Type Here to Get Search Results !

3rd MARCH CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF




வங்கி கணக்கு, சிம் கார்டுக்கு விரும்பினால் ஆதார்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்
  • வங்கி கணக்குத் தொடங்கவும், சிம் கார்டு வாங்கவும் ஆதாரை விருப்பப்பட்டவர்கள் இணைக்க வகை செய்யும் சட்டத்துக்கு மத்திய அமைச்ச ரவை அனுமதி அளித்தது. இந்த சட்ட மசோதா, மாநிலங்களவையில் நிறைவேறவில்லை. ஆனால் மக்களவையில் நிறைவேறியது.
  • இதைத் தொடர்ந்து இதுதொடர்பான அவசர சட்டத்தை பிறப்பித்த மத்திய அரசு இதற்கு, ஒப்புதல் பெற குடியரசு தலைவருக்கு அதை அனுப்பி வைத்தது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
விங் கமாண்டர் அபிநந்தனுக்கு அகிம்சா விருது
  • இந்தியாவுக்குள் கடந்த 27 ஆம் தேதி பாகிஸ்தான் போர் விமானங்கள் ஊடுருவ முயன்றன. அதை இந்திய விமானப் படை விமானங்கள் விரட்டி அடித்தன. அப்போது அவர்களின் எப் 16 ரக ஜெட் விமானம், விங் காமெண்டர் அபிநந்தனால் சுட்டு வீழ்த்தப்பட்டது. 
  • பாகிஸ்தான் விமானத்தை விரட்டிச் சென்ற அபிநந்தனின் மிக்-21 விமானம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் விழுந்தது. அப்போது, பாதுகாப்பாக கீழே குதித்த விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கினார். பின்னர் பாகிஸ்தான் மூன்று நாட்களுக்குப் பிறகு நல்லெண்ண அடிப்படையில் எவ்வித நிபந்தனையுமின்றி அபிநந்தனை விடுவித்தது.
  • இந்தியா திரும்பிய அவரை நாடே வரவேற்றது. தாயகம் திரும்பிய அவருக்கு அகில பாரதிய திகம்பர் ஜெய்ன் மஹா சமிதி என்ற அமைப்பு, பகவான் மஹாவீர் அகிம்சா என்ற விருதை வழங்குவதாக அறிவித்துள்ளது. 
  • வரும் ஏப்ரல் 17ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி அன்று அந்த விருது அபிநந்தனுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் 2 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் தொகையும் சான்றிதழும் வழங்கப்படுகிறது.
AK 203 துப்பாக்கி ஆலையை துவங்கி வைத்தார் பிரதமர் மோடி
  • உத்திரபிரதேச மாநிலம் சென்ற பிரதமர் மோடி ரூபாய் 538 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களைத் தொடங்கிவைத்தார். அதன் ஒருபகுதியாக உ.பி-யின் கோர்வாவில் கலாஷ்னிகோவ் துப்பாக்கி தயாரிக்கும் தளவாடத் தொழிற்சாலையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
  • ரஷ்யாவுடன் கையெழுத்தான ஒப்பந்தப்படி இந்த தொழிற்சாலையில் இந்திய பாதுகாப்புப் படை வீரர்களுக்குத் தேவையான ஏழரை லட்சம் AK 203 ரக தாக்குதல் துப்பாக்கிகள் தயாரிக்கப்படவுள்ளன.
சர்வதேச டென்னிஸ் போட்டியில் '100 வது' பட்டம் பெற்ற வீரர்
  • துபாயில் ஆண்களுக்கான ஏடிபி சர்வதேச டென்னிஸ் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 7ஆம் நிலை வீரர் ரோஜர் பெடருடன் 11 ஆம் நிலை கிரீஸ் வீரரான ஸ்டெபானொஸ் சிட்சிபாஸ் மோதினார். இந்தப்போட்டியில் 6 -4 , 6 -4 என்ற நேர் செட்களில் சிட்சிபாஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் பெடரர். 
  • சர்வதேச டென்னிஸ் அரங்கில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும். ஒலிம்பிகில் தங்கப்பதக்கதையும் வென்று சாதித்துள்ளார். இந்தப் போட்டியில் அவர் 100 வது முறையாக சாம்பியம் பட்டம் பெற்றுள்ளார். அமெரிக்காவின் ஜிம்மி கானர்ஸ் என்பவர் தான் இதற்கு முன் 109 முறை பட்டங்கள் வென்று சாதனை படைத்துள்ளார்கள். 



தங்கம் வென்றார் பஜ்ரங் புனியா
  • பல்கேரியாவில் நடந்த மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இதனை, இந்திய விமானப்படையின் 'விங் கமாண்டர்' அபிநந்தனுக்கு அர்ப்பணிப்பதாக பஜ்ரங் தெரிவித்தார்.
  • பல்கேரியாவின் ரூஸ் நகரில் 'டான் கோலோவ்-நிகோலா பெட்ரோவ்' மல்யுத்த தொடர் நடந்தது. இதில் ஆண்களுக்கான 'பிரீஸ்டைல்' 65 கி.கி., எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் பஜ்ரங் புனியா, அமெரிக்காவின் ஜோர்டான் ஆலிவியர் மோதினர். அபாரமாக செயல்பட்ட பஜ்ரங் 12-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார். கடந்த ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு, ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இவர், உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
  • பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' 53 கி.கி., எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் வினேஷ் போகத், சீனாவின் கியான்யு பாங் மோதினர். இதில் வினேஷ் போகத் 2-9 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • இரண்டு தங்கம்இம்முறை இந்தியாவுக்கு 2 தங்கம், 4 வெள்ளி என, மொத்தம் 6 பதக்கங்கள் கிடைத்தன. ஏற்கனவே இந்திய வீராங்கனை பூஜா தண்டா ('பிரீஸ்டைல்' 59 கி.கி.,) தங்கம் வென்றிருந்தார். தவிர சரிதா மோர் (பெண்கள் 'பிரீஸ்டைல்' 59 கி.கி.,), சாக் ஷி மாலிக் (பெண்கள் 'பிரீஸ்டைல்' 65 கி.கி.,), சந்தீப் தோமர் (ஆண்கள் 'பிரீஸ்டைல்' 61 கி.கி.,) ஆகியோர் வெள்ளி வென்றிருந்தனர்.
ஐசிசி சேர்மனாக மீண்டும் கும்ப்ளே
  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) சேர்மனாக இந்திய அணி முன்னாள் சுழல் நட்சத்திரம் அனில் கும்ப்ளே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 
  • கடந்த 2012ம் ஆண்டு முதல் அவர் இந்த பதவியில் இருந்து வருகிறார். இந்த நிலையில், 'மேலும் 3 ஆண்டுகளுக்கு கும்ப்ளே சேர்மனாக நீடிப்பார், இதுவே அவரது கடைசி பதவிக் காலமாக இருக்கும்' என்று ஐசிசி அறிவித்துள்ளது.
ஆசிய விளையாட்டில் கிரிக்கெட்: ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் அனுமதி
  • தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் (ஓ.சி.ஏ.,) பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் போட்டியை சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. முடிவில், வரும் 2022ல் சீனாவின் ஹாங்சூ நகரில் நடக்கவுள்ள 19வது ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் போட்டியை சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டது.
  • இதற்கு முன், கடந்த 2010 மற்றும் 2014ல் நடந்த ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் போட்டி இடம் பெற்றிருந்தது. கடந்த ஆண்டு இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் போட்டி சேர்க்கப்படவில்லை. இதனையடுத்து பல்வேறு தரப்பில் கிரிக்கெட் போட்டியை சேர்க்க கோரிக்கை எழுந்தது. தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel