Type Here to Get Search Results !

11th MAY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

கிழக்குத் தொடர்ச்சி மலையில் வாழும் 308 வகை பறவைகள்
  • கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடர் அமைந்துள்ள சேர்வராயன் மலையில் உள்ள ஏற்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 197 வகை பறவைகள் உயிர் வாழ்ந்ததாகப் பதிவு செய்துள்ளனர். ஏற்காடு மலைப் பகுதியில் பாறு கழுகுகள் எனப்படும் பிணந்தின்னிக் கழுகுகள், சாம்பல் நிற இருவாச்சி (கிரே ஹார்ன்பில்) பறவைகள் உயிர் வாழ்ந்ததாகப் பதிவு செய்துள்ளனர்.
  • அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் 2018, 2019-இல் மேற்கொள்ளப்பட்ட பறவைகள் கணக்கெடுப்பில் சுமார் 308 வகை பறவைகள் உயிர் வாழ்வது ஏற்காடு மலை அடிவாரம், ஏற்காடு மலை, கல்வராயன் மலை (கருமந்துறை) உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள வன சரகத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
மருத்துவ படிப்பில் பணியில் உள்ள ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்: உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • ராணுவத்தில் பணிபுரிந்தவர்களுக்கு கிடைக்கும் சலுகை, தற்போது பணியாற்றுபவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளையில் மதுரையை சேர்ந்த குறளரசன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். 
  • இந்த மனுவினை விரிவாக விசாரணை நடத்திய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தற்பாது ஒரு விரிவான உத்தரவை பிறப்பித்துள்ளார். அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், எம்பிபிஎஸ்/பிடிஎஸ் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கையில் படைப்பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பாக மத்திய அரசு 30.11.2017ல் பட்டியல் வெளியிட்டுள்ளது. 
  • அதில் 9 முன்னுரிமை பட்டியலில் 8வது முன்னுரிமை, பணியிலுள்ள வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மனுதாரர் 8வது முன்னுரிமை பட்டியலில் வருகிறார். 
  • தமிழகத்தில் எம்பிபிஎஸ்/பிடிஎஸ் படிப்பில் படைப்பிரிவினருக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலர் 1.6.2018ல் வெளியிட்ட அரசாணையில் மத்திய அரசின் முன்னுரிமை பட்டியலில் இடம் பெற்றிருந்த 9 முன்னுரிமைகளில் கடைசி 7 முதல் 9 வரையிலான முன்னுரிமை நீக்கப்பட்டுள்ளது. 
  • இதனால் மனுதாரருக்கு பணியிலுள்ள ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான முன்னுரிமை பெற முடியாமல் போயுள்ளது. அந்த வகையில் மத்திய அரசின் முன்னுரிமை பட்டியலில் இடம்பெற்றுள்ள கடைசி 3 முன்னுரிமை பட்டியல் இல்லாமல் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ஏற்க முடியாது.
  • பணியிலுள்ள ராணுவத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்காமல் உயர் கல்வியில் படைப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் நோக்கம் நிறைவேறாது. தமிழக அரசின் இந்த பாகுபாட்டை ஏற்க முடியாது. எனவே, தமிழக அரசு 2018ம் ஆண்டில் பிறப்பித்த அறிவிப்பாணை செல்லாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். 
  • மேலும், தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டு முதல் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பில் இடஒதுக்கீட்டு பிரிவில் பணியில் உள்ள ராணுவ வீரர்களின் வாரிசுகளையும் சேர்க்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 



விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி
  • விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டப்பணிகளை மேற்கொள்ள வேதாந்தா நிறுவதத்துக்கு அனுமதி அளித்துள்ளது. 
  • நிலம் மற்றும் கடலில் கச்சா எண்ணெய் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழகத்தின் 3 இடங்கள் உள்பட 55 புதிய இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கடந்த வருடம் ஜனவரியில் மத்திய அரசு டெண்டர் விட்டது. அதில், ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனத்துக்கு 41 இடங்களிலும், ஓஎன்ஜிசி-க்கு 2 இடங்களிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், டெண்டர் விடப்பட்டுள்ள 55 இடங்களில் 3 இடங்கள் தமிழகத்தில் உள்ளன. 
  • அதில், 2 இடங்களில் வேதாந்தா நிறுவனமும், ஒரு இடத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கும் ஹைட்ரோ கார்பன் எடுக்க உரிமம் கிடைத்துள்ளது. ஓஎன்ஜிசிக்கு நிலப்பகுதியும், வேதாந்தாவிற்கு கடற்பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விமானப்படைக்கு முதல் அபாச்சி ஹெலிகாப்டரை டெலிவரி செய்தது போயிங்
  • முதல் அபாச்சி ஹெலிகாப்டரை அமெரிக்காவின் போயிங் நிறுவனம் இந்திய விமானப்படையிடம் ஒப்படைத்துள்ளது. அமெரிக்கா ராணுத்தில் ஏஎச்-64ஈ அபாச்சி ரக ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படுகிறது. எதிரிகளின் இலக்குகளை தாக்குவதில் இந்த ஹெலிகாப்டர் முன்னணியில் இருக்கிறது. இதை அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரிக்கிறது. 
  • இந்த ரக ஹெலிகாப்டர்களை இந்திய விமானப்படைக்கு வாங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 2015ம் ஆண்டு 22 அபாச்சி ஹெலிகாப்டர்களை வாங்க போயிங் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. 
  • மூன்றரை ஆண்டுகளுக்குப் பின், முதல் அபாச்சி ஹெலிகாப்டரை, இந்திய விமானப்படையிடம் போயிங் நிறுவனம் நேற்று முறைப்படி ஒப்படைத்தது. முதல் பகுதியாக அனுப்பப்படும் சில ஹெலிகாப்டர்கள் வரும் ஜூலை மாதத்துக்குள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. 
இந்தியாவில் ஒரு பகுதியை முதன்முறையாக சொந்தம் கொண்டாடிய ஐ.எஸ்
  • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் பகுதியில் நேற்று பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவன் உயிரிழந்தான். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பயங்கரவாதி ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர் என்று கருத்தப்பட்டது.
  • இந்த சம்பவத்தை அடுத்து, ஐஎஸ் அமைப்பின் செய்தி இணையதளமான ‘Amaq News Agency’வில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தது. அதில், விலயாஹ் ஆஃப் ஹிண்ட் (Wilayah of Hind) என்ற பகுதியை தங்களுடைய புதிய மாகாணமாக ஐஎஸ் அறிவித்திருந்தது. 



மே 22ந்தேதி விண்ணில் பாய்கிறது: நாட்டின் பாதுகாப்பு பணிக்காக 'ரிசாட்-2' செயற்கை கோள்
  • நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக, ராணுவத்தின் செயல்பாடுகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே கடந்த 2008ம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவுவதை தடுக்கும் வகையில் 'ரேடார் இமேஜிங் சேட்டிலைட்' (ரிசாட்-2பிஆர்1) என்ற நவீன செயற்கைக் கோளை 2009-ம் ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி விண்ணில் செலுத்தியது.
  • இந்த செயற்கைகோல் இஸ்ரேல் நாட்டு உதவியுடன் தயாரிக்கப்பட்டு செலுத்தப்பட்டது. தற்போது வரை இந்த செயற்கைகோள் தனது பணியை செய்துவருகிறது.
  • இந்த நிலையில், நாட்டின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், 'ரிசாட்-2' செயற்கைக் கோளை அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
  • இந்தச் செயற்கைக்கோளை வரும் 22-ம் தேதி இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) விண்ணில் செலுத்த உள்ளது. பிஎஸ்எல்சி சி-46 ராக்கெட் மூலம் செலுத்தப்படும் இந்தச் செயற்கைக் கோள் பூமியில் இருந்து 536 கி.மீ உயரத்தில் நிலைநிறுத்தப்படும்.
  • 'ரிசாட்-2' செயற்கை;க கோள் இந்திய எல்லைப் பகுதிகளை 24 மணி நேரமும் கண்காணிக்கும் மேக மூட்டங்கள், பனி போன்ற எந்த சீதோஷ்ண நிலையிலும் துல்லியமாக செயல்படும் வகையிலும் தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும், புவி கண்காணிப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்பில் ராணுவத்துக்கு உதவியாக உளவுப் பணிகளை மேற்கொள்ளும்.
  • இந்தியாவின் நிலப்பரப்பு மற்றும் எல்லைப் பகுதிகளை துல்லியமாக கண்காணிக்கும். தெற்காசிய கடல் பகுதிகளில் கப்பல்கள், போர் விமானங்கள் ஊடுருவல் என எதிரிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும். குறிப்பாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உட்பட இந்திய எல்லைப் பகுதிகளில் தீவிரவாதிகளின் நடமாட்டம், அசைவுகளை கண்காணித்து உடனுக்குடன் தகவல் அனுப்பும் என்றும் இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
  • அத்துடன் இந்தச்செயற்கைக் கோளை பேரிடர் மேலாண்மைக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்து உள்ளது.
ஹர்மன்பிரீத் அசத்தல் அரைசதம்: சாம்பியன் பட்டத்தை வென்றது சூப்பர் நோவாஸ் அணி
  • மகளிர் ஐபிஎல் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் மூன்று அணிகள் அடங்கிய மகளிர் 20 சேலஞ்ச் கோப்பை முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொடரின் இறுதிப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மிதாலி ராஜ் தலைமையிலான வெலாசிடி அணியும், ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான சூப்பர் நோவாஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற சூப்பர் நோவாஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
  • 122 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஹர்மன்பிரீத்தின் சூப்பர் நோவாஸ் அணி களமிறங்கியது. 
  • இதையடுத்து, கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். 
  • இதன்மூலம், அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட மகளிர் டி20 சேலஞ்ச் கோப்பையை ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான சூப்பர் நோவாஸ் அணி வென்றது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel