Type Here to Get Search Results !

9th MARCH CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

சீர்மரபினர் இனி சீர்மரபினர் பழங்குடியினர் என அழைக்கப்படுவர்: தமிழக அரசு
  • தமிழகத்தில் டிஎன்சி (DNC) என அழைக்கப்பட்ட சீர்மரபினர் சமூகத்தினர் இனி மத்திய அரசின் இட ஒதுக்கீட்டை பெற வசதியாக டின்என்டி (DNT) அதாவது சீர்மரபினர் பழங்குடியினர் என்று அழைக்கப்படுவர் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • குழுவின் பரிந்துரையை ஏற்று 1979ம் ஆண்டு சீர்மரபினர் பழங்குடியினர் என்ற பெயரை சீர்மரபினர் சமூகத்தினர் என மாற்றி வெளியிடப்பட்ட அரசாணையை விலக்கிக்கொள்வதாக கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் இட ஒதுக்கீடு சலுகை மற்றும் நலத்திட்ட சலுகைகளை பெறுவதற்கு இதுவரை சீர்மரபினர் சமூகங்கள் என அழைக்கப்பட்ட 68 சமூகங்கள் சீர்மரபினர் சமூகங்கள் என்றே அழைக்கப்படுவர் என தெரிவிக்கப் பட்டுள் ளது.
  • அதே நேரம் மத்திய அரசின் நலத்திட்ட பலன்களை பெறுவதற்கு இந்த 68 சமூகத்தினரும் சீர்மரபினர் பழங்குடியினர் என அழைக்கப்படுவர் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய பிளாஸ்டிக் இறக்குமதிக்கு அரசு தடை
  • உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு அதை மீண்டும் புதிய பொருட்களாக இந்தியா மாற்றி வந்தது. ஆனால் இதன் மூலம் பிளாஸ்டிக் முழுமையாக புதிய பொருட்களாக மாற்ற முடியாத நிலை உள்ளது. எனவே இந்த பிளாஸ்டிக் கழிவுகள் நாட்டில் பெருகி வந்தன. அதை ஒட்டி இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் பிளாஸ்டிக் இறக்குமதி தடை செய்யப்பட்டது.
  • அதிகம் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் சீனாவில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து உலகின் அதிக அளவில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் இருந்தது. தற்போது இந்தியாவில் 25,940 டன்கள் மீண்டும் உபயோகிக்க முடியாத பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளன.
  • இதை ஒட்டி இந்தியா பழைய பிளாஸ்டிக் பொருட்கள் இறக்குமதிக்கு முழுமையாக தடை விதித்துள்ளது. இந்த தடை இந்த மாதம் 1 ஆம் தேதியில் இருந்து முன் தேதியிட்டு அமுல் செய்யப்பட்டுள்ளது. வரும் 2022 க்குள் ஒரு முறை உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கும் முழுத்தடை விதிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.



பாகிஸ்தான் செனட் சபையின் தலைவர் ஆன இந்து தலித் பெண்
  • பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வசிக்கும் கோலி சமூகத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமாரி கோலி, இந்து சமூகத்திலிருந்து செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி. இவரின் கோலி சமூகம், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் வருகிறது.
  • இந்த கிருஷ்ணகுமாரிதான் பாகிஸ்தான் செனட் சபையின் ஒருநாள் தலைவராக பணியாற்றி, உலகளவில் கவனம் ஈர்த்துள்ளார்.
  • மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, ஒரு பெண் உறுப்பினரை (அதுவும் சிறுபான்மை மற்றும் தலித் சமூகத்தைச் சேர்ந்த) கெளரவிக்கும் வகையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது வரவேற்பையும் பெற்றுள்ளது.
உலகின் வயதான ஜப்பான் பெண் கானே தனாகா 116 கின்னஸ் சாதனை
  • ஜப்பானின் டோக்கியோவை சேர்ந்த சியோ மியாகோ உலகின் மிக வயதான பெண்ணாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருந்தார். கடந்த ஆண்டு ஜூலையில் சியோ மியாகோ 117வது வயதில் இறந்தார்.இதையடுத்து தென்மேற்கு ஜப்பானின் புகுவோகாவை சேர்ந்த கானே தனாகா 116 கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுஉள்ளார்.
ஹஸ்முக் ஆதியா குஜராத் மத்திய பல்கலை., துணைவேந்தராக நியமனம்
  • குஜராத் மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக முன்னாள் நிதியமைச்சகத்தின் நிதி செயலாளராக பணியாற்றிய ஹஸ்முக் ஆத்யா, நியமிக்கப்பட்டுள்ளார். 
  • குஜராத் மத்திய பல்கலைக்கழகத்தின் பார்வையாளராக உள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தினால் அவரது நியமனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 
1,156 அரிய நூல்கள் இணையதளத்தில் பதிவேற்றம்: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை
  • தமிழ் வளர்ச்சித் துறை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 2018-2019-ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கையின்போது "உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ள அரிய நூல்கள் மின் எண்மம் (Digitalize) செய்யப்படும்' என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
  • இதைத் தொடர்ந்து இப்பணிக்கு ரூ. 39,34,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 1,156 அரிய நூல்களின் 2,18,558 பக்கங்கள் மின்எண்மம் செய்யப்பட்டன. அந்த நூல்களை சென்னை தரமணியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், க.பாண்டியராஜன் ஆகியோர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வலைத்தளத்தில் (www.ulakaththamizh.in) பதிவேற்றம் செய்தனர். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel