Saturday, 2 March 2019

28th FEBRUARY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

'சிறந்த நெறிமுறை' விருது டாடா ஸ்டீல் தேர்வு
 • அமெரிக்காவைச் சேர்ந்த, 'எதிஸ்பியர் இன்ஸ்டிடியூட், உலகளவில் பல்வேறு வர்த்தகங்களில், சிறந்த ஒழுங்கு நெறிகளை கடைப்பிடிக்கும் நிறுவனங்களின் பட்டியலை, ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
 • இந்தாண்டு, உலோகம், கனிமம், சுரங்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய துறையில், சிறந்த நெறிமுறைகளை கடைப்பிடிக்கும் நிறுவனங்களில் ஒன்றாக, டாடா ஸ்டீல் தேர்வாகியுள்ளது. இந்நிறுவனம், எட்டாவது முறையாக இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.சீர்திருத்தங்களை செயல்படுத்தியதில் பஞ்சாப் நேஷனல் பேங்க் முதலிடம்
 • வாடிக்கையாளர் சேவை, மின்னணு தொழில்நுட்ப பயன்பாடு, கடன் வளர்ச்சி உள்ளிட்ட ஆறு அம்சங்களில், சிறப்பான சீர்திருத்தங்களை மேற்கொண்ட வங்கிகளில், பஞ்சாப் நேஷனல் பேங்க், முதலிடத்தை பிடித்துள்ளது.
 • வங்கி சீர்திருத்த நடவடிக்கை தொடர்பான, 'ஈஸ்' பட்டியலில், பஞ்சாப் நேஷனல் பேங்க், 78.4 புள்ளிகள் பெற்று உள்ளது. அடுத்த இடங்களில், பேங்க் ஆப் பரோடா, எஸ்.பி.ஐ., ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், கனரா பேங்க், சிண்டிகேட் பேங்க் ஆகியவை உள்ளன.
பஞ்சாப் அணிக்கு எதிரான தேசிய ஹேண்ட்பால் : 'சாம்பியன்' பட்டத்தை கைப்பற்றிய ராணுவ அணி
 • திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 32 அணிகள் இடையிலான 47-வது தேசிய சீனியர் ஆண்கள் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் பஞ்சாப்-ராணுவ அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ராணுவ அணி 51-47 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் அணியை வீழ்த்தி 'சாம்பியன்' பட்டத்தை கைப்பற்றியது.
காடுகளில் வசிக்கும் பழங்குடியினரை வெளியேற்ற தடை -உச்சநீதிமன்றம்
 • மாநில அரசுகளால் பட்டா உள்ளிட்ட நில உரிமை மறுக்கப்பட்ட பிறகும், சட்ட விரோதமாக காடுகளில் வசித்து வரும் பழங்குடியினர் மற்றும் பாரம்பரிய காட்டுவாசிகளை வெளியேற்றுமாறு கடந்த மாதம் 13-ஆம் நாள் உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. 
 • மேலும் இத்தகையோரை வெளியேற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறும் 21 மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தது.
 • இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் 'பழங்குடியினர் மற்றும் பாரம்பரிய காட்டுவாசிகள் (காட்டு உரிமைகளின் அங்கீகாரம்) சட்டம்-2006' ஒரு பயனுள்ள சட்டமாகும். 
 • விசாரணையின் முடிவில், பட்டா இன்றி காடுகளில் வசித்து வரும் பழங்குடிகள் மற்றும் காட்டுவாசிகளை வெளியேற்ற நீதிபதிகள் தடை விதித்தனர். மேலும் இந்த விவகாரத்தில் கடந்த மாதம் 13-ஆம் நாள் பிறப்பித்த உத்தரவுக்கும் தடை விதித்து நிறுத்தி வைப்பதாகவும் அறிவித்தனர்.
4 மாநிலங்களுக்கு நிவாரண நிதி
 • ராஜஸ்தான் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்கள், கடந்தாண்டு, வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆந்திர மாநிலத்தில் புயல் பாதிப்பும், வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் நிலச்சரிவும் ஏற்பட்டது. 
 • இந்த மாநிலங்களுக்கு, தேசிய பேரிடர் நிவாரண நிதியாக, 1,600 கோடி ரூபாய் வழங்க, மத்திய அரசு, அனுமதி அளித்தது.
2019-ம் நிதியாண்டில் மே மாதத்தில் பணப் புழக்கம் ரூ.20.9 ட்ரில்லியனை எட்டும்: வழக்கத்தைவிட குறைவு என தகவல்
 • கடந்த ஜனவரியில் பணப் புழக்கம் ரூ.20.4 ட்ரில்லியனாக இருந்தது. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு,22.45 ட்ரில்லியனை பணப்புழக்கம் எட்டியிருக்க வேண்டும்.
 • ஆனால், வழக்கத்தைவிட ரூ.1.5 ட்ரில்லியன் குறைந்துள்ளது.

TNPSCSHOUTERS

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a comment