மாநில அளவிலான தடகளப் போட்டியில் காஞ்சிபுரத்துக்கு முதலிடம்; சென்னைக்கு இரண்டாமிடம்.
- மாநில அளவிலான தடகளப் போட்டியில் காஞ்சிபுரம் மாவட்ட அணி முதலிடத்தையும், சென்னை அணி இரண்டாவது இடத்தையும் பிடித்து அசத்தின.
- இந்தப் போட்டியில் காஞ்சிபுரம் மாவட்ட தடகள அணி 407 புள்ளிகள் பெற்று முதலிடத்தையும், சென்னை தடகள அணி 327 புள்ளிகள் பெற்று இரண்டாமிடத்தையும் பிடித்தன.
மோடியை வரவேற்ற சீன அதிபர்: இன்று தொடங்குகிறது 'பிரிக்ஸ்' உச்சி மாநாடு!
- இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளை உள்ளடக்கியது பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பு. உலகின் மொத்த மக்கள் தொகையில் 40% அதிகமானோர் இந்த பிரிக்ஸ் நாடுகளில் வந்து விடுகின்றனர். ஆண்டுக்கு ஒருமுறை பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் சந்தித்து உலக பொருளாதார் நிலை முதல் தீவிரவாதம் வரை பேசுவார்கள்.
டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யுங்க! டில்லி அரசு அதிரடி உத்தரவு
- டில்லியில், அனைத்து அரசு துறைகளும், தன்னாட்சி அமைப்புகளும், டிஜிட்டல் முறையில், பணப்பரிவர்த்தனை செய்யும்படி, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது
முதன்முறையாக விளையாட்டுத் துறை அமைச்சரான விளையாட்டு வீரர்!
- இந்திய வரலாற்றில் முதன்முறையாக விளையாட்டுத்துறைக்கு விளையாட்டு வீரர் ஒருவர் அமைச்சராகியுள்ளார்.
- இந்திய விளையாட்டுத்துறை அமைச்சராக விஜய் கோயல் இருந்து வந்தார். பிரதமர் மோடி இன்று மாற்றியமைத்த அமைச்சரவையில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த விஜய் கோயலுக்கு பதிலாக துப்பாக்கி சுடும் வீரர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் விளையாட்டுத்துறை அமைச்சராக (தனிபொறுப்பு) நியமிக்கப்பட்டார்.
நாட்டின் முதல் முழுநேர பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன்
- நாட்டின் முதல் முழுநேர பாதுகாப்பு துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
- முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பின், பாதுகாப்பு துறைக்கு பொறுப்பு ஏற்கும் 2-வது பெண் அமைச்சர் என்ற பெருமையையும் நிர்மலா சீதாராமன் பெறுகிறார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 100 ஸ்டெம்பிங் செய்து தோனி சாதனை
- இலங்கை எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தோனி 100 ஸ்டெம்பிங் செய்து சாதனை செய்துள்ளார். மகேந்திரசிங் தோனி இலங்கை வீரர் தனஞ்ஜெயாவை ஸ்டெம்பிங் மூலம் அவுட் செய்து இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.
புதிதாக பொறுப்பேற்ற 9 இணை அமைச்சர்களுக்கான துறைகள்
- அஸ்வின் குமார் செளபே, சத்யபால் சிங், ஷிவ் பிரதாப் சுக்லா, ராஜ்குமார் சிங், வீரேந்திர குமார், ஹர்தீப் சிங் புரி, கஜேந்திர சிங் ஷெகவாத், அனந்தகுமார், அல்போன்ஸ் ஆகிய 9 பேர் இணை அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
இணை அமைச்சர்கள் (தனிப்பொறுப்பு) துறைகள்:
- ராஜ்குமார் சிங்- மின்துறை (தனிபொறுப்பு), புதுப்பிக்கத்தக்க எரிவாயு துறை
- அல்போன்ஸ் - சுற்றுலா துறை (தனிபொறுப்பு), மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
- ஹர்தீப் சிங் புரி- வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி (தனிபொறுப்பு)
- அனந்தகுமார்- திறன் மேம்பாடு மற்றும் தொழில் துறை
- சத்யபால் சிங்- மனிதவளம், நீர் பாசனம், தூய்மை கங்கை திட்டம்
- கஜேந்திர சிங்- வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன்
- ஷிவ் பிரதாப் சிங்- நிதி துறை
- அஸ்வின் குமார் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் துறை
- வீரேந்திர குமார் - பெண்கள் மற்றும் குழந்தை நலன் மேம்பாடு மற்றும் சிறுபான்மை துறை
மத்திய அமைச்சரவையில் 9 பேர் புதிதாக .,நிர்மலா உள்ளிட்ட 4 பேருக்கு கேபினட் அந்தஸ்து !
- பிரதமர் மோடியின் தலமையிலான மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. 9 பேர் புதிய இணை அமைச்சர்களாகவும், ஏற்கனவே இணை அமைச்சர்களாக இருந்த தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன் , பியூஷ்கோயல், முக்தர் அப்பாஸ்நக்வி, தர்மேந்திர பிரதான் ஆகியோர் கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டனர்.
'தானமாக தந்த நிலத்தை அழித்தால் பசுவை கொன்ற பாவம் வரும்'
- 'கோவிலுக்கு தானமாக வழங்கப்படும் நிலத்தை அழிப்பவருக்கு, பசுக்களை கொன்ற பாவம் கிடைக்கும்' என்ற தகவல், 11ம் நுாற்றாண்டு கல்வெட்டில் பொறிக்கப்பட்டு உள்ளது.'அறம்' வரலாற்று ஆய்வு மையத்தினர் நடத்திய கள ஆய்வில், கிருஷ்ணகிரி மாவட்டம், மல்லிகார்ஜூனா துர்கம் என்ற மலையில், சோழர் காலத்தைச் சேர்ந்த, கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
- கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டையில் இருந்து, 10 கி.மீ., தொலைவில், ஒகேனக்கல் சாலையை ஒட்டி, 1,200 அடி உயர, மல்லிகார்ஜூனா துர்கம் என்ற மலை உள்ளது.இங்கு, சிவன் கோவில், அம்மன் கோவில், நீர்ச்சுனை, திப்பு சுல்தான் கோட்டையின் எச்சங்கள் ஆகியவை உள்ளன. மலையின் இடது புறத்தில், 5 அடி நீளம், 3 அடி அகலம் உள்ள கல்வெட்டு உள்ளது;
- அதில், 15 வரிகள் உள்ளன.முடிகொண்ட சோழ மண்டலத்தில், ராஜேந்திர சோழ வளநாட்டில் உள்ள, கல்லக நாட்டின் சேலைபுரத்தைச் சேர்ந்த, முரசைபிரான் என்பவன், தனியாக நின்று வெற்றி பெற்ற நிலத்தை, தீர்த்தமலை சிவன் கோவிலுக்கு, தானமாக வழங்கினான் என்ற தகவல் உள்ளது.
- கோவிலுக்கு தானமாக, அதாவது, தேவதானமாக அளிக்கப்பட்ட அந்த நிலத்தை, யாராவது அழிக்க நினைத்தால், அவருக்கு, கங்கை முதல் குமரி வரை உள்ள, அனைத்து குராற் பசுக்களையும் கொன்ற பாவம் வந்து சேரும் என, குறிப்பிடப்பட்டு உள்ளது.மேலும், தண்டநாயக்க காமண்டகன், நாக நாட்டின் முகந்துாரில் உள்ள ஏரியை, தீர்த்தமலை உடையாருக்கு தேவதானமாக அளித்துள்ளான் என்ற செய்தியும், அதில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பரவுகிறது 'லாக்கீ' பணயத்தொகை வைரஸ்
- மின்னஞ்சல்கள் மூலமாக லாக்கீ என்கிற பணயத்தொகை கேட்கும் வைரஸ் பரவிவருவதாக இந்திய அரசு எச்சரித்துள்ளது. இதனால் அறிமுகமில்லாத மின்னஞ்சல்களை திறக்கவேண்டாம் என்றும் அவை தரவிறக்கச்சொல்லும் மென்பொருட்களையோ, எழுத்துருக்களையோ (Fonts) பயன்படுத்த வேண்டாம்
- அப்படி தாக்குதலுக்கு இலக்கான கணிணிகளிடம். 0.5 பிட்காயின்களை பணயத்தொகையாக கேட்கிறது. இது இந்திய மதிப்பில் 2 லட்சம் ரூபாய்கள் அளவுக்கு இருக்கும் என்று தெரிகிறது. சில மாதங்களுக்கு முன்பு நடந்த 'வான க்ரை' என்கிற ஃபிஷிங் இமெயில் தாக்குல் மருத்துவமனைகளை குறிவைத்து நிகழ்த்தப்பட்டது.
அஸ்ஸாமில் அமைதி குலைவு!! ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரம் வழங்கு சட்டம் அமல்
- அஸ்ஸாம் மாநிலம் அமைதி குலைந்த மாநிலமாக அறிவிக்கப்பட்டு அங்கு ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரிகள் வழங்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 1990ம் ஆண்டுக்கு பின் முதன்முறையாக 27 ஆண்டுகள் கழித்து இச்சட்டம் பாஜ முதல்வர் சர்பனோந்த சோனாவால் தலைமையிலான ஆட்சியில் நேற்று முதல் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
வெண்கலம் வென்றார் கவுரவ் பிதூரி
- மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் குத்துச்சண்டை வீரர் கவுரவ் பிதுரி உலக சாம்பியன் போட்டியில், வெண்கலப் பதக்கம் வென்றார்
- ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில், குத்துச்சண்டை உலக சாம்பியன் போட்டி நடந்து வருகிறது. பாந்தம் வெயிட், 56 கிலோ எடைப் பிரிவின் அரை இறுதிக்கு நுழைந்து, டில்லியைச் சேர்ந்த கவுரவ் பிதுரி, இந்தியாவுக்கு பதக்க வாய்ப்பை உறுதி செய்திருந்தார்.
அகமதாபாத்துக்கு இந்தியாவின் முதல் 'உலக பாரம்பரிய நகரம்' அந்தஸ்து!
- இந்தியாவின் முதல் 'உலக பாரம்பரிய நகரம்' அந்தஸ்து குஜராத்தின் அகமதாபாத் நகரத்துக்கு கிடைத்துள்ளது. யுனெஸ்கோ அமைப்பு இதை அறிவித்து அதற்கான சான்றிதழையும் வழங்கி உள்ளது.
- இந்த புகழைப்பெறும் முதல் இந்திய நகரம் என்ற பெருமையும் அகமதாபாத் நகரம் பெற்றுள்ளது.
- பாரம்பரிய சின்னங்கள் அதிக அளவில் உள்ள குஜராத் மாநிலத்தில், சபர்மதி ஆசிரமம், அகமதாபாத் ரெயில் நிலையம், 1573ல் கட்டப்பட்ட சிதி சையத் மசூதி, 1424ல் கட்டப்பட்ட ஜாமா மசூதி என பல அடையாளங்கள் உள்ளது.
ரூ.5.5 லட்சம் கோடி செலவில் 60 நதிகள் இணைப்பு திட்டம்
- ரூ.5.5லட்சம் கோடி செலவில் 60 முக்கிய நதிகள் இணைப்பு திட்டம் நடைபெற உள்ளது.நாட்டின் வட மாநிலங்களில் பெரும்பாலனவை வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றன.
- அதே நேரத்தில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் வறட்சியில் சிக்கி தவித்து வருகின்றன. இந்த நிலையை மாற்ற பிரதமர் மோடி தலைமையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நதிகள் இணைப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- இதனையடுத்து நாட்டின் மிகப்பெரிய நதிகளை இணைக்க 87 பில்லியன் டாலர் செலவில் சுமார் 5.5 லட்சம் கோடி செலவில் திட்டம் ஒன்றை துவக்க திட்ட மிட்டுள்ளதாகவும் அதற்கான ஆய்வு பணி இந்த மாத இறுதியில் துவங்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
ஆசியாவிலேயே ஊழல் மலிந்த நாடு இந்தியா தான்... போர்ப்ஸ் பத்திரிகை அறிக்கை
- ஆசியாவிலேயே ஊழல் மலிந்த நாடுகளில் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது. பெரும்பாலான அரசின் சேவைகளை மக்கள் லஞ்சம் கொடுத்துதான் பெறுகிறார்கள் என்று போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
- பெர்லினைச் சேர்ந்த ஊழல் கண்காணிப்பு தன்னார்வ அமைப்பு ‘டிரான்ஸ்பரன்ஷிஇன்டர்நேஷனல்’(டி.ஐ.) ஆகும். இந்த அமைப்பு 16 நாடுகளைச் சேர்ந்த 20 ஆயிரம் பேரிடம் 18 மாதங்கள் ஊழல் குறித்து கள ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வின் முடிவுகள் குறித்து போர்ப்ஸ் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது.
3வது தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமனம்... முழுத் தகுதியை பெற்றது ஆணையம்!
- இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையராக சுனில் அரோரா நியமிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் பதவியேற்றார்.
இறங்குமுகத்தில் இந்திய பொருளாதாரம்.. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பெரும் அடி!
- இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஓராண்டாக படிப்படியாக குறைந்தபடி உள்ளது கவலையளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.
- உற்பத்தி துறை அதிகப்படியான இழப்பை சந்தித்துள்ளது ஜிடிபி குறைய முக்கிய காரணம். கடந்த ஆண்டு 9.4 சதவீதமாக இருந்த நிதி, ரியல் எஸ்டேட், இன்சூரன்ஸ் மற்றும் சேவை துறைகளின் வளர்ச்சி என்பது இவ்வாண்டு ஏப்ரல்-ஜூன் வரையிலான காலாண்டில், 5.7 சதவீதம் என்ற அளவிற்கு குறைந்துள்ளது.பண மதிப்பிழப்பு
- மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைதான் இந்திய பொருளாதர வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்று கைகாட்டுகிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். டிசம்பருக்கு பிறகு இந்திய பொருளாதாரம் மிகவும் வேகமாக சரிய இது முக்கிய காரணம். கட்டுமானத் துறையில் இந்த வீழ்ச்சி மக்களுக்கே கண்கூடாக தெரிகிறது.
நிதி ஆயோக் அமைப்பின் புதிய துணைத்தலைவராக ராஜீவ் குமார் பொறுப்பேற்றார்
- திட்டக் குழு என்ற அமைப்புக்குப் பதிலாகப் புதிதாக உருவாக்கப்பட்ட 'நிதி ஆயோக்' அமைப்பின் துணைத் தலைவராக ராஜீவ் குமார் பொறுப்பேற்றார்.
இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் நியமனம்: அமெரிக்க அதிபர் டிரம்ப்
- இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக கென்னத் ஜஸ்டெரை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நியமிக்கவுள்ளார்.
- தற்போது இந்தியாவின் அமெரிக்க தூதராக ரிச்சர்ட்வர்மாவுக்கு பதிலாக கென்னத் ஜஸ்டெரை நியமிக்கவுள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்தை ரூ. 16,347 கோடிக்கு ஏலம் எடுத்தது ஸ்டார் டிவி
- ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் டிவி வென்றது. மேலும் 5 ஆண்டுகளுக்கு ரூ. 16,347 கோடிக்கு ஸ்டார் தொலைக்காட்சி ஏலம் எடுத்தது. மும்பையில் நடந்த ஏலத்தில் சோனி டிவியை பின்னுக்கு தள்ளி ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் டிவி வென்றது.
- மஹேந்திர பிரதாப் மால் என்பவர் IRCTC அமைப்பின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
- தேசிய புலனாய்வு அமைப்பின் புதிய தலைவராக ஒய்.சி.மோடி நியமிக்கப்பட்டார்.
- Swayam Shikshan Prayog (SSP) எனும் அரசு சாரா புனே நிறுவனம் UN Equator Prize-க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது விவசாய பெண்கள் முன்னேற்றத்திற்கான நிறுவனம் ஆகும்.
- 2016-17ஆம் ஆண்டின் Rajbhasha Kirti புரஸ்கர் விருதுக்கு ஜவஹர்லால் நேரு துறைமுக டிரஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
- பிரட்டீஷ் பாராளுமன்றத்தில் இந்திய பாலிவுட் நடிகர் சல்மான்மான் அவர்களுக்கு இந்த ஆண்டின் Global Diversity Award வழங்கப்பட்டது.
- ஒவ்வோர் ஆண்டும் செம்படம்பர் 21-ஆம் நாள் உலக அமைதி தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
- வரும் 2030-க்குள் சுகாதரத்தில் நீடித்த மற்றும் நிலையான குறிக்கோளை அடைவதில் இந்தியா 128-ஆவது இடம்பெற்றது.
- இந்தியா மற்றும் ரஷ்யா நாடுகள் இணைந்து வெளிநாட்டில் அமைக்கப்படும் முதல் அணு உலை வங்கதேச நாட்டில் ரூப்பூர் எனுமிடத்தில் தொடங்கவுள்ளது.
- இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான இராணுவ கூட்டுப்போர் பயிற்சி யூத் அபியாஸ் எனும் பெயரில் வாஷிங்டன் பகுதியில் நடைபெற்றது.
- பிம்ஸ்டெக் அமைப்பின் முதல் பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சி வரும் 2017 அக்டோபரில் இந்தியாவில் நடைபெறவுள்ளது.
- பிரேசில் நாட்டில் அட்டர்ணி ஜெனரல் பொறுப்பு வகிக்கும் முதல் பெண்மணி Raquel Dodge ஆவார்.
- வங்காள குடும்பத்தினரின் யோகா திறனை வெளிப்படுத்தும வகையில் ஜப்பான் அரசு அஞ்சல் தலைகளை வெளியிட்டது.
- இந்தியாவின் முதல் 6 ஸ்கார்பியன் நீர்மூழ்கி கப்பல்கள் வரிசையில் முதல் கப்பலான கல்வாரி நீர்மூழ்கி கப்பல் மும்பையில் இந்திய கப்பற்படையில் சேர்க்கப்பட்டது
- 2018-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஆஸ்கார் விருதுக்கு இந்திய பாலிவுட் படமான நியூட்டன் படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
- மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி அவர்கள் வஸ்திரா 2017 எனும் பெயரில் சர்வதேச ஜவுளி கண்காட்சியை ஜெய்ப்பூரில் தொடங்கி வைத்தார்.
- மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இந்தியாவின் முதல் பென்சன் அதாலத்தை புதுடில்லியில் தொடங்கி வைத்தார்.
- இந்தி மொழியை எளிதில் கற்றுக்கொள்ளும் வகையில் LILA Mobile App எனும் செயலியை இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் தொடங்கி வைத்தார்.
- மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் முதன்முறையாக ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கான தேசிய மாநாட்டினை ஜெய்ப்பூர் நகரில் தொடங்கி வைத்தது.
- இந்தியவின் முதல் விலங்குகளுக்கான சட்டமையம் NALSAR பல்கலைக்கழகம், ஹைதராபாத்தில் தொடங்க்கப்பட்டது.
- இந்தியாவின் முதல் High HP Electric Locomotive தொடர்வண்டிகள் பிரான்ஸ் நாட்டிலிருந்து வாங்கப்படவுள்ளது.
- கூகுள் நிறுவனம் தனது முதல் பேமண்ட் முறையை டெஸ் எனும் மொபைல் அப்ளிகேசன் மூலம் தொடங்கவுள்ளது.
- ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தின் மணலி முதல் ரோஹிங் வரை இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் பேருந்து இயக்கப்படவுள்ளது
- மிசோரமில் 30 வருடங்களுக்கு பின்னர் மந்திரி சபைக்கு தேர்ந்தெடுக்கப்படும் முதல் பெண்மணி Lalawmpuii Chawngthu ஆவார்.
- ஆந்திர பிரதேச முதல்வர் சந்திர பாபு நாயுடு மக்களின் குறைகளை கேட்க People First எனும் மொபைல் செயலியை வெளியிட்டார்.
- இந்தியவில் முதன் முறையாக திரிபுரா மாநில அரசு குடும்ப நல கமிட்டியை அமைத்துள்ளது.
- ஜார்க்கண்ட் மாநில அரசு அம்மிநிலத்தின் சுதந்திர போராட்ட வீரர்களின் கிராமத்தை மேம்படுத்த Shaheed Gram Vikas Yojana எனும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
- பீஹார் மாநில அரசு குழந்தைகள் திருமணத்திற்கு எதிராக விழிப்புணர்வு மேற்கொள்ளும் வகையில் Bandhan Tod எனும் மொபைல் செயலியை வெளியிட்டது.
- மும்பையின் கிழக்குப்பகுதியின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சச்சின் டெண்டுல்கர் Mission-24 எனும் திட்டத்தை தொடங்கினார்.
- கேரள மாநிலம் முதன்முதலாக திருநங்கைகளுக்கென கிளினிக்-ஐ அறிமுகம் செய்துள்ளது.
- சட்டீஸ்கர் மாநிலத்தில் தொழிலாளர்களுக்கு 5 ரூபாய்க்கு உணவளிக்கும் Pandit Deendayal Upadhyay Shram Anna Sahayata Yojna எனும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
- உத்திரகாண்ட் மாநில தூய்மை இந்தியா இயக்கத்தின் நல்லெண்ணத்தூதுவராக பாலிவுட் நடிகர் அக்ஷ்ய குமார் நியமிக்கப்பட்டார்
- இந்தியாவின் முதல் மொபைல் Veterinary கிளினிக்-களை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தொடங்கி வைத்தார்.
- 2019-ஆம் ஆண்டின் பெண்களுக்கான கிரிக்கெட் உலகக்கோப்பை பிரான்ஸில் நடைபெறவுள்ளது. இதன் வாசகம் Dare To Shine
- பத்மபூஷன் விருதுக்கு இந்திய கிரிக்டெ் வீரர் மகேந்திர சிங் டோனியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.
- Ana Carrasco எனும் பெண்மணி முதலன்முதலாக மோட்டார் சைக்கிள் சேம்பியன்ஷிப்பில் பட்டம் வென்றுள்ளார்.