Type Here to Get Search Results !

2nd MARCH CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS ENGLISH PDF




தேஜஸ் ரயிலை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் தொடங்கினார்
  • மதுரை- சென்னை இடையே அதிநவீன தேஜஸ் ரயிலை கன்னியாகுமரியிலிருந்து பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 
  • இந்த ரயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் கண்காணிப்பு கேமரா, தீயணைப்புக் கருவிகள், தீ தடுப்பு அலாரம், தானாக மூடி திறக்கும் கதவுகள், சொகுசு இருக்கைகள், நவீன கழிப்பறைகள், இருக்கையில் எல்.இ.டி. திரை வசதி, காலை உணவு, இரவு உணவு, டீ, பிஸ்கெட் ஆகிய வசதிகள் உள்ளன.
  • இந்த ரயில் கொடைரோடு மற்றும் திருச்சி ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். வியாழக்கிழமை தவிர தினமும் இந்த ரயில் இயக்கப்படும்.
தருமபுரி டூ மொரப்பூர் ரயில் திட்டத்திற்கு ரூ358.95 கோடி நிதி ஒதுக்கீடு
  • தருமபுரி - மொரப்பூர் ரயில் பாதை திட்டம் என்பது தருமபுரி மாவட்ட மக்களின் 78 ஆண்டு கனவுத் திட்டம். இந்த திட்டத்தை மத்திய அரசு குறைந்தபட்சம் மாவட்ட தலைநகரங்களை மாநில தலைநகரத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற கொள்கை முடிவில், இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • தருமபுரி - மொரப்பூருக்கு 36 கி.மீட்டர் நீளத்திற்கு புதிய ரயில் பாதை அமைப்பதன் மூலம் தருமபுரி மாநில தலைநகரமான சென்னையுடன் இணைகின்றது. 
  • அதன் விளைவாக ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தருமபுரி டூ மொரப்பூர் ரயில் திட்டத்திற்கு ரூ358.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளித்தார். 
  • தருமபுரி மொரப்பூர் இடையே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1906 ஆம் ஆண்டு முதல் 1941 ஆம் ஆண்டு வரை ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 



இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ரூ.27.94 லட்சம் கோடியாக அதிகரிப்பு
  • இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு பிப்ரவரி 22-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 39,921 கோடி டாலராக (ரூ.27.94 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.
  • இதற்கு முந்தைய வாரத்தில் செலாவணி கையிருப்பு 15.02 கோடி டாலர் குறைந்து 39,827 கோடி டாலராக காணப்பட்டது.
  • மதிப்பீட்டு வாரத்தில், ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு 93 கோடி டாலர் அதிகரித்து 37,199 கோடி டாலராக இருந்தது.
  • தங்கத்தின் கையிருப்பு மதிப்பில் மாற்றம் எதுவுமின்றி 2,276 கோடி டாலராகவே காணப்பட்டது.
புதுவையில் தமிழறிஞர்கள் 20 பேருக்கு தமிழ் மாமணி விருது: முதல்வர் வழங்கினார்
  • புதுவை அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பில், இலக்கியத் துறையில் சிறந்து விளங்கும் அறிஞர்களை கெளரவிக்கும் வகையில், தமிழ்மாமணி மற்றும் தெலுங்கு ரத்னா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 
  • அந்த வகையில், கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் 2014 வரை 5 ஆண்டுகளுக்கான தமிழ்மாமணி மற்றும் தெலுங்கு ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருதுகள், பண முடிப்பு வழங்கும் நிகழ்ச்சி புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள குழு அறையில் சனிக்கிழமை நடைபெற்றது.
  • கலை-பண்பாட்டுத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தலைமை வகித்தார். முதல்வர் வே.நாராயணசாமி கலந்து கொண்டு புதுச்சேரியைச் சேர்ந்த ராசவேங்கடேசன், அரங்கநடராசன், கிருஷ்ணசாமி, பட்டாபிராமன், பசுபதி, வேல்முருகன், இலக்கியன் (எ)லட்சுமிநாராயணன், கல்லாடன், தமிழமல்லன், பூங்கொடிபராங்குசம், தமிழியக்கன், அரிமளம் பத்பநாபன்,நாராயணன், செல்வராசு, உசேன், பாண்டுரங்கன், ரத்தின ஜனார்த்தனன், மணிமேகலை குப்புசாமி, காரைக்காலைச் சேர்ந்த சாயபுமரைக்காயர், ராகவசாமி ஆகிய தமிழறிஞர்கள் 20 பேருக்கு தமிழ்மாமணி விருதையும், ஏனாமைச் சேர்ந்த விஜயலட்சுமி காமவரப்புக்கு தெலுங்கு ரத்னா விருதையும் வழங்கிப் பாராட்டினார்.
உலக வங்கியில் அதிகம் கடன் வாங்கிய நாடுகளில் மூன்றாம் நாடு இந்தியா
  • கடந்த நான்கு ஆண்டுகளில் உலக வங்கியிடம் இருந்து அதிக கடன் வாங்கிய நாடுகளில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.
  • உலக வங்கி சமீபத்தில் அளித்த தகவலில், 'பல நாடுகளின் கூட்டமைப்புக்கும் தனி நாடுகளுக்கும் உலக வங்கி கடன் அளித்து வருகிறது. அவ்வகையில் இந்தியாவுக்கு உலக வங்கி பல சலுகைகள் அளித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் உலக வங்கியில் அதிக கடன் வாங்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel