Type Here to Get Search Results !

இ கையொப்பம் – ஆன்லைன் டிஜிட்டல் கையொப்ப சேவை

  • மக்கள் தற்சமயம் தாங்கள் சமர்ப்பிக்கின்ற பல விண்ணப்பங்களிலும் படிவங்களிலும் கையொப்பம் இட வேண்டியுள்ளது. இதற்குப்பதிலாக டிஜிட்டல் கையொப்பம் என்பது வழக்கமான தாள் – பேனா எதுவும் இன்றி, மின்னனு மூலமான தனது அடையாளத்தை – அதாவது மின்னணு ‘விரல்ரேகையை’ பதிப்பதாகும். 
  • உண்மையில் இது விரல் ரேகை அல்ல. ஆனால் அது பிரத்யேகமான ஒரு சங்கேத மொழி. ஓர் ஆவணத்திற்கும், அதில் கையொப்பம் இடுபவருக்கும் இருதரப்பையும் கட்டுப்படுத்தும் பிரத்யே அடையாளக் குறியீடு. நேரிடையாகக் கையெப்பம் இடுவதற்குப் பதிலாகத் தற்போது இந்த மின்னணு கையொப்பங்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. 
  • இந்த மின்னனு கையொப்பத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால் எனது கையொப்பம் இதுவல்ல என்று மறுக்கமுடியாது என்பதுடன அது அதிகாரப்பூர்வமானதாக ஏற்றுக்கொள்ளக்கூடியது. தகவல் தொழில் நுட்பச் சட்டம் 2000த்தின்படி, மின்னனு கையொப்பங்களுக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இ - கையொப்ப சேவை
  • இந்திய அரசின் அரசிதழ் அறிவிக்கை எண் D.L.33004/99, நாள் 28-01-2015 ன்படி, ஆதார் அடையாளம் உள்ள இந்தியக்குரமக்களுக்கு இ.கையொப்ப வசதியை வழங்குவதற்கான வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பாதுகாப்பாகவும், சட்டபூர்வமாக ஏற்கக்கூடிய வடிவத்திலும் ஆவணங்களில் உடனடியாகக் கையொப்பம் இடுவதற்கான ஆன்லைன் சேவையைக் குடிமக்களுக்கு ஏற்படுத்தித் தருவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 
  • இதில் உள்ள இரண்டு முக்கிய சவால்கள் (1) கையொப்பம் இடுகின்ற நபரை அடையாளப்படுத்துவது (2) நம்பகமான கையொப்பம் இடும்முறை ஆதார் அடிப்படையிலான அடையாளப்படுத்துதல் மூலம் முதல் பிரச்சினை தீர்க்கப்படுகிறது. பொதுச்சாவிக் கூட்டமைப்பு (public Key Infrasture) மூலம் பாதுகாப்பாகக் கையொப்பம் இடவும், நம்பகத் தன்மையை ஏற்படுத்தவும் வகை செய்யப்பட்டுள்ளது.



சிறப்பு ஆம்சங்கள்
  • செலவும் நேரமும் மிச்சமாகிறது
  • ஆதார்; மூலமாக அடையாளப்படுத்துதல்
  • பயன்படுத்துபவரின் வசதியை எளிதாக்குகிறது.
  • மின்னனு கையொப்பம் பெற விண்ணப்பிப்பது எளிது
  • பயோமெட்ரிக் அல்லது ஒருமுறை கடவுச் சொல் (DTP) மூலம் கையொப்பமிடுதல்
  • கையொப்பத்தையும், கையொப்பம் இட்டவரையும் இன்னாரென்று சரிபார்த்துக்கொள்ளலாம்.
  • விண்ணபத்துடன் துரிதமாக ஒருங்கிணைக்கும் வகையில் நெகிவுத்தண்மை கொண்டது.
  • சட்டப்பூர்வமாக அங்கிகரிக்கப்பட்டது
  • தனிநபர்கள் வணிக நிறுவனங்கள், அரசுத்துறைகளுக்கு ஏற்றது
  • உரிமம் அளிக்கப்பட்ட முகவர்கள் மூலம் நிர்வகிக்கப்படுகிறது

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel