பட்டுப்பாதை அமைக்கும் முயற்சி பொருளாதார உச்சி மாநாடு தொடக்கம்
- சீனாவின் தலைநகர் பிஜீங்கில் 150 நாடுகள் பங்கேற்கும் பெல்ட் அண்ட் ரோட்ஸ் பொருளாதார உச்சி மாநாடு துவங்கியது. மூன்று நாட்களுக்கு நடைபெறும் இம்மாநாட்டில் 150 நாடுகளின் தலைவர்கள் 90 சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
- சீனா தன் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த ஆசியா ஐரோப்பியா ஆப்பிரிக்கா இடையிலான சாலைவழி பட்டுப்பாதை மற்றும் கடல்வழி பட்டுப்பாதை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு நாடுகளுக்கு பொருளாதார வளர்ச்சியும் வர்த்தகமும் கிடைக்கும்.
- மாநாட்டின் இறுதியில் சீனாவுக்கும் பல்வேறு நாட்டின் தலைவர்களுக்கும் இடையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியின் வழியாக சீனாவின் பட்டுப்பாதைக்கு பாகிஸ்தான் இடம் கொடுத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா இந்த மாநாட்டைப் புறக்கணித்துள்ளது.
16 வயதுக்கு மேல் விருப்பத்துடன் பாலுறவு கொண்டால் குற்றமல்ல: சட்டத்திருத்தம் செய்ய நீதிமன்றம் ஆலோசனை
- ஒருவர் 16 வயதுக்கு மேல் விருப்பத்துடன் பாலுறவு கொண்டால் குற்றமல்ல என்று வழிவகை செய்யும் சட்டத்திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
- நாமக்கல் பகுதியை சேர்ந்த சபரிநாதன் என்பவர் தன்மீது விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் நீதிபதி பார்த்திபன் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
- அதில் ஒருவர் 16 வயதுக்கு மேல் விருப்பத்துடன் பாலுறவு கொண்டால் அது குற்றமாக கருதாத வகையில் போக்ஸோ சட்டத்தில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என தமிழக அரசிற்கு அவர் ஆலோனை வழங்கியுள்ளார். மேலும்
நிர்பயா நிதியின் கீழ் பெண்கள் பாதுகாப்புக்கு 4,000 கோடி ஒதுக்கீடு: மத்திய உள்துறை தகவல்
- கடந்த 2012ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் ஒரு இளம்பெண் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு பின்னர், பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்களை பாதுகாக்க, 'நிர்பயா நிதியம்' உருவாக்கப்பட்டது.
- இதன் மூலம், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிதியத்தின் மூலம், பெண்கள் பாதுகாப்பு குறித்த பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு இதுவரை ரூ.4,000 கோடி ஒதுக்கி இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பெண்களுக்கான பாதுகாப்பான நகரம் என்ற திட்டத்திற்காக நிர்பயா நிதியின் கீழ் ரூ.2919.15 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்த திட்டம் டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை உள்ளிட்ட 8 நகரங்களில் படிப்படியாக செயல்படுத்தப்படும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி அளிப்பதற்காக மத்திய அரசு ரூ.200 கோடி ஒதுக்கியுள்ளது.
- இதன் மூலம், பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். பெண்கள் ஆபத்து நேரத்தில் அழைத்தால் செல்வதற்கு ஏதுவாக பட்டன் வசதி ஏற்படுத்துதல் திட்டத்துக்காக ரூ.321.69 கோடி ஒதுக்கியுள்ளது. ஒரே அவசர எண் 112 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- ஏற்கனவே இந்த திட்டம் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கான சிறப்பு பிரிவை உருவாக்குவதற்கு ரூ.23.53 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- மேலும், சண்டிகரில் மத்திய தடய அறிவியல் ஆய்வகம் அமைப்பதற்கு ரூ.99.76 கோடியும், 12 மாநிலங்களில் தடய அறிவியல் ஆய்வகம் அமைப்பதற்கு ரூ.131.09 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வங்கி பரிசோதனை அறிக்கைகளை அளிக்க ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
- வங்கிகளின் செயல்பாடு, வாராக்கடன், நிதிநிலை உள்ளிட்ட பல அம்சங்களையும் ஒவ்வொரு வருடமும் ரிசர்வ் வங்கி பரிசோதனை செய்வது வழக்கம். இந்த பரிசோதனை அறிக்கைகளை ரிசர்வ் வங்கி வெளியிடுவது இல்லை. இது குறித்து கடந்த பிப்ரவரி மாதம் கேட்கப்பட்டதற்கு இந்த அறிக்கைகளை தர ரிசர்வ் வங்கி மறுத்து விட்டதாக தகவல் ஆணையம் தெரிவித்தது.
- இதை ஒட்டி தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வங்கி சோதனை அறிக்கைகளை அளிக்க வேண்டும் என ஆர்வலர் எஸ் சி அகர்வால் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு அளித்தார்.அவர் அந்த மனுவில் நீதிமன்றத்துக்கும் ரிசர்வ் வங்கி இந்த தகவல்கள் அளிக்காததால் இது நீதிமன்ற அவமதிப்பாகும் என குறிப்பிட்டிருந்தர்.
- 'தகவல் அறியும் சட்டத்தின்படி வங்கிகள் வெளிப்படையான நடைமுறைகளை கொண்டிருக்க வேண்டும் என்பதால் வங்கிகளில் வருடாந்திர பரிசோதனை அறிக்கைகளை ரிசர்வ் வங்கி தர மறுப்பது சட்டத்துக்கு எதிரானதாகும். ஆகவே தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வங்கிகளின் பரிசோதனை அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும்' என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது/
ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை
- மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக விசாரிக்க, உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
- அந்த ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
- தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்) 2018-19ம் நிதியாண்டிற்கு 8.65 சதவீதமாக வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ) நிர்ணயம் செய்த வட்டி விகிதத்திற்கு மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் வழங்கியது.
- இதனால், அமைப்பு சார்ந்த தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் 6 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயன்பெறுவர்.
- கடந்த 2017-18 நிதியாண்டில் இபிஎப் வட்டி விகிதம் 8.55 சதவீதமாக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் (2016-17) வட்டி விகிதம் 8.65 சதவீதமாக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் 2015-16ல் வட்டி விகிதம் 8.8 சதவீதமாக இருந்தது.
ஆசிய குத்துச்சண்டை போட்டியில் அமித் பங்கல், பூஜா ராணிக்கு தங்கம்
- ஆசிய குத்துச்சண்டை போட்டி பாங்காக் நகரில் நடைபெற்று வந்தது. இதில் ஆடவருக்கான 52 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் அமித் பங்கல் இறுதி சுற்றில் கொரியாவின் கிம் இங்யுவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
- 49 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் தீபக் சிங் இறுதி சுற்றில் உஸ்பெகிஸ்தானின் நோடிர்ஜான் மிர்சாமேடோவிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
- இதேபோல் 56 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் கவிந்தர் சிங் பிஷ்ட், உஷ்பெகிஸ்தானின் மிராஸிபெக்கிடமும் 75 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் ஆஷிஸ் குமார், கஜகஸ்தானின் துர்ஷ்பேவிடமும் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றனர்.
- இதேபோல் மகளிருக்கான 81 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பூஜா ராணி இறுதிசுற்றில் சீனாவின் வாங் லினாவை வீழ்த்தி தங்கம் வென்றார். அதேவேளையில் 64 கிலோ எடைப் பிரிவு இறுதி சுற்றில் இந்தியாவின் சிம்ரன்ஜித் கவுர், சீனாவின் டு டானிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
- 60 கிலோ எடைப் பிரிவில் சரிதா தேவி, 54 கிலோ எடைப் பிரிவில் மனிஷா, 51 கிலோ எடைப் பிரிவில் நிகாத் ஸரீன், 57 கிலோ எடைப் பிரிவில் சோனியா சாஹல் ஆகியோர் வெண்கப் பதக்கம் கைப்பற்றினர்.
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் திவ்யான்ஷ் சிங்குக்கு வெள்ளி
- ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி சீனாவில் உள்ள பெய்ஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் திவ்யான்ஷ் சிங் பன்வார் 249 புள்ளிகள் குவித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
- வெள்ளிப் பதக்கம் வென்ற திவ்யான்ஷ் சிங் பன்வார் 2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். துப்பாக்கி சுடுதலில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் 4-வது இந்தியர் திவ்யான்ஷ் சிங் பன்வார் ஆவார்.
- ஆசிய மல்யுத்த சாம்பியன் போட்டியில் இந்திய நட்சத்திரங்கள் வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் ஆகியோர் வெண்கலப் பதக்கம் மட்டுமே வென்று ஏமாற்றம் அளித்தனர்.
- மகளிர் 53 கிலோ பிரிவில் வினேஷ் போகட் 0-10 என்ற புள்ளிக் கணக்கில் ஜப்பானின் மாயு முகைடாவிடம் தோல்வியுற்றார். வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் 8-1 என்ற புள்ளிக் கணக்கில் சீனாவின் குயான்யு பேங்கை வென்றார்.
- ஜகார்த்தா ஆசியப் போட்டியில் 50 கிலோ பிரிவில் தங்கம் வென்றிருந்தார் வினேஷ். எனினும் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் 50 கிலோ பிரிவு இல்லாததால் 53 கிலோ பிரிவில் போட்டியிடுகிறார் வினேஷ்.
- 62 கிலோ பிரிவில் சாக்ஷி மாலிக் 9-6 என்ற புள்ளிக் கணக்கில் வடகொரிய வீராங்கனையை வீழ்த்தி வெண்கலம் வென்றார். இதுவரை 1 தங்கம், 3 வெள்ளி, 8 வெண்கலத்துடன் 12 பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் : வெள்ளி வென்று அசத்திய இந்தியா பெண்கள் அணி
- 23ஆவது ஆசிய தடகள் சாம்பியன்ஷிப் தொடர் தோகாவில் நடைபெற்றது. இதில் 4×400 தொடர் ஓட்டப்பந்தயத்தின் பெண்கள் பிரிவில் ப்ரச்சி, பூவம்மா, சரிதா, விஸ்மயா ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் பந்தய தூரத்தை 3 நிமிடங்கள் 32.22 வினாடிகளில் கடந்து இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.
- நான்கு நாட்கள் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் இந்தியா 3 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்தது.