பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு
- 2018 -19-ம் ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டது அரசு தேர்வுகள் இயக்ககம். பொதுவாக மே மாதம் வெளியாகும் இந்தத் தேர்வு முடிவுகள் நாடாளுமன்றத் தேர்தலினால் இந்த வருடம் ஏப்ரல் மாதமே வெளியிடப்பட்டுள்ளது.
- பத்தாம் வகுப்புத் தேர்வை தமிழகம் முழுவதிலும் சுமார் 9,76,019 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் மாணவிகள் 4,68,570 பேர், மாணவர்கள் 4,69,289 பேர் தேர்வு எழுதியுள்ளனர். மொத்தமாக உள்ள 12,548 பள்ளிகளில் 6100 பள்ளிகள் நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
- பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்திருந்த நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விலும் அந்த மாவட்டமே முதலிடம் பிடித்துள்ளது.
மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
கேல் ரத்னா விருதுக்கு பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் பெயர்கள் பரிந்துரை
- தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பஜ்ரங் பூனியா சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 65 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். மேலும் கடந்த ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியிலும் பஜ்ரங் பூனியா தங்கப் பதக்கம் கைப்பற்றியிருந்தார்.
- அதேவேளையில் ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் பிரிவில் வினேஷ் போகத் வெண்கலப் பதக்கம் கைப்பற்றியிருந்தார். கடந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் வினேஷ் போகத் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இவர்களுடன் ராகுல் அவாரே, ஹர்பிரீத் சிங், திவ்யாகரன், பூஜா தண்டா ஆகியோரது பெயர்களை அர்ஜூனாவிருதுக்கும் வீரேந்தர் குமார், சுஜித் மான், நரேந்திர குமார், விக்ரம் குமார் ஆகியோரது பெயர்களை துரோணாச்சார்யா விருதுக்கும் பீம் சிங், ஜெய் பிரகாஷ் ஆகியோரது பெயர்களை தயான்ச் சந்த் விருதுக்கும் (வாழ்நாள் சாதனையாளர் விருது) பரிந்துரை செய்தது இந்திய மல்யுத்த சங்கம்.
ரூ.6,311 கோடி மதிப்பில் ஒப்பந்தம்
- இந்திய கடற்படைக்காக, எட்டு நீர்மூழ்கி போர்க்கப்பல்களை வடிவமைப்பது தொடர்பாக, பாதுகாப்புத் துறை அமைச்சகம், கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் நிறுவனத்துடன் (ஜிஆர்எஸ்இ) இன்று ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
- இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு 6,311 கோடி ரூபாய் என்பதும், ஜிஆர்எஸ்இ ஓர் பொதுத் துறை நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்க சென்ற நிர்மலா சீதாராமன்
- சீனா, கஜகஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கியது ஷாங்காய் கூட்டமைப்பு. இந்த அமைப்பின் மாநாடு சுழற்சி அடிப்படையில் நடப்பாண்டில் கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கெக் நகரில் நடைபெற்று வருகிறது.
- 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்க கிர்கிஸ்தான் சென்ற அமைச்சர் நிர்மலா சீதாராமன், சீனாவின் பிரதிநிதியான அந்நாட்டு ராணுவ அமைச்சரான வேய் ஃபெங்ஹேவை சந்தித்து பேசினார். மேலும் கிர்கிஸ்தான் ராணுவ தளபதி ரைம்பெர்டி டுய்ஷென்பியேவுடனும் ஆலோசனை நடத்தினார்.
- இருவரையும் தனித்தனியாக சந்தித்த நிர்மலா சீதாராமன், பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். குறிப்பாக பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிப்பது, பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது
அஜர்பைஜான் கிராண்ட்பிரி கார்பந்தயம் : சாம்பியன் பட்டம் வென்ற பின்லாந்து வீரர்
- பாக்கு (Baku) நகரில் நேற்று நடைபெற்ற பந்தயத்தில் மெர்சிடஸ் அணியின் ஹாமில்டனுக்கும் போட்டசுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
- 306 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை ஒரு மணி 31 நிமிடம் 52 வினாடிகளில் கடந்து பின்லாந்து வீரர் வால்ரி போட்டஸ் (Valterri Bottas) சாம்பியன் பட்டம்வென்றார்.
- பிரிட்டன் வீரர் ஹாமில்டன் இரண்டாவது இடத்தையும், ஜெர்மன் வீரர் செபஸ்டியன் வெட்டல் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.