Type Here to Get Search Results !

தேசிய ஆயுஷ் இயக்கம்

அறிமுகம்
  • மத்திய அரசின் சுகாதார குடும்பநல அமைச்சகத்தின் ஆயுஷ் துறை, பன்னிரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மூலம் செயல்படுத்துவதற்கான தேசிய ஆயுஷ் இயக்கத்தை (NAM) தொடங்கியது. ஆயுஷ் (AYUSH) என்பது ஆயுர்வேதம், யுனானி, சித்தமருத்துவம். ஹோமியோபதி ஆகிய மருத்துவ முறைகளைக் குறிக்கும்.
  • பாரம்பரியமான இந்த மருத்துவ முறைகளை மக்களிடையே பிரபலப்படுத்தவும், இந்த மருத்துவ முறைகளுக்கான கல்விமுறையை வலுப்படுத்துவதும், இந்தத் துறை மருந்துகளின் தரத்தை உறுதிப்படுத்தவும், அம்மருந்துகளுக்கான மூலப்பொருள்கள் தொடர்ந்து கிடைப்பதற்கான வழிவகைகளைச் செய்வதும் தேசிய ஆயுஷ் இயக்கத்தின் நோக்கமாகும்.
  • தேசிய ஆயுஷ் இயக்கத்தில் மாநில அரசுகள் பங்கெடுத்துத் தீவிரமாகச் செயல்படுவதை ஊக்குவிப்பதற்காக, திட்டங்களின் அமலாக்கத்தில் தாராளப் போக்குகளும் சலுகைகளும் சேர்க்கப்பட்டன. தேசிய இயக்கம் போலவே மாநில அரசுகளும் தத்தமது சிறப்பு இயக்கங்களைத் தொடங்கவும் ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
நோக்கமும் பணிகளும்
  • நாடு முழுவதும் ஆயுஷ் மருத்துவ வசதிகள் எல்லாத்தரப்பு மக்களுக்கும் எளிதாக கிடைக்குச் செய்தல்.
  • மக்களின் மருத்துவத் தேவைக்களுக்குப் பிரதான சேவையாக ஆயுஷ் மருத்துவ முறைகளை முன்னிருத்தி அவற்றை வலுப்படுத்துதல்
  • ஆயுஷ் மருத்துவமுறைகளில் தரமான கல்வியை வழங்கும் வகையில் கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்துதல்.
  • ஆயுஷ் மருந்துகளுக்குத் தரக்கட்டுப்பாடுகளை ஏற்கச் செய்து, அவற்றின் தயாரிப்பிற்கான மூலப்பொருட்கள் தடையின்றி கிடைக்கச் செய்தல்.
  • ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய சுகாதார மையங்கள், மாவட்ட மருத்துவமனைகள் ஆகியவற்றின் வளாகங்களில் ஆயுஷ் மருத்துவமனைகளையும் ஏற்படுத்துவது. மற்றும், ஆயுஷ் மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்தி, எல்லாத்தரப்பு மக்களுக்கும் ஆயுஷ் மருத்துவ வசதிகள் குறைந்த செலவில் கிடைக்க ஏற்பாடு செய்தல்.
  • ஆயுஷ் மருத்துவ முறைகளைக் கற்பிக்கும் கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்தி, மாநிலங்களின் அளவில் நிறுவன ரீதியான திறனை வலுப்படுத்துதல் மற்றும் ஆயுஷ் மருந்து விற்பனையகங்கள், மருந்து பரிசோதனைக் கூடங்கள் ஆகியவற்றையும் மேம்படுத்துவது.
  • சிறப்பான பயிர் சாகுபடி, முறைகளைக் கைக்கொண்டு, மருந்துத் தாவரங்கள் மற்றும் மூலிகைகள் வளப்பதற்கு ஆதரவு தருதல். அதன் மூலம் மருந்து தயாரிப்பதற்கு வேண்டிய தரமான மூலப்பொருள்கள் தொடர்ந்து தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்தல். மூல பொருட்கள் தாவரங்கள் மற்றும் மூலிகைகளுக்கு தர அளவை நிர்ணயம் செய்து, அவற்றுக்குத் தரச் சான்றிதழ் வழங்கவும், நல்ல முறையில் அவற்றைச் சேமித்து வைப்பதற்கான உத்திகளை பயிற்றுவிக்கவும் நடவடிக்கை எடுத்தல்.
மூலிகாப் பயிர்களுக்கு பயிர்பாதுகாப்புத்திட்டம்.
  • ஆயுஷ் மருத்தவம் சேவைகளை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபடுத்தப்படும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கான செலவு, கட்டமைப்பு வசதி மேம்பாட்டுச் செலவு, ஆயுஷ் துறை மூலமாக வழங்கப்படும் மருந்துகளுக்கான செலவு ஆகியவற்றில் ஓரளவுக்கு மத்திய அரசின் நிதி உதவி வழங்கப்படும். 
  • இந்தப்பணிகளின் அமலாக்கத்தை ஒருங்கிணைத்துக் கண்காணிக்க இந்த ஏற்பாடு துணையாகும். மாநில அரசுகள், இத்துறையில் உள்ள பதவி இடங்கள் அனைத்தையும் நிரப்பிடவேண்டும். நடைமுறையில் உள்ள வழிகாட்டுதலின்படி மருந்துகளை மாநில அரசுகள் கொள்முதல் செய்யவேண்டும்.
நிதி ஒதுக்கீடு ஏற்பாடுகள்
  • ஆயுஷ் சேவைகள், கல்வி நிறுவனங்கள், தரக்கட்டுப்பாடு மற்றும் மருந்துகளுக்கு, வடகிழக்கு மாநிலங்கள், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு-காஷ்மீர் ஆகியவற்றுக்கு மத்திய அரசு மானியமாக மொத்தச் செலவில் 90 சதவீதத்தை வழங்குகிறது. 
  • எஞ்சியுள்ள பத்து சதவீதச் செலவினை மட்டுமே இந்த மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டும். மேலே குறிப்பிட்டவை தவிர மற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசின் மானியம் 75 சதவீதம் மாநிலங்களின் பங்கு 25 சதவீதம்.
  • மூலிகைத் தாவரங்களைப் பயிரிடுவதற்கான மானியம், வடகிழக்கு மாநிலங்கள், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு-காஷ்மீர் ஆகியவற்றுக்கு நூறு சதவீதமாகும். மற்ற மாநிலங்களுக்கு இது 90 சதவீதமாக இருக்கும்.
  • மத்திய அரசிடம் இருந்து ஆயுஷ் திட்ட அமலாக்கத்திற்காக மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் போது பல காரணிகள் கருத்தில் கொள்ளப்படும். மக்கள் தொகை அளவிற்கு 70 சதவீத முக்கியத்துவம் தரப்படும். 
  • அதிலும் அதிகாரம் பெற்ற செயல் குழு மாநிலங்கள் (EAG) என்று வகைப்படுத்தப்பட்ட பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம். உத்தர்காண்ட் ஆகிய மாநிலங்களுக்கு மக்கள் தொகை அடிப்படைக்கு இரண்டு மடங்கு முக்கியத்துவம், தரப்படும். மலைப்பாங்கான மாநிலங்கள், தீவுப்பகுதிகளான யூனியன் பிரதேசங்களும் இவற்றை கருத்தில் கொள்ளப்படும்.
  • மாநிலங்களின் பின்தங்கிய அளவினைக் குறிக்கும் சராசரி தனிநபர் வருமானம் என்ற அளவுகோல் 15 சதவீத முக்கியத்துவம் பெறும்.



செயல் திட்டம்
  • மத்திய ஆயுஷ் துறை ஒவ்வோராண்டும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் மாநில அரசுகளுக்கான அடுத்த ஆண்டிற்கான உத்தேச நிதிஒதுக்கீடு பற்றி தெரிவிக்கும். மார்ச் 31 ஆம் தேதிக்குள் மாநில அரசுகள் தமது பங்குத் தொகைக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை அறிவிக்க வேண்டும். 
  • மாநில அரசின் ஆயுஷ் சங்கத்தின் நிருவாகக் குழு, ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள், மாநிலத்திற்கான வருடாந்திரத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும். மே முதல் வாரத்தில், அந்த வருடாந்திரத் திட்டம், மத்திய அரசின் ஆயுஷ் துறையிடம் சமர்பிக்கப்பட வேண்டும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel