Type Here to Get Search Results !

சட்ட பிரிவு 377 / ARTICLE 377 - TNPSCSHOUTERS TAMIL PDF

சட்ட பிரிவு 377 என்றால் என்ன? 
  • அரசியல் சட்ட பிரிவு 377 என்பது, இந்தியாவில் பாலியல் உறவுகளை வரையறுக்கும் சில சட்டங்களில் ஒரு சட்டம் ஆகும். பாலியல் உறவுகளை வரையறுக்க இந்தியாவில் சில தண்டனை சட்டங்கள் உள்ளது. அதில் அரசியல் சட்ட பிரிவு 377ம் ஒன்றாகும். 
  • இதன்படி ஓரின சேர்க்கை, தன் பாலின சேர்க்கை எனப்படும் ''ஆண்-ஆண்'' ''பெண்-பெண்'' உறவு கொள்ளும் ''ஹோமோசெக்சுவல் (homosexual)'' உறவு முறை தவறானது என்று கூறப்படுகிறது.கொண்டுவந்தது யார்
  • இந்த சட்டம் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷினரால் கொண்டு வரப்பட்டது. 1860 ஆம் ஆண்டு, மெக்காலேவினால் கொண்டுவரப்பட்டது. 
  • அதே சமயம், இந்த சட்டம் வங்காளதேசம், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, மலேசியா, பாகிஸ்தான், சிங்கப்பூர், ஹாங்காங், ஆஸ்திரேலியா போன்ற பிரிட்டனின் பிற காலனி ஆதிக்க நாடுகளிலும் கொண்டு வரப்பட்டது. அப்போது இருந்த இங்கிலாந்து அரச குடும்பம் இதை தவறான உறவாக கருதியதால் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.



சட்டத்தில் என்ன தவறு
  • இதில் சட்டத்தில் என்ன தவறு இருக்கிறது என்றால், இந்த சட்டம் முழுக்க முழுக்க அப்போதைய விக்டோரியன் அரச குடும்பத்தின் உணர்வுகளை மையப்படுத்தி மட்டுமே கொண்டு வரப்பட்டது. 
  • அதே போல், இதில் சாதாரண மக்கள் (ஓரின சேர்க்கை கொள்ளாதவர்கள்) கொள்ளும் சில பாலியல் உறவு முறைகளும் தவறு என்று கூறப்படுகிறது. 
  • ஆனால், காலம்காலமாக, இந்த சட்டம் திருநங்கைகளுக்கு எதிராகவும், ''அவனா நீ'' என்று வஞ்சிக்கப்படும் பாலியல் சிறுபான்மையினருக்கு எதிராகவும் முறையின்றி பயன்படுத்தப்படுகிறது.பெரிய முரண்பாடு
  • இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, இந்த சட்டத்தை கொண்டு வந்த இங்கிலாந்து நாடே இதை திரும்ப பெற்றுக்கொண்டது. 1967ல் இந்த சட்டம் அங்கு திரும்ப பெறப்பட்டுவிட்டது. இது மக்களின் பாலியல் தேர்வுக்கு எதிரானது என்று முற்போக்கான முடிவு எடுக்கப்பட்டது. 
  • அதேபோல் மற்ற சில நாடுகளில் இந்த சட்டம் நீக்கப்பட்டது. ஆனால், கஜீராஹோ சிற்பங்களில் பல்வேறு பாலியல் உறவு முறைகளை (ஓரின சேர்க்க உட்பட) வெளிப்படையாக காட்சிப்படுத்தி இருக்கும் இந்தியா, அந்த சட்டம் குறித்து வாய் திறக்காமல் இருந்தது.வழக்கு தொடுக்கப்பட்டது

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel