Type Here to Get Search Results !

நோபல் பரிசு 2018 (NOBEL PRIZE 2018)

2018-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு
NOBEL PRIZE FOR PHYSICS 2018
  • மருத்துவம், விஞ்ஞானம், பொருளாதாரம், இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய சாதனை படைத்தவர்களையும், அமைதிக்காக பாடுபடுபவர்களையும் நோபல் பரிசு அமைப்பு ஆண்டுதோறும் தேர்ந்து எடுத்து நோபல் பரிசு வழங்கி கவுரவித்து வருகிறது.
  • இந்த ஆண்டு (2018) மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் ஜேம்ஸ் ஆலிசன், ஜப்பானில் உள்ள கியோட்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் தசுகு ஹோன்ஜே ஆகியோருக்கு வழங்கப்பட்டு உள்ளது.
  • இன்று இயற்பியலுக்கான நோபல் 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் ஆர்தர் அஷ்கின், பிரான்சை சேர்ந்த ஜிரார்டு மவ்ரு , மற்றும் கனடாவைச் சேர்ந்த டோன்னா ஸ்ட்ரிக்லேண்ட். ஆகியோருக்கு வழங்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு லேசர் இயற்பியல் துறையில் முன்மாதிரி கண்டுபிடிப்புகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

2018-ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 
NOBEL PRIZE FOR MEDICAL 2018
  • 2018 ம் ஆண்டிற்கான நோபல் பரிசு பெறுவோரின் பெயர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மருத்துவத்திற்கான நோபஸ் பரிசு பெற்றவர்களின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 3 பேருக்கு சேர்ந்து பரிசு அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. இயற்பியல், மருத்துவம், பொருளா தாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
  • புற்று நோய் சிகிச்சை தொடர்பான புதிய கண்டுபிடிப்புக்காக இந்த நோபல் பரிசை ஜேம்ஸ் ஆலிசன் மற்றும் டசகு ஹான்ஜோ ஆகியோர் கூட்டாக பெறுகிறார்கள்.
  • இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்படுகின்றன. முதல் பரிசாக மருத்துவ நோபல் பரிசு பெறும் பெயர்கள் வெளியிடப்பட்டன. ஆலிசனும், ஹான்ஜோவும் இணைந்து புற்றுநோய் சிகிச்சையில் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். 
  • அதாவது நோய் எதிர்ப்பு சக்தியை முறைப்படுத்தி புற்று நோய் செல்களைக் கட்டுப்படுத்தும் முறையை இவர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்காகவே இவர்களுக்கு பல் பரிசு கிடைத்துள்ளது.
  • ஆலிசன் அமெரிக்காவைச் சேர்ந்தவர். டசகு ஜப்பானைச் சேர்ந்த மருத்து விஞ்ஞானி ஆவார். 



2018ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு 
NOBEL PRIZE FOR LITERATURE 2018
  • கடந்த 70 ஆண்டுகளில் முதல் முறையாக இலக்கியத்துக்கான நோபல் பரிசு தவிர்க்கப்பட்ட நிலையில் நோபல் பரிசு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
  • உலகின் மிகவும் உயர்ந்த விருதாக கருதப்படுவது நோபல் பரிசு. இயற்பியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் அரிய சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்படுகிறது.ஆல்பிரட் நோபெல் என்ற வேதியியல் அறிஞர் பெயரால் 1895ம் ஆண்டு முதல் இப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
  • ஸ்வீடன் அகாடமி, ரோயல் சுவீடிய அறிவியல் கழகம், கரோலீன்ஸ்கா கல்வி நிலையம், நோர்வே நோபல் குழு உள்ளிட்டவைகள் இணைந்து நோபல் பரிசை வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிப்பு வெளியாகி கொண்டிருக்கிறது. கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு முதல் முறையாக இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கும் நடவடிக்கை இந்த ஆண்டு தவிர்க்கப்பட்டுள்ளது.
  • ஸ்வீடிஷ் அகாடமியின் தேர்வுக்குழு உறுப்பினர் காத்தீரனா பிராஸ்டென்சன் கணவர் மீது பாலியல் புகார் எழுந்த காரணத்தினால் இரண்டு ஆண்டுகளுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படாது என கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதன்படி இந்த ஆண்டு இலக்கியத்துறைக்கான நோபல் பரிசு தவிர்க்கப்பட்டுள்ளது.





2018 ம் ஆண்டு வேதியலில் நோபல் பரிசு
NOBEL PRIZE FOR CHEMISTRY 2018
  • நொதி (என்சைம்) தொடர்பான ஆய்வில் தங்களின் கண்டுபிடிப்புகளுக்காக 3 விஞ்ஞானிகளுக்கு 2018ம் ஆண்டு வேதியியலில் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
  • அமெரிக்கர்களான பிரான்சஸ் அர்னால்டு மற்றும் ஜார்ஜ் பி. ஸ்மித், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலுள்ள பிரிடன் கிரகோரி வின்டர் ஆகியோர் இந்த பரிசை பகிர்ந்து கொள்கின்றனர்.
  • உயிரியலில் ரசாயன எதிர்வினைகளை அதிகரிக்க செய்கின்ற புதிய நொதிகளை உருவாக்க "இயக்கப்படும் பரிணாமம்" என்கிற தொழிற்நுட்பத்தை இந்த நோபல் பரிசை வென்றவர்கள் பயன்படுத்தினர்.
  • இத்தகைய நொதிகள் புதிய மருந்துகள் மற்றும் பசுமை எரிபொருட்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகின்றன.அர்னால்டு இந்த பரிசின் பாதி தொகையான 9,98,619 டாலரை பெறுகிறார். மீதி பாதியை ஸ்மித்தும், வின்டரும் சம்மாக பகிர்ந்து கொள்வர்.
  • ஜார்ஜ் பி. ஸ்மித் மற்றும் கிரகோரி வின்டர் புதிய புரதங்களை பரிணமிக்க செய்ய பெஜ் காட்சி தொழிற்நுட்பத்தை உருவாக்கினர். குறிப்பிட்ட பாக்டீரியாவை அழிய செய்து புதிய ஆன்டிபாடிகளை உருவாக்குவதற்கு இதனை அவர்கள் பயன்படுத்தினர்.
  • இவ்வாறு தீங்கான பாக்டீரியாக்களை மற்றும் வைரஸ்களை சமநிலைப்படுத்தி நோய் எதிர்ப்பு அமைப்பால் பயன்படுத்தப்படும் பெரிய புரதங்களாக இந்த ஆன்டிபாடிகள் செயல்பட்டன.
  • இந்த பெஜ் காட்சி தொழிற்நுட்பப்படி உருவாக்கப்பட்ட முதலாவது ஆன்படியான 'அடலிமுமாப்' 2002ம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • இது முடக்கு வாதம், தடிப்பு தோல் அழற்சி மற்றும் குடல் அழற்சி நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்பட்டது.அதுமுதல் நச்சுத்தன்மை, நோய் தடுப்பு திறனை அதிகரித்தல், பிற இடங்களில் பரவும் புற்றுநோய் ஆகியவற்றுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஆன்டிபாடிகளை பெஜ் காட்சி தொழில்நுட்பம் உருவாக்கியுள்ளது.
  • பிரான்சஸ் அர்னாடு வேதியலுக்கான நோபல் பரிசு பெறுகின்ற 5வது பெண்ணாவார். இதற்கு முன்னர் 2009ம் ஆண்டு இஸ்ரேலை சேர்ந்த அடா யேநாத் இந்த நோபல் பரிசை பெற்றுள்ளார்.
2018ம் ஆண்டு அமைதிக்கான  நோபல் பரிசு
NOBEL PRIZE FOR PEACE 2018
  • சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்ற தொழில் அதிபரின் நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்பட பல்வேறு துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
  • 2018ம் ஆண்டுக்கான நோபல் விருதுகள் ஏற்கனவே மருத்துவத்துறை, இயற்பியல் துறை மற்றும் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.
  • காங்கோ நாட்டை சேர்ந்த மகளிர் நல மருத்துவர் டெனிஸ் முக்வேஜ் (Denis Mukwege) உள்நாட்டுப் போரில் ஈடுபடும் பயங்கர வாதிகளால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் பெண்களுக்கு சிகிச்சை அளித்து வருபவர். தனது இளம் வயதின் பெரும் பகுதியை பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக செலவிட்டதால் முக்வேஜுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
  • இதே போன்று ஈராக்கின் குர்தீஷ் இனத்தைச் சேர்ந்த பெண்ணான நாடியா முராத் (Nadia Murad) ஐ.எஸ். தீவிரவாதிகளால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டவர். ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் சிக்கிய குர்தீஷ் இன பெண்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை நேரடியாக பார்த்து உலகிற்கு தெரிவித்தமைக்காக நாடியாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்படுகிறது.
2018-ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 
NOBEL PRIZE FOR ECONOMICS 2018
  • 2018-ம் ஆண்டின் பொருளாதாரத்கான நோபல் பரிசு, அமெரிக்க பொருளாதார நிபுணர்களான பால் எம் ரோமர் (வயது 62) & வில்லியம் நொர்தாஸ் (வயது 77) இருவருக்கும் கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சியைப் பொருளாதார வல்லுநர்கள் எவ்வாறு எட்டுவது என்பது குறித்த ஆய்வுக்காக பால் எம். ரோமரும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சேதம் குறித்த ஆய்வுக்காக வில்லியம் டி. நொர்தாஸும் இந்த ஆண்டுக்காக பொருளாதார நோபல் பரிசைப் பெற்றுள்ளார்கள். 
  • "உலகளாவிய பெரிய பிரச்னைகளை மேக்ரோ எகனாமிக்ஸ் மூலம் சமாளிக்க அவர்கள் எடுத்த முயற்சிக்காக" இருவருக்கும் கூட்டாக நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசுக் கமிட்டி அறிவித்துள்ளது.
  • நோபல் பரிசை வென்றுள்ள வில்லியம் நொர்தாஸ், யேல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராவார். பால் எம். ரோமர், உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணராக இருந்துள்ளார். கடந்த ஆண்டுக்கான நோபல் பரிசை அமெரிக்கரான ரிச்சர்ட் தலெர் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
  • நோபல் பரிசு பெற்றுள்ள இருவரும், 1.01 மில்லியன் டாலர் பரிசுத்தொகையைப் பகிர்ந்துகொள்கிறார்கள். பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட 1969-ம் ஆண்டிலிருந்து 2017-ம் ஆண்டுவரை 79 பேர் இப்பரிசை வென்றுள்ளார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel