Type Here to Get Search Results !

12th MAY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

நீரில் இயங்கக்கூடிய புதிய இன்ஜின்" - ஜப்பானில் ஒரு தமிழர் சாதனை
  • சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் தண்ணீர் மூலம் இயங்கக்கூடிய இன்ஜினை கோயம்புத்தூரை சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் வடிவமைத்துள்ளார்.
  • மெக்கானிக்கல் இன்ஜினியரான சௌந்திரராஜன் குமாரசாமி என்பவர், கடந்த 10 ஆண்டுகளாக கடின உழைப்பு மேற்கொண்டு புதிய வகை இன்ஜின் ஒன்றை வடிவமைத்துள்ளார். (Distilled water) நீரால் இயங்கக்கூடிய இந்த இன்ஜினானது, சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஹைட்ரஜனை எரிபொருளாக எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளியிடும் வகையில் இந்த இன்ஜின் உருவாக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நிதியில் இருந்து மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ரூ.10,500 கோடி ஒதுக்கீடு
  • மெக்சிகோ எல்லை வழியாக அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதை தடுக்க அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்ப வேண்டும் என்பது டிரம்பின் திட்டமாகும். 
  • இதற்காக நிதி ஒதுக்கும்படி நாடாளுமன்றத்தில் டிரம்ப் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிப்பட்டதை தொடர்ந்து, அவசர நிலையை பிரகடனப்படுத்தினார்.
  • இந்த நிலையில் பயங்கரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு வழங்கி வரும் நிதியுதவியில் இருந்து 1.5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10,500 கோடி) தொகை மெக்சிகோ எல்லை சுவர் திட்டத்துக்கு ஒதுக்க இருப்பதாக ராணுவ மந்திரி பேட்ரிக் சனாஹன் தெரிவித்துள்ளார்.
மே 14 முதல் கோவையில் தேசிய இளையோர் கூடைப்பந்து
  • கோவையில் 36-ஆவது தேசிய அளவிலான இளையோர் கூடைப்பந்து போட்டி வரும் 14-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
  • இந்திய கூடைப்பந்து சம்மேளனம் சார்பில் 57 ஆண்டுகளுக்குப் பிறகு கோவையில் தேசிய கூடைப்பந்து போட்டி நடைபெறுகிறது. கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள இப்போட்டியில் நாடு முழுவதும் 25 மாநிலங்களில் இருந்து 16 வயதுக்கு உள்பட்ட 700-க்கும் மேற்பட்ட கூடைப்பந்து வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.



2-வது முறையாக இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கோப்பையை தட்டிச் சென்றது மான்செஸ்டர் சிட்டி
  • இங்கிலாந்தில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் ஆண்டுதோறும் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் அதிக புள்ளிகள் பெறும் அணி சாம்பியன் பட்டம் வெல்லும்.
  • மான்செஸ்டர் சிட்டி 95 புள்ளிகளும், லிவர்பூல் 94 புள்ளிகளும் பெற்றிருந்தது. மான்செஸ்டர் தோல்வி அல்லது டிரா செய்து, லிவர்பூல் அணி சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்பு இருந்தது.
  • இந்நிலையில் இன்று இரு அணிகளும் கடைசி லீக் பொடியில் மோதின. மான்செஸ்டர் சிட்டி வெற்றி பெற்றால் மட்டுமே சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியும் என்ற நிலையில், பிரைட்டன் அணியை எதிர்கொண்டது. இதில் மான்செஸ்டர் சிட்டி 4-1 என எளிதில் வெற்றி பெற்றது. இதனால் புள்ளிகள் பட்டியலில் 98 புள்ளிகள் பெற்றது.
  • அதேவேளையில் லிவர்பூல் வோல்வர்ஹாம்ப்டன் அணியை 2-0 என வீழ்த்தியது. இதனால் லிவர்பூல் 97 புள்ளிகள் பெற்றது. இங்கிலீஷ் பிரிமீயர் தொடரை கடைசி 10 வருடத்தில் வென்ற ஒரே அணி மான்செஸ்டர் சிட்டியாகும்.
நான்கு முறை ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 20 கோடி பரிசு
  • ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் 1 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. 
  • முதல் இடத்தை தட்டி சென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 20 கோடி பரிசாக வழங்கப்பட்டது. 2-வது இடத்தை பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 12.5 கோடி வழங்கப்பட்டது.
மாட்ரிட் ஓபன்: கிகி பெர்டென்ஸ் சாம்பியன்
  • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் கிகி பெர்டென்ஸ்.
  • முன்னாள் முதல்நிலை வீராங்கனை ருமேனியாவின் சிமோனா ஹலேப்புக்கும்--நெதர்லாந்தின் கிகி பெர்டென்ஸ்க்கும் இடையே சனிக்கிழமை இரவு இறுதி ஆட்டம் நடைபெற்றது இதில் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார் பெர்டென்ஸ்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel