Type Here to Get Search Results !

அரவிந்த் அடிகா (Aravind Adika) - - TNPSC History PDF in TAMIL By TNPSCSHOUTERS




சிறந்த மொழித் திறமையும் எழுத்துத் திறமையும் ஒருங்கே பெற்ற அரவிந்த் அடிகா, பிரிட்டனின் மிகவும் மதிப்புமிக்கக் இலக்கிய விருதான “மான் புக்கர்” விருதைப் பெற்றவர். இவரின் முதல் புதினமான “தி வைட் டைகருக்கு” கிடைக்கபெற்றதன் மூலமாக இந்தியா பெருமை கொள்கிறது.
பிறப்பு: அக்டோபர் 23, 1974
பிறப்பிடம்: சென்னை (தமிழ் நாடு)
தொழில்: எழுத்தாளர்
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
அரவிந்த் அடிகா, அக்டோபர் 23, 1974 ஆம் ஆண்டு, டாக்டர் கே. மாதவா அடிகாவுக்கும், உஷா அடிகாவுக்கும் மகனாக சென்னையில் பிறந்தார்.
ஆரம்ப வாழ்க்கை
அவர் தனது பள்ளிப்படிப்பை, மங்கலூரிலுள்ள கனரா உயர்நிலைப் பள்ளி மற்றும் புனித ஆலோய்சியஸ் (Aloysius)உயர்நிலைப் பள்ளியிலும் முடித்தார். அவர் 1990ல் நடந்த எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகவும், இவருடைய மூத்த சகோதரன் ஆனந்த் அடிகா இரண்டாவது மாணவனாகவும் தேர்ச்சிப் பெற்றனர். அதுமட்டுமல்லாமல்,பி.யு.சி (PUC)தேர்வில், மாநிலத்திலேயே முதல்மாணவனாகவும் தேர்ச்சி பெற்றார். அவரது குடும்பம் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னிக்கு குடிபெயர்ந்ததால்,தன்னுடைய படிப்பை “ஜேம்ஸ் ரூசே வேளாண் உயர்நிலைப் பள்ளியில்” தொடங்கினார். பின்னர் நியூயார்க்கிலுள்ள (அமெரிக்கா) கொலம்பியா பல்கலைக்கழகத்தில், “ஆங்கில இலக்கியம்” படித்தார். 1997 ஆம் ஆண்டு தனது பட்டப்படிப்பை முடித்த அவர், ஆக்ஸ்ஃபோர்டிலுள்ள மாக்டலன் கல்லூரிக்குச் சென்றார்.அங்கு “வோல்ஃப்ஸன் கல்லூரி” (ஆக்ஸ்போர்ட்) நிவாத் தலைவரான ஹெர்மியோன் லீ தலைமையில் கீழ் கவிகற்றார்.



பணிகள்: 
பொருளாதார பத்திரிக்கைகளில் செய்தியாளராக வாழ்க்கையை தொடங்கிய இவர், ‘ஃபைனான்சியல் டைம்ஸ்’, ‘மணி’, ‘வால் ஸ்ட்ரீட் ஜெர்னல்’ ஆகிய பத்திரிக்கைகளிலும் செய்தியாளராக பணியாற்றினார். மூன்று ஆண்டுகள் தென் ஆசிய நிருபராகப் பணியாற்றிய அவர் பின்னர், ‘டைம்ஸ்’ பத்திரிக்கையில் இந்திய செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார். பிறகு டைம்ஸ் பத்திரிக்கையில் பாதிநேரமே வேலைபார்த்த இவர், தன்னுடைய ஓய்வு நேரத்தில் தன் முதல் இலக்கிய நாவலான “தி வைட் டைகரை” எழுதினார்.இந்த புதினத்திற்கு, பிரிட்டனின் புகழ்பெற்ற இலக்கிய விருதான “மான் புக்கர் விருது”2008 ஆம் ஆண்டு கிடைத்தது. ‘மான் புக்கர் விருது’ பெறும் நான்காவது இந்தியர் என்ற பெருமையையும் அவருக்கு தேடித்தந்தது. அதன் பின்னர் பல புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். அதுமட்டுமல்லாமல், தன்னை உருவாக்கிய “புனித ஆலோய்சியஸ் (Aloysius) கல்லூரிக்கு நன்றியின் அடையாளமாக தனக்கு கிடைத்த பரிசின் மொத்தத்தொகையில் ஒரு பகுதியை வழங்கினார். இந்த தொகை “ஆலோய்சியன் (Aloysian) பாய்ஸ் இல்லத்தில்” ஏழ்மையில் வாடும் குழந்தைக்கு உதவித்தொகை வழங்குவதற்கு பயன்படுத்தப்பட்டுவருகிறது.
தி வைட் டைகர் நாவலின் கரு:
இந்த நாவலில் கூறப்பட்டுள்ளது என்னவென்றால்,‘ஒரு கிராமத்தில் பிறந்து ஏழ்மையில் வளர்ந்து சற்று படிப்பறிவு இல்லாத ஒருவனின் மனப்பான்மையையும்,கண்ணோட்டத்தையும் பிறகு நாகரிக உலகில் அவனுடைய வளர்ச்சியையும் கருவாகக் கொண்டுள்ளது’. அதை கோபம், கனவு, நகைச்சுவை கலந்து மிக அழகிய நடையில் அளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், இந்தியாவின் சமீபத்திய பொருளாதார வளர்ச்சியில் ஏழைகளின் நிலையையும் மனம் வறுட விவரித்துள்ளார். தொகுத்து எழுதப்பட்ட இந்த நாவல், இந்தியாவில் 2,50,000 பிரதிகளுக்கும் மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பங்களிப்புகள்:
இவர் நாவல்கள் மட்டும் இல்லாமல் சிறுகதைகள் எழுதுவதிலும் சிறப்புபெற்று விளங்குகிறார்.
நாவல்கள்:
  • தி வைட் டைகர் (2008)
  • பிட்வீன் த அஸ்சாஸிநேஷேன், 2008
  • லாஸ்ட் மேன் இன் டவர் ட்யூ டு பி பப்லிஷ்ட், 2011
சிறுகதைகள்:
  • சுல்தான் பீரங்கி படை, 2008 (ஆன்லைன் உரை)
  • மணம், 2008 (ஆன்லைன் உரை)
  • ‘லாஸ்ட் கிறிஸ்துமஸ் இன் பாந்திரா’,2008(ஆன்லைன் உரை)
  • யானை, 2009 (ஆன்லைன் உரை)
விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்:
  • “மான் புக்கர் விருது” (2008)
காலவரிசை:
1974 – சென்னையில் பிறந்தார்.
1990 – எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார்.
1997 – பட்டபடிப்பை முடித்தார்.
2008 – ‘மான் புக்கர் விருது’ வழங்கப்பட்டது.
2009 – ‘தி வைட் டைகர்’ திரைப்படமாக எடுக்கப்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel