Type Here to Get Search Results !

15th MAY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

பயிர் காக்க போராடிய வீரனுக்கு நடுகல் வெள்ளகோவிலில் கண்டுபிடிப்பு
  • பயிரை பாதுகாப்பதற்காக, காட்டுப்பன்றியுடன் போராடி, வீரமரணம் எய்திய வீரருக்கான நடுகல், வெள்ளக்கோவில் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • வேளாண் தொழிலின் அச்சாணியாக விளங்கிய பயிர்களை பாதுகாப்பது, வீரமறவர்களின் கடமையென, தமிழர்கள் வாழ்ந்துள்ளனர். பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் காட்டுப்பன்றிகளை கொல்வது மிகவும் சிரமம். காட்டுப்பன்றியுடன் போரிட்டு வீரமரணம் எய்தும் வீரர்களுக்கு, 'பன்றி குத்திப்பட்டான் நடுகல்' நட்டு வழிபட்டுள்ளனர்.
  • வெள்ளக்கோவிலில் கண்டறியப்பட்ட நடுகல், 145 செ.மீ., உயரமும், 85 செ.மீ., அகலமும் உள்ளது.நடுகல்லின் சிறப்பம்சமே, வீரன் பன்றியுடன் போராடும் போது, நன்றியுள்ள வேட்டை நாய், பன்றியின் இடது பின்னங்காலை தாக்கிக் கொண்டிருப்பது தான். நடுகல்லில் எழுத்து எதுவும் இல்லை. கி.பி., 16ம் நுாற்றாண்டை சேர்ந்தது என்று தெரிய வருகிறது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்துக்கு புதிய ஐ.ஜி. நியமனம்
  • தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் மூலம் நடத்தப்பட்ட விரல்ரேகைப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. 
  • இந்த வழக்கில் தேர்வாணையம் சார்பில் ஓர் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த அறிக்கை போலி அறிக்கை என்றும், அறிக்கை தயாரித்தவர் ஐ.ஐ.டி. பேராசிரியரே இல்லை என்றும் நீதிமன்றத்துக்கு தெரியவந்தது. 
  • இந்நிலையில், சீருடைப் பணியாளர் தேர்வுக் குழும ஐ.ஜி. என்.கே.செந்தாமரைக்கண்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். 
  • சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் ஐ.ஜி.யாக வித்யா ஜெயந்த் குல்கர்னி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் நிரஞ்சன் மார்டி தேர்தல் ஆணையத்தின் அனுமதியோடு புதன்கிழமை பிறப்பித்துள்ளார்.
வருகிறது, 'டிஜிட்டல் ஹெல்த் லாக்கர்':மத்திய அரசின் புதிய தகவல் சேமிப்பு திட்டம்
  • இந்திய மக்கள் ஒவ்வொருவரின் மருத்துவ விபரங்களையும், மின்னணு முறையில் சேமிக்கும், 'டிஜிட்டல் ஹெல்த் லாக்கர்' திட்டத்தை, மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
  • தற்போது, பான், ஆதார், ஓட்டுனர் உரிமம், மாணவர்களின் மதிப்பெண் போன்ற முக்கிய ஆவணங்களை, மின்னணு தொழில்நுட்பத்தில் பாதுகாக்க, 'டிஜி லாக்கர்' என்ற மொபைல் போன், 'ஆப்'ஐ, மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
  • இதன் மூலம், எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், மொபைல் போன் வாயிலாக, தேவையான ஆவணங்களை பார்க்கலாம்.பரிந்துரைபோக்குவரத்து போலீசாரிடம், ஓட்டுனர் உரிமத்தை காண்பிக்கவும், ரயில் பயணத்தில், பரிசோதகரிடம், ஆதார் விபரத்தை வழங்கவும், டிஜி லாக்கர் பெரிதும் உதவுகிறது.
  • அதுபோல, மக்களின் ஆரோக்கிய பராமரிப்பு குறித்த விபரங்களை பாதுகாப்பாக சேமித்து வைக்க, 'டிஜிட்டல் ஹெல்த் லாக்கர்' என்ற மொபைல் போன் ஆப் வெளியிட, மத்திய சுகாதர அமைச்சகத்திற்கு, தேசிய மின்னணு சுகாதார திட்டக் குழு பரிந்துரைத்துள்ளது.
  • அத்துடன், இந்த லாக்கரை பயன்படுத்த, ஒவ்வொருவருக்கும், பி.எச்.ஐ., என்ற தனிநபர் சுகாதார அடையாள எண் மற்றும் 'பாஸ்வேர்டு' வழங்க வேண்டும் எனவும், தெரிவிக்கப் பட்டுள்ளது.இதன் மூலம், ஒவ்வொருவரும், தங்களின் அனைத்து மருத்துவ சிகிச்சை விபரங்கள், பரிசோதனை முடிவுகள் போன்றவற்றை, இந்த லாக்கரில் சேமிக்கலாம்.



23-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த நேபாளி பெண் ஷெர்பா
  • நேபாளத்தைச் சேர்ந்த 49 வயதான ஷெர்பா எவரெஸ்ட் சிகரத்தை 23-வது முறையாக ஏறி சாதனை படைத்துள்ளார்.
  • காமி ரீடா ஷெர்பா என்பவர் கடந்த ஆண்டு எவரெஸ் சிகரத்தை 22-வது முறையாக ஏறி சாதனை படைத்தார்.
  • சொலுகும்பு மாவட்டம் தாமே கிராமத்தைச் சேர்ந்த ஷெர்பா புதன்கிழமை காலை 7.50 மணி அளவில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்.
  • உலகின் மிகப் பெரிய மலையான இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தை 23-வது முறையாக ஏறி சாதனை படைத்தார்.
  • கடந்த 1994-ம் ஆண்டு முதல் காமி ரீடா ஷெர்பா எவரெஸ்ட் சிகரத்தை ஏறி வருகிறார். இதன்மூலம் அவரது முந்தைய சாதனையை அவரே முறியடித்துள்ளார்.
2,500 ஆண்டு பழங்கால 200 கல் படுக்கைகள் கண்டுபிடிப்பு!- தொல்லியல் துறை ஆய்வு செய்யக் கோரிக்கை
  • சேலம் மாவட்டம், கொளத்தூரை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கத்திரிமலை அடிவாரம் குத்தேரிக்கல்காடு என்ற பகுதியில் ஒரே இடத்தில் 200-க்கும் மேற்பட்ட 2500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கல்படுக்கை, கல்வட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
  • இந்தக் கல் படுக்கைகள் கீழே மூன்று புறம் கற்கள் நிறுத்தி வைக்கப்பட்டு மேலே பெரிய வட்ட வடிவமான கல் படுக்க வைக்கப்பட்டுள்ளது. ஒரு புறத்தின் வழியாகக் கல் படுக்கைக்குள்ளே செல்ல முடியும். 
  • சில கல்படுக்கைகள் நான்கு புறத்திலும் கற்கள் நிறுத்தப்பட்டு மேலே வட்ட வடிவமான கல் படுக்க வைக்கப்பட்டுள்ளது. கல்படுக்கை அருகே பழங்கால மண் குடங்கள் உடைந்த நிலையில் இருந்தது. பல கல்படுக்கைகள் சிதிலமடைந்து அழிந்து போகும் தறுவாயில் இருக்கிறது.
  • இக்கல்படுக்கைகளை பாண்டியர் திட்டு என்று அழைப்பதாகவும், பாண்டியர் காலத்தில் நெருப்பு மழை பொழிந்ததாகவும், மக்கள் நெருப்பு மழைக்குப் பயந்து இந்த கல்படுக்கைகளை உருவாக்கியதாகவும் சொன்னார்கள். 
  • கி.மு.800 முதல் கி.பி.300 ஆண்டு வரை பெருங்கற்காலமாக கருதப்படுகிறது. குத்தேரிக்கல்காடு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டவை உயிர் நீர்த்தாரின் ஈமச் சின்னம். 
பன்மொழி விக்கிபீடியாவுக்கு சீனா தடை
  • இணையதள தகவல் களஞ்சியமான பன்மொழி விக்கிபீடியாவுக்கு, சீனா முழுமையாக தடை விதித்துள்ளது.
  • விக்கிபீடியா இணையதள தகவல் களஞ்சியத்தில், சீன மொழி தவிர்த்து ஏராளமான மாற்று மொழிகளில் விவரங்களை தேடுவதற்கு சீனாவில் தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், தடை செய்யப்படும் மொழிகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டு வந்தன.
  • தற்போது அனைத்து மாற்று மொழிகளும் தடை செய்யப்பட்டு, பன்மொழி விக்கிபீடியா முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.
  • சீன மொழில் அளிக்கப்படும் தணிக்கை செய்யப்பட்ட தகவல்களை மட்டுமே சீனர்கள் விக்கிபீடியாவில் பெற முடியும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
2018-ம் ஆண்டில் மட்டும் 207 இந்தியர்கள் குடியுரிமை துறப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்
  • கடந்த 2018-ம் ஆண்டு 207 இந்தியர்கள் குடியுரிமையை துறந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • கடந்த 2010-ம் ஆண்டு வரை 290 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர். 2018-ம் ஆண்டு மட்டும் 207 பேர் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர்.
  • 2012 முதல் 2015 வரை இந்திய குடியுரிமையை யாரும் துறக்கவில்லை.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel