Type Here to Get Search Results !

14th JULY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

சந்திராயன் 2 விண்கலம் ஏவப்படுவது தொழில்நுட்ப கோளாறு காரணமாக  தள்ளி வைக்கப்பட்டது
  • சந்திராயன் 2 விண்கலம் ஏவப்படுவது தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணில் செலுத்துவது குறித்து முடிவெடுக்க 10 நாட்களுக்கு மேலாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
  • சந்திராயன் 2 விண்கலம் ஏவப்படுவது கடைசி நேரத்தில் திடீரனெ நிறுத்தப்பட்டது.நிலவின் தென்துருவத்தை ஆராய செல்லும் முதல் விண்கலம் என்ற பெருமையை பெற்றுள்ளது சந்திராயன் 2.
  • நிலவின் தென்துருவத்தில் சந்திராயன் 2 விண்கலத்தை இறக்கி, வரலாற்று சாதனை படைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டது இஸ்ரோ. சந்திராயன் 2 விண்கலத்தை ஏவுவதற்காக நேற்று காலை 20 மணி நேர கவுண்டவுன் துவங்கியது.
  • ஆனால் கிரையோஜெனிக் நிலையில் கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சந்திராயன் 2 விண்கலத்தை ஏவ சரியாக 56 நிமிடங்கள் 24 நொடிகள் இருக்கும் போது, கவுண்டவுன் திடீரென நிறுத்தப்பட்டது. பின்னர் சந்திராயன் 2 ஏவுவது தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்தது இஸ்ரோ.
5 மணிநேரம் நீடித்த விம்பிள்டன் டென்னிஸ் பைனல் ஆட்டம் ரோஜரை வீழ்த்தி சாம்பியன் ஆனார் ஜோகோவிச்
  • 'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. 
  • இந்நிலையில் 4 முறை சாம்பியனான ஜோகோவிச் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ரோஜர் பெடரரை (சுவிட்சர்லாந்து) எதிர்கொண்டார். சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இப்போட்டியில் ஜோகோவிச் 7-6, 6-1, 7-6, 4-6, 13-12 என்ற செட் கணக்கில் ரோஜர் பெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
3வது தங்கம்: ஹிமா தாஸ் சாதனை
  • செக் குடியரசின் கிளாட்னோ நகரில் நடைபெற்ற சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவர் 23.43 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பிடித்தார். 
  • முன்னதாக, போலந்தில் ஜூலை 2 மற்றும் 7ம் தேதிகளில் நடைபெற்ற தடகள சாம்பியன்ஷிப் தொடர்களிலும் ஹிமா தாஸ் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். 



தொடர்ச்சியாக 11வது வெற்றி விஜேந்தர் அசத்தல்
  • தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில், இந்திய வீரர் விஜேந்தர் சிங் தொடர்ச்சியாக 11வது வெற்றியை வசப்படுத்தி அசத்தியுள்ளார்.அமெரிக்காவில் நடைபெறும் குத்துச்சண்டை போட்டியில் முதல் முறையாக நேற்று களமிறங்கிய விஜேந்தர் (33 வயது, அரியானா) உள்ளூர் நட்சத்திரம் மைக் ஸ்நைடரை எதிர்கொண்டார். 
  • நியூயார்க் நகரின் புருடென்ஷியல் மையத்தில் நடைபெற்ற இந்த போட்டி 4 சுற்றுகள் நீடித்தது. அமெரிக்க வீரரின் தாக்குதலை சமாளித்து திறமையாக செயல்பட்ட விஜேந்தர் டெக்னிகல் நாக்-அவுட் செய்து தொடர்ச்சியாக 11வது வெற்றியை பதிவு செய்தார்.இதில் அவர் 8 முறை நாக்-அவுட் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்கம் வென்றார் வினேஷ் போகத்
  • துருக்கியில் நடந்த யாசர் டோகு சர்வதேச மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் 53 கிலோ எடை பிரிவில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தங்கப் பதக்கம் வென்றார்.
  • பைனலில் ரஷ்யாவின் எகடரினா போல்ஷுக்குடன் நேற்று மோதிய வினேஷ் போகத் 9-5 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். க
  • டந்த வாரம் ஸ்பெயின் கிராண்ட் பிரீ தொடரில் தங்கம் வென்றிருந்த வினேஷ், தற்போது இஸ்தான்புல் தொடரிலும் முதலிடம் முடித்து முத்திரை பதித்துள்ளார்.
உலக சாம்பியன்ஷிப்புக்கு முகமது அனாஸ் தகுதி
  • செக் குடியரசில் நடைபெறும் கிளாட்னோ தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர் முகமது அனாஸ், உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க தகுதி பெற்றார். 4
  • 5.21 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பிடித்த அனாஸ், தனது தேசிய சாதனையையும் (45.24 விநாடி) முறியடித்தார். 
  • உலக சாம்பியன்ஷிப் ஆண்கள் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்துக்கான தகுதி 45.30 விநாடி என்பது குறிப்பிடத்தக்கது. 
  • இந்த தொடர் தோஹாவில் செப்டம்பர் 27ம் தேதி தொடங்கி அக்டோபர் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. 



உலக கோப்பை வரலாற்றின் முதன்முறையாக கோப்பையை வென்ற இங்கிலாந்து
  • உலக கோப்பை இறுதி போட்டி செம த்ரில்லான போட்டியாக அமைந்தது. கடைசி பந்தில் போட்டி டிரா ஆனதை அடுத்து சூப்பர் ஓவரில் இங்கிலாந்து அணி 15 ரன்கள் அடிக்க, 16 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணியும் 15 ரன்கள் அடிக்க சூப்பர் ஓவரும் டிராவில் முடிந்தது.
  • உலக கோப்பை இறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இதையடுத்து 50 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 241 ரன்கள் மட்டுமே எடுத்தது. 
  • இதையடுத்து இங்கிலாந்து அணியும் 241 ரன்கள் அடித்ததால் போட்டி டிரா ஆனது. 
  • இதையடுத்து சூப்பர் ஓவர் போடப்பட்டது. ஐசிசி விதிப்படி இரண்டாவதாக பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது. இங்கிலாந்து அணி சூப்பர் ஓவரில் 15 ரன்கள் அடித்தது. 
  • சூப்பர் ஓவரில் 16 ரன்கள் என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி சார்பில் கப்டில் மற்றும் நீஷம் ஆகிய இருவரும் களமிறங்கினர். 
  • சூப்பர் ஓவரும் டிராவில் முடிந்ததால் இந்த உலக கோப்பையில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற வகையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
  • உலக கோப்பை வரலாற்றில் இந்த மாதிரி முடிந்த முதல் போட்டி இதுதான். இதையடுத்து உலக கோப்பை வரலாற்றில் இங்கிலாந்து அணி முதன்முறையாக கோப்பையை வென்றது.
பிரிட்டிஷ் பார்முலா1 கார்பந்தய போட்டியில் ஹாமில்டன் முதலிடம்
  • 2019 ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 10-வது சுற்றான பிரிட்டிஷ் கிராண்ட்பிரி பந்தயம் அங்குள்ள சில்வர்ஸ்டோன் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. 
  • 306.198 கிலோமீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரை மின்னல் வேகத்தில் செலுத்தினர். நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 21 நிமிடம் 08.452 வினாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்து 26 புள்ளிகளை தட்டிச்சென்றார். இந்த சீசனில் அவர் பெற்ற 7-வது வெற்றி இதுவாகும்.
தொடர் நாயகன் விருதை வென்றார் வில்லியம்ஸன்
  • உலகக் கோப்பை கிரிக்கெட்டின் தொடர் நாயகன் விருதை நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் வென்றார்.
  • ஆனால், பேட்டிங் சராசரி 82.57 உடன், 578 ரன்கள் குவித்து அணியை சிறப்பாக வழிநடத்தி இறுதி ஆட்டம் வரை கொண்டுவந்த கேன் வில்லியம்ஸன் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel