Saturday, 6 April 2019

6th APRIL CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

ஐஏஎஸ் ஐபிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு : தமிழக்த்தில் 35 பேர் தேர்ச்சி
 • மத்திய அரசு தேர்வாணையம் குடிமைப்பணிகளுக்கான காலி இடங்களை நிரப்ப ஓவ்வொரு அண்டும் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வு முதல் நிலை மற்றும் நேர்முக தேர்வு என இரு பிரிவுகளாக உள்ளன. முதல் நிலையில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் இறுதியாக தேர்ச்சி பெறுகின்றனர். இந்த தேர்வு இந்தியா முழுமைக்குமான தேர்வாகும்.
 • கடந்த ஆண்டு மத்திய அரசு தேர்வாணையம் நடத்திய தேர்வில் லட்சக்கணக்கான மாணவர்கள் கலந்துக் கொண்டனர். இறுதியாக தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 755 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் முழு விவரம் வெளியாக வில்லை.
 • ஐஏஎஸ் பணிக்கு 180 பேர் தேர்வாகி உள்ளனர். இவர்களில் பொதுப்பிரிவினர் 91 பேர், பிற்படுத்தப்பட்டோர் 48 பேர் தாழ்த்தப்பட்டோர் 27 பேர் மற்றும் பழங்குடியினர் 14 பேர் அடங்குவார்கள்
 • இந்திய வெளியுறவு துறை பணியான ஐ எஃப் எஸ் பணிக்கு 30 (பொதுப்பிரிவு 15, பிற்படுத்தப்பட்டோர் 9 மற்றும் தாழ்த்தப்பட்டோர் 5 பேர் மற்றும் பழங்குடியினர் ஒருவர்) பேர் தேர்வாகி உள்ளனர். இதை போல் ஐபிஎஸ் தேர்வில் 150 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 • மொத்தத்தில் தமிழகத்தில் இருந்துமட்டும் 35 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது சென்ற ஆண்டை விட குறைவாகும். அதே நேரத்தில் இந்தியா முழுவதும் வழக்கமாக 750 முதல் 900 வரை தேர்ச்சி பெறுவார்கள. ஆகவே அகில இந்திய அளவில் தேர்ச்சி குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கால்நடை மருத்துவர் சங்கம் இருதின தொடர் கல்வி கருத்தரங்கு
 • பெரிய விலங்கின கால்நடை மருத்துவர் சங்கம் சார்பில் 4வது தொடர் கல்வி கருத்தரங்கம் ' நடைமுறையில் வெப்ப நாடுகளில் கால்நடை நலம் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை கள அளவில் செயல்படுத்துதல் ' தலைப்பில் நடந்தது.
 • புதுச்சேரி இ.சி.ஆரில் உள்ள ஓஷன்ஸ் ஸ்பிரே ஓட்டலில் நடந்த கருத்தரங்கிற்கு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணை வேந்தர் பாலச்சந்திரன் தலைமை தாங்கினார். இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸுடன் இணைவதாக லக்ஷ்மி விலாஸ் வங்கி அறிவிப்பு
 • லக்ஷ்மி விலாஸ் வங்கியை இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் உடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வங்கியின் இயக்குநர் குழுவில் ரிசர்வ் வங்கியின் சார்பில் இரண்டு நியமன உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் இந்த இணைப்பு நடவடிக்கைக்கு ஒரு மனதாக ஒப்புதலை தெரிவித்துள்ளனர்.
 • இணைப்பு நடவடிக்கைக்கான முறைப்படியான பேச்சுவார்த்தையை ரிசர்வ் வங்கியுடன் லக்ஷ்மி விலாஸ் வங்கி ஏற்கெனவே தொடங்கியுள்ளது. இந்த திட்டத்துக்கு அனுமதி மறுக்கும் வகையில் இதுவரையில் ரிசர்வ் வங்கி கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.
 • ஒப்பந்த விதிகளின்படி, லக்ஷ்மி விலாஸ் வங்கியின் 100 பங்குகளுக்கு, ஐபிஹெச்-இன் 14 பங்குகள் என்ற வீதத்தில் இந்த இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
 • இந்தியாபுல்ஸ் ஹவுசிங் உடனான இணைப்புக்குப் பிறகு வங்கியின் பெயர் "இந்தியாபுல்ஸ் லக்ஷ்மி விலாஸ் வங்கி' என மாற்றம் செய்யப்படும்.
1000 கி.மீ. ஓடும் புதிய மின் மகிழுந்து தயார் : சுவிட்சர்லாந்து நிறுவனம் அறிவிப்பு
 • டெஸ்லா நிறுவனத்தின் மின் மகிழுந்து 250 வாட்/கி.கி. ( வாட்/மணி நேரம் ஒரு கிலோவிற்கு) அளவு பயணிக்கும். அதே சமயம்அமெரிக்கா எரிசக்தித் துறை 500 கிமீட்டர் ஓடும் மின்கலங்களை உருவாக்க நிதி உதவியும் அளித்துள்ளது.
 • இந்நிலையில் இன்னோலித் எனப்படும் இந்த புதிய மின்கலம் சந்தைக்கு வந்தால் மின்மகிழுந்து மட்டுமல்ல எல்லாத்துறைகளிலும் ஒரு புதிய மாற்றம் உருவாகும்.
 • தற்போது டெஸ்லா நிறுவனம் பயன்படுத்தும் மின்கலம் பேனாசோனிக் நிறுவனத்தில் உருவாக்கப் பட்டது. அதே சமயம் அதிகமன விலையும் கொண்டது, அதிக பட்சம் 320 மைல்/514 கி.மீட்டர் பயணிக்கலாம், இதுதான் இப்போதைய அதிக பட்ச வேகமாக இருக்கிறது.
 • இந்த வேகத்தை அடிப்படையாகக் கொண்டே மற்ற மின் மகிழுந்து நிறுவனங்களும் தங்கள் மகிழுந்துகளை உற்பத்தி செய்ய நினைக்கின்றன. ஆனால் ஸ்விட்சார்ந்தில் உள்ள இன்னொலித் எனும் புதிய தொழில்முனைவு நிறுவனம் ஒரே முறை மின்னேற்றம் செய்தால் அதிகப்பட்சம் 1000 கி.மீ ஓடும் அளவில் மின்கலத்தினை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கின்றன.
ரூ. 1லட்சம் கோடியில் ராணுவ தளவாட பொருட்கள் வாங்க கப்பற்படை திட்டம்
 • ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ தளவாட பொருட்களை வாங்க, தென் பிராந்திய கப்பற்படை திட்டமிட்டுள்ளது. தளவாட பொருட்களை சப்ளை செய்ய, கோவைக்கு வாய்ப்பு வழங்கப்படுவதால், இங்குள்ள தொழில் முனைவோர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
 • கோவை புறநகர் பகுதியில் அமைந்து வரும், கொடிசியா தொழிற்பூங்காவில், 'பாதுகாப்பு துறைக்கு தேவையான உபகரணங்களை தயார் செய்வோர், தங்கள் கண்டுபிடிப்புகளை மேம்படுத்திக்கொள்ள வசதியாக, 'இன்னோவேஷன் மற்றும் இன்குபேஷன் சென்டர்' அமைக்கப்படும்' என்ற அறிவிப்பு வெளியானது. அத்துடன், 'டிபென்ஸ் காரிடார்' ஆகவும், கோவை அறிவிக்கப்பட்டது.

TNPSCSHOUTERS

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a comment