Wednesday, 3 April 2019

3rd APRIL CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

ப்ராங்க் ஷோ வீடியோக்களை வெளியிட தடை ஐகோர்ட் கிளை உத்தரவு
 • யு-டியுப் தான் தற்போது இளைஞர்கள் திறமையை காட்டும் இடமாக உள்ளது. இதில் வெற்றி பெற்று தற்போது வெள்ளித்திரையில் கலக்குபவர்கள் தான் ஹிப்ஹாப் ஆதி, கோபி, சுதாகர் எல்லாம்.
 • இந்நிலையில் ப்ராங் ஷோ என்பது யு-டியுபில் மிகப்பிரபலம். அதாவது சாலையில் நடந்து செல்பவர்களிடம் சென்று ஏதாவது கலாய்த்து பிறகு கேமராவை காட்டுவார்கள். இதை யு-டியுபில் மில்லியன் கணக்கானோர் விரும்பி பார்ப்பார்கள்.
 • ஆனால், இது ஒரு கட்டத்தில் எல்லை மீறிப்போக, தற்போது இது போன்ற வீடியோக்களை இனி வெளியிடக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை செய்துள்ளது.
பொறியியல் கலந்தாய்வு: தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்துகிறது
 • நிகழ் கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்தும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 • தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்களுக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக் கழகம் நடத்தி வருகிறது. இதை நடத்துவதற்காக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு அமைக்கப்பட்டது.
பொருளாதாரத் தடை விதிக்க பாகிஸ்தானுக்கு சர்வதே நிதி அமைப்பு முடிவு
 • பாரிஸில் செயல்படும் FATF எனப்படும் சர்வதேச நிதி அமைப்பின் தடை செய்யப்பட்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் சேர்க்கப்பட உள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.
 • தீவிரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதாக பாகிஸ்தான் மீது அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
 • அண்மையில் இந்த அமைப்பின் குழுவினர் பாகிஸ்தான் சென்று ஆய்வு மேற்கொண்டு தீவிரவாதத்திற்கு எதிரான நிதிக் குற்றத்தில் பாகிஸ்தான் ஈடுபட்டதை உறுதி செய்துள்ளனர்.
 • நிதி கண்காணிப்பு பிரிவு 2018 ல் 8,707 சந்தேகத்திற்கிடமான பண பரிவர்த்தனைகளை கண்டறிந்து உள்ளது.
 • ஆனால் இந்தியாவின் நெருக்குதலால் தான் இந்த தடை பாகிஸ்தான் மீது சுமத்தப்படுவதாகவும் இதன் காரணமாக பாகிஸ்தானுக்கு ஆண்டுக்கு 10 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படும் என்றும் குரேஷி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் காற்று மாசினால் 12 லட்சம் பேர் மரணம் : ஆய்வுத் தகவல்
 • அமெரிக்காவில் புகழ்பெற்ற தன்னாய்வு அமைப்பான ஹெல்த் எஃபெக்ட்ஸ் இன்ஸ்டிடியூட் என்னும் அமைப்பு இயங்கி வருகிறது. மருத்துவ வசதி, உலக சுகாதாரம், மாசுக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல இனங்களிலும் உலக நாடுகளில் இந்த அமைப்பு ஆய்வு நடத்தி வருகிறது. சமீபத்தில் ஆசிய நாடுகளான சீனா மற்றும் இந்தியா குறித்த ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது.
 • உலக நாடுகளில் அதிகம் காற்று மாசு அடைந்துள்ள நாடுகளாக இந்தியா மற்றும் சீனா உள்ளதால் இந்த ஆய்வு இரு நாடுகளிலும் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது. உலக அளவில் காற்று மாசு அளவு கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் சீனாவில் 2.5 மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டது.
 • மேலும் இந்தியா மற்றும் சீன நாடுகளில் தலா சுமார் 12 லட்சம் பேர் மரணம் அடைந்துள்ளதாக இந்த ஆய்வில் அதிர்ச்சியுட்டும் தகவல் வெளி வந்துள்ளது. இந்த காற்று மாசு காரணமாக பக்கவாதம், நீரிழிவு, மாரடைப்பு, நுரையீரல் புற்றுநோய், நாள்பட்ட நுரையிரல் நோய் மற்றும் தொற்று காரணமாக இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன எனவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.ஜிப்ரானுக்கு அரேபிய விருது
 • தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான். 
 • ஐதராபாத்தில் நடந்த ஒரு இசை விழாவில் ஆசியாவில் வாழும் அரேபியர்கள் சார்பில் ஆசியன் அராப் விருது வழங்கி கவுரவுக்கப்பட்டிருக்கிறார். 
தேசிய அளவிலான குத்துசண்டை போட்டி தமிழக அணி வீரர் பாலகுமாருக்கு தங்கப்பதக்கம்
 • தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டி (WAKO INDIA NATIONAL FEDERATION CUP 2019) புனேவில் நடைபெற்றது. இது WAKO INDIA KICKBOXING வாரியத் தலைவர் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
 • சுமார் 1300 வீரர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் மூத்த ஆட்டக்காரர்கள் பிரிவில் நடைபெற்ற சுற்றில் தமிழக அணியைச் சேர்ந்த வீரர் பாலகுமார் காந்தி தங்கப்பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார்.
 • இவர் சென்னை ஆவடியைச் சேர்ந்தவர். இவர் இதற்கு முன் மாநில அளவிலான பந்தயத்திலும் தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. சென்னை TTPL Technical Development Centre நிறுவனத்தைச் சேர்ந்த பாலகுமார் காந்திக்கு தேசிய மனித வள மற்றும் இளைஞர் மேம்பாட்டுக்கு கழகம் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்து தெரிவித்துள்ளது.
பாரதிதாசன் பல்கலைக் கழகத்துக்கு ஏ பிளஸ் அந்தஸ்து: துணைவேந்தர் தகவல்
 • பாரதிதாசன் பல்கலைக் கழகத்துக்கு பல்கலைக் கழக மானியக் குழுவின் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவால் ஏ பிளஸ் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
 • தேசிய தரமதிப்பீட்டுக் குழுவின் புதிய மதிப்பீட்டு முறையில் தமிழக அரசு பல்கலைக் கழகங்களில் இந்த அந்தஸ்தை பெறும் முதல் பல்கலைக் கழகம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.

TNPSCSHOUTERS

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a comment