Monday, 16 April 2018

பணவீக்கம் (inflation) - டி.என்.பி.எஸ்.சி & யு.பி.எஸ்.சி இந்திய பொருளாதாரம் (TNPSC & UPSC Indian Economy)
பணவீக்கம் (inflation)
 • இந்தியப் பொருளாதாரத்தில் நாம் முதலில் பார்க்கப்போகும் தலைப்பு பணவீக்கம் (inflation). பணப்புழக்கம் அதிகரிப்பதால் தொடர்ந்து நிலைக்கும் விலைவாசி (பொருள்கள் மற்றும் சேவைகள்) உயர்வைக் குறிப்பிடுவதே இந்தப் பணவீக்கம். தேவைகளுக்கும் இருப்பு/வழங்கலுக்கும் (Demand - Supply) ஏற்படும் பொருந்தா நிலையே.

முக்கியக் காரணம்
 • உதாரணமாக, 30 வீடுகள் உள்ள ஒரு அப்பார்ட்மென்டில் நான் குடை விற்கச் செல்கிறேன் என வைத்துக்கொள்வோம். என்னிடம் பத்துக் குடைகள் உள்ளன. `குடையின் விலை 200' என நான் விற்க ஆரம்பிக்கிறேன். கோடைக்காலம் என்பதால், நிச்சயம் பெரும்பாலோருக்குக் குடை தேவைப்படும். 
 • 15 வீடுகளில் ஏற்கெனவே குடை உள்ளது. 15 வீடுகளுக்குக் குடை தேவைப்படுகிறது. 200 ரூபாய் குடையை வாங்க, 20 வீடுகள் தயாராக உள்ளன (சிலருக்கு முதல் குடை சிலருக்கு இரண்டாவது). என்னிடம் இருப்பதோ 10 குடைகள்தாம்.
 • ஆக, குடையை வாங்குவதற்கு ஆள்கள் உள்ளனர் (Demand அதிகம்). அதேசமயம் விற்பதற்கு என்னிடம் 10 குடைகள்தாம் உள்ளன (Supply குறைவு). இதன் விளைவு, 200 ஆக இருந்த குடையின் விலையை நான் 400 என்று உயர்த்துவதுதான் பணவீக்கம் (Inflation).

பணவீக்கத்தின் வகை
 • கிரீப்பிங் (Creeping)
 • கேலோப்பிங் (galloping)
 • ஹைப்பர் (hyper)
 • பாட்டில்நெக் (Bottleneck)
 • கோர் (core) 

பணவீக்கத்தை அளவிடமுறை
 • ஹோல்சேல் பிரைஸ் இண்டெக்ஸ் (Wholesale Price Index)
 • கன்ஸ்யூமர் பிரைஸ் இண்டெக்ஸ் (Consumer Price Index urban / rural)
 • GDP டீஃப்லேட்டர் (deflator).பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகள்
 • வங்கிசார் பணம் (monetary) - கடன் வழங்குவதைக் கட்டுப்படுத்துதல், பணமதிப்பைக் குறைத்தல் (Demonetisation) / புது செலாவணி அறிமுகம் செய்தல்.
 • பொது / வரிப்பணம் சார் முயற்சிகள் - செலவினத்தைக் குறைத்தல், வரிகளை உயர்த்துதல், சேமிப்புகளை உயர்த்துதல், உபரி பட்ஜெட் போன்றவை.

உதாரணக் கேள்வி (UPSC-2015)
1. பணவீக்கத்தைப் பொறுத்தவரை இவற்றில் எது சரி?
 • அ) இந்தியாவைப் பொறுத்தவரை பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு இந்திய அரசிடம் மட்டுமே உள்ளது.
 • ஆ) ரிசர்வ் வங்கிக்குப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் எந்தப் பங்கும் இல்லை.
 • இ) பணப்புழக்கத்தைக் குறைத்தால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் (பதில்) .
 • ஈ) பணப்புழக்கத்தை அதிகரித்தால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் .

வெளிநாட்டு வர்த்தகக்கொள்கை (2015-2020)
 • பொருள்கள் மற்றும் சேவைகள் உள்ளிட்டவற்றில் நமது ஏற்றுமதி என்பது ஆண்டுக்கு 261 பில்லியன் டாலர்கள் (2016).
 • இந்தியா, உலகின் 19-வது பெரிய ஏற்றுமதி நாடு. உலக ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 1.7 சதவிகிதம். அமெரிக்க, ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட இந்தியாவின் டாப் 10 ஏற்றுமதி நாடுகளின் பட்டியல், விலை உயர்ந்த கற்கள் மற்றும் உலோகங்கள், கனிம எரிபொருள்கள் (mineral fuels) உள்ளிட்ட இந்தியாவின் டாப் 10 ஏற்றுமதிப் பொருள்கள் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். 
 • அதேபோல்தான் இறக்குமதியும். 356.7 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் உலக இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 2.2 சதவிகிதம். சீனா, அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள் என இந்தியாவின் டாப் 10 இறக்குமதி நாடுகள், கச்சா எண்ணெய் உள்ளிட்ட கனிம எரிபொருள்கள், விலை உயர்ந்த கற்கள், மின்னணு சார் பொருள்கள் உள்ளிட்ட டாப்-10 இறக்குமதி பொருள்களின் பட்டியலையும் தெரிந்துகொள்ளுங்கள்.

உதாரணக் கேள்வி
1. இந்தியாவின் டாப்-10 ஏற்றுமதிப் பட்டியலில், இவற்றில் எதன் பங்கு மிகக் குறைவு?
 • இரும்பு ( பதில்)
 • வாகனங்கள்
 • மருந்துகள்
 • ஆர்கானிக் ரசாயனங்கள்

சிறப்புப் பொருளாதார மண்டலம் (Special economic zones), எக்ஸ்போர்ட் புராசஸிங் ஸோன்கள் (export processing zones), பேலன்ஸ் ஆஃப் டிரேட் (balance of trade) ஒரு நாட்டின் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் உள்ள இடைவெளி, பேலன்ஸ் ஆஃப் பேமென்ட்ஸ் (Balance of payments) ஒரு நாட்டின் மக்களுக்கும் வெளியுலகுக்கும் இடையே நடைபெறும் பொருள்கள், சேவைகள் மற்றும் சொத்துகள் ஆகியவற்றின் பரிவர்த்தனைகள் அனைத்தும் இதில் அடங்கும். 
அந்நியச் செலாவணி, ஃபெரா (FERA), ஃபெமா போன்ற சட்டங்கள், வெளிநாட்டு முதலீடு, FDI, FII, அவை சார்ந்து அமைக்கப்பட்ட பல்வேறு கமிட்டிகள் ஆகியவை மிக மிக முக்கியம்.
எனவே, குறிப்புகளை முழுமையாகக் கவனத்தில் எடுத்துக்கொண்டு தயாராகுங்கள். 
அதேபோல், உலகின் முக்கிய வர்த்தக நிறுவனங்கள் (WTO, IMF, உலக வங்கி, ADB போன்ற) நிறுவனங்களின் வரலாறு, முக்கியப் பணிகள், இந்தியப் பொருளாதாரத்தில் அந்த நிறுவனங்களால் ஏற்படும் மாற்றங்கள், அந்த நிறுவனங்களின் முக்கிய நிகழ்வுகள் ஆகியவற்றிலிருந்து பல முறை கேள்விகள் இடம்பெற்றுள்ளன.

TNPSCSHOUTERS

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a comment