Type Here to Get Search Results !

இந்தியாவின் ஐம்பெரும் தாக்குகணைத் திட்டங்கள் / FIVE MAJOR MISSILE PROGRAM IN INDIA

  • இந்தியாவின் ஐம்பெரும் தாக்குகணைத் திட்டங்கள் / FIVE MAJOR MISSILE PROGRAM IN INDIA: 1982 ம் ஆண்டில் இராணுவ ஆயுத ஆய்வு விருத்திக் கூடத்தின் ஆணையராக [Director of Defence Research & Development Organization (DRDO)] டாக்டர் அப்துல் கலாம் பணி புரிந்த போது, 1993 இல் கூட்டமைப்புக் கட்டளை ஏவுகணை விருத்தித் திட்டம் [Integrated Guided Missile Development Program (IGMDP)] செயற்பட அவர் பொறுப்பில் விடப்பட்டது.
  • அத்திட்டமே இந்திய இராணுவத்தின் பேரளவு வெற்றிச் சாதனையாக விரிவு பெற்றது. அதன் மூலம் ஐந்து மாபெரும் ஏவுகணை படைப்புத் திட்டங்கள் இராணுவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வண்ணம் பூரணமாய் நிறைவேறின.

1. நாக தாக்குகணை

  • இந்தியாவின் ஐம்பெரும் தாக்குகணைத் திட்டங்கள் / FIVE MAJOR MISSILE PROGRAM IN INDIA: நாக தாக்குகணை – இராணுவப் போர்க்கள டாங்க் வாகனத்தைத் தாக்கும் கட்டளை ஏவுகணை [NAG - An Anti-Tank Guided Missile (ATGM)]. அதன் பாய்ச்சல் நீட்சி தூரம் : 4 கி.மீடர் (2.5 மைல்).
  • டாங்குகளின் எஃகுக் கவசத்தை ஊடுருவிப் பிளக்கும் ஆற்றல் உள்ளது. உலகிலேயே முற்போக்கானத் தாக்குகணை அது.

2. பிரித்வி தாக்குகணை

  • பிரித்வி தாக்குகணை – தளப்பீடமிருந்து தளப்பீடம் ஏகும் யுத்தகளச் சூழ்ச்சித் தாக்குகணை [Prithvi -A Tactical Surface-to-Surface Battle Field Missile (TSSM)].
  • விமானப் படை உதவியின்றி கொந்தளிப்பு உண்டாக்கும் ஏவுச் சாதனம். வேறுபட்ட போர் வெடிகளைத் தாங்கிக் கொண்டு அது பாய்ந்து செல்லும் நீட்சித் தூரம் 250 கி.மீ. [90 மைல்].
  • 1983 இல் பிரித்வி கணைகளின் விருத்தி வேலைகள் ஆரம்பமாயின. அதன் நீட்சித் தூரம் : 150-300 கி.மீ. (90-180 மைல்). சோவியத் யூனியனின் ராக்கெட் பொறிநுணுக்கத்தைப் பின்பற்றிய தாக்குகணை அது.
  • பிரித்வி-1 நீட்சித் தூரம் 150 கி.மீ. பளுத்தூக்கு: 1000 கி.கிராம். 1994 இல் அதன் விருத்தி வேலைகள் ஆரம்பமாயின.
  • பிரித்வி-2 நீட்சித் தூரம் 250 கி.மீ. பளுத்தூக்கு: 500 கி.கிராம். அதன் சோதனைகள் 1996 இல் ஆரம்பித்து, 2004 இல் விருத்தி வேலைகள் முடிந்தன.
  • பிரித்வி-3 நீட்சித் தூரம் 350 கி.மீ. பளுத்தூக்கு: 1000 கி.கிராம். அதே கணை 500 கி.கிராம் பளுவை 600 கி.மீ. தூரத்துக்குக் கொண்டு போகும். அல்லது, 250 கி.கி. பளுவை 750 கி.மீ. தூரம் தூக்கிச் செல்லும்.

3. ஆகாஷ் தாக்குகணை

  • இந்தியாவின் ஐம்பெரும் தாக்குகணைத் திட்டங்கள் / FIVE MAJOR MISSILE PROGRAM IN INDIA: ஆகாஷ் தாக்குகணை – தளப்பீடமிருந்து வானத்தில் தாக்கும் இடைத்தூர ஏவுகணை (Akash – A swift Medium Range Surface-to-Air-Missile). எல்லாவற்றிலும் முற்பாடான மிக்க நவீன முறைத் தாக்குகணை இது.
  • அதன் சிறப்பென்ன வென்றால், அது 2.5 மடங்கு ஒலி மிஞ்சிய [2.5 Mach Number] வேகத்தில் போவது. நீட்சித் தூரம் 25 கி.மீ. [15 மைல்] கொண்ட இந்த தாக்குகணை எண்ணைக் கிணறுகள் பரவிய பெரும் பரப்பளவை எதிரிகள் தாக்கும் போது எதிர்த்தடிக்கப் பயனாகிறது.
  • ஆகாஷ் ஏவுகணையின் சோதனைப் பயிற்சிகள் 1990 இல் துவங்கி, முழு விருத்திப் பணிகள் 1997 இல் முடிந்தன.

4. திரிசூல் தாக்குகணை

  • இந்தியாவின் ஐம்பெரும் தாக்குகணைத் திட்டங்கள் / FIVE MAJOR MISSILE PROGRAM IN INDIA: திரிசூல் தாக்குகணை – விரைவில் ஏகித் தளப்பீடமிருந்து வானத்தில் தாக்கும் குறுந்தூர ஏவுகணை [Trishul (Trident) - A Quick Reaction Surface-to-Air Missile (SAM) with a Shorter Range] அவை தளப்படை, விமானப்படை, கப்பற்படை ஆகிய முப்பெரும் இராணுவப் போர்த் துறைகளிலும் பயன்படுகின்றன.
  • தணிவாக அருகில் பறப்பனவற்றைத் தாக்கும் கணைகள் அவை. அவற்றின் பயண நீட்சி தூரம் : 5-9 கி.மீ. (3 முதல் 5 மைல்)

5. அக்கினி தாக்குகணை

  • இந்தியாவின் ஐம்பெரும் தாக்குகணைத் திட்டங்கள் / FIVE MAJOR MISSILE PROGRAM IN INDIA: அக்கினி தாக்குகணை – எல்லாவற்றையும் விடப் பேராற்றல் கொண்ட இடைத்தூர ஏவுகணை (Agni – An Intermediate Range Ballistic Missile, The Mightiest).
  • அக்கினித் தாக்கு கணைகளின் நீட்சித் தூரம் : 2500 கி.மீ. [1500 மைல்]. உலகிலே இது போன்ற முற்போக்குத் தாக்குகணையைப் பெற்ற ஐந்தாவது நாடாக (அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சைனா) இந்தியா கருதப்படுகிறது.
  • 1989 இல் முதல் அக்கினி ஏவுகணையின் சோதனைப் பயிற்சி வெற்றிகரமாகச் செய்து முடிக்கப் பட்டது.
  • 2007 ஏப்ரல் 12 ம் தேதி 5000 கி.மீ. (3000 மைல்) பயணம் செய்யும் அக்கினி-3 தன் சோதனைப் பயிற்சியைச் செம்மையாக முடித்து, பாரத வரலாற்றில் ஒரு மைல்கல்லை தொட்டது.

ENGLISH

  • FIVE MAJOR MISSILE PROGRAM IN INDIA: In 1982, when Dr. Abdul Kalam became the Commissioner of Defense Research & Development Organization (DRDO), in 1993, he was put in charge of the Integrated Guided Missile Development Program (IGMDP).
  • The plan itself turned out to be one of the greatest successes of the Indian Army. Thus, five major missile development projects were completed to meet military requirements.

1. NAG - An Anti-Tank Guided Missile (ATGM)

  • Its flight span is 4 km (2.5 mi). Has the ability to penetrate and split the steel armor of tanks. It is the most advanced missile in the world.

2. Prithvi Missile

  • FIVE MAJOR MISSILE PROGRAM IN INDIA: Prithvi -A Tactical Surface-to-Surface Battle Field Missile (TSSM). Air Force Unassisted Turbulence Launcher. It has a range of 250 km withstanding various warheads. [90 miles].
  • In 1983 the development work of Prithvi Mines started. Its stretching distance : 150-300 km. (90-180 mph). It was a missile that imitated the rocket technology of the Soviet Union.
  • Prithvi-1 has a stretch of 150 km. Weightlifting: 1000 Kg. Its development work started in 1994.
  • Prithvi-2 has a stretch of 250 km. Weightlifting: 500 Kg. Its trials began in 1996 and development work was completed in 2004.
  • Prithvi-3 has a stretch of 350 km. Weightlifting: 1000 Kg. The same mine weighs 500 kg and travels 600 km. It will take you far. Or, 250 kg. Weight is 750 km. The distance will lift.

3. Akash Missile

  • FIVE MAJOR MISSILE PROGRAM IN INDIA: Akash – A swift Medium Range Surface-to-Air-Missile. It is the most advanced modern missile of all.
  • Its best feature is that it can travel at a speed of 2.5 times supersonic [2.5 Mach Number]. The stretch is 25 km. [15 mi] This missile is useful for counterattacking when the enemy attacks a large area spread over oil wells. Trials of the Akash missile began in 1990 and full development work was completed in 1997.

4. Trishul Missile

  • FIVE MAJOR MISSILE PROGRAM IN INDIA: Trishul (Trident) - A Quick Reaction Surface-to-Air Missile (SAM) with a Shorter Range is used in the three major military fields of the Army, Air Force and Navy.
  • They are missiles that gently attack nearby aircraft. Their travel stretch : 5-9 km. (3 to 5 miles)

5. Agni Missile

  • FIVE MAJOR MISSILE PROGRAM IN INDIA: Agni – An Intermediate Range Ballistic Missile, The Mightiest.
  • Range of incendiary missiles: 2500 km. [1500 miles]. India is considered to be the fifth country in the world (USA, Russia, France, China) to have such a progressive missile.
  • In 1989, the first Agni missile was successfully test-fired. 5000 km on 12th April 2007. (3000 miles) Agni-3 successfully completed its test run and touched a milestone in India's history.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel