- சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஒரு மறைமுக வரி, இது இந்தியா முழுவதும் மத்திய மற்றும் மாநிலஅரசாங்கங்களால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஒற்றை வரியாக அறிமுகப்படுத்தப்படுகிறது.
- இது அரசியலமைப்பு சட்டம் 2017 (நூற்று இருபத்து இரண்டாம் திருத்தச் சட்டம்)-ஆக அறிமுகமாகிறது. இந்த ச.சே.வரியானது ஜிஎஸ்டி சபை மற்றும் அதன் தலைவர் மத்திய நிதி அமைச்சர் இந்தியா - அருண் ஜெட்லியினால்நிர்வகிக்கப்படுகிறது.
- இந்த ச.சே.வரி-யின் கீழ், சரக்கு மற்றும் சேவைகளானது பின்வரும் விகிதங்களில் வரி விதிக்கப்படுகிறது அவை: 0%, 5%, 12%, 18%, 28% ஆகும். கடினமான விலைமதிப்பற்ற கற்கள் மீது 0.25% சிறப்பு விகிதமும் வடிவமற்ற அரைகுறைவான கற்கள் மற்றும் தங்கம் மீதும் 3% வரி விதிக்கப்பட்டுள்ளது.
- ச.சே. வரியானது 1 ஜூலை 2017 நள்ளிரவு முதல் துவக்கப்படுகிறது. இதனை பிரதமர் மோடி மற்றும் எதிர்க் கட்சிகள் முன்னிலையில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
வரலாறு
- பிப்பரவரி 1986 ல் அப்போதைய பிரதமர் வி.பி.சிங் வரி அமைப்பை மாற்ற முன் மொழிந்தார்.
- அதன்பின் 14 வருடங்கள் கிடப்பில் போடப்பட்ட ஜிஎஸ்டி மசோதா, அதன் பின் 2000ல் பாஜக வின் அடல் பிகாரி வாஜ்பாய் அறிமுகப்படுத்தினார்.இதற்காக நிதியமைச்சக ஆலோசகர் விஜய் கேல்கர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார்.
- 2006 பிப்ரவரி 28 ல் நடந்த பட்ஜெட் உரையில் காங்கிரஸ்-திமுக கூட்டனியின் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஜிஎஸ்டி பற்றி பேசினார்.
- 2010 ஏப்ரல் 1 முதல் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்படும் என கெடு விதித்தார்.இதை அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜக கடுமையாக எதிர்த்தது.
- பாஜக வின் கடும் எதிர்ப்பை மீறி அப்போதைய காங்கிரஸ் கூட்டனி ஜிஎஸ்டி தொடர்பான வேலைகளில் இறங்கியது.அதற்கு வசதியாக மாநில வரி அலுவலகங்களை 2010 பிப்ரவரி முதல் கணிணிமயமாக்கியது.
- ஆகஸ்ட் 2013 ல் நாடாளுமன்ற நிலைக்குழு ஜிஎஸ்டி மசோதாவைத் தாக்கல் செய்ய தயாராக இருந்தது. அப்போதைய நிதியமைச்சரான காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ப.சிதம்பரம் ஜிஎஸ்டியின் நோக்கம் பற்றி நாடாளுமன்றத்தில் பேசினார்.
- இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் வரி இழப்பு ஈடு செய்யப்படும் என்றும் அறிவித்தார். இதையும் பாஜக மிகக் கடுமையாக எதிர்த்தது. காங்கிரஸ் கூட்டனியில் இருந்த,கம்யூனிஸ்ட்,திமுக ஆதரித்தது.
- அக்டோபர் 2013ல்,ஜிஎஸ்டியால் எங்கள் மாநிலத்திற்கு கிட்டத்தட்ட 14000 கோடிகள் வருவாய் இழப்பு ஏற்படும் என அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திரமோடி கடுமையாக எதிர்த்தார்.
- 2014 ல் பாஜக ஆட்சிக்கு வந்தது.மோடி பிரதமரானார். டிசம்பர் 19,2014 ல் மத்திய நிதியமைச்சர் ஜிஎஸ்டி மசோதாவை அறிமுகப்படுத்தினார். 2016 ல் ஜிஎஸ்டி நாடாளுமன்றத்தில் பாஜக அரசு அறிமுகப்படுத்தியது. அதற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது.
- 2017,ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்தது. அதற்கான அறிமுக விழாவை காங்கிரஸ் புறக்கணித்தது. கூட்டனிக் கட்சிகளான கம்யூனிஸ்டும்,திமுகவும் புறக்கணித்தது.
- அப்போதைய காங்கிரஸ் கூட்டனிக் கட்சிகளான கம்யூனிஸ்டுகள்,திமுக மற்றும் இதர கட்சிகளின்,கனவுத் திட்டமான ஜிஎஸ்டியை பாஜக நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இதை காங்கிரஸ் கூட்டனி கட்சிகள் எதிர்க்கிறது..
- ஜிஎஸ்டி விவகாரத்தில் பல்வேறு காரணங்களை முன் வைத்து,துவக்கம் முதல் எதிர்ப்பை மட்டுமே பதிவு செய்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே.
- GST அமைப்பை வடிவமைத்த குழு- அசிம் தாஸ் குப்தா
- GST வரி அமைப்பை அமல்படுத்த பரிந்துரைத்த குழு- விஜய் கேல்கர்
- தற்போது இந்தியாவில் உள்ள GST இரட்டை வரி அமைப்பு எந்த நாட்டு மாதிரியை பின்பற்றுகிறது- கனடா
- GST சட்டத்திருத்த மசோதா பாரளுமன்றத்தில் முதன் முதலாக எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது- மார்ச் 22,2011
- GSTன் படி வரி வசூலிக்கும் அதிகாரம் எந்த சரத்தில் கூறப்பட்டுள்ளது- 246A
- GST விதி - 279A
- GST சட்டம் - 101
- GST சட்டத்திருத்த மசோதா - 122
- GST மசோதா ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் - ஆக 8,2016
- ஜனாதிபதி ஒப்புதல் - 8/9/2016
- GST சட்டம் கொண்டுவரப்பட்ட நாள் - 12/9/2016
- 15 மாநிலங்கள் ஏற்றுக் கொண்டத்தால் சட்டமாக்கப்பட்டுள்ளது.
- GST மசோதாவை ஏற்றுக் கொண்ட முதல் மாநிலம் - அசாம்
- 2வது - பீகார்
- 3வது - ஜார்கண்ட்
- கடைசியாக 16வது - ஒடிசா
- GST காரணமாக நீக்கப்பட்ட சரத்து - 268A
- சட்டதிருத்தம் செய்யப்பட்டுள்ள அட்டவணை - 6&7
- முதன் முதலில் நாடு=பிரான்ஸ் 1954
- ஜிஎஸ்டி மென்பொருள்=இன்போசிஸ்
GST COUNCIL பதவி
- தலைமை - நிதியமைச்சர் (அருண் ஜெட்லி)
- கூடுதல் செயலர் - அருண் கோயல்
- GST வரிவிதிப்பு ஒருங்கினைப்பு அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி - பிரகாஷ் குமார்
- GST கவுன்சில் முதல் கூட்டத்தொடர் - செப் 22&23
- GST மசோதா தொடர்பான குழு - அமித் மிர்சா
- ஜிஎஸ்டி மறைமுகவரி உறுப்பினர்கள் அனைத்து மாநில நிதியமைச்சர்
- சரக்கு மற்றும் சேவை வரி ( GST ) விளம்பர தூதுவராக அமிதாப்பச்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வரிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்றாக ச.சே.வ
- மத்திய கலால் வரி
- வணிக வரி
- மதிப்பு கூட்டு வரி (வாட்)
- உணவு வரி
- மத்திய விற்பனை வரி(CST)
- ஆக்ட்ரோய்
- பொழுதுபோக்கு வரி
- நுழைவு வரி
- கொள்முதல் வரி
- ஆடம்பர வரி
- விளம்பர வரி
- சரக்குகள் மற்றும் சேவைகளின் விற்பனை, பரிமாற்றம், கொள்முதல், பண்டமாற்று, குத்தகை, இறக்குமதி போன்ற அனைத்து பரிவர்த்தனைகளிலும் ச.சே.வ விதிக்கப்படும்.
- இந்தியா இரட்டை ஜி.எஸ்.டி மாதிரியைப் பின்பற்றும். இதன் பொருள் மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஜிஎஸ்டி வரியானது நிர்வகிக்கப்படும்.
- ஒரே மாநிலத்திற்குள் நடைபெறும் பரிவர்த்தனைகள் அனைத்துக்கும் மத்திய ஜிஎஸ்டி(ஆங்: Central GST (CGST)) ஒன்றிய அரசாலும், மாநில ஜிஎஸ்டி (ஆங்:State GST (SGST)) மாநில அரசினாலும் விதிக்கப்படும்.
- வெவ்வேறு மாநிலங்களுக்கிடையே நடைபெறும் பரிவர்த்தனைகள் மற்றும் சரக்கு அல்லது சேவை இறக்குமதிக்கு, ஒருங்கினைந்த ஜிஎஸ்டி (ஆங்:Integrated GST (IGST)) ஒன்றிய அரசினால் விதிக்கப்படும்.
- GST ஒரு நுகர்வு அடிப்படையிலான வரியாகும், இதனால் சரக்கு மற்றும் சேவைகள் உற்பத்தி செய்யப்படும் மாநிலத்தில் வரி வசூலிக்கப்படாது மாறாக நுகரப்படும் மாநிலத்தில் வரி வசூலிக்கப்படும்.
- IGST மாநில அரசுகள் வரி வசூலிப்பதை சிக்கலாக்குகிறது. முந்தைய அமைப்பில் வரி வசூலிப்பது மாநில அரசின் வரையறைக்குட்பட்டிருந்தது.
ஒத்திசைவு பெயரிடும் முறை (HSN code)
- ஒத்திசைவு பெயரிடும் முறை (HSN: Harmonized System of Nomenclature) என்பது ஜி.எஸ்.டி வரிவிகிதத்திற்கு உட்பட்டு பல்வேறு பொருள்களுக்கான வரிவிகிதத்தினை அடையாளம் காணக்கூடிய எட்டு இலக்க குறியீடாகும்.
- ரூ1.5கோடிக்கு கீழே கடந்த நிதியாண்டில் விற்றுமுதல் கொண்ட நிறுவனம் ஓ.பெ.மு குறியீட்டினை(HSN code) தனது விலைப்பட்டியலில் குறிப்பிடவேண்டாம்.
- ரூ1.5 கோடி முதல் 5கோடி வரை கடந்த நிதியாண்டில் விற்றுமுதல் கொண்ட நிறுவனம் இரண்டு இலக்க எண்ணிலான ஓ.பெ.மு குறியீட்டினை(HSN code) தனது விலைப்பட்டியலில் குறிப்பிடவேண்டும்.
- ரூ5 கோடிக்கும் மேலே கடந்த நிதியாண்டில் விற்றுமுதல் கொண்ட நிறுவனம் நான்கு இலக்க ஓ.பெ.அ குறியீட்டினை(HSN code) தனது விலைப்பட்டியலில் குறிப்பிடவேண்டும்.
மின்னணு வழி ரசீது (E-Way Bill)
- சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் (GSTN) கீழ், 10 கிலோ மீட்டர்(6.2 மைல்)-க்கு மேல் மற்றும் 50,000-க்கும் அதிகமாக சரக்குகள் எடுத்து செல்லப்படும்பொழுது, கட்டாயமாக மின்னணு வழி ரசீது உருவாக்கப்படவேண்டும்.
- இது ஜீன் மாதம் 2018 முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது.
- தங்குதடையற்ற மற்றும் விரைவான சரக்கு போக்குவரத்தினை நாடு முழுவதும் உறுதிசெய்யும் வகையில் தணிக்கை நிலையங்கள் நீக்கப்பட்டன.
சட்டம்
- ஜிஎஸ்டி சட்டத்தினை அமலுக்குகொண்டு வர 21- உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
- ஜீலை 1 2017 முதல் ஜிஎஸ்டி சட்டம் தேசம் முழுவதும் அமலுக்கு வர இருப்பதால், முன்னதாகவே மாநில மற்றும் யூனியன் பிரதேச ஜிஎஸ்டி சட்டமானது, சம்மு காசுமீர் தவிர்த்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இயற்றப்பட்டது.
- பத்திரங்கள் கொள்முதல் மற்றும் விற்பனைகளூக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது பத்திரங்கள் பரிவர்த்தனை வரிகள் மூலம் தொடர்ந்து கையாளப்படும்.
சரக்கு மற்றும் சேவைகள் வரி பிணையம் (GSTN)
- "சரக்குகள் மற்றும் சேவைகள் வரி பிணையம்" (GSTN) ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பாக அனைவரும் பங்குபெறும் வகையில் அதாவது அதன் பங்குதாரர்களாக அரசு, வங்கிகள் மற்றும் வரி செலுத்துவோர் இணைந்து செயல்படும் ஒரு தளமாக உருவாக்கப்பட்டது.
- ஒன்றிய அரசினால் இந்த வரி அமைப்பின் கீழே உள்ள அனைத்து பரிவர்த்தனைகளையும் எளிதாக கண்காணிக்கப்படும் வகையிலும், வரி செலுத்துவோர் அவர்களின் அனைத்து விதமான வரி பரிவர்த்தனை மற்றும் தகவல்களை சேகரிக்கப்பட்டு சேமிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
- இந்த பிணையமானது மத்திய மாநில அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்கீட்டில்
10 கோடி (U.6) முதலீட்டில் தொடங்கப்பட்டது.
- இதில் ஒன்றிய அரசு 24.5 சதவீத பங்குகளிலும், மாநில அரசு 24.5 சதவீத பங்குகளிலும் மேலும் மீதமுள்ள 51 சதவீத பங்குகளில் தனியார் வங்கி நிறுவனங்களாலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது