Type Here to Get Search Results !

20th MARCH CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

இந்திய ராணுவத்துக்கு 10 லட்சம் கையெறி குண்டுகளை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் 
  • இந்திய ராணுவத்துக்கு 10 லட்சம் கையெறி குண்டுகளை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்படும் நவீன ரக கையெறி குண்டுகள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
இந்தியாவில் 90 லட்சம் பெண்கள் வேலை இழப்பு: பொருளாதார கண்காணிப்பு மையம் தகவல்
  • இந்தியாவில் ஒருகோடி பேர் வேலையிழந்துள்ள நிலையில் இதில் 90 லட்சம் பேர் ெபண்கள் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வேலைவாய்ப்பு தொடர்பான மத்திய அரசின் அறிக்கை ஒன்று சமீபத்தில் கசிந்தது. 
  • இதில் கடந்த 2017-18 ம் ஆண்டில் மட்டும் 23.3 சதவீதம் பெண்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது கடந்த 2011-12 ம் ஆண்டில் இருந்த வேலைவாய்ப்பை விட 8 சதவீதம் குறைவு எனவும் கூறப்பட்டுள்ளது. அதாவது கடந்த 8 ஆண்டுகளில் 8சதவீதம் அளவுக்கு வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கராத்தே போட்டி: கோவை மாணவன் மூன்றாமிடம்
  • ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் கோவை கல்லூரி மாணவன் கோபி கிருஷ்ணா மூன்றாவது இடம் பிடித்து கோப்பையை வென்றுள்ளார்.



கோவா நம்பிக்கை ஓட்டெடுப்பில் பா.ஜ., அரசு வெற்றி
  • கோவா சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள பா.ஜ.,வின் பிரமோத் சாவந்த் தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது.
  • 40 உறுப்பினர்களை கொண்ட கோவா சட்டசபையின் பலம் தற்போது 36ஆக உள்ளது. இதில் பா.ஜ.,வின் பிரமோத் சாவந்த் அரசுக்கு ஆதரவாக 20 பேரும், எதிராக 15 பேரும் ஓட்டளித்தனர். இவர்களில் 14 பேர் காங் கட்சியையும், ஒருவர் தேசியவாத காங்.,ஐயும் சேர்ந்தவர். இதனையடுத்து நம்பிக்கை ஓட்டெடுப்பில் பா.ஜ., அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
திருமாவளவனுக்குப் பானை சின்னம்
  • சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு பானை சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
  • திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில், விழுப்புரம் தொகுதியில் து.ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் 
இந்தியர்களை விட பாகிஸ்தானியர்கள் அதிக மகிழ்வுடன் உள்ளனர் : ஆய்வு தகவல்
  • ஐநா சபையின் நிலையான வளர்ச்சி தீர்வுகள் பிரிவு கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் மார்ச் 20 ஆம் தேதியை உலக மகிழ்ச்சி தினமாக அறிவித்தது. ஒவ்வொரு வருடமும் உலக நாடுகளின் மகிழ்ச்சி குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
  • இந்த கணக்கெடுப்பு ஒவ்வொரு நாட்டிலும் வருமானம், சுதந்திரம், நம்பிக்கை, சுகாதார வாழ்க்கை முறை, சமூக ஆதரவு மற்றும் தாராளத் தன்மை ஆகியவைகளின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. நேற்று உலக மகிழ்வு தினத்தை ஒட்டி இந்த கணக்கெடுப்பின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
  • இந்த வருடத்திய கணக்கெடுப்பில் 156 நாடுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் ஃபின்லாந்து முதல் இடத்தில் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த நாடு முடலிடத்தில் இருந்து வருகிறது. அடுத்த இடங்களில் டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.
  • சென்ற ஆண்டு இந்தியா 133 ஆம் இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு மேலும் குறைந்து 140 ஆம் இடத்தில் வந்துள்ளது. இது பாகிஸ்தான் உள்ளிட்ட நமது அண்டை நாடுகளை விட மிகவும் குறைவானதாகும். பாகிஸ்தான் 67 ஆம் இடத்தில் உள்ளது. சீனா 93 ஆம் இடத்திலும், வங்கதேசம் 125ஆம் இடத்திலும் உள்ளன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel