Type Here to Get Search Results !

1st APRIL CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

மார்ச் மாத ஜி.எஸ்.டி:ரூ.1 லட்சம் கோடி வசூல்
  • ஜி.எஸ்.டி. வசூல் வருவாய் மார்ச் மாதம் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை படைத்து இருக்கிறது. இதில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.20 ஆயிரத்து 353 கோடி, மாநில அரசின் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.27 ஆயிரத்து 520 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.50 ஆயிரத்து 418 கோடி, கூடுதல் வசூல் ரூ.8 ஆயிரத்து 286 கோடி ஆகும். 
  • அதே சமயம் கடந்த ஆண்டில் இதே மார்ச் மாதம் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.92 ஆயிரத்து 167 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.2018-19-ம் ஆண்டின் சராசரி ஜி.எஸ்.டி. வசூல் ரூ.98 ஆயிரத்து 114 கோடி. இது, 2017-18-ம் ஆண்டை ஒப்பிடும் போது 9.2 சதவீதம் கூடுதலாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புவி சுற்றுவட்டப்பாதையில் எமிசாட் செயற்கைகோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தம்: பி.எஸ்.எல்.வி.சி- 45 ராக்கெட்
  • நாட்டின் பாதுகாப்பிற்கு பயன்படும் 'எமிசாட்' உட்பட 29 செயற்கைக் கோள்களை 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தியது.ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோவிற்கு சொந்தமான சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் உள்ளது. 
  • அங்குள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட் உதவியுடன் செயற்கைக் கோள்களை இஸ்ரோ விண்ணில் நிலை நிறுத்தி வருகிறது. இவை நாட்டின் தகவல் தொடர்பு, பாதுகாப்பு, கடல் வழி போக்குவரத்து உள்ளிட்ட ஆய்வுகளுக்கு பயன்படுகிறது.
  • இதன்படி 'பி.எஸ்.எல்.வி. - சி 45' என்ற ராக்கெட் இந்தியாவின் எமிசாட்; அமெரிக்காவின் 24; லித்துவேனியாவின் இரண்டு; ஸ்பெயின், சுவிட்சர்லாந்தின் தலா ஒன்று என மொத்தம் 29 செயற்கைக் கோள்களை சுமந்தபடி சதீஷ் தவான் மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை 9:27 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.
  • தரையில் இருந்து புறப்பட்ட 17 நிமிடங்கள் 18 வினாடிகளில் 749 கி.மீ.ல் உள்ள புவி வட்ட பாதையில் எமிசாட் செயற்கைக்கோள் மட்டும் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. அந்த செயற்கைக்கோள் உள்நாட்டின் பாதுகாப்பு, ராணுவம் தொடர்பான ஆய்வுகளுக்கு பயன்படும்.பின் ராக்கெட் இன்ஜின் மீண்டும் இயக்கப்பட்டு ஒரு மணி நேரம் 50வது நிமிடத்தில் 504 கி.மீ.ல் உள்ள வேறு புவி வட்ட பாதையில் வெளிநாடுகளின் வணிக ரீதியிலான 28 செயற்கைக் கோள்கள் நிலைநிறுத்தப்பட்டன. 
  • தொடர்ந்து ராக்கெட்டின் இறுதி நிலை வேறு பாதையில் இயங்கி வருகிறது. ஒரே ராக்கெட் தனித்தனி புவி வட்ட பாதையில் செயற்கைக் கோள்களை நிலைநிறுத்தி இயங்கி வருவது உலகிலேயே இது முதல் முறை. 
இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் முதல் முறையாக சென்செக்ஸ் 39,000 புள்ளிகளை தொட்டு புதிய சாதனை
  • இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் முதல் முறையாக சென்செக்ஸ் 39,028 புள்ளிகளை தொட்டு புதிய சாதனை புரிந்துள்ளது. 
  • வெள்ளிக்கிழமை அன்று சென்செக்ஸானது 38,672 புள்ளிகளாக இருந்தது. இன்று வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீட்டெண் 330 புள்ளிகள் என 0.90 சதவீதம் அதிகரித்து 39,028 ஆக உயர்ந்தது. 
  • வரலாற்றில் 39 ஆயிரம் புள்ளிகளை சென்செக்ஸ் தொடுவது இதுவே முதல்முறை ஆகும். இதேபோல் தேசியப் பங்குச்சந்தை நிப்டியானது 88.80 புள்ளிகள் உயர்ந்து 11,700 புள்ளிகளை தாண்டியது. 



கி.பி.10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு
  • திருப்பத்தூர் அருகே கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
  • பழங்காலத்தில் தமிழர்களின் வழிபாட்டுமுறை என்பது இயற்கையை மையமாகக் கொண்டு அமைந்திருந்தது. பஞ்ச பூதங்கள், மரங்கள் வழிபடு பொருள்களாகப் பாவிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக வளமையின் குறியீடாகப் பெண்ணை வழிபடும் மரபு தமிழர்களின் தனித்துவம் வாய்ந்த அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது. 
  • அவ்வரிசையில் இடம்பெற்றதே கொற்றவை வழிபாடாகும். தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் தமிழகத்தின் மிகப் பழமையான பெண் தெய்வமான கொற்றவை குறிப்பிடப்பட்டிருந்தாலும், கொற்றவையின் உருவ அமைப்பையும் வழிபாட்டு முறையையும் விவரிப்பது சிலப்பதிகாரக் காப்பியமாகும். கொற்றவை வழிபாட்டு முறையை விளக்கும் வகையில் தனியாக ஒரு காதையையே இளங்கோவடிகள் வடித்துள்ளார்.
  • மதுரைக் காண்டத்தின் இரண்டாவது காதையான வேட்டுவ வரியில் கொற்றவை வழிபாடு மிக விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
  • இச்சிற்பத்தில் பல்லவர் காலக் கலைக்கூறுகள் காணப்படுகின்றன என உறுதிப்படுத்தினார். இச்சிற்பமானது கால ஓட்டத்தில் உராய்ந்து பொலிவிழந்து காணப்படுகிறது. 
'யுனெஸ்கோ' பட்டியலில் துர்கா பூஜை
  • மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படும், துர்கா பூஜையை, அடுத்த ஆண்டுக்கான, ஐக்கிய நாடுகள் சபையின், கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு மையமான, 'யுனெஸ்கோ'வின் பாரம்பரிய பட்டியலில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் லோக் ஆயுக்தவுக்கு உறுப்பினர்கள் நியமனம்
  • தமிழகத்தில் லோக் ஆயுக்த அமைப்புக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான ஒப்புதலை தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது.
  • சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.தேவதாஸ் ஊழல் தடுப்பு நடுவராகவும் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் கே. ஜெயபாலன், ஆர். கிருஷ்ணமூர்த்தி நீதித்துறை உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.ராஜாராம், மூத்த வழக்குரைஞர் கே. ஆறுமுகம் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 



இந்தியாவுக்கான பாக்., தூதர் மாற்றம்
  • இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக பதவி வகிக்கும் சொஹைல் மக்மூத் திடீரென மாற்றப்பட்டுள்ளார். இதை பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ‌ஷா மக்மூத் குரே‌ஷி தெரிவித்துள்ளார்.
சாதனை படைத்தது இந்திய ரயில்வே:இலக்கை விஞ்சி, 6,037 ரயில் பெட்டிகள் தயாரிப்பு
  • இந்திய ரயில்வேக்கு, சென்னையில், ஐ.சி.எப்., உத்தர பிரதேசம், ரேபரேலியில், எம்.சி.எப்., பஞ்சாப், கபுர்தலாவில், ஆர்.சி.எப்., என, ரயில் பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன.அவற்றில், 2018 -- 19ம் நிதியாண்டில், 6,000 ரயில் பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதை விஞ்சி, 6,037 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
  • சமீபத்தில், முதன் முறையாக, இன்ஜின் இல்லாமல் இயங்கும் இந்தியாவின் அதிவேக ரயிலை தயாரித்து, சாதனை படைத்தது.
`குளோபல் ஆந்த்ரபிரனார் கவுன்சில்' சேர்மனாக சென்னைப் பெண் தேர்வு!
  • கனடா நாட்டின் அரசின் கீழ் இயங்கும் `குளோபல் ஆந்த்ரபிரனார் கவுன்சில்' என்ற அமைப்பின் ஆசிய சேர்மனாக சென்னைப் பெண் மோகனலட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம் பெற்ற இந்திய அணி
  • டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம் பெற்ற இந்திய அணி ஐ.சி.சி., விருதை தக்கவைத்தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் டெஸ்ட் தரவரிசையில் ஏப். 1ம் தேதி 'நம்பர்-1' இடத்தில் இருக்கும் அணிக்கு 'மேஸ்' (கதாயுதம்) விருது வழங்கப்படும். 
  • கடந்த இரு ஆண்டுகள் இந்த விருதை கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தட்டிச் சென்றது. சமீபத்தில் முதன் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி, 116 புள்ளிகளுடன் தரவரிசையில் 'நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறது. இதையடுத்து இந்திய அணி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக 'மேஸ்' விருதை தட்டிச் சென்றது. 
  • தவிர, ரூ. 6.9 கோடி பரிசும் கிடைத்தது. இரண்டாவது இடத்தை பெற்ற நியூசிலாந்து அணிக்கு (108), ரூ. 3.47 கோடி தட்டிச் சென்றது. கடந்த இரு ஆண்டுகளாக இரண்டாவது இடம் பெற்ற தென் ஆப்ரிக்கா (105) இம்முறை மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
  • ரூ. 1. 39 கோடி பெற்றது. தசம புள்ளிகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை (104) பின் தள்ளி நான்காவது இடத்தை உறுதி செய்த ஆஸ்திரேலியா (104), ரூ.69 லட்சம் பெற்றது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel