ரயில்வே துறையின் குரூப் சி பிரிவில் 89,409 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது உலகின் மிகப் பெரிய வேலை வாய்ப்பு அறிவிப்பு. ரயில்வே துறையின் குருப் சி பிரிவு முதல் நிலை (முந்தைய குரூப் டி) மற்றும் இரண்டாம் நிலை பிரிவிகளில் 89,409 பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு அறிவிப்பை ரயில்வே துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
- குரூப் சி இரண்டாம் நிலை பதவிகளான உதவி லோகோ பைலட்டுகள், டெக்னீசியன்கள் (பிட்டர், கிரேன் டிரைவர், இரும்புக் கொல்லர் மற்றும் கார்பென்டர்) மற்றும் குரூப். சி முதல் பிரிவு பதவிகளான தண்டவாள பராமரிப்பாளர், பாய்ன்ட்ஸ் மேன், உதவியாளர், கேட்மேன், போர்டர் ஆகிய பணியிடங்ளுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- குரூப் சி இரண்டாம் நிலை பதவிகளுக்கு 10ம் வகுப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்தவர்கள் 18 வயது முதல் 28 வயதுக்குள் இருந்தால் விண்ணப்பிக்கலாம். குரூப் சி முதல் நிலை பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு, ஐடிடி முடித்தவர்கள் 18 வயது முதல் 31 வயதுக்குள் இருந்தால் விண்ணப்பிக்கலாம்.
- வரும் ஏப்ரல்-மே மாதத்தில் கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு மூலம் இன்டர்வியூ இல்லாமல் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கான அறிவிப்பு இந்திய ரயில்வே துறை மற்றும் ரயில்வே தேர்வு வாரியத்தின் வெப்சைட்டில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
- குரூப் சி இரண்டாம் நிலை பணியிடங்களுக்கு மாத சம்பளமாக 7வது சம்பள கமிஷன் அடிப்படையில் (ரூ.19,900-ரூ.63,200) வழங்கப்படும்.
- குரூப் சி முதல் நிலை பணியிடங்களுக்கு மாத சம்பளம் (ரூ.18,000 -ரூ.56,900) வழங்கப்படும்.
- குரூப் சி இரண்டாம் நிலை பணியிடங்களுக்கு மார்ச் 5ம் தேதி வரையும், முதல் நிலை பணியிடங்களுக்கு மார்ச் 21ம் தேதி வரையும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.
- கம்ப்யூட்டர் அடிப்படையிலான திறனறி தேர்வு, உடல் திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு போன்றவற்றில் கலந்து கொள்ள எஸ்.சி/எஸ்.டி விண்ணப்பதாரர்களுக்கு இலவச தூங்கும் வசதி ரயில்வே பாஸ் வழங்கப்படும்.
IMPORTANT DATES:
- Railway Recruitment Group C Level II Notification: February 3, 2018
- Start of Railway Recruitment Group C Level II 2018 Online Application: February 3, 2018
- Application Closes: March 5, 2018
- Computer-Based Aptitude Test (CBT) tentatively: April- May, 2018
- Railway Recruitment Group C Level I 2018 Notification: February 10, 2018
- Start of Railway Recruitment Group C Level I 2018 Online Application: February 10, 2018
- Railway Recruitment Group C Level I 2018 Application Form Closes: March 12, 2018
- Computer-Based Aptitude Test (CBT) tentatively: April and May, 2018