உஜாலா யோஜனா திட்டத்தின் மூலம் நாட்டின் 35 கோடி எல்ஈடி விளக்குகள் வழங்கப்பட்டுள்ளதன.
  • நாட்டில் தூய்மை இந்தியா திட்டம் விரிவுபடுத்தப்படும். நாட்டில் உள்ள 95 சதவீத நகரங்களில் திறந்த வெளியில் மலம் கழிக்கும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது. நாட்டில் புதிய தேசிய கல்விக் கொள்கை கொண்டுவரப்படும். இதன்மூலம் நாட்டில் உயர்கல்வியின் தரம் மேம்படுத்தப்படுவதோடு, பள்ளிகளின் கல்வித்தரமும் மேம்படுத்தப்படும். தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை அமைக்கப்படும். பல்வேறு அமைச்சகங்களிலிருந்து வழங்கப்படும் நிதி தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையில் ஒருங்கிணைக்கப்படும்.
  • பொதுத் துறை வங்கிகளுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டு மூலதனம்.
  • மின்சார வாகனங்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கப்படும். பிரதம மந்திரி கிராம் யோகி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் பயன்பெற ஆதார் அடையாள அட்டை மட்டுமே போதுமானது. இதற்கு ஆண்டுக்கு ரூ.20 லட்சம் கோடி முதலீடு தேவைப்படுகிறது. தடங்கலற்ற முதலீட்டுக்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
  • ஒரு லட்சத்து 25 ஆயிரம் கிலோமீட்டர் தூர சாலைகள் மேம்படுத்தப்படும். மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் கிராமங்கள், ஏழை மக்கள் மற்றும் விவசாயிகளின் மேம்பாட்டுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும். விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • நாட்டின் இறக்குமதி செலவைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் அனைத்து மக்களுக்கும் குடிநீர் வசதி அளிப்பதற்கு அரசு முன்னுரிமை அளிக்கும்.
  • காப்பீட்டு நிறுவனங்களில் 100 சதவீத அந்நிய முதலீடு அனுமதிக்கப்படும். இந்தியா விண்வெளித்துறையில் சக்திவாய்ந்ததாக உருவாகியிருப்பதாக குறிப்பிட்ட அவர், இந்தத் துறை தற்போது வர்த்தகமயமாக்கப்படுவது அவசியமாகியுள்ளது என்றும் தெரிவித்தார்.
  • சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் சமூகப் பங்கு சந்தை ஏற்படுத்தப்படும்.
  • சிறுவியாபாரிகள், சிறு கடைகள் போன்றவற்றில் ஆண்டு விற்றுமுதல் ஒன்றரை கோடி ரூபாய்க்குள் இருந்தால் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். இதன்மூலம் 3 கோடி வர்த்தகர்கள் பயன்பெறுவார்கள்.
  • சரக்குகளை நீர்வழிப் போக்குவரத்து மூலம் எடுத்துச் செல்வது ஊக்கப்படுத்தப்படும்
  • மின்சக்தித்துறையில் ஒரே நாடு ஒரே கிரிட் என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.
  • சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ 1 கோடி வரை கடன் வழங்கப்படும்.
  • வாடகை, குத்தகை சட்ட நடைமுறைகள் இன்றைய காலத்துக்குப் பொருந்தாத வகையில் மிகவும் பழமையானதாக உள்ளது. குத்தகை எடுப்பவருக்கும் குத்தகை விடுபவருக்கும் இடையேயான உறவு நியாயமான முறையில் இருப்பதில்லை. மத்திய அரசு இதற்கான சட்ட நடைமுறைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும்.
  • கார்ப்பரேட் கடன் சந்தை சீரமைப்புக்கு கண்காணிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.
  • தன்னார்வ நிறுவனங்களை செபியின் கீழ் பட்டியலிட நடவடிக்கை எடுக்கப்படும்.
  • 2018-19 நிதியாண்டில் அன்னிய முதலீடு வலுவான நிலையில் உள்ளது.
  • விமான போக்குவரத்து மற்றும் ஊடகத்துறையில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க திட்டம்..
  • இஸ்ரோவின் வணிகரீதியான செயல்பாடுகளுக்காக புதிய அமைப்பு தொடங்கப்படும்.
  • விமானப் போக்குவரத்து மற்றும் ஊடகத்துறையில் அந்நிய முதலீடுகளை அனுமதிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசிக்கும். தன்னார்வ நிறுவனங்கள் நிதி ஆதாரங்களை திரட்டுவது வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறும்.
  • இலவச சமையல் எரிவாயு திட்டம், சவுபாக்யா திட்டங்கள் மக்களின் வாழ்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளன.
  • அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 9.9 கோடி வீடுகள் கட்டப்படும்.
  • 13,000 கிராம சாலைகள் பசுமை திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளன.
  • விவசாய ஆன்லைன் சந்தைகள் மூலம் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுவோம். வேளாண்துறை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
  • வருகிற 2022-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் மின்சார வசதி ஏற்படுத்தப்படும். பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா என்ற திட்டத்தின் மூலம் 80,200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 1,25,000 கி.மீ தொலைவுக்கான சாலைகள் மேம்படுத்தப்படும்.
  • 2024-க்குள் ஒவ்வொரு வீட்டுக்கும் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்வோம்.
  • 5.6 லட்சம் கிராமங்களில் திறந்தவெளி கழிப்பறைகள் ஒழிக்கப்பட்டுள்ளன.
  • கல்வியில் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள புதிய அமைப்பு உருவாக்கப்படும்.
  • இந்தியாவின் உயர்கல்வியை உலக தரத்திற்கு மேம்படுத்துவதற்காக புதிய கல்விக் கொள்கை.
  • 5 ஆண்டுகளுக்கு முன் உலக தரவரிசையில் முதல் 200 இடங்களில் ஒரு இந்திய பல்கலைக்கழகம் கூட இல்லை; தற்போது 3 கல்வி நிறுவனங்கள் உள்ளன.



அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன வெடிகுண்டை வாங்கும் இந்தியா
  • அதிநவீன வெடிகுண்டை வாங்குகிறது இந்தியா... அமெரிக்காவிடம் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கையும் தாக்கி தகர்க்கும் அதி நவீன வெடிகுண்டை இந்திய ராணுவம் வாங்குகிறது.
  • எக்ஸ் கேலிபர் ரகத்தை சேர்ந்த அந்த வெடிகுண்டை, தொலைதூரத்தில் இருந்தும் ரிமோட் மூலம் இயக்க முடியும். பயங்கரவாதிகள் அல்லது நாட்டின் எதிரிகள் மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் பதுங்கி இருந்தாலும் கூட, அந்த கட்டிடத்தின் மீது இந்த குண்டுகளை வீசினால், அவை , இலக்குகளை மட்டுமே துளைத்து உள்ளே சென்று வெடிக்கும் தன்மை கொண்டவை.
பிரெய்னி புளும்ஸ்க்கு சர்வதேச விருது
  • புதுச்சேரி பிரெய்னி புளும்ஸ் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.சி., பள்ளிக்கு சிறந்த சர்வதேச பள்ளிக்கான விருது வழங்கப்பட்டதுசர்வதேச கல்வி பணி சாதனையாளர்களின் 12வது மாநாடு துபாயில் நடந்தது. 
  • இம்மாநாட்டில், பல்வேறு நாடுகளை சார்ந்த சாதனை பள்ளிகளுக்கு விருது வழங்கப்பட்டது. இதில் புதுச்சேரி பிரைனிபுளும்ஸ் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.சி. பள்ளிக்கு, இந்தாண்டிற்கான சிறந்த சர்வதேச பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது. 
திருவள்ளூரில் 58 அடுக்குகள் கொண்ட சங்ககால கிணறு கண்டுபிடிப்பு 
  • திருவள்ளூர் மாவட்டத்தில் அதிரம்பாக்கம், குடியம், வடமதுரை, நெய்வேலி, பரிக்குளம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கற்கால வாழ்விடங்கள் உள்ளன. பட்டரை பெருமந்தூர் கிராமத்தில் பல்லவ மன்னர் அபராஜித வர்மன் கால கல்வெட்டுகளும், முதலாம் குலோத்துங்கன் சோழர் கால கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன.
  • இங்கு 2015 முதல் நடந்துவரும் அகழ்வாய்வுப் பணிகளில் 203 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பழங்கற்காலம், இடைக்காலம், புதிய கற்காலம் சார்ந்த கற்கருவிகள், முதலாம் ராஜராஜ சோழன் கால செப்புக்காசு போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • 58அடுக்குகளைக் கொண்ட செங்கற்களாலான கிணறும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழந்தமிழர் கட்டட கலைக்குச் சான்றாகவும், நீர் மேலாண்மைக்கு உதாரணமாகவும் இந்த கிணறு பார்க்கப்படுகிறது. கீழடி போன்று இங்கும் அகழ்வாராய்ச்சிகளை விரிவுப்படுத்தினால், தமிழரின் தொன்மைக்குச் சான்றான பொருட்கள் கிடைக்கலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்
கிழடியில் அகழ்வு ஆய்வின் போது கண்டறியப்பட்ட இரட்டைச்சுவரின் தொடர்ச்சி நவீன கருவி மூலம் ஆய்வு
  • சிவகங்கை மாவட்டம் கிழடியில் அகழ்வு ஆய்வின் போது கண்டறியப்பட்ட இரட்டைச்சுவரின் தொடர்ச்சி நவீன கருவி மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஜி.பி.ஆர். கருவி மூலம் இரட்டைச் சுவரின் வடக்கு, மேற்கு, தெற்கு பகுதியில் 25 மீட்டர் தூரத்திற்கு ஆய்வு பணி நடந்து வருகிறது. 
யுனெஸ்கோ பாரம்பரிய நகர பட்டியலில் ஜெய்ப்பூர்
  • ஜெய்ப்பூர் 'பிங்க் நகரம்' என அழைக்கப்படுகிறது. தனித்துவமான கட்டிடங்கள், அங்குள்ள கலாசாரம் ஆகியவை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இருக்கிறது. 
  • இந்த நகரை, நினைவிடங்கள் மற்றும் தலங்களுக்கான சர்வதேச குழு, கடந்த ஆண்டு ஆய்வு செய்து, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய இடத்துக்கான பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்தது.
  • அஜர்பைஜன் நாட்டில் உள்ள பாகு நகரில் நடந்துவரும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய கமிட்டியின் 43-வது கூட்டத்தில், இந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டது. 



சிகாகோ உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்காக ரூ. 1 கோடி நிதிஉதவி தமிழக அரசு அறிவிப்பு
  • சிகாகோ உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்காக ரூ. 1 கோடி நிதிஉதவி தமிழக அரசு அறிவித்துள்ளது. மாநாட்டை நடத்தும் உலகத்தமிழ் ஆராய்ச்சிமன்றத்தின் கோரிக்கைகளை ஏற்று தமிழக அரசு நிதிஒதுக்கீடு அளித்துள்ளது. உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் தமிழகம் சார்பில் தமிழறிஞர்கள் உள்பட 20 பேர் பங்கேற்றுள்ளனர்.
29-வது சர்வதேச தடகள போட்டியில் தங்கம் வென்றார் தமிழகத்தைச் சேர்ந்த முகமது சலாவுதீன்
  • 29-வது சர்வதேச தடகள போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த முகமது சலாவுதீன் தங்கப்பதக்கம் வென்றார். கஜகஸ்தானில் ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் 16.64 மீட்டர் பிரிவில் முகமது சலாவுதீன் தங்கப் பதக்கம் வென்றார்.
ஒரே உலக கோப்பையில் ஐந்து சதம் ரோகித் சர்மா புதிய சாதனை
  • இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கையை சந்தித்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் ரோகித் சர்மா, 103 ரன்கள் விளாசினார். இதையடுத்து ஒரே உலக கோப்பை தொடரில் ஐந்து சதம் அடித்த முதல் வீரர் என புதிய சாதனை படைத்தார் ரோகித் சர்மா. இவர் 2019 தொடரில் இதுவரை 5 சதம் (122, 140, 102, 104, 103) அடித்தார்.
  • குறைந்த இன்னிங்சில் (16) 6 சதம் அடித்து சாதனை படைத்தார் ரோகித் சர்மா.
  • உலக கோப்பை தொடரில் இதற்கு முன் இலங்கையின் சங்ககரா 2015ல் 4 சதம் அடித்ததே அதிகம்.
  • உலக கோப்பை தொடரில் 1000 ரன்னுக்கும் மேல் எடுத்த இந்திய வீரர்களில் சச்சின், கங்குலியுடன் இணைந்தார் ரோகித்.
  • உலககோப்பை தொடரில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய வீரர்களில் யுவராஜ் சிங்குடன் (2011) இணைந்து முதலிடம் பெற்றார் ரோகித் (2019). இருவரும் தலா 4 முறை ஆட்ட நாயகன் ஆகினர். சச்சின் (2003ல் 3 முறை) 2வதாக உள்ளார்.
ஜெர்மன் கிராண்ட்பிரி மோட்டார் சைக்கிள் பந்தயம் : 10வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற மார்க் மார்க்ஸ்
  • ஜெர்மன் கிராண்ட்பிரி மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஸ்பெயின் வீரர் மார்க் மார்க்ஸ் 10வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். 
  • நடப்பு சீசனில் 9வது போட்டியாக இந்த போட்டி ஜெர்மனியின் சாக்சனி பகுதியில் நடைபெற்றது. ஹோண்டா அணியின் மார்க் மார்க்ஸ் தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வெற்றியைத் தட்டிச் சென்றார். மற்றொரு ஸ்பெயின் வீரர் இரண்டாம் இடத்தையும், பிரிட்டன் வீரர் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.



உலக கோப்பை: சுவீடன் 3வது இடம்
  • பிரான்சில் பெண்களுக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நைஸ் நகரில் நடந்த மூன்றாவது இடத்திற்கான போட்டியில் சுவீடன், இங்கிலாந்து அணிகள் மோதின. போட்டியின் 11வது நிமிடத்தில் சுவீடன் அணியின் கொசோவரா முதல் கோல் அடித்தார். 
  • 22வது நிமிடத்தில் சோபியா கைகொடுக்க, சுவீடன் அணியின் கோல் எண்ணிக்கை இரண்டாக மாறியது. இதற்கு, இங்கிலாந்து சார்பில் கிர்பி (31வது நிமிடம்) மட்டும் பதிலடி தந்தார். முடிவில், சுவீடன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம், சுவீடன் மூன்றாவது முறையாக (1991, 2011, 19) மூன்றாவது இடம் பிடித்தது.
மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்கா சாம்பியன்
  • மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்க அணி சாம்பியன் பட்டம் வென்றது. விறுவிறுப்பு நிறைந்த இறுதிப்போட்டியில் நெதர்லாந்து அணியை இரண்டுக்கு பூஜ்யம் என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி அமெரிக்க அணி வாகை சூடியது.
  • இதன் மூலம் மகளிர் உலகக்கோப்பையில் அமெரிக்க அணி நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
கோபா அமெரிக்கா கால்பந்து வெண்கலம் வென்றது அர்ஜென்டினா
  • கோபா அமெரிக்கா கால்பந்து போட்டித் தொடரில், அர்ஜென்டினா அணி வெண்கலப் பதக்கம் வென்றது.பிரேசில் நாட்டில் நடைபெற்ற இந்த தொடரின் மூன்றாவது இடத்துக்காக அர்ஜென்டினா - சிலி அணிகள் பலப்பரீட்சையில் இறங்கின. 
  • சா பாலோ நகரின் கோரிந்தியன் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் அர்ஜென்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் சிலி அணியை வீழ்த்தியது.
  • அர்ஜென்டினா சார்பில் செர்ஜியோ ஆகுவரோ 12வது நிமிடத்திலும், பாலோ டைபாலா 22வது நிமிடத்திலும் கோல் போட்டனர். சிலி அணி வீரர் அர்டுரோ விடால் 59வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார். அர்ஜென்டினா அணி 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel