- குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த அழகப்பா பல்கலைக்கழகம் ஏற்பாடுகள் செய்துள்ளது என்று அதன் பதிவாளர் அறிவித்துள்ளார்.
- அந்தச் செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு தேர்வாணையம் வரும் 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ல் நடத்தவிருக்கும் குரூப்-4, கிராம நிர்வாக அலுவலர் தேர்விற்கு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
- அழகப்பா பல்கலைக்கழகத்தின் தன்னார்வப் பயிலும் வட்டத்தின் மூலமாக இந்தப் பயிற்சி வகுப்புகள் வரும் நவம்பர் 25-ஆம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும்.
- லெ.சித. லெ. பழனியப்பச் செட்டியார் நினைவரங்கத்தின் தரைத்தளத்தில் நடத்தப்பட உள்ள இதில் பங்கேற்க விரும்புவோர் பழனியப்பச் செட்டியார் நினைவரங்கத்தில் இயங்கும் தன்னார்வப் பயிலும் வட்டத்திற்கு நேரில் சென்று தொடர்பு கொள்ளலாம் என்று பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) வி. பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கிராம நிர்வாக அலுவலர் & குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தும் அழகப்பா பல்கலைக்கழகம்
November 20, 2017
0
Tags