Type Here to Get Search Results !

21st FEBRUARY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF




சர்வதேச ஆசிரியர் விருது பட்டியலில் நடிகை ஸ்வரூப் ராவல்
  • பிரிட்டனைச் சேர்ந்த, 'வர்க்கி பவுண்டேஷன்' (Varkey Foundation) என்ற அமைப்பு சர்வதேச அளவில் சிறந்த ஆசிரியருக்கான விருதை வருடம் தோறும் வழங்கி வருகிறது. 
  • இந்த விருது ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை பரிசுத் தொகையாகக் கொண்டது. இந்த ஆண்டுக்கான சர்வதேச ஆசிரியர் விருதுக்கு 179 நாடுகளில் இருந்து பத்தாயிரத்துக்கும் அதிகமான பரிந்துரைகள் வந்தன. இதில், இந்தியாவின் ஸ்வரூப் ராவல் உட்பட 10 பேர் இறுதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்
  • ஸ்வரூப் ராவல், 1979ம் ஆண்டு 'மிஸ் இந்தியா' பட்டம் வென்றவர். உலக அழகிப் போட்டியில் பங்கேற்றவர். தமிழில், வெளியான கமலின் 'டிக் டிக் டிக்' படம் இந்தியில் 'கரீஷ்மா' என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் ஸ்வரூப். 
  • சில இந்தி படங்களிலும் டிவி சீரியலும் நடித்துள்ள இவர், பிரபல இந்தி நடிகர் பரேஷ் ராவலை திருமணம் செய்துகொண்ட பின், நடிப்பில் இருந்து விலகி கல்வி பணியில் ஈடுபடுத்திக் கொண்டார். நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தினார். குஜராத் அரசு மாநில கல்வி திட்டத்துக்கு இவரைத் தேர்வு செய்து நியமித்தது.
சத்துணவுத் திட்டம்: முட்டை கொள்முதல் அரசாணை ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு
  • தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்துக்கு முட்டை கொள்முதல் செய்வதற்கான அரசாணையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
  • தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்தின் கீழ் 58 லட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இவர்களுக்கு முட்டை வழங்குவதற்காக தினசரி சராசரியாக 45 லட்சம் முட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. 
  • இந்த முட்டைகளைத் தனியாரிடமிருந்து வாங்குவதற்கு டெண்டர் அறிவிப்பாணை 2018 ஆகஸ்ட்-இல் வெளியிடப்பட்டது. அதில் தமிழகம் அல்லாத பிற மாநில முட்டை உற்பத்தியாளர்கள் டெண்டரில் பங்கேற்க இயலாது எனவும், தமிழகத்தை 6 மண்டலங்களாகப் பிரித்து அந்தந்த பகுதி முட்டை உற்பத்தியாளர்கள் தான் பங்கேற்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. 
  • இதனால் குறைந்த விலையில் முட்டை விநியோகம் செய்பவர்கள் டெண்டரில் பங்கேற்க இயலாமல் போகும் நிலை உருவாகும். அதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். எனவே அந்த அரசாணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. 
  • இம்மனுக்கள் மீது ஏற்கெனவே நடைபெற்ற விசாரணையில் முட்டை கொள்முதல் நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதைத் தொடர்ந்து முட்டை கொள்முதல் செய்ய முடியாததால் சத்துணவுத் திட்டத்தில் முட்டை வழங்குவதில் பிரச்னை ஏற்படுகிறது எனக் கூறி தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 
  • இம்மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன், தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்துக்கான முட்டை கொள்முதல் ஒப்பந்தப் புள்ளி தொடர்பான அரசாணை முறையாக இல்லை, பாகுபாடுகள் உள்ளன எனக்கூறி அதை ரத்து செய்தார். 
  • மேலும் முட்டை கொள்முதல் தொடர்பாக புதிய டெண்டர் அறிவிப்பு வெளியிடவேண்டும் என்றும் அதுவரையிலும் சத்துணவுத்திட்டத்தில் முட்டை வழங்குவதில் பாதிப்பு இல்லாத வகையில் இதுவரை யார் முட்டை வழங்கி வருகிறார்களோ அவர்களிடம் அதே விலையில் அதே எண்ணிக்கையில் முட்டை வாங்கலாம் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.



கடல் பசுக்களைப் பாதுகாக்க கடல் புற்கள் வளர்க்கத் திட்டம்
  • மன்னார் வளைகுடா பகுதியில் நாகை முதல் தூத்துக்குடி வரையில் 21 தீவுகள் உள்ளன. கடந்த 2015 ஆண்டுக்கு முன்பு நடந்த ஆய்வின்படி இங்கு சுமார் 254 சதுர கிலோ மீட்டரில் கடல் புற்கள் வளர்ந்திருந்தன. இப்பகுதியில் 49 முதல் 153 வரையிலான கடற்பசுக்கள் இருந்ததாக கண்டறியப்பட்டன. 
  • கடல் பசுக்கள் உண்ணவும், அதைச் சார்ந்த சங்கு, கடல் தாமரை போன்றவை வாழவும் கடல் புற்கள் அவசியம். 
  • இந்நிலையில் இரட்டை மடி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடிப்பில் ஈடுபட்டதால், கடல் புற்களின் பரப்பளவு குறையத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, டேராடூன் கடல் பசுக்கள் மத்திய பாதுகாப்பு நிறுவனம் சார்பில், தொண்டியை மையமாக வைத்து கடல் பசுக்களை பாதுகாப்பது குறித்து, கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. 
  • கடந்தாண்டு நடந்த ஆய்வில் கடல் புற்களின் பரப்பளவு 209 சதுர கிலோ மீட்டராக குறைந்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த ஆண்டில் கடல் புற்கள் வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஒரு மீட்டர் அளவு பிளாஸ்டிக் குழாயை வடிவமைத்து, அதில் கடல் புற்கள் வளரும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. மண்டபத்தை ஒட்டியுள்ள தீவுப் பகுதிகளில் ஒரு சதுர கிலோ மீட்டர் அளவுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. 
  • இந்நிலையில் தற்போது கயிறுகளை கடல் தரையில் கட்டி வைத்து, அதில் கடல் புற்கள் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி நாகை, தஞ்சை, ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்ட கடல் பகுதியில் தலா 1 சதுர கிலோ மீட்டரில் கடல் புற்களை வளர்க்கத் திட்டமிட்டுள்ளது.
பி.சி.சி.ஐ.யின் குறைதீர் அதிகாரி பதவிக்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.கே. ஜெயின் நியமனம்
  • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் (பி.சி.சி.ஐ.) குறைதீர் அதிகாரி பதவிக்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.கே. ஜெயின் முதன்முறையாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
தென்கொரிய பல்கலைக்கழகத்தில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
  • தென்கொரியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி சியோலில் உள்ள புகழ்பெற்ற யோக்சி பல்கலைக்கழகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 
  • அங்கு நிறுவப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை மோடி, தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் மற்றும் ஐநா சபை முன்னாள் பொதுச்செயலாளர் பான் கிமூன் ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய மோடி, மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை கொண்டாடி வரும் வேளையில், அவரது சிலையை திறந்து வைத்தது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்று குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன தேஜசுக்கு இறுதி ஒப்புதல்
  • உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன தேஜஸ் போர் விமானத்திற்கு இறுதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படைக்காக அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட இலகு ரக தேஜஸ் போர் விமானம் எச்ஏஎல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது. 
  • முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த விமானம், போர் விமானங்களிலேயே மிகக்குறைவான எடை கொண்டது. கடந்த 2013ல் முதற்கட்ட ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில் தேஜஸ் விமானம் கடந்த 2016ல் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது. 
  • தொடர்ந்து, 2 ஆண்டுகள் சோதனை செய்யப்பட்டு, விமானப்படையின் கோரிக்கைப்படி பல்வேறு கட்டமாக தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், பெங்களூருவில் நடைபெற்ற 'ஏரோ இந்தியா' போர் விமானங்கள் கண்காட்சியில் தேஜஸ் விமானத்திற்கு இறுதிகட்ட ஒப்புதல் சான்றிதழ் முறைப்படி வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம், இந்த விமானம் விமானப்படையின் முழு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
  • இந்நிலையில், ஏரோ கண்காட்சியில் நேற்று பங்கேற்ற ராணுவ தளபதி பிபின் ராவத், முதல் முறையாக தேஜஸ் விமானத்தில் ஏறி பயணம் மேற்கொண்டார். இதற்கிடையே, இந்திய ராணுவம், 70 மிமீ நீளமுள்ள 135 ராக்கெட் லாஞ்சர்களை தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பிரான்சின் தலெஸ் நிறுவனத்துடன் மேற்கொண்டுள்ளது. இந்த ராக்கெட் லாஞ்சர்களை இலகுரக மற்றும் போர் ஹெலிகாப்டர்களில் பயன்படுத்த முடியும். 



முத்திரைத்தாள் சட்டத் திருத்தம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்
  • இந்திய முத்திரைத்தாள் சட்டம் - 1988-இல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தார். 
  • இதன் மூலம் மாநில அரசுகள், பங்குச் சந்தை வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகளில் முத்திரைத்தாள் கட்டணத்தை வசூலித்து கொள்ள முடியும். வரி ஏய்ப்பு நடவடிக்கைகள் முழுமையாக தடுக்கப்படும் என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • இதன் மூலம் மாநில அரசுகளின் வருவாய் ஆதாரம் அதிகரிப்பதுடன், பங்கு சந்தை வர்த்தகம் சார்ந்த நடவடிக்கைகளை நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் எளிதாக மேற்கொள்ள முடியும். இப்போது மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்துதான் பங்கு வர்த்தகம் தொடர்பான முத்திரைத்தாள் கட்டணம் 70 சதவீதம் அளவுக்கு வசூலாகிறது.
  • இப்போது, பங்கு சந்தை வர்த்தகத்தில் வாங்குவோர் மற்றும் விற்போர் என இருதரப்பினரும் இந்த முத்திரைத்தாள் கட்டணத்தைச் செலுத்த வேண்டியுள்ளது. இனி யாராவது ஒரு தரப்பினர் மட்டும் செலுத்தினால் போதுமானது.
திவால் சட்டத்தின் மூலம் மார்ச் 2019க்குள் 1.8 லட்சம் கோடி வருவாய்! - நிதி அமைச்சகம் தகவல்
  • தனிநபர்,நிறுவனங்கள், கார்ப்பரேட்டுகள் வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு,ஒரு கட்டத்தில் வாராக்கடன் அல்லது அசையா சொத்துகள் மூலம்பணத்தைத் திவாலாக்கி விடுகின்றனர். இந்த சூழ்நிலையில்உரிய நபர்களிடம் இருந்து வங்கிகள் இழந்த பணத்தைத் திரும்பப்பெறுவதற்காக திவால் சட்டம் (Insolvency and Bankruptcy Code) கொண்டு வரப்பட்டது.
  • கடந்த 2011ஆம் ஆண்டு மே மாதம் திவால் சட்டம் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின் கீழ், வாராக்கடன் தொடர்பாக 3,000க்கும் மேற்பட்ட தேசிய அளவிலான நிறுவனங்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு நிறுவனம் மீதான திவால் நடவடிக்கை தொடர்ந்து, 270 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
  • ஒருபக்கம் திவால் நடவடிக்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும், அதற்கு எதிராக அந்தந்த நிறுவனங்கள் தொடுத்துள்ள வழக்குகளால் சில வழக்குகள் தாமதமாகி வருகின்றன.
  • இதுதொடர்பாக, 500க்கும் மேற்பட்ட வழக்குகள் இதுவரை முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ள நிலையில், எஸ்ஸார் ஸ்டீல்,பூஷன் பவர் &ஸ்டீல் ஆகிய இரண்டு நிறுவன வழக்குகள் தற்போது முடியும் தருவாயில் இருப்பதால்,வருகிற மார்ச் 2019க்குள் 1.8 லட்சம் கோடி வருவாய் வரும் என்று நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
நிமோனியாவுக்கு புதிய தடுப்பு மருந்து
  • உலகெங்கும் ஆண்டுக்கு, 20 லட்சம் பேரை கொல்லும் நிமோனியா கிருமியை எதிர்க்கும் புதிய தடுப்பு மருந்தை, மனிதர்களுக்கு கொடுத்து சோதிக்கும் முயற்சி துவங்கியுள்ளது. 
  • உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்படி, 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மரணத்தில், 16 சதவீதம், நிமோனியா தொற்றினால் ஏற்படுகிறது. நிமோனியாவை உண்டாக்கும், 'ஸ்ட்ரெப்டோகோகஸ் நிமோனியே' கிருமியில், 98 வகைகள் உள்ளன. 
  • ஆனால், தற்போதுள்ள நிமோனியா தடுப்பு மருந்துகள், 13 வகை கிருமிகளை மட்டுமே எதிர்க்கும் திறன் கொண்டவை. ஆஸ்திரேலியாவிலுள்ள, ஜி.பி.என்., வேக்சின்ஸ் மற்றும் அடிலெய்டு பல்கலைக்கழக தொற்று நோய்கள் ஆய்வு மையமும் இணைந்து, இந்த சோதனையை நடத்துகின்றன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel