Type Here to Get Search Results !

திரிகூடராசப்பர் (THIRIKUDA RASAPPAR) TAMIL ARINGAR

திரிகூடராசப்பர் அல்லது திரிகூடராசப்பக் கவிராயர் என்பவர் திருக்குற்றாலக் குறவஞ்சி என்ற இசை நாடகத்தின் ஆசிரியர் ஆவார்.
தோற்றம்:-
  • திரிகூடராசப்பர் திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசியை அடுத்துள்ள மேலகரம் என்னும் ஊரில் ஏறக்குறைய 18 ஆம் நூற்றாண்டில் பிறந்தவராவார்.

குலம்:-
  • இவர் சைவ வேளாளர் குலம் என்றும்; திருவாவடுதுறை ஆதீன மடத்தின் தலைவராக இலகியிருந்த மறைத்திரு சுப்பிரமணிய சுவாமிகளின் மரபு வழியினர் என்றும் செப்பேடுகள் மூலம் அறியப்படுகிறது.

இளமை:-
  • இவர் தம் இளம் பருவத்திலேயே தமிழ்க்கல்வி பயின்று அதில் நன்கு தேர்ச்சி பெற்றார்; 
  • செய்யுள் இயற்றும் திறனும் கைவரப் பெற்றார்; அவற்றுள், மடக்கு திரிபு சிலேடை முதலிய சொல்லணிகளும், உவமை முதலிய பொருளணிகளும் சிறப்பப் பாடுதலில் வல்லுநர். 
  • விரைந்து பாடும் பேராற்றலும் கொண்டவர். திருக்குற்றாலத்தில் எழுந்தருளியிருக்கின்ற திருக்குற்றால நாதராகிய திரிகூடராசப் பெருமான் மீது பதினான்கு நூல்கள் பாடினார்.

படைத்த நூல்கள்:-
1. திருக்குற்றாலக் குறவஞ்சி
2. திருக்குற்றலத் தலபுராணம்
3. திருக்குற்றால மாலை
4. திருக்குற்றாலச் சிலேடை வெண்பா
5. திருக்குற்றால யமக அந்தாதி
6. திருக்குற்றால நாதர் உலா
7. திருக்குற்றால ஊடல்
8. திருக்குற்றாலப் பரம்பொருள் மாலை
9. திருக்குற்றாலக் கோவை
10. திருக்குற்றாலக் குழல்வாய்மொழி மாலை
11. திருக்குற்றாலக் கோமளமாலை
12. திருக்குற்றால வெண்பா அந்தாதி
13. திருக்குற்றாலப் பிள்ளைத்தமிழ்
14. திருக்குற்றால நன்ன

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel