
உதவி பொறியாளர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வை, விரைவில் நடத்தும்படி, மின் வாரியத்திற்கு, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு மின் வாரியம், முதல் முறையாக, நேர்காணல் இல்லாமல், எழுத்து தேர்வு வாயிலாக, எலக்ட்ரிக்கல் பிரிவில், 300; சிவில் பிரிவில், 25 என, மொத்தம், 325 உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப, பிப்., 14ல் அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கு விண்ணப்பிக்க, மார்ச், 6 வரை அவகாசம் தரப்பட்டது. இந்த தேர்வுக்கு, 81 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். ஆனாலும், தேர்வு தேதி அறிவிக்கப்படவில்லை.
'2017 - 18ல், 325 உதவி பொறியாளர்கள் நிரப்பப்படுவர் எனக்கூறிய மின் வாரியம், நிதியாண்டு முடிவில் தான், தேர்வு அறிவிப்பை வெளியிட்டது.
EXPECTED DATE : 1st Week of June 2018