மோட்டார் வாகன சட்ட திருத்தம் 2019 / INDIAN MOTOR LAW 2019


 • மோட்டார் வாகன சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் புதிய விதிகள் நிறைய அமலுக்கு வந்து இருக்கிறது. இனி அபாரதங்கள் இதன் மூலம் கூடுதலாக விதிக்கப்படும் .
 • சில நாட்களுக்கு முன் மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு விட்டது. இதையடுத்து தற்போது மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
 • மொத்தம் 93 மாற்றங்கள் இந்த புதிய மசோதாவில் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் புதிய விதிமுறைகள் நிறைய தற்போது அமலுக்கு வந்துள்ளது. அதேபோல் பல விதி மீறல்களுக்கு அபராத தொகை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.மாற்றப்பட்ட விதிகள்

 • ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டினால் 5,000 ரூபாய் வசூலிக்கப்படும். முன்பு 500 ரூபாய்.
 • காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றால் 1000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்.
 • இன்சூரன்ஸ் இல்லாமல் வண்டிகளை ஓட்டினால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம்.
 • வாகனத்தை விபத்து ஏற்படுத்துவது போல ஓட்டினால் 5,000 ரூபாய் அபராதம்.
 • பொது விதிமுறைகளை மீறும்போது ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும்.
 • குடித்துவிட்டு ஓட்டினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம். முன்பு 2000 ரூபாய் அபராதம்.
 • காப்பீடு இல்லாமல் ஓட்டினால் 2000 ரூபாய் அபராதம். முன்பு ஆயிரம் ரூபாய்.
 • அதிக எடை சுமந்து சென்றால் 2000 ரூபாய் அபராதம். முன்பு வெறும் 200 ரூபாய் மட்டுமே அபராதம்.
 • வாகனம் ஓட்டும் நபர்கள் செய்யும் சிறிய தவறுகளுக்கு இனி அபராதம் 500 ரூபாய். முன்பு 100 ரூபாய்.
 • ஓலா, உபேர் போன்ற டாக்ஸி சேவை செய்யும் நிறுவனங்களுக்கான உரிமம் வழங்குவது இதன் மூலம் சரி செய்யப்படும்.
 • வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறும்போது 3 ஆண்டு வரை சிறைத்தண்டனை.
 • 18 வயதிற்கு குறைவானவர்கள் வாகனம் ஓட்டினால் அதன் உரிமையாளருக்கு 25,000 ரூபாய் அபராதம் மேலும் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

0 Comments

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel