Type Here to Get Search Results !

தேசிய மின்னாட்சி திட்டம் (NeGP)

  • தகவல்தொடர்பு தொழில்நுட்பத்தின் (Information and Communication Technology -ICT) பயன்களை கடைசி குடிமகனுக்கும் எடுத்துச்செல்வதால், வெளிப்படைத்தன்மையான, உரிய நேரத்தில் மற்றும் தடையற்ற பொதுமக்கள் சேவையை வழங்கும் பொருட்டு, 1990-களின் இறுதி வாக்கில் இந்திய அரசு மின்-ஆளுமை திட்டங்களைத் துவக்கியது. 
  • இதன் பிறகு, நாட்டில் மின்-ஆளுமை திட்டங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலான இலக்கு சார்ந்த திட்டங்கள் (Mission Mode Projects - MMPs) மற்றும் அதன் பகுதிகளையும் உள்ளடக்கிய தேசிய மின்-ஆளுமை திட்டத்திற்கு (National e-Governance Plan - NeGP) மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Department of Electronics and Information Technology - DeitY), நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறை தீர்க்கும் துறைகள் (Department of Administrative Reforms and Public Grievances -DAR&PG) ஆகியவை இந்த தேசிய மின்-ஆளுமை திட்டத்தை வகுத்துள்ளன.



தொலைநோக்கு

  • குடிமக்களுக்கு மற்றும் தொழிலகங்களுக்கு வழங்கப்படும் அரசு சேவைகளின் தரத்தை உயர்த்தும் வகையில், தேசிய மின்-ஆளுமை திட்டம் கீழ்கண்ட தொலைநோக்கால் வழி நடத்தப்படுகிறது:
  • "பொதுச்சேவை மையங்கள் மூலம், சாதாரண மக்களுக்கு அவர்களின் வாழுமிட பகுதிகளில் அனைத்து சேவைகளும் கிடைக்கச் செய்தல், குறைந்த விலையில் தங்களுக்கு தேவையான அடிப்படைச் சேவைகள் பெறுவதை உறுதி செய்தல் மற்றும் அவ்வாறான சேவைகளின் திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை அதிகரித்தல்"
  • அணுகும் தன்மை: : கிராமப்புற மக்களை மனதில் வைத்தே இந்த தொலைநோக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. தொலை தூரம் மற்றும் அறியாமை ஆகிய காரணங்களால், அரசின் சேவைகளைப் பெற முடியாமல் இருக்கும் சமுதாயத்தின் பிரிவுகளை அடைவதே இதன் நோக்கமாகும். கிராமப்புற குடிமக்கள் எளிதில் அணுகும் பொருட்டு, பொதுச்சேவை மையங்களை (Common Service Centres - CSCs), ஒன்றிய அளவிலான அரசு அலுவலகங்களுடன் (government offices upto the block level) இணைக்கும் மாநில அளவிலான அகன்ற பகுதி வலைப்பின்னல் (State Wide Area Network - SWAN) வசதியும் இந்த தேசிய மின்-ஆளுமை திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ளது.
  • பொதுச்சேவை வழங்கும் மையங்கள் : Aஒரு அரசுத் துறை அல்லது அதன் பகுதி அலுவலகங்களின் சேவைகளைப் பெற, தற்போது ஒதுக்குப்புற பகுதிகளில் வசிக்கும் கிராமப்புற மக்கள் அதிக தொலைவு பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. பொதுமக்களுக்கான சேவைகளை சாதாரண குடிமக்கள் பெறுவதற்கு, இதனால் அதிக நேர விரயமும் பொருட் செலவும் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு, தேசிய மின்-ஆளுமை திட்ட தொலைநோக்கின் ஒரு பகுதியாக, இணைய வசதி கொண்ட கணினியுடன் பொதுச்சேவை மையங்களை ஒவ்வொரு ஆறு கிராமங்களிலும், கிராம மக்கள் எளிதில் சேவைகள் பெறும் வகையில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பொதுச்சேவை மையங்கள் மூலம், இணையவழியில் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இருந்து ஒருங்கிணைந்த சேவைகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • ஆளுமையை மேம்படுத்த, மின்-ஆளுமையை கடைப்பிடித்தல் : தகவல்தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம், அரசால் குடிமக்களை எளிதில் அணுக மற்றும் ஆளுமையை மேம்படுத்த முடியும். இதன் மூலம், திட்டச் செயல்பாடுகளை மேற்கொள்ளவும் அவற்றை சிறப்பாக கண்காணிக்கவும் இயலுமாதலால், ஆளுமையின் நம்பகத்தன்மையும் வெளிப்படைத்தன்மையும் அதிகரிக்கும்.
  • குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் : குடிமக்கள் தேவை சார்ந்த சேவைகளை சரியான விலையில் வழங்குவதன் மூலம் பயன்பாட்டு சுழற்சியை அதிகரிக்கவும், சேவைகளை கேட்டுப் பெறவும் முடியுமாதலால், மின்-ஆளுமை மூலம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்தை நிறைவேற்ற உதவும்.
  • அரசு ஆளுமையை மின்னணு முறைகளை பயன்படுத்தி பலப்படுத்துவதே இத்திட்டத்தின் தொலைநோக்காகும். மின்-ஆளுமை திட்டங்கள் மூலம் வழங்கப்படும் சேவைகள், மத்திய மற்றும் மாநில அளவில் இதுவரை சென்றடையாத மக்கள் பிரிவை அடைய உதவுவதால், அவர்கள் சுய பலமடையவும் அரசு முயற்சிகளில் அதிக பங்கெடுக்கவும் இயலும். இதனால் வறுமை ஒழிப்புக்கும், மக்களிடையே நிலவும் சமூக மற்றும் பொருளாதார இடைவெளியை நிரப்புவதற்கும் உதவும்.



தேசிய மின்-ஆளுமை திட்டத்தை செயல்படுத்தும் யுக்திகள்

  • தேசிய மின்-ஆளுமை திட்டத்தை செயல்படுத்த, தேசிய மற்றும் சர்வதேச அளவில் செயல்படுத்தப்பட்ட மின்-ஆளுமை திட்டங்களின் அனுபங்கள் அடிப்படையில், செயலறிவுத்திறம் வாய்ந்த அணுகுமுறைகள் திட்டமிடப்படுகின்றன. தேசிய மின்-ஆளுமை திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்படும் அணுகுமுறையில், கீழ்கண்ட கூறுகள் காணப்படுகின்றன:
  • பொது கட்டமைப்பு : மாநில அளவிலான அகன்ற வலைப்பின்னல் (State Wide Area Networks - SWANs), மாநில புள்ளிவிபர மையங்கள் (State Data Centres - SDCs), பொதுச்சேவை மையங்கள் (Common Services Centres - CSCs), மின்னணு சேவை வழங்கும் மையங்கள் (Electronic Service Delivery Gateways) போன்ற பொதுவான தகவல் தொழில்நுட்ப கட்டமைப்புகள், தேசிய மின்-ஆளுமை திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்படும்.
  • ஆளுமை: தேசிய மின்-ஆளுமை திட்ட செயலாக்கத்தை ஒருங்கிணைக்கவும், கண்காணிக்கவும் தேவையான அதிகார ஆணையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தரநிலைகள் மற்றும் கொள்கை வழிகாட்டிகளை ஏற்படுத்துதல், தொழில்நுட்ப உதவி அளித்தல், திறன் வளர்த்தல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்றவையும் இத்திட்டத்தின் கீழ் செய்யப்படும். தகவல் தொழில்நுட்பத்துறை (Department of Information Technology - DIT) தன்னை மட்டுமல்லாமல், தேசிய தகவல் மையம் (National Informatics Centre - NIC), தரநிலைபடுத்துதல்-பரிசோதனை-தரச்சான்றிதழ் துறை (Standardization, Testing and Quality Certification - STQC), முன்னோக்கிய கணினியியல் மேம்பாட்டு மையம் (Centre for Development of Advanced Computing - C-DAC), சிறந்த ஆளுமைக்கான தேசிய நிறுவனம் (National Institute for Smart Governance - NISG) போன்ற பிற நிறுவனங்களையும் பலப்படுத்திக் கொள்கிறது.
  • ஒருங்கிணைந்த முயற்சிகள், பரவலாக்கப்பட்ட செயலாக்கம்: பொதுமக்கள் தேவை சார்ந்த செயலாக்கம், வெவ்வேறு மின்-ஆளுமை திட்டங்களை ஒருங்கிணைத்தல், தகவல் தொழில்நுட்பங்கள் மற்றும் வளங்களை போதிய அளவில் பயன்படுத்துதல் ஆகியவற்றில் கூடிய வரை ஒருங்கிணைந்த முயற்சிகள் இருந்தாலும், அதன் செயலாக்கம் பரவலாக்கப்பட்ட முறையில் இருக்கும். வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட திட்டங்களை தேர்ந்தெடுத்து, அவற்றில் தேவையான மாற்றங்களை செய்து பயன்படுத்தும் திட்டமும் பரிசீலிக்கப்படுகிறது.
  • பொது மற்றும் தனியார்த்துறை கூட்டுச் செயல்பாடு மாதிரிகள் : Iபாதுகாப்பு அம்சங்களில் பாதகம் ஏற்படாத வகையில், வளங்களை அதிகரிக்க இவ்வகை கூட்டுச் செயல்பாடுகளை ஏற்படுத்த வேண்டும்.
  • கூறுகளை ஒருங்கிணைத்தல் : ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும், தெளிவின்மையை தவிர்க்கும் பொருட்டு, குடிமக்கள், தொழிலகங்கள் மற்றும் சொத்துக்களுக்கு சிறப்பு குறியீடுகளை பயன்படுத்துதல்.
தேசிய மின்-ஆளுமை திட்ட செயலாக்க வடிவமைப்பு

  • தேசிய மின்-ஆளுமை திட்டத்தை செயல்படுத்துவதில் ஈடுபடும் பல்வேறு அமைப்புகளை தேசிய அளவில் ஒருங்கிணைக்க வேண்டியிருப்பதால், அனைத்து அமைப்புகளின் பொறுப்புகளை தெளிவாக வரையறுக்கவும், அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்ட செயலாக்க வடிவத்தை அமல்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த செயல் வடிவத்தின் கூறுகள் மற்றும் அவற்றின் விபரங்கள், படத்தில் தரப்பட்டுள்ளன.
சேவை வழங்குவதில் கடைபிடிக்கப்படும் உத்திகள்

  • தடையற்ற ஒரு சாளர முறையில் சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கும் வகையிலான, மாநில அகன்ற வலைப்பின்னல் (State Wide Area Networks - SWANs), மாநில புள்ளிவிபர மையங்கள் (State Data Centres - SDCs), தேசிய மற்றும் மாநில சேவை வழங்கும் மையங்கள் (National/State Service Delivery Gateway (NSDG/SSDG), மாநில இணையதளங்கள் மற்றும் பொதுச்சேவை மையங்கள் (State Portal and Common Services Centre - CSC) ஆகியவை உள்ளடங்கிய ஒரு பொதுவான மின்னணு சேவையளிக்கும் கட்டமைப்பு, ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் ஏற்படுத்தப்படும்.



தேசிய மின்-ஆளுமைப் பிரிவு

  • தேசிய மின்-ஆளுமை திட்டத்தை செயல்படுத்த தகவல் தொழில்நுட்பத்துறைக்கு உதவும் வகையில், இந்திய அரசின் தகவல் பரிமாற்றம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ், மீடியா லேப் ஆசியா அமைப்பிற்குட்பட்டு, தேசிய மின்-ஆளுமை பிரிவு ஒரு சுயசார்பு வர்த்தக பிரிவாக உண்டாக்கப்பட்டுள்ளது. தேசிய மின்-ஆளுமை திட்டம், தகவ்ல் தொழில்நுட்பத்துறைக்கு கீழ்கண்ட வழிகளில் உதவுகிறது:
  • மாநில அரசுகள், அரசுத் துறைகள் ஆகியவை இலக்கு சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவதில் உறுதுணை
  • மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுத்துறைகள் ஆகியவற்றுக்கு தொழில்நுட்ப உதவி
  • தேசிய மின்-ஆளுமை திட்டங்களை தொழிநுட்பரீதியாக ஆய்வு செய்யும் உயர்மட்ட கமிட்டிக்கு செயலராக இருத்தல்
  • தேசிய மின்-ஆளுமை திட்டத்தை செயல்படுத்த, மாநில அரசுகளுக்கு மாநில மின்னணு-திட்ட குழுக்களை அளிப்பது.
திறன் வளர்த்தல்

  • 20 மத்திய அரசுத்துறைகள், 35 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள், இவற்றில் அடங்கிய 360 துறைகள் மற்றும் 500 செயலாக்க அலகுகள் ஆகியவை உள்ளடங்கிய தேசிய மின்-ஆளுமை திட்டம், மிகப்பெரிய மற்றும் சிக்கலான அம்சங்களையுடையது. 
  • அனைத்தும் சேர்த்து 70,000 மனித வருடங்கள் தேவைப்படும் முயற்சியாகும். தேசிய மின்-ஆளுமை திட்டம் குறிக்கோளை அடைய வேண்டுமானால், வல்லுனர்களை ஈடுபடுத்துதல், திறன்களை மேம்படுத்துதல், பயிற்சியளித்தல் போன்ற திறன் இடைவெளிகளை நிரப்ப வேண்டும். 
  • மாநில மின்-ஆளுமை திட்டக் குழுக்கள் (State e-Governance Mission Teams - SeMT), மின்-ஆளுமை திட்டக் குழுக்கள் (Project e-Governance Mission Teams - PeMT) மற்றும் மனித வள மேம்பாடு ஆகியவற்றை உண்டாக்குவதன் மூலம், இடைவெளிகளை நிரப்புவதே திறன் வளர்த்தல் ஆகும். 
  • பங்கேற்பாளர்களை பட்டியலிடுவது, மாநிலங்களுக்கு உறுதுணையாக இருப்பது, வழிகாட்டுவது, தேசிய மின்-ஆளுமை திட்டச் செயல்படுத்தலில் பல்வேறு மட்டங்களில் ஈடுபடும் தலைவர்கள்/அதிகாரிகளை கூர்படுத்துவது, மாநில மின்-ஆளுமை திட்டக்குழுக்களுக்கு வழிகாட்டுவது, ஒருங்கிணைந்த பாடத்திட்டங்களை பயன்படுத்தி சிறப்பு பயிற்சிகள் அளிப்பது, திட்ட அளவில் செயல்படும் அதிகாரிகளுக்கான தகவல் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை முன்னெடுத்து செயல்படுத்துவதும், இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.
மாநிலங்களில் நிலவும் கீழ்கண்ட மூன்று குறிப்பிட்ட வகை இடைவெளிகள், திறன் வளர்த்தல் மூலம் நிரப்பப்படும்:
  • போதுமான அனுபவம் மற்றும் முனைப்புள்ள பணியாளர்கள் இல்லாதது
  • ஏற்கனவே பணியிலிருப்பர்களின் பற்றாக்குறையான திறன்கள்
  • குறிப்பிட்ட வகையில் திட்டத்தை செயல்படுத்தத் தேவைப்படும் நிறுவனரீதியான வடிவமைப்பு

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel